Shadow

Tag: Prince Pictures

லப்பர் பந்து: நகைச்சுவை – குணச்சித்திரம் | டி எஸ் கே

லப்பர் பந்து: நகைச்சுவை – குணச்சித்திரம் | டி எஸ் கே

சினிமா, திரைத் துளி
சின்னத்திரை காமெடி ரியாலிட்டி ஷோக்களில் நான்கு முறை டைட்டில் வென்றவர் டி.எஸ் கே. சின்னத்திரையின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த சில வருடங்களாக சினிமாவிலும் பிசியான நகைச்சுவை நடிகராக நடித்து வரும் டிஎஸ்கே சமீப காலமாக வெப் சீரிஸ் பக்கமும் கவனத்தைத் திருப்பியுள்ளார். செப்டம்பர் 20 ஆம் தேதி ‘லப்பர் பந்து’ வெளியாகவுள்ள நிலையில் அந்தப்படத்தில் நடித்த அனுபவம் குறித்தும், தனது அடுத்த படங்கள், வெப்சீரிஸ் குறித்தும், “’லப்பர் பந்து’ நான் நடிக்கும் 18 ஆவது படம். ஆனாலும் இந்தப் படத்தில் நடித்த போது இதுதான் எனது முதல் படம் என்பது போல உணர்ந்தேன். அந்த அளவிற்கு இந்தப் படத்தில் நிறைய கற்றுக்கொண்டேன். மிகப்பெரிய அனுபவங்கள் கிடைத்தன. இயக்குநர் தமிழரசன் நடிப்பு குறித்து மெனக்கெட்டு நிறைய விஷயங்களை சொல்லிக் கொடுத்தார். இதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் 'கலக்கப்போவது யாரு?' ரியாலிட்டி ஷோவில் ஒரு டைட்டில் வின்ன...
“லப்பர் பந்து: ஆக்ரோஷ கிராமத்து இளைஞனாக நான்” – ஹரிஷ் கல்யாண்

“லப்பர் பந்து: ஆக்ரோஷ கிராமத்து இளைஞனாக நான்” – ஹரிஷ் கல்யாண்

இது புதிது, சினிமா, திரைத் துளி
பார்க்கிங் படத்தைப் போல் ஒரு அசத்தலான கதையம்சத்துடன் உருவாகியுள்ள ‘லப்பர் பந்து’ படத்தில் இதுவரை ஹரிஷ் கல்யாண் நடித்திராத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தைத் தமிழரசன் பச்சமுத்து இயக்கி உள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன் குமார் லப்பர் பந்து படத்தைத் தயாரித்துள்ளார். இணை தயாரிப்பாக அ. வெங்கடேஷ் இணைந்துள்ளார். இன்னொரு முதன்மை கதாபாத்திரத்தில் அட்டகத்தி தினேஷ் நடிக்க கதாநாயகிகளாக ‘வதந்தி’ சீரிஸ் புகழ் சஞ்சனா, சுவாசிகா விஜய் ஆகியோர் நடித்திருக்கின்றனர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் காளி வெங்கட், தேவதர்ஷினி, பாலசரவணன், டி எஸ்கே உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். வரும் செப்டம்பர் 20ஆம் தேதி ‘லப்பர் பந்து’ வெளியாகவுள்ளது. படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்துப் பகிர்ந்த நாயகன் ஹரிஷ் கல்யாண், “பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒரு படம் பண்ணுவதற்காக பேசிக்கொண்டிருந்த ...
மஞ்சு வாரியார் இன் Mr. X

மஞ்சு வாரியார் இன் Mr. X

சினிமா, திரைத் துளி
பரபரப்பான படமாக உருவாகவுள்ள Mr. X படத்தில் எவர் க்ரீன் நாயகி மஞ்சு வாரியார் இணைந்துள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஆர்யா, கவுதம் கார்த்திக் நடிக்கும் மிகப் பிரம்மாண்ட படமான 'Mr. X' படத்தில் மஞ்சு வாரியார் இணைந்துள்ளார். முதல் படத்திலேயே கோலிவுட்டைத் தனது திரைக்கதை இயக்கத்தால் திரும்பிப் பார்க்க வைத்த எஃப்.ஐ.ஆர் படத்தின் இயக்குநர் மனு ஆனந்த் இயக்குகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் S. லக்ஷ்மன் குமார் தயாரிக்கிறார். Mr X படத்தின் நாயகியாக அனகா நடிக்கிறார். இப்படத்திற்காக நாயகர்கள் ஆர்யாவும், கவுதம் கார்த்திக்கும் உடற்கட்டை மெருகேற்றி வருகின்றனர். பல்வேறு நாடுகளில் ஆக்சன் காட்சிகளை அதிரடிக் காட்சிகளாக அமைக்க இருக்கிறார் ஸ்டன்ட் சில்வா. இப்படத்தின் பூஜை இன்று படக்குழுவினர் மற்றும் பிரபலங்கள் பலர் பங்கேற்க மிகச் சிறப்பாக அரங்கேறியது. Mr. X தமிழ், தெலுங்கு,...
தண்டட்டி விமர்சனம்

தண்டட்டி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தேனி மாவட்டம் கிடாரிப்பட்டி பகுதியில் வசித்து வரும் 57 வயதான தங்கப் பொண்ணு என்னும் மூதாட்டி காணாமல் போகிறார். அவரைத் தேடும் புள்ளியில் தொடங்கும் கதை, அவரது இறப்பிற்குப் பின்னர் காணாமல் போகும் அவரது தண்டட்டியைத் தேடிக் கண்டடையும் புள்ளியில் நிறைவு பெறுகிறது. தங்கப் பொண்ணு ஏன் காணாமல் போகிறார், அவர் எப்படி இறந்து போகிறார், அவரது அடையாளங்களில் ஒன்றான தண்டட்டி எப்படித் திருடு போகிறது, அதைத் திருடியவர் யார், கண்டுபிடிப்பவர் யார் என்று பயணிக்கிறது திரைக்கதை. இந்தப் பயணத்திற்கு நடுவே அழகான வலி மிகுந்த இரண்டு குட்டி காதல் அத்தியாயங்களும் படத்தில் உண்டு. அவை தான் கதையின் மையப்பொருளான இந்த தண்டட்டி படத்திற்கு உயிர்நாடி. 57 வயது தங்கப் பொண்ணாக ரோகிணி. குறை சொல்ல முடியாத நிறைவான நடிப்பைக் கொடுப்பதில் தான் சீனியர் என்பதை நிரூபிக்கும் வகையில் செவ்வனே செய்திருக்கிறார். சிறு வயது ரோகிணி கதாபாத்திரத்தில்...
தண்டட்டி – பாட்டிகளின் அட்டகாசம்

தண்டட்டி – பாட்டிகளின் அட்டகாசம்

சினிமா, திரைச் செய்தி
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'தண்டட்டி'. ஏ.வெங்கடேஷ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கியுள்ளார். கதையின் நாயகனாக பசுபதி நடிக்க, முக்கிய வேடங்களில் ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம், பூவிதா, முகேஷ் உள்ளிட்ட பல நடித்துள்ளனர். குறிப்பாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த தண்டட்டி அணிந்த மூதாட்டிகள் பலர் இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு K.S. சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படத்தொகுப்பை சிவா நந்தீஸ்வரன் மேற்கொண்டுள்ளார். கலையை வீரமணி கவனித்துள்ளார். இந்தப் படம் வரும் ஜூன் 23ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் நடைபெற்றது. இயக்க...
தண்டட்டி – அப்பாத்தாக்களுக்குப் பேத்தியின் அன்பு முத்தம்

தண்டட்டி – அப்பாத்தாக்களுக்குப் பேத்தியின் அன்பு முத்தம்

Trailer, காணொளிகள், சினிமா, திரைச் செய்தி
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'தண்டட்டி'. ஏ.வெங்கடேஷ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கியுள்ளார். கதையின் நாயகனாக பசுபதி நடிக்க, முக்கிய வேடங்களில் ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம், பூவிதா, முகேஷ் உள்ளிட்ட பல நடித்துள்ளனர். குறிப்பாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த தண்டட்டி அணிந்த மூதாட்டிகள் பலர் இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு K.S. சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படத்தொகுப்பை சிவா நந்தீஸ்வரன் மேற்கொண்டுள்ளார். கலையை வீரமணி கவனித்துள்ளார். இந்தப் படம் வரும் ஜூன் 23ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் நடைபெற்றது. இந்த...
காரி விமர்சனம்

காரி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காரியூர் என்ற கிராம மக்களின் இறை நம்பிக்கை சார்ந்த ஒரு கதையைக் கையில் எடுத்துள்ளார் இயக்குநர் ஹேமந்த். ரியலிஸ்டிக்கான மேக்கிங்கால் படத்தையும் நெருக்கமாக உணர முடிகிறது. குதிரை ஜாக்கியான சசிகுமார் சென்னையில் தன் தந்தை ஆடுகளம் நரேனோடு வசிக்கிறார். ஆடுகளம் நரேன் சிறு உயிர்களையும் தன் உயிரென நேசிக்கக் கூடியவர். சசிகுமார் வாழ்வையும் சமூகத்தையும் ஏனோதானோ என ஏற்பவர். சசிகுமாரின் சொந்தக் கிராமமான காரியூரில் கருப்பசாமியின் திருவிழாவை நடத்த வேண்டிய ஒரு சூழல் வருகிறது. அதை நடத்த சசிகுமாரின் வருகை தேவையாக இருப்பதால் ஊர் சசிகுமாரை நாடுகிறது. சசிகுமாருக்கும் ஊருக்குச் செல்வதற்கான ஒரு எமோஷ்னல் காரணம் அமைய, சசிகுமார் ஊருக்குச் சென்று தன் ஊரின் வேரை எப்படிக் காக்கிறார் என்பது காரியின் திரைக்கதை. மிகையில்லாத நடிப்பு தான் சசிகுமாரின் பலம். சரியான ஜாக்கி இல்லையென்றால் குதிரை தறி...
காரி | “கிராமத்துப் படம்தான் பண்ணுவேன்” – சசிகுமார்

காரி | “கிராமத்துப் படம்தான் பண்ணுவேன்” – சசிகுமார்

சினிமா, திரைத் துளி
ப்ரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காரி’. சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, மலையாள நடிகை பார்வதி அருண் இந்தப் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அறிமுக இயக்குனர் ஹேமந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். வில்லனாக பாலிவுட் நடிகர் ஜேடி சக்கரவர்த்தி நடிக்க, மேலும் முக்கிய வேடங்களில் ஆடுகளம் நரேன், நாகிநீடு, ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, பிரேம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வரும் நவம்பர் 25ஆம் தேதி காரி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இந்தப் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. சசிகுமார், “இது எனக்கான கதை. என் மண்ணின் கதை. ஒரேமாதிரி கதையில் நடிக்கிறீர்களே, அதுவும் கிராமத்துப் படமாக நடிக்கிறீர்களே என்றால், நான் கிராமத்துப் படம் தான் பண்ணுவேன். அவர்களுக்கு நான் பண்ணாமல் வேறு யார் பண்ணுவார்கள்? என...
காரி – தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த இடைவேளைக் காட்சி

காரி – தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த இடைவேளைக் காட்சி

சினிமா, திரைச் செய்தி
ப்ரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காரி’. சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, மலையாள நடிகை பார்வதி அருண் இந்தப் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அறிமுக இயக்குனர் ஹேமந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். வில்லனாக பாலிவுட் நடிகர் ஜேடி சக்கரவர்த்தி நடிக்க, மேலும் முக்கிய வேடங்களில் ஆடுகளம் நரேன், நாகிநீடு, ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, பிரேம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வரும் நவம்பர் 25ஆம் தேதி காரி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இந்தப் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. நடிகர் நாகிநீடு, “இந்தப் படத்தின் படப்பிடிப்பு இரவு பகலாக மாறிமாறி நடைபெற்றது. எனக்கு சரியான நேரத்திற்கு சாப்பிடும் பழக்கம் இருந்தது. அதைப் புரிந்து கொண்ட சசிகுமார் எனக்குப் படம் முழுவதும் தனது ஆதரவைக் கொடுத்தார். என்னுட...
காரி – தீரன் அதிகாரத்திற்குப் பிறகு

காரி – தீரன் அதிகாரத்திற்குப் பிறகு

சினிமா, திரைச் செய்தி
ப்ரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காரி’. சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, மலையாள நடிகை பார்வதி அருண் இந்தப் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அறிமுக இயக்குனர் ஹேமந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். வில்லனாக பாலிவுட் நடிகர் ஜேடி சக்கரவர்த்தி நடிக்க, மேலும் முக்கிய வேடங்களில் ஆடுகளம் நரேன், நாகிநீடு, ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, பிரேம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வரும் நவம்பர் 25ஆம் தேதி காரி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இந்தப் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார், “ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி கிடைக்காதிருந்த சமயத்தில் தான் இந்தக் கதையை இயக்குநர் ஹேமந்த் என்னிடம் கூறினார். இந்தக் கதையைக் கேட்டதும் எப்படியாவது இதைப் படமாக எடுத்துவிட வேண்டும் என முட...
சர்தார் – ப்ரின்ஸ் பிக்சர்ஸின் தரமான சம்பவம்

சர்தார் – ப்ரின்ஸ் பிக்சர்ஸின் தரமான சம்பவம்

இது புதிது, சினிமா, திரைத் துளி
தமிழ்த் திரையுலகில் ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளிக்கும் விதமாக வித்தியாசமான கதைக்களத்தில் நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படங்களை ப்ரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து வருபவர் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார். அப்படி, தீபாவளி ரிலீஸாக அக்டோபர் 21 அன்று வெளியாகும் சர்தார் படத்தை முற்றிலும் ரசிக்கும்படியாக வழங்கவுள்ளது பிரின்ஸ் பிக்சர்ஸ். படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு, வியாபாரத்தில் பெரிய அளவில் எதிரொலித்துள்ளது. அதனால் அதிக அளவிலான திரையரங்குகள் இந்தப் படத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. "கார்த்தியின் டபுள் ஆக்ஷன், ராஷி கண்ணா, ரஜிஷா விஜயனின் கலர்ஃபுல் காம்போ, இருக்கையில் அமர்ந்ததுமே ரசிகர்களைக் கதையோட்டத்திற்குள் இழுத்துச் செல்லும். ஜீ.வி.பிரகாஷின் இசை என ரசிகர்களின் முழுத் திருப்திக்கு நான் கியாரண்டி" என்கிறார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன். "அழகான, தரமான என்டர்டெய்ன்மென்ட் பட...
காரி – ஈரமும் வீரமும் மாறாத சசிகுமார்

காரி – ஈரமும் வீரமும் மாறாத சசிகுமார்

சினிமா, திரைச் செய்தி
என்ன தான் உலகம் நவீனமயமாகி விட்டாலும் கூட கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை மண்மணம் மாறாமல் சுமந்து வரும் படங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு குறையவே இல்லை. அப்படி ஈரமும் வீரமும் மாறாத கிராமத்து மனிதர்களின் பிரதிபலிப்பாகத் திரையில் தோன்றி ரசிகர்களை வசியப்படுத்தும் வெகு சில கதாநாயகர்களில் நடிகர் சசிகுமார் ரொம்பவே முக்கியமானவர். அவ்விதமாக மீண்டும் கிராமப் பின்னணியில் பிரம்மாண்டமாக, ஆக்சன் மற்றும் ஜனரஞ்சக அம்சங்களுடன் உருவாகும் ‘காரி’ என்கிற புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் சசிகுமார். கதாநாயகியாக பார்வதி அருண் என்பவர் நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் செம்பருத்திப்பூ, மோகன்லாலின் மகன் பிரணவ் நடித்த 21ஆம் நூற்றாண்டு உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். மேலும் கன்னடம் மற்றும் தெலுங்கிலும் நடித்துள்ளார். வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜேடி சக்ரவர்த்தி நடிக்கிறார். இவர்கள் தவிர முக்கிய வேடங்களில்...