Shadow

Tag: Tamil thirai vimarsanam

ட்ரெண்டிங் விமர்சனம் | Trending review

ட்ரெண்டிங் விமர்சனம் | Trending review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இன்றைக்கு இணையத்தில் எது ட்ரெண்டிங்காக இருக்கிறதோ, அதுதான் நாட்டின் பேசுபொருள் என்பதால் படத்தின் தலைப்பையே ட்ரெண்டிங் என வைத்துவிட்டார்கள். கலையரசனும் ப்ரியாலயாவும் கணவன் மனைவி ஆவர். படத்தில் முதல் ஷாட்டிலே இருவரும் யூட்யூபில் தங்களின் ரீல்ஸைப் பதிவேற்றுகிறார்கள். அவர்களது ரீல்ஸின் வியூவ்ஸ் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதனால் இந்தத் தம்பதியின் வருமானமும் உயர்கிறது. இச்சூழலில் இவர்களின் யூட்யூப் சேனல் முடக்கப்படுகிறது. அடுத்து என்ன செய்வது என அவர்கள் யோசிக்கும் போது ஒரு ப்ரைவேட் ஃபோன்கால் ஒன்று இவர்கள் வாழ்க்கையில் விளையாடுகிறது. அந்த விளையாட்டு ஏற்படுத்தும் வினைகளும் விடைகளும் தான் படம். அளவாக நடித்தாலே போதும் என்ற ரேஞ்சிலே படத்தில் வருகிறார் நாயகன் கலையரசன். ப்ரியாலயா இப்படத்தில் பெரிய சர்ப்ரைஸ் செய்துள்ளார். அழகு, நடிப்பு இரண்டிலுமே ஸ்கோர் செய்துள்ளார். குறிப்பாக எமோஷ்னல் காட்சிகளில் மிக...
பன் பட்டர் ஜாம் விமர்சனம் | Bun Butter Jam review

பன் பட்டர் ஜாம் விமர்சனம் | Bun Butter Jam review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நல்ல கலகலப்பான யூத்-ஃபுல்லான படம். ராஜு ஜெயமோகன் பாவ்யாவைக் காதலிக்கிறார். ராஜுவின் நண்பனும் அதே பெண்ணைக் காதலிக்கிறார். ராஜுவின் பக்கத்து வீட்டுப் பெண்ணான ஆதியா, VJ பப்புவைக் காதலிக்கிறார். யார் யாருடன் இணைந்தார்கள் என்பதுதான் படத்தின் முடிவு. படத்தில் வரும் பிரதான கதாபாத்திரங்கள் அனைத்தையும் மிக நேர்த்தியாக எழுதியுள்ளார் இயக்குநர் ராகவ் மிர்தாத். சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, கெளரவத் தோற்றத்தில் நடித்துள்ள விக்ராந்த், ராஜுவின் நண்பனாக வரும் மைக்கேல் தங்கதுரை, VJ பப்பு, பப்புவின் கோவக்கார அப்பா என கதாபாத்திர வடிவமைப்பிலேயே படத்தின் கலகலப்பிற்கு உறுதி செய்துள்ளார் ராகவ் மிர்தாத். இரண்டாம் பாதியில், காதலியின் வீட்டில் மாட்டிக் கொண்டு, VJ பப்பு திண்டாடும் காட்சிகள் ஓர் உதாரணம். முதற்பாதியில், ஆதியாவும் ராஜுவும் சந்தித்துக் கொள்ளும் காட்சிகள் அனைத்துமே கலகலப்பிற்கு உத்திரவாதமளிக்கி...
கெவி விமர்சனம் | Gevi review

கெவி விமர்சனம் | Gevi review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கெவி என்றால் ஆழமான பள்ளத்தாக்கு எனப் பொருள். கொடைக்கானலுக்குக் கீழுள்ள ஒரு மலைப்பகுதியில், பாண்டிய தேசத்தைச் சேர்ந்த மக்கள் குடி புகுகின்றனர். ஆங்கிலேயர் காலத்தில், குளிர் பிரேதசங்களைத் தேடும் முயற்சியில், கெவி மக்களின் உதவியோடு கொடைக்கானலைக் கண்டடைகின்றனர் வெள்ளையர்கள். அவர்களின் வரவிற்குப் பிறகு, வெள்ளகெவி என்று அப்பகுதி அழைக்கப்படுகிறது. சாலை வசதியற்ற கெவியில் வாழும் மக்கள் மிகவும் துயருகின்றனர். ஓரிரவு, கொடி சுற்றிக் கொள்வதால் கர்ப்பிணியான மந்தாரை மிகவும் அவதியுறுகிறார். ஊரே ஒன்று கூடி, மந்தாரையை டோலியில் தூக்கிக் கொண்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்குச் செல்கின்றனர். அதே இரவில், சாலை வசதி கேட்டுக் கோபப்பட்டான் என்பதற்காக மந்தாரையின் கணவனான மலையனைக் காவல்துறையினர் அடித்துக் கொல்ல முயற்சி செய்கின்றனர். அந்த இரவு எப்படி விடிகிறது என்பதுதான் படத்தின் முடிவு. படக்குழுவினர் மிரட்டியுள்ளன...
மிசஸ் & மிஸ்டர் விமர்சனம் | Mrs & Mr review

மிசஸ் & மிஸ்டர் விமர்சனம் | Mrs & Mr review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நாற்பதாவது வயது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பொழுது, தானொரு மகவை ஈன்றெடுக்க வேண்டுமென விரும்புகிறார் வித்யா. ஆனால், இந்த வயதிற்கு மேல் பெற்றோராவதை விரும்பாத அருண், மனைவி வித்யாவின் விருப்பத்திற்குச் செவிசாய்க்காமல் இருக்கிறார். இது, அவர்களைப் பிரிவிற்கு இட்டுச் செல்கிறது. வித்யாவின் விருப்பம் நிறைவேறியதா, அருண் ஏன் சம்மதிக்கவில்லை, கணவன் - மனைவி சண்டைக்குத் தீர்வென்ன என்பதற்கான விடையுடன் படம் முடிகிறது. தன் கணவனை வழிக்குக் கொண்டு வர வித்யா கையிலெடுக்கும் ஆயுதம் கவர்ச்சியாகும். பெண் இயக்குநர் படமெடுத்தால், பெண்ணின் உணர்வுகளை அழுத்தமாகப் பேசக்கூடிய வாய்ப்பு அமையும் என்பதைப் பொய்த்துப் போகச் செய்துள்ளார் வனிதா. பெண்களின் உடலைக் காட்சிப்பொருளாக்கி வணிகத்திற்குப் பயன்படுத்தும் (exploit) உரிமை ஆண் இயக்குநர்களுக்கு மட்டுமே உரித்தானது இல்லை என ஆணாதிக்க உலகத்திற்குச் சமத்துவத்தை இடித்துரைத்துள்ளார்....
ஓஹோ எந்தன் பேபி | Oho Enthan Baby review

ஓஹோ எந்தன் பேபி | Oho Enthan Baby review

சினிமா, திரை விமர்சனம்
'தேன் நிலவு (1961)' எனும் படத்தில், மிக பெப்பியான வார்த்தைகள 64 வருடங்களிற்கு முன்பே பயன்படுத்தி அசத்தியுள்ளார் கவிப்பேரரசு கண்ணதாசன். தற்போதும் வைப் செய்யும்படியான அவரது வார்த்தைகளைத் தலைப்பாகப் படத்திற்குச் சூட்டியுள்ளனர். இயக்குநராகும் முயற்சியில் உள்ள அஷ்வின், நடிகரான விஷ்ணு விஷாலைச் சந்தித்து கதை சொல்கிறார். காதல் கதையை எதிர்பார்க்கும் விஷ்ணு விஷாலுக்குத் தனது காதல் கதையையே சொல்கிறார் அஷ்வின். ஆனால், ஈகோவால் மீராவுடன் பிரேக்-அப் ஆகி நிற்கும் காதல் கதையை முழுமைப்படுத்த, மீராவைச் சந்தித்து உண்மைத்தன்மையுடன் கதையை முடிக்கச் சொல்கிறார் விஷ்ணு விஷால். மீராவைச் சந்திக்கச் செல்லும் அஷ்வினின் காதல் கைக்கூடியதா இல்லையா என்பதே படத்தின் முடிவு. அஷ்வினின் முதல் காதல் பள்ளியில் நிகழ்கிறது. அஷ்வினால் காதலிக்கப்படும் சீனியர் பாத்திரத்தில் வைபவி நடித்துள்ளார். அஷ்வின்க்குக் கிடைக்கும் மொட்டை மாடியி...
மாயக்கூத்து விமர்சனம் | Maayakoothu review

மாயக்கூத்து விமர்சனம் | Maayakoothu review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
படைப்பதால் தன்னைக் கடவுளென நினைத்துக் கொள்ளும் கர்வமிகு எழுத்தாளனான வாசன், அவனது காதாபாத்திரங்கள் உலவும் உலகில் சிக்கிக் கொள்கிறான். தங்களது சிக்கல்களுக்கெல்லாம் படைத்தவன் தான் காரணம் எனக் கோபத்தில் இருக்கும் கதாபாத்திரங்களிடம் இருந்து எழுத்தாளன் எப்படித் தப்பிக்கிறான் என்பதுதான் படத்தின் முடிவு. எழுத்தாளனுக்குள் நடக்கும் விசாரமாக இந்தக் கதை நகர்கிறது. ‘சமூகத்தில் பெரும்பாலானவர் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் எழுத்தாளர்கள் பொறுப்புடன் தங்கள் எழுத்துகளை அளிக்கவேண்டும் எனச் சொல்வதுதான் இந்தப் படத்தின் பின்னுள்ள ஐடியா’ என்றார் படத்தின் இயக்குநர் A.R.ராகவேந்திரா. படத்தின் ஒரு வரிக்கதை மாற்று சினிமாவிற்கான களம் போல் தொனித்தாலும், கலகலப்பிற்கு உதவியுள்ளது திரைக்கதை. தான் படைத்த உலகில் தானே சிக்கிக் கொண்டு படாதபாடுபடுகிறார் வாசன். மூன்று தொடர்கதைகளை ஒரே நேரத்தில் எழுதி வருகிறார் வாசன். முதல் தொடரி...
ஃப்ரீடம் விமர்சனம் | Freedom review

ஃப்ரீடம் விமர்சனம் | Freedom review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ராஜீவ் காந்தி கொலையை ஒட்டி நிகழ்ந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது இப்படம். திருப்பெரும்புதூரில், 1991 மே 21ஆம் தேதி அன்று நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்படுகிறார். அந்த நேரத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் இலங்கை அகதிகளாக ராமேஸ்வரம் மண்டபம் முகாமில் தங்கியிருக்கும் ஆண்கள், பெண்கள் என பல இலங்கைத் தமிழர்களை விசாரணைக்காக வேலூருக்கு அழைத்துச் செல்கிறது காவல்துறை. ஓரிரு நாட்களில் திருப்பி அனுப்பி விடுவோம் என சொல்லி அழைத்துச் சென்று அடித்துத் துன்புறுத்தி விசாரிக்கிறது காவல்துறை. குடும்பத்தினரும் அவர்களை விடுதலை செய்யக் கோரி மனு கொடுத்தும், போராட்டம் செய்தும் எதுவும் எடுபடவில்லை. அப்படியே 4 ஆண்டுகள் கழிய, வேலூர் கோட்டையில் இருந்து 43 பேர் தப்பித்துச் செல்ல திட்டம் தீட்டுகிறார்கள். அத்திட்டம் அவர்களுக்குச்...
பறந்து போ விமர்சனம் | Paranthu Po review

பறந்து போ விமர்சனம் | Paranthu Po review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஓர் இனிய ஆச்சரியம். தென்றல் தீண்டுவது போல் ஒரு ஜாலியான படம். இயக்குநர் ராமின் முந்தைய படங்களினின்று நேரெதிராக உள்ளது இப்படம். ராமின் பிரதான கதாபாத்திரங்கள் பெரும்பாலும், சக மனிதர்கள் மீது கோபமும், அவநம்பிக்கையையும் கொண்ட கசப்பான மனிதர்களாக இருப்பார்கள். இப்படத்திலோ, கதாபாத்திரங்கள் அனைவருமே மிகவும் நல்லவர்கள். முக்கியமாக சக மனிதர்கள் மீது கோபமோ, பொறாமையோ இல்லாதவர்களாகவும்; தங்கள் மீது பச்சாதாபமோ, சுய கழிவிரக்கமோ கொண்டு இயலாமையை வெளிப்படுத்தாதவர்களாகவும் உள்ளனர். பார்ப்பவர்கள் எல்லாரையும் கெட்டவரெனும் துரியோதன மனக்கசடில் இருந்து, மனிதர்கள் அனைவருமே நல்லவர்கள் தானெனும் தருமனின் மனநிலைக்கு எப்படியோ தன்னை மேம்படுத்திக் கொண்டுள்ளார். கடன் வசூலிக்கும் நபரிடம் இருந்து தப்பிக்கும் தந்தை மகனான கோகுல் – அன்பு இருவரின் டூ-வீலர் சாகசம், ஒரு ரோடு ட்ரிப்பாக கவிதை போல் நீள்கிறது. அவர்கள் சந்திக்கும் நபர...
பீனிக்ஸ் – வீழான் விமர்சனம் | Phoenix review

பீனிக்ஸ் – வீழான் விமர்சனம் | Phoenix review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பீனிக்ஸ் எனும் புராண பறவை, தன்னைத்தானே எரித்துத் தனது சாம்பலிலிருந்து மீண்டும் பிறக்கும் வல்லமை கொண்டது. அதே போல், சூர்யா எனும் பதினேழு வயது சிறுவன், தன்னைத் தானே மரணம் துரத்தும் ஓர் இக்கட்டான சூழலுக்குள் உட்படுத்தி, ஒவ்வொரு முறையும் அதிலிருந்து வீழ்ந்து விடாமல் எழுந்து நிற்கிறான். மரண வீட்டிற்குத் துக்கம் விசாரிக்க வரும் ச.ம.உ.-வான கரிகாலனை 36 முறை வெட்டிக் கொல்கிறான் சிறுவன் சூர்யா. அவனைச் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்க நீதிமன்றம் ஆணையிடுகிறது. சூர்யாவைக் கூர்நோக்கு இல்லத்திலேயே வைத்துக் கொல்வதற்குக் கரிகாலனின் மனைவி மாயா முயற்சிகள் எடுத்தவண்ணம் உள்ளார். அவற்றிலிருந்து சூர்யா தப்பினானா, சூர்யா ஏன் ச.ம.உ.-வைக் கொன்றான் என்பதே படத்தின் முடிவு. முன்னாள் ச.ம.உ.வாக முத்துகுமார் நடித்துள்ளார். படத்தில் நகைச்சுவை இல்லாத குறையை அவரது ரியாக்‌ஷன்கள் போக்குகிறது. சூர்யாவின் அம்மாவாக தேவத...
3 பி.ஹெச்.கே விமர்சனம் | 3 BHK review

3 பி.ஹெச்.கே விமர்சனம் | 3 BHK review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தனக்கென்றொரு வீடு வாங்கவேண்டும் என்பது வாசுதேவனின் ஆசை. ஆனால் சூழலும், குடும்பப்பாடுகளும் அக்கனவைத் தொட்டுவிடும் நிலைக்கு வரும்பொழுதெல்லாம் தட்டி விட்டுக் கொண்டேயிருக்கிறது. ஒரு கட்டத்தில், அந்தக் கனவைத் தன் மகன் பிரபு நிறைவேற்றுவான் என்று சமாதானமாகிறார். பிரபுவின் வாழ்க்கையோ, தோல்வியடைதலுக்கும் (Failure), எதிலும் வெற்றியோ முன்னேற்றமோ காணாத மிகச் சராசரியான வாழ்விற்கும்  (Average) இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. வாசுதேவனின் கனவு நிறைவேறியதா இல்லையா என்பதே படத்தின் கதை. ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும். பதினேழு வயதில் வேலைக்குச் செல்லத் தொடங்கும் வாசுதேவன், தன் தம்பியையும், தங்கையையும் படிக்க வைத்து ஆளாக்கிவிடுகிறார். அவரது உழைப்பின் பலனை அனுபவித்த தங்கையோ, ‘உன்னால் சொந்த வீடு வாங்க முடியாது’ என அண்ணனை ஏளனப்படுத்தி விடுகிறார். அந்த ஒரு சொல், வாசுதேவனின் ஒட்டுமொத்த வாழ்க்கையையே புர...
கண்ணப்பா விமர்சனம் | Kannappa review

கண்ணப்பா விமர்சனம் | Kannappa review

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
கண்ணப்பர் எனும் சிவ பக்தரின் கதையை பாகுபலி போல் ஒரு பிரம்மாண்டமான புனைவுப் படமாக உருவாக்கியுள்ளனர். திண்ணன் எனும் வேட்டுவக் குல வீரன், கடவுள் நம்பிக்கை இல்லாமல் வளருகிறான். அவன் வசிக்கும் காட்டிலுள்ள வாயுலிங்கத்தை அபகரிக்க காளாமுகன் என்பவன் பெரும்படையுடன் வருகிறான். திண்ணனின் தந்தை நாதநாதன், தீவிலுள்ள ஐந்து இனக்குழுக்களயும் ஒன்றிணைத்து காளாமுகனை எதிர்க்க ஒன்றிணைக்கிறான். கைலாயத்தில் வாழும் சிவனோ, ருத்ரனை அனுப்பி திண்ணனைத் தடுத்தாட்கொண்டு, அவனைப் பக்திமானாக்குவதோடு, அவனது தீவிரமான பக்தியை உலகறியச் செய்வதோடு, தனிநபர் சொத்தாக இருக்கும் வாயுலிங்கத்தையும் மக்கள் வழிபாட்டுக்கு உரியதாக்குகிறார். சிவன், பார்வதியாக அக்ஷய் குமாரும், காஜல் அகர்வாலும் நடித்துள்ளனர். துவாபுர யுகத்தில், தவமியற்றும் அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் அளிக்க வேடனாக வரும் கிராதமூர்த்தி (சிவன்) பாத்திரத்தில் மோகன்லால் வருகிறார்....
லவ் மேரேஜ் விமர்சனம் | Love Marriage review

லவ் மேரேஜ் விமர்சனம் | Love Marriage review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
உசிலம்பட்டியைச் சேர்ந்த முப்பத்து மூன்று வயதான ராமச்சந்திரனுக்குக் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த அம்பிகாவுடன் நிச்சயதார்த்தம் நிகழ்கிறது. ராமின் ராசிக்குக் கல்யாணமே ஆகாது என உறவினர்களும் ஊரார்களும் அவர் காதுபடக் கிண்டல் செய்தவண்ணம் இருக்க, அம்பிகாவுடனான திருமணத்திற்காக மிகவும் மகிழ்ச்சியுடனும் எதிர்பார்ப்புடனும் காத்திருக்கிறார் ராம். அவரது ராசியோ, விதியோ, இயற்கையோ, இயக்குநரின் திரைக்கதையோ ஏதோ ஒன்று விளையாட, குடும்பத்துடன் கோபிச்செட்டிப்பாளையத்திலேயே லாக்டவுனில் சிக்கிக் கொள்வதோடு கல்யாணமும் நின்று விடுகிறது. 90'ஸ் கிட்டான ராமின் வேதனை ஒரு முடிவுக்கு வந்ததா இல்லையா என்பதுதான் படத்தின்முடிவு. கலகலப்பான படத்தின் முதற்பாதி ரசிக்க வைக்கிறது. இரண்டாம் பாதியில் 90'ஸ் கிட்களுக்கே உரித்தான சோதனை நாயகன் ராமைப் போட்டு வாட்டுகிறது. ராமின் வேதனை பொறுக்காமல் அம்பிகாவின் தங்கை ராதா, ராமின் மீது காத...
மார்கன் விமர்சனம் | Maargan review

மார்கன் விமர்சனம் | Maargan review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
'ககன மார்க்கன்' என்றால் வான் வழியே பயணிப்பவன் எனப் பொருள். அது அப்படியே சுருங்கி மார்கன் ஆகிவிட்டது. ஒரு ஊசி போட்டால் உடல் கருகி வினோதமான முறையில் இறக்கும் வேதியியல் ஃபார்முலாவை உருவாக்கி வைத்துள்ளார் வில்லன். அப்படிக் கொடூரமாக இறக்கும் ரம்யாவின் மரணத்துடன் படம் தொடங்குகிறது. தனது மகளைப் போலவே கொல்லப்பட்டிருக்கும் ரம்யாவின் வழக்கைத் தனிப்பட்ட முறையில் விசாரிக்க சென்னை வருகிறார் காவல்துறை அதிகாரியான துருவ் கோரக். அவரது முகத்தின் இடது பக்கம் கூடக் கருப்படைந்து அரைகுறையாகச் செலுத்தப்பட்ட ஊசியால் பாதிக்கப்பட்டவராக உள்ளார். துருவ் கோரக் கொலையாளியைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் முடிவு. கொலைக்காரனால் துரத்தப்படுவதாகக் காட்டப்படும் வெண்ணிலா எனும் பாத்திரத்தில் நடித்துள்ள கனிமொழி மிகச் சிறப்பாக நடித்துள்ளார். படம் முடியும் பொழுது எல்லாக் கதாபாத்திரங்களையும் மறக்கவைக்கும் அளவிற்குச...
டிஎன்ஏ விமர்சனம் | DNA review

டிஎன்ஏ விமர்சனம் | DNA review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
DNA என்பது பிரதான கதாபாத்திரங்களான திவ்யாவையும் ஆனந்தையும் குறித்தாலும், படத்தில் ஒரு குழந்தையின் பெற்றோரைக் கண்டுபிடிக்க டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளப்படுவதையும் குறிக்கிறது. காதல் தோல்வியால் மதுபோதைக்கு அடிமையாகி மீளும் ஆனந்திற்கும், BPD எனப்படும் பார்டர்லைன் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் கொண்ட திவ்யாவிற்கும் திருமணம் நடக்கிறது. குழந்தை பிறந்ததும், அம்மகவைக் கையில் வாங்கும் திவ்யா, அது தன்னுடைய குழந்தை இல்லை எனச் சொல்கிறார். மருத்துவர்கள், செவிலியர்கள், உறவினர்கள் என அனைவரும் திவ்யாவை நம்பாத பொழுது, ஆனந்த் மட்டும் திவ்யா சொல்வதை நம்பித் தனது குழந்தைக்காகப் போராடத் தொடங்குகிறான். சுழலில் சிக்கியது போல், ஆனந்தின் அந்தத் தேடலும் போராட்டமும் அவனை எங்கெங்கோ அழைத்துச் செல்கிறது. திவ்யாவின் மீது ஆனந்த் வைத்த நம்பிக்கை வென்றதா இல்லையா என்பதே படத்தின் முடிவு. ஃபர்ஹானா படத்தில், வசனங்களுக்காக மனுஷ்யபுத்திர...
கட்ஸ் விமர்சனம் | Guts review

கட்ஸ் விமர்சனம் | Guts review

சினிமா, திரை விமர்சனம்
ஒரு திருநங்கை அரசு அலுவலரைக் கொன்ற கார்ப்பரேட் முதலாளியைக் கைது செய்கிறார் காவல்துறை அதிகாரி ரங்கராஜ். அவ்வழக்கில் இருந்து மிகச் சுலபமாக வெளியில் வரும் வில்லன், ரங்கராஜின் கர்ப்பவதி மனைவியான அனுவைக் கொல்கிறான். கோபத்தில் ரங்கராஜும் வில்லனைக் கொன்று விட, காவல்துறையும், வில்லனின் ஆட்களும் நாயகனைத் தேடுகின்றனர். மகளுடன் தலைமறைவாகித் தனது பூர்வீக ஊரில் தஞ்சமடைகிறார் ரங்கராஜ். அவரது அப்பாவுக்கும், வில்லனின் அப்பாவுக்கும் உள்ள தீர்க்கப்படாத சிக்கலொன்றும் சேர்ந்து நாயகனைத் துரத்துகிறது. அச்சிக்கல் என்னவென்றும், அதிலிருந்து ரங்கராஜ் எப்படி வெளிவருகிறார் என்பதும்தான் படத்தின் கதை. இடைவேளை வரை ஒரு கதையும், அதன் பின் வேறொரு கதையுமாகத் திரைக்கதை பயணிக்கிறது. ஆசிரமத்தில் வளரும் நேர்மையான காவலதிகாரி, ஆசிரமத்திலேயே ஒரு குழந்தையைத் தத்தெடுக்க விரும்பும் அவரது காதல் கதை என படத்தின் முதற்பாதி ரசிக்க வைக்கி...