Shadow

Tag: ஸ்ரீ வெங்கடேஷ்

கெணத்த காணோம் விமர்சனம்

கெணத்த காணோம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தமிழில் அசோகமித்திரன் எழுதிய ‘தண்ணீர் தண்ணீர்’ நாவல் தாகத்தின் உச்சத்தை வெளிப்படுத்திய தண்ணிகரற்ற ஒரு படைப்பாகும். மேலும் தண்ணீர் தண்ணீர் என்ற பழைய திரைப்படமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆக தாகத்தை முன் வைத்த படைப்புகள் என்றாலே ஓர் உணர்ச்சிகரமான பிணைப்பு ஏற்படும். ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா தண்ணீருக்கான தாகத்தை மையப்படுத்தியே இந்தத் திரைக்கதையை எழுதியுள்ளார். மூலக்கதை நடிகர் ஆறுபாலா கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சிறு கிராமம் ஒன்றில் கோவில் பூசாரியாக இருக்கிறார் யோகிபாபு. அவர் தன் காதலியைக் கரம்பிடிக்க வேண்டும் என்ற தாகத்தில் தவிக்க, ஒருபுறம் ஊரே தண்ணீர் வேண்டித் தவிக்கிறது. இச்சூழலில் யோகிபாபுவின் வீட்டின் முன் கிணறு தோன்றினால் தண்ணீர் நிச்சயமாகக் கிடைக்கும் என்ற நிலை வருகிறது. யோகிபாபுவும் ஊருக்காகச் சம்மத...
அனோமி விமர்சனம் | Anomie review

அனோமி விமர்சனம் | Anomie review

சினிமா, திரை விமர்சனம்
அனோமி என்றால் சமூகத்திலிருந்து தனிமைப்பட்டோ, தனிமைப்படுத்தப்பட்டோ, நம்பிக்கையிழந்து, குறிக்கோள் இன்றி நிற்கும் ஒரு நிராதரவான நிலையைக் குறிப்பதாகும்.மன அழுத்தத்தில் உள்ள ஜியான் பிலிப் இறந்து போகிறார். அதைத் தற்கொலை என காவல்துறை அதிகாரி ஜிப்ரான் வழக்கை முடிக்க, அது தொடர் கொலைகளில் ஒன்றென நீதிமன்றத்தில் நிறுவுகிறார் ஃபாரன்ஸிக்கில் வேலை செய்யும் ஜியானின் தமக்கை ஜாரா பிலிப். சைக்கோ கொலைக்காரனைப் பிடித்தாக வேண்டிய அழுத்தம் ஜிப்ரானுக்கு நேரிடுகிறது. தம்பியைக் கொன்றவனை ஜாராவும் மும்மரமாகத் தேடுகிறார். கொலை செய்தது யார் என்றும், எதற்காகக் கொலை செய்தனர் என்பதற்குப் பதிலுடன் படம் நிறைவுறுகிறது.காவல்துறை அதிகாரி ஜிப்ரானாக ரஹ்மான் நடித்துள்ளார். முதற்பாதியில் சற்றே அலட்சியமாக இருப்பவர், நீதிமன்றத் தலையிடலுக்குப் பின், இரண்டாம் பாதியில் துரிதமாகச் செயற்பட்டுக் குற்றவாளியை அணுகுகிறார். அழுத்தமாக ...
கெணத்த காணோம் | யோகிபாபுவின் கொடை

கெணத்த காணோம் | யோகிபாபுவின் கொடை

சினிமா, திரைச் செய்தி
ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்" ஆகும். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சுசீந்திரன், "ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படத்தின் மூலம் அற்புதமான வாழ்வியலைச் சொன்னவர் இயக்குநர். இந்தப் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. எனினும், இயக்குநர் இந்தப் படத்திலும் அழகான வாழ்வியல் சார்ந்த கதையைக் கையாண்டிருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராகி இருக்கும் ரமேஷ் பாபு சாருக்கு வாழ்த்துக்கள். சிறிய பட்ஜெட் என்றாலும், நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் யோகி பாபு, சினிமா மீதுள்ள ஆர்வத்தால் மட்டுமே நடிப்பில் கவனம் செலுத்தி வரும் லவ்லின் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா, எந்த பட்ஜெட் படமென்றாலும் தனது உழைப்பைப் பலமடங்கு கொடுக்க...
Second case of சீத்தாராம் விமர்சனம்

Second case of சீத்தாராம் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
தொடர் கொலைகள் நடப்பதைத் தடுக்க முடியாமல் தடுமாறுகிறார் காவல்தூறை அதிகார் சீத்தாராம். கிடைக்கின்ற துப்புகளை இணைத்து, இருவரை அணுகிக் கைது செய்தாலும், எதிர்பாராத ஒருவரே அனைத்துக் கொலைகளுக்கும் காரணமாக உள்ளார். அவரை எப்படி சீத்தாராமன் கண்டுபிடிக்கிறார் என்பதே படத்தின் முடிவு. படத்தின் த்ரில்லிங் அம்சத்தைத் தனது இசையால் மிக அழகாகக் கொண்டு வந்துள்ளார் இசையமைப்பாளர் நவனீத் ஷாம். கொலை நடந்த ஒவ்வொரு வீட்டிலும், ஒரு சின்ன மர வீணை பொம்மை கிடைக்கிறது. அவ்விஷயத்தைத் தனது இசையால் சுவார்சியப்படுத்தியுள்ளார் நவனீத். படத்திற்கான உளநிலை அமைப்பதைக் (mood set) கச்சிதமாகத் தனது கோணங்களால் செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஹேமந்த். நாயகன் விஜய ராகவேந்திராவுடன் இணைந்து, Seetharam Benoy Case No. 18 (2021), Case of Kondana (2024) எனும் படங்களைத் தொடர்ந்து மூன்றாம் முறையாகப் போலீஸ் கதையை எடுத்துள்ளார் இயக்குநர் தேவிபிரசா...
மர்மர் விமர்சனம் | Murmur review

மர்மர் விமர்சனம் | Murmur review

சினிமா, திரை விமர்சனம்
தமிழின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் (Found Footage) திரைப்படம். இப்படத்தில் பின்னணி இசையும் இல்லை, மற்ற படங்கள் போல் பிரத்தியேகமான கேமரா ஒளிப்பதிவும் இல்லை. போகிற போக்கில், நாம் மொபைலிலோ, கேமராவிலோ படம்பிடிக்கும் ரா ஃபூட்டேஜ்கள் (Raw footage) போல்தான் முழுப்படமுமே உள்ளது. அமானுஷ்ய விஷயங்கள் சார்ந்த தகவல்களைப் பதிவிடும் ஏழு யூடியூபர்கள், ஜவ்வாது மலையில் இருக்கும் ஏழு கன்னிச்சாமிகள் மற்றும் மங்கை எனும் சூனியக்கார ஆவி சுற்றித் திரிவதை நேரடியாகப் பதிவு செய்யச் செல்கிறார்கள். அவர்கள் காணாமல் போகின்றனர். அவர்களைக் கண்டுபிடிக்க செல்லும் காவல் துறையினர் உடைந்து கிடக்கும் கேமராக்களைப் பறிமுதல் செய்கின்றனர். அந்த யூடியூபர்களின் கேமராவில் பதிவான ஏழு மணி நேர ஃபூட்டேஜ்களைத் தொகுத்து ஆவணப்படமாக வெளியிடப்படுகிறது. ரிஷி, மெல்வின், அங்கிதா, ஜெனிஃபர் என நான்கு யூட்யூபர்களும், காந்தா எனும் உள்ளூர்ப் பெண்ணும் ...
மர்மர் – தமிழின் முதல் Found Footage திரைப்படம்

மர்மர் – தமிழின் முதல் Found Footage திரைப்படம்

சினிமா, திரைச் செய்தி
தமிழ்த் திரையுலகில் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் (Found Footage) ஹாரர் திரைப்படம் எனும் சாதனையை மர்மர் படைத்திருக்கிறது. இந்தப் படத்தை ஹேம்நாத் நாராயணன் எழுதி இயக்கியுள்ளார். எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளன. மர்மர் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. மர்மர் படத்தின் சிறப்பு ஒப்பனையாளர் செல்டன், "இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் சிறப்பாகப் பணியாற்றி இருக்கிறார். மிகவும் சவாலாக இருந்தது. இந்தப் படத்தில் வரும் உண்மை கதாபாத்திரத்தை மூன்று நாட்கள் தொடர்ச்சியாக உண்மையில் பார்த்தது நான் தான். இதனால் எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. பிறகு திருவண்ணாமலை கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து, அங்கு எனக்கு சுத்திப் போட்டார்கள். அதன்பிறகு வந்துதான் இந்தப் படத்தில் பணியாற்றினேன்" என்று தெரிவித்தார். மர்மர் பட விநியோகஸ்த...

மர்மர் | இயக்குநர் ஹேம்நாத் நாராயணன்

சினிமா, திரை விமர்சனம்
தமிழ்த் திரையுலகில் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் (Found Footage) ஹாரர் திரைப்படம் எனும் சாதனையை மர்மர் படைத்திருக்கிறது. இந்தப் படத்தை ஹேம்நாத் நாராயணன் எழுதி இயக்கியுள்ளார். எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளன. மர்மர் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் ஹேம்நாத் நாராயணன், "மர்மர் தமிழ்த் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம். இதைப் பற்றி கொஞ்சம் விளக்கிக் கூறுகிறேன். உதாரணத்திற்கு ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறினால், அதுபற்றிய விசாரணைக்கு முதலில் அங்கிருக்கும் சி.சி.டி.வி. வீடியோக்களைத் தான் முதலில் ஆய்வு செய்வார்கள். அந்த சிசிடிவி வீடியோவில் இருக்கும் காட்சிகள் அவர்கள் தரப்பு ஆவணமாக இருக்கும். அதைப் படமாகக் காண்பிக்கும் போது, அந்த ஆவணத்தைத் தான் நாங்கள் படமாகக் காண்பிக்க...
கடாவர் விமர்சனம்

கடாவர் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
கடாவர் (Cadaver) என்றால் உயிரற்ற உடல் எனப் பொருள். படப்பை காட்டுக்குள், காருடன் சேர்ந்து எரிக்கப்பட்ட சடலம் ஒன்று கிடைக்கிறது. முற்றிலும் உருக்குலைந்த அந்தச் சடலத்தைக் கொண்டு, போலீஸ் சர்ஜனான பத்ராவின் உதவியோடு கொலை செய்யப்பட்ட நபரை அடையாளம் காண்கிறது காவல்துறை. கொலை செய்யப்பட்ட நபர் யார், கொலையாளி யார், கொலைக்கான மோட்டிவ் என்ன என்பது போன்ற விசாரணைக்கான பதிலே படத்தின் முடிவு. இசையமைப்பாளர் ரஞ்சின் ராஜ்க்குத் தமிழில் இது முதற்படம். மலையாளத்தில் அவரது முதற்படம் ஜோசஃப். இரண்டு படத்திற்குமான ஒற்றுமை என்னவென்றால், இரண்டின் கருவுமே ஏறக்குறைய ஒன்றேதான். சஸ்பென்ஸைத் தக்கவைக்க உதவும் ரஞ்சின் ராஜினுடைய பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. ஏசிபி (ACP) விஷாலாக ஹரிஷ் உத்தமன் நடித்துள்ளார். பத்ரா தான் மாஸ்டர் ப்ரெயின் என்பதால், இவரது பாத்திரத்திற்கான டீட்டெயிலிங் கம்மியாகவே உள்ளது. ஆனாலும் தன் க...
கடாவர் – மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் | அமலாபால் தயாரிப்பு

கடாவர் – மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் | அமலாபால் தயாரிப்பு

சினிமா, திரை விமர்சனம், திரைத் துளி
அமலா பால் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் நடிகை அமலா பால் கதையின் நாயகியாக நடித்து, முதன்முதலாகத் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கடாவர்’. அறிமுக இயக்குநர் அனூப் எஸ்.பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தப் படத்தில் அமலா பாலுடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், திரிகுன், வினோத் சாகர், அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அபிலாஷ் பிள்ளை எழுதிய கதைக்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ரஞ்சின் ராஜ் இசையமைத்திருக்கிறார். வருகின்ற ஆகஸ்ட் 12 ஆம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாகிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடைபெற்றது. இயக்குநர் அனூப் எஸ். பணிக்கர், “2016 ஆம் ஆண்டில் இந்தக் கதையினை கதாசிரியர் அபிலாஷ் பிள்ளையுடன் இணைந்து திரைக்கதை எழுதினோம். பல்வேறு தயாரிப்பாளர்களைச் சந்தித்து இந்தக் கதையைக் கூறியபோது ஒவ்வொருவரும் பல ஆலோச...
லால் சிங் சத்தா – அதுல் குல்கர்னியின் திரைக்கதை | ஆமிர் கான்

லால் சிங் சத்தா – அதுல் குல்கர்னியின் திரைக்கதை | ஆமிர் கான்

சினிமா, திரைச் செய்தி
நடிகர் ஆமிர்கான் தயாரிப்பில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் திரைப்படம் ‘லால் சிங் சத்தா’. ஆமிர்கான் ப்ரொடக்ஷன்ஸ், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் இதில் ஆமிர்கான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் நடித்திருக்கிறார். இவர்களுடன் நாக சைதன்யா, மோனா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். சத்யஜித் பாண்டே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ப்ரீதம் இசையமைத்திருக்கிறார். ஃபாரஸ்ட் கம்ப் எனும் ஆங்கிலப் படத்தினைத் தழுவி அதுல் குல்கர்னி திரைக்கதை எழுத, அத்வைத் சந்தன் படத்தை இயக்கி இருக்கிறார். இந்தத் திரைப்படத்தைத் தமிழகம் முழுவதும், தமிழின் முன்னணி திரைப்பட வெளியீட்டு நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் பிரம்மாண்டமாக வெளியிடுகிறது. ...
“இந்திக்கு எஸ்; இந்தித் திணிப்புக்கு மட்டுமே நோ” – உதயநிதி ஸ்டாலின் | லால் சிங் சத்தா

“இந்திக்கு எஸ்; இந்தித் திணிப்புக்கு மட்டுமே நோ” – உதயநிதி ஸ்டாலின் | லால் சிங் சத்தா

சினிமா, திரைச் செய்தி
நடிகர் ஆமிர்கான் தயாரிப்பில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் திரைப்படம் ‘லால் சிங் சத்தா’. ஆமிர்கான் ப்ரொடக்ஷன்ஸ், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் இதில் ஆமிர்கான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் நடித்திருக்கிறார். இவர்களுடன் நாக சைதன்யா, மோனா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். சத்யஜித் பாண்டே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ப்ரீதம் இசையமைத்திருக்கிறார். ஃபாரஸ்ட் கம்ப் எனும் ஆங்கிலப் படத்தினைத் தழுவி அதுல் குல்கர்னி திரைக்கதை எழுத, அத்வைத் சந்தன் படத்தை இயக்கி இருக்கிறார். இந்தத் திரைப்படத்தைத் தமிழகம் முழுவதும், தமிழின் முன்னணி திரைப்பட வெளியீட்டு நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் பிரம்மாண்டமாக வெளியிடுகிறது. ...
பூசாண்டி வரான் விமர்சனம்

பூசாண்டி வரான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பூச்சாண்டி எனும் தலைப்பு கிடைக்காததால், ஆனாலும் அத்தலைப்புத்தான் பொருத்தமாக இருக்கும் என்பதால், பூசாண்டியில் சமரசமாகியுள்ளது படக்குழு. மலேஷியாவில் எடுக்கப்பட்டுள்ள தமிழ்ப்படம். கதாபாத்திரங்கள் அனைவருமே பரிச்சயம் அற்ற முகங்கள் என்றாலும், பூச்சுகளற்ற இயல்பான மனிதர்களாய்த் திரையில் நடித்துள்ளதால், மனதோடு ஒட்டிக் கொள்கின்றனர். அவர்கள் தங்களுக்குள் நேசத்துடன் பேசிக் கொள்வதும், அவர்களது விருப்பங்களும், ஒருவரையொருவர் கிண்டலடித்துக் கொள்வதும் என நம்மில் ஒருவராக மாறி விடுகின்றனர். நாயகி ஹம்சினி பெருமாள் முதல் அனைவருமே சிறப்பாக நடித்திருந்தாலும், கதையை முன்னகர்த்துவதில் பெரும்பங்கு வகிக்கும் ஷங்கர் கதாபாத்திரத்தில் வரும் தினேஷ் சாரதி கிருஷ்ணன் பிரமாதப்படுத்தியுள்ளார். க்ளைமேக்ஸில் அவரெடுக்கும் முக்கியமான முடிவொன்று, அவரை எதிர்நாயகனாக்கினாலும், படத்தின் நாயகன் என்று குறிப்பிடும்படி சிறப்பாகத் தன் பங...
“பூசாண்டி வரான்” – மலேஷியத் தமிழ்ப்படம்

“பூசாண்டி வரான்” – மலேஷியத் தமிழ்ப்படம்

சினிமா, திரைத் துளி
வெள்ளித்திரை டாக்கீஸ் தயாரிப்பாளர், நடிகர் முஜீப் தமிழகமெங்கும் “பூ சாண்டி வரான்” படத்தை வெளியிடுகிறார். ட்ரையம் ஸ்டுடியோ மலேசிய படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆண்டி தயாரித்துள்ள பூச்சாண்டி என்ற தமிழ் படம் வரும் ஏப்ரல் 1ம் தேதி "பூசாண்டி வரான்" என்ற பெயரில் தமிழ்நாட்டில் வெளியாக இருக்கிறது. இப்படம் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி மலேசியாவில் பூச்சாண்டி என்ற தலைப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. JK விக்கி எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு டஸ்டின் இசை அமைக்க, அசலிஷாம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணியை இயக்குநர் JK விக்கியே செய்துள்ளார். இப்படத்தில், லோகன், தினேஷ், எஸ்.கிருஷ்ணன், கணேசன், மனோகரன், ரமணா, ஹம்ஷினி பெருமாள் ஆகியோர் நடித்துள்ளனர். வரலாற்று நிகழ்வுகள் மற்றும் சில உண்மை சம்பவங்கள் பிண்ணணியோடு உருவாக்கப்படுள்ள இந்த த்ரில்லர் படத்தை மலேசிய தமிழ் மக்கள் வெகுவாக ரசித்...