
காதல் என்பது பொதுவுடைமை விமர்சனம்
சமூகம் பேசத் தயங்கும், பேசினாலும் அருவருப்பாக அதை அணுகும் விஷயத்தைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளது படம். சாமுக்கும் நந்தினிக்குமான காதலை, சாமின் தாயிடம் சொல்வதுதான் படம். சாமாக லிஜோமோலும், நந்தினியாக அனுஷா பிரபுவும் நடித்துள்ளனர்.
மகளின் காதலனை வரவேற்கும் ஆர்வம் கலந்த மகிழ்ச்சியில் திளைக்கிறார் லக்ஷ்மி. லக்ஷ்மியாக ரோகிணி நடித்துள்ளார். லெஸ்பியன் இணைகளுக்கு ஆதரவாக இருக்கத் துணைக்கு வரும் ரவீந்திராவை மாப்பிள்ளையாக நினைத்துக் கொள்கிறார் ரோகிணி. ரவீந்திரவாக நடித்துள்ள கலேஷ், சங்கடத்துடன் அந்தச் சூழலை அணுகுவது ரசிக்க வைக்கிறது. அந்தச் சூழலின் பதைபதைப்பைப் பாத்திரங்கள் அழகாக வெளிப்படுத்தியுள்ளனர். இப்படியாகப் படத்தின் முதற்பாதி சட்டெனக் கடந்துவிடுகிறது.
படத்தின் இரண்டாம் பாதியில், பிரதான கதாபாத்திரங்கள், ஓரினசேர்க்கையை எதிர்த்தும் ஆதரித்தும் பேசியவண்ணம் உள்ளனர். ஒரு வீட்டுக்குள்ளேயே, கதாபாத்திரங்...