32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4025 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 156)
புதுமையான முறையில் டிக்கெட் விற்பனை – கூத்தன் தயாரிப்பாளர் சினிமா

புதுமையான முறையில் டிக்கெட் விற்பனை – கூத்தன் தயாரிப்பாளர்

நீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மென்ட் தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும் படத்தின் பெயர் “கூத்தன்”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 3 அன்று நிகழ்ந்தது. விழா மேடையிலேயே புதிதான முறையில் டிக்கெட் விற்பனை முறையை அறிமுகப்படுத்திப் பேசிய தயாரிப்பாளர் நீல்கிரிஸ் முருகன், “ஒரு மிகப்பெரும் பிரம்மாண்ட படத்தின் மூலம் என் மகனை அறிமுகப்படுத்தி ரசிகரகளைப் பிரம்மாண்டமான படம் பார்க்கும் உணர்வைத் தர நினைத்து இந்தப் படம் தயாரித்துள்ளேன். எந்த விசயத்திலும் ஏதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என […]

04/09/2018 Dinesh R
சீமராஜாவில் தமிழ் மன்னனாக வர்றேன் – சிவகார்த்திகேயன் சினிமா

சீமராஜாவில் தமிழ் மன்னனாக வர்றேன் – சிவகார்த்திகேயன்

வருடத்திற்கு எத்தனையோ திரைப்படங்கள் ரிலீஸ் ஆனாலும் திருவிழா உணர்வை திரையரங்கிலும், படம் பார்க்கும் ரசிகர்கள் மனதிலும் தருபவை ஒரு சில திரைப்படங்களே! அந்த வகையில் சிவகார்த்திகேயன், பொன்ராம் இணையும் படங்கள் எப்போதுமே குடும்பங்கள் கொண்டாடும் திருவிழாவாக தான் இருக்கும். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களைத் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றிக்காக மூன்றாவதாக அவர்கள் இணைந்துள்ள படம் ‘சீமராஜா’. சமந்தா, நெப்போலியன், சிம்ரன், சூரி என நட்சத்திரப் பட்டாளத்தோடு சிவகார்த்திகேயன் களமிறங்க, அவருக்குப் பக்கத்துணையாக டி.இமான் இசையமைத்திருக்கிறார். […]

03/09/2018 Dinesh R
எம்.ஜி.ஆர். – வாழ்க்கை வரலாற்றுப்படம் சினிமா

எம்.ஜி.ஆர். – வாழ்க்கை வரலாற்றுப்படம்

பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினைக் “காமராஜ் “என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றினை, “எம்.ஜி.ஆர்“ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வருகிறது. ஆனையடி பள்ளியில் படித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆரின் கல்வி வறுமையால் தடைபட்டு நாடகக் கம்பெனியில் சேரும் நிலை ஏற்பட்டது. அப்போது அந்த நாடக கம்பெனி முதலாளி, சிறுவன் தங்க விக்ரகம் போல் இருக்கிறான் எனக் கூறினாராம். எனவே இந்தப் படத்திற்கு அது போன்ற ஒரு […]

03/09/2018 Dinesh R
வஞ்சகர் உலகம்: 18+ கேங்ஸ்டர் படம் சினிமா

வஞ்சகர் உலகம்: 18+ கேங்ஸ்டர் படம்

லாபிரிந்த் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மனோஜ் பீதா இயக்கியிருக்கும் படம் ‘வஞ்சகர் உலகம்’. குரு சோமசுந்தரம், சாந்தினி தமிழரசன், அழகம் பெருமாள், ஜான் விஜய், அனிஷா அம்ப்ரோஸ் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் படத்தின் 25 நிமிட காட்சிகள் பிரத்யேகமாகத் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. “சினிமாவில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அது தான் என்னை இந்தப் […]

02/09/2018 Dinesh R
மேம்படுத்தப்பட்ட ‘யு-டர்ன்’ படம் சினிமா

மேம்படுத்தப்பட்ட ‘யு-டர்ன்’ படம்

ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாச சித்தூரி, வி.ஒய். கம்பைன்ஸ் மற்றும் பிஆர்8 கிரியேஷன்ஸ் சார்பில் ராம்பாபு பண்டாரு தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாரித்திருக்கும் படம் ‘யு-டர்ன்’. கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘யு-டர்ன்’ படத்தின் ரீமேக் இது. கன்னட ஒரிஜினல் படத்தை இயக்கிய பவன்குமார் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சமந்தா அக்கினேனி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, ஆதி, ராகுல் ரவீந்திரன், நரேன், பூமிகா சாவ்லா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். செப்டம்பர் 13ஆம் […]

02/09/2018 Dinesh R
“குறும்படங்கள் மூலம் நீதியை நிலை நாட்டமுடியும்” – சூர்யா சினிமா

“குறும்படங்கள் மூலம் நீதியை நிலை நாட்டமுடியும்” – சூர்யா

வெள்ளித்திரையில் அடியெடுத்து வைக்க விரும்புபவர்களுக்குக் குறும்படங்கள் சரியான விசிட்டிங் கார்டு என்பார்கள். அவ்விதமாக மூவி பஃப் – ஃபர்ஸ்ட் கிளாப்: சீசன்-2 குறும்படப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வெற்றியாளர்களை க்யூப் சினிமா (பி) லிட் அறிவித்துள்ளது. இந்தக் குறும்படப் போட்டியில் கல்கியை இயக்கிய விஷ்ணு இடவன் முதல் பரிசான ரூபாய் 3 லட்சத்தைப் பெற்றார். அவருக்கு சூர்யாவின் 2D நிறுவனத்தில் ஸ்கிரிப்ட் சொல்வதற்கான பொன்னான வாய்ப்பும் கிடைத்துள்ளது. இவருக்கு அடுத்ததாக, கம்பளிப்பூச்சி இயக்குநர் வி.ஜி.பாலசுப்ரமணியன் 2 […]

02/09/2018 Dinesh R
60 வயது மாநிறம் விமர்சனம் சினிமா

60 வயது மாநிறம் விமர்சனம்

‘கோதி பண்ணா சாதார்ணா மைக்கட்டு (Godhi Banana Sadharna Mykattu)’ என்ற படம் கன்னடத்தில், 2016 இல் வெளிவந்தது. ‘கோதுமை நிறம் சாதாரண உடற்கட்டு’ என்பது அந்தக் கன்னடப்படத் தலைப்பின் பொருள். இயக்குநர் ராதாமோகன், ’60 வயது மாநிறம்’ எனத் தமிழில் மீள் உருவாக்கம் செய்துள்ளார். அல்சைமர் நோயால் பாதிக்கப்படும் 60 வயது கோவிந்தராஜ் காணாமல் போய்விடுகிறார். அவரையொரு பராமரிப்பு இல்லத்தில் சேர்த்துவிட்டிருக்கும் அவரது மகன் சிவா, தனது அலட்சியத்தால் தந்தையைத் தொலைத்துவிட்டோமெனத் தேடி அலைகிறான். சிவாவின் […]

02/09/2018 Dinesh R
மகராசி – மருத்துவர் அனிதா நினைவஞ்சலிப் பாடல் Others

மகராசி – மருத்துவர் அனிதா நினைவஞ்சலிப் பாடல்

ஓல குடிசையில கனவு கண்டாளே! கனவு அது பலிக்கும் முன்னே – கலைஞ்சு போனாளே! அரிக்கேன் வெளிச்சம் தந்து ஆறாப்பு முடிச்சா பசி தூக்கம் எதையும் பாக்காம பத்தாப்பு முடிச்சா! அழுத ஈரம் காயலையே! அழுத ஈரம் கண்ணில் காயலையே! நியாயம் தேடிப் பார்த்தும் கிடைக்கலையே! வேதம் நூறு இருந்தும் ஒரு தெய்வம் காக்கலையே!! பாவி சனம் நாங்க உன் சேவை பெற அது வாய்க்கலையே! பாவி மக எங்க போவா? பாவம் அவ என்ன செய்வா […]

01/09/2018 Dinesh R
அமிதாப் பச்சனின் முதல் தமிழ்ப்படம் சினிமா

அமிதாப் பச்சனின் முதல் தமிழ்ப்படம்

இந்தியத் திரையுலகின் பிதாமகன், அகில இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தமிழில் நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து தமிழ் வாணன் இயக்கத்ததில் அவர் நடிக்கவுள்ள படத்தின் பெயர் “உயர்ந்த மனிதன்”. திருச்செந்தூர் முருகன் ப்ரொடக்‌ஷன்ஸ் என்ற படநிறுவனத்தின் சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் ஃபைவ் எலிமன்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப் படம் தமிழ், ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் படமாக்கப்பட உள்ளது. “ஒரு துணை இயக்குநராகத் திரையுலகில் கால் பதிக்கும் காலத்தில் இருந்தே எனக்கு அமிதாப் […]

31/08/2018 Dinesh R
ஆருத்ரா விமர்சனம் சினிமா

ஆருத்ரா விமர்சனம்

குழந்தைளுக்கு எதிரான வன்முறையைப் பேசும் படமென பா.விஜயே, இசை வெளியீட்டில் படத்தின் ஒரு வரிக் கதையைச் சொல்லிவிட்டார். குழந்தைகளுக்கு, இல்லையில்லை பெண் குழந்தைகளுக்குப் பெற்றோர்களே போலீஸாக இருந்து பாதுகாக்கவேண்டும் என்பது தான் படம் முன் வைக்கும் அழுத்தமான கருத்து. படம் ஆகாயவதத்தில் தொடங்கி, நிலசதுக்கத்தில் முடிகிறது. அதாவது பஞ்சபூதங்களைக் கொண்டு, பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டவர்களைப் பழிவாங்குகிறார் படத்தின் நாயகனான சிவமலை. ஜல சமாதி, அக்னி சாபம், காற்றுப்படலம் என இந்தியாவின் ஒவ்வொரு மூலையில் வைத்துக் கொல்கிறார். ஆனால், […]

31/08/2018 Dinesh R
இமைக்கா நொடிகள் விமர்சனம் சினிமா

இமைக்கா நொடிகள் விமர்சனம்

கொலையை ரசித்துச் செய்யும் ஒரு கொலைக்காரன், அவனைப் பிடிக்க நினைக்கும் ஒரு பெண் சி.பி.ஐ. அதிகாரி என இருவருக்கு இடையில் நடக்கும் ஆடுபுலியாட்டம்தான் இமைக்கா நொடிகள் படத்தின் கதை. ருத்ராவெனும் சைக்கோவாக அனுராக் கஷ்யப் அதகளப்படுத்தியுள்ளார். அனுராகின் அட்டகாசமான உடற்மொழியுடன், மிரட்டும் முகபாவனையுடன், மகிழ் திருமேனியின் கம்பீரமான குரல் செம்புலப் பெயல் நீர் போல் ஒன்றிக் கொள்கிறது. ட்ரெய்லரிலேயே அந்த ரசவாதத்தினை உணரலாம். படத்திலேயோ, அது தொடக்கம் முதல் கவ்விக் கொள்கிறது. வில்லனாக அனுராக் கஷ்யபையும், அவருக்கு […]

31/08/2018 Dinesh R
பிரபுதேவாவை இயக்கும் நடன இயக்குநர் சினிமா

பிரபுதேவாவை இயக்கும் நடன இயக்குநர்

தூத்துக்குடி மற்றும் மதுரை சம்பவம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள பிரபல நடன இயக்குநர் ஹரிகுமார், ஸ்டுடியோ க்ரீன் K.E.ஞானவேல்ராஜா தயாரிக்கும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். “தேள்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார். எங்கேயும் எப்போதும், நெடுஞ்சாலை உட்பட பல படங்களில் தனது தனித்துவமான இசையால் ரசிகர்களைக் கவர்ந்த இசையமைப்பாளர் C.சத்யா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். காட்டேரி படத்தின் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கே.எல். எடிட்டிங் செய்கிறார். […]

30/08/2018 Dinesh R