The Platform விமர்சனம்
கடந்த பத்து ஆண்டுகளில் நான் பார்த்த படங்களிலேயே, என்னை மிகவும் பாதித்த, யோசிக்க வைத்த மிக முக்கியமான திரைப்படம் இது. இந்த ஸ்பானிய மொழி திரைப்படம், நெட்ஃபிளிக்ஸில் காணக்கிடைக்கிறது.
ஸ்பான்டேனியஸ் சாலிடாரிட்டி, அதாவது, பிரச்சனையின் போது மக்கள் இயல்பாகவே ஒற்றுமையாக, ஒன்று சேர்ந்து போராடுகிறார்களா அல்லது விட்டுக் கொடுக்கிறார்களா இல்லையா என்பதை அறிவதற்காக நடத்தப்படும் மிக அபாயகரமான சோதனை தான் இப்படத்தின் களம்.
இது தவிர, இந்தப் படம், மக்களாட்சித் தன்மையில் அதிகாரத்தில் இருப்பவருக்கும், அவருக்குக் கீழே அவனை நம்பி பிழைப்பு நடத்தும் எளிய மனிதனுக்கும் இருக்கும் தொடர்பு பற்றியும் யோசிக்க வைக்கிறது.
முந்நூறு அறைகளைக் கொண்ட செங்குத்து அபார்ட்மென்ட்டில், ஒவ்வொரு அறையிலும் இரண்டு பேர் இருப்பார்கள். அந்த அறைக்கு நடுவில், மேலே முதல் அறையில் இருந்து கீழிருக்கும் 300க்கும் மேற்பட்ட அறைகளுக்குச் செல்லும் ம...