
ஃப்ரீடம் விமர்சனம் | Freedom review
ராஜீவ் காந்தி கொலையை ஒட்டி நிகழ்ந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது இப்படம்.
திருப்பெரும்புதூரில், 1991 மே 21ஆம் தேதி அன்று நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்படுகிறார். அந்த நேரத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் இலங்கை அகதிகளாக ராமேஸ்வரம் மண்டபம் முகாமில் தங்கியிருக்கும் ஆண்கள், பெண்கள் என பல இலங்கைத் தமிழர்களை விசாரணைக்காக வேலூருக்கு அழைத்துச் செல்கிறது காவல்துறை. ஓரிரு நாட்களில் திருப்பி அனுப்பி விடுவோம் என சொல்லி அழைத்துச் சென்று அடித்துத் துன்புறுத்தி விசாரிக்கிறது காவல்துறை. குடும்பத்தினரும் அவர்களை விடுதலை செய்யக் கோரி மனு கொடுத்தும், போராட்டம் செய்தும் எதுவும் எடுபடவில்லை. அப்படியே 4 ஆண்டுகள் கழிய, வேலூர் கோட்டையில் இருந்து 43 பேர் தப்பித்துச் செல்ல திட்டம் தீட்டுகிறார்கள். அத்திட்டம் அவர்களுக்குச்...