லைசென்ஸ் விமர்சனம்
அறிமுக இயக்குநர் கணபதி பாலமுருகன் இயக்கத்தில், சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “லைசென்ஸ்”. சிறு வயது குழந்தை முதல் பல் போன பாட்டி வரை பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்படும் மோசமான சூழல் உழவும் இந்தக் காலகட்டத்தில், இது போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முயன்றிருக்கும் அந்த முயற்சியினாலும் சிறப்பான நடிப்பினாலும் கவனம் ஈர்க்கிறது “லைசென்ஸ்” திரைப்படம்.
பள்ளிப்பருவத்தில் இருந்தே தனக்கோ, தன் சுற்றத்தாருக்கோ நடக்கும் பாலியல் அத்துமீறல்களைத் தட்டிக் கேட்கும் துணிச்சலான பெண்ணான பாரதி, தவறுகளைத் தட்டிக் கேட்டுத் தண்டிக்கும் பணியை விட, தவறே செய்யாத இளம் சமுதாயத்தை உருவாக்கும் ஒப்பற்ற பணி ஆசிரியர் பணி என்பதை தன் தந்தை மூலமாக உணர்ந்து, தன்னை ஒரு ஆசிரியையாக மாற்றிக் கொள்கிறார். மேலும் சமூகப்பணிகளையும் தொடர்ச்சியாக முன்னெடுக்கும் பாரதி,&nb...