32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4025 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 169)
நம்மை நோக்கி வரும் பேராபத்து அயல் சினிமா

நம்மை நோக்கி வரும் பேராபத்து

2013 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பசிஃபிக் ரிம்’ என்கிற திரைப்படம் பற்றி நினைவிருக்கலாம். அதன் தொடர்ச்சியாக, ‘பசிஃபிக் ரிம்: அப்ரைசிங் (Pacific Rim: Uprising)’ எனும் படம் வருகிறது. ஸ்டீவென் டிநைட் என்பவர், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். முதல் பாகத்தில், எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத விதத்தில், கடல் பரப்பிலிரிந்து ராட்சச உருவில் முன் பின் கண்டிராத தோற்றத்தோடு சில உயிரினங்கள் மனிதக் குலத்தைத் தாக்க வர, மனித இனம ஒற்றுமையாக நின்று, அத்தாக்குதலுக்கு எதிர் தாக்குதலை […]

06/03/2018 Dinesh R
அபியும் அனுவும் – 22 வருடங்களுக்குப் பின் சினிமா

அபியும் அனுவும் – 22 வருடங்களுக்குப் பின்

அபியும் அனுவும் எனும் படத்தை தமிழிலும் மலையாளத்திலும் ஒரே சமயத்தில் இயக்கியுள்ளார் பி.ஆர்.விஜயலக்ஷ்மி. இவர் இயக்குநர் பி.ஆர்.பந்தலுவின் மகளென்பது குறிப்பிடத்தக்கது. 1995இல், “பாட்டு பாடவா” எனும் படத்தை இயக்கியுள்ள பி.ஆர். விஜயலக்ஷ்மி இயக்கும் இரண்டாவது படம் ‘அபியும் அனுவும்’. ஆனால் விஜயலக்ஷ்மி, 1985 இல் வெளியான பாக்கியராஜின் ‘சின்னவீடு’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராகவே திரையுலகில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. “விஜயலக்ஷ்மி அவர்களின் படத்தில் வேலை செய்தது எனக்குப் பெருமையாக இருந்தது. ரொம்பவே வெளிப்படையாக பேசக்கூடிய இயக்குநர். படத்தில் […]

05/03/2018 Dinesh R
நீலம் புரொடக்சன்ஸின் ‘பரியேறும் பெருமாள்’ சினிமா

நீலம் புரொடக்சன்ஸின் ‘பரியேறும் பெருமாள்’

இயக்குநர் பா.இரஞ்சித்தின் படத்தயாரிப்பு நிறுவனமான “நீலம் புரொடக்சன்ஸ்” தயாரித்திருக்கும் படம் பரியேறும் பெருமாள். இயக்குநர் ராம்-இன் இணை இயக்குநரான மாரி செல்வராஜ், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்பின் மூலமாகவும், ‘மறக்கவே நினைக்கிறேன்’ தொடரின் மூலமாகவும் இலக்கிய உலகத்திலும் பரவலாக அறியப்பட்ட எழுத்தாளரான மாரி செல்வராஜ் இயக்கும் முதல் திரைப்படம் பரியேறும் பெருமாள். முழுக்க முழுக்க தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் தென் தமிழகக் கிராமங்களிலும் நகரங்களிலும் பள்ளி, […]

03/03/2018 Dinesh R
அமலா பாலின் தொண்டு நிறுவனம் சமூகம்

அமலா பாலின் தொண்டு நிறுவனம்

பெரும்பாலான இளைஞர்களுக்கு உந்துதலாக இருக்கும் சினிமா நட்சத்திரங்களுக்கு நடிப்பது மட்டுமில்லாமல் இந்த இளைஞர்களை வழிப்படுத்தும் பொறுப்பும் உள்ளது. திரையைத் தாண்டி அவர்களது பொறுப்பு நீள்கிறது என்பதை நடிகை அமலா பால் தற்பொழுது நிரூபித்துள்ளார். கஷ்டப்படும் மக்களுக்குச் சேவை செய்வதற்காக, அமலா ஹோம் என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார் அமலா பால். இந்த நிறுவனம் கண் தானம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதற்கான நிதியைத் திரட்டுவது போன்ற விஷயங்களில் ஈடுபடவுள்ளது. தனது தொண்டு நிறுவனம் குறித்து, ”அகர்வால் கண் […]

03/03/2018 Dinesh R
மதிப்பெண் இல்லாக் குழந்தைகள் நிகழ்ச்சி சமூகம்

மதிப்பெண் இல்லாக் குழந்தைகள் நிகழ்ச்சி

சமீபத்தில் தமிழில் மிகப் பிரம்மாண்டமாகத் தொடங்கப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசை ‘கலர்ஸ் தமிழ்’. இந்தியாவின் பல மொழிகளில் முன்னோடியாக இருக்கும் ‘கலர்ஸ்’ தொலைக்காட்சி தனது மிக வித்தியாசமான மற்றும் தரமான நிகழ்ச்சிகளுக்குப் பெயர் போனது. ‘கலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியில் படிப்பைத் தாண்டி வியக்கத்தக்க திறமைகளைக் கொண்ட குழந்தைகளை மையமாக வைத்து ‘கலர்ஸ் சூப்பர் கிட்ஸ்’ என்ற ஒரு ஷோவைத் தொடங்கியுள்ளனர். ”தொலைக்காட்சியைக் கண்டு ரசிக்கும் குழந்தைகளுக்கு அவர்களின் அறிவை வளர்க்கும் வகையிலும், இதுவரை யாரும் காணாத ஒரு தொலைக்காட்சி […]

02/03/2018 Dinesh R
சாம் CS – ஒரு சிறந்த இசையமைப்பாளர் சினிமா

சாம் CS – ஒரு சிறந்த இசையமைப்பாளர்

விக்ரம் வேதாவில் கலக்கிய இசையமைப்பாளர் சாம் CS தான் ‘லைக்காவின் கரு’ படத்திற்கு இசையமைத்துள்ளார். தனது படத்தின் இசையில் அதிக கவனம் செலுத்தும் இயக்குநர் விஜய் பேசுகையில், ” சமீப காலத்தில் தமிழ் சினிமாவின் சிறந்த கண்டுபிடிப்பு இசையமைப்பாளர் சாம் CS தான். கதையையும், பாடல்களின் சூழ்நிலையையும் சரியாகப் புரிந்து கொண்டு அசத்துபவர் அவர். இந்தப் படத்தின் அவரது பாடல்கள், எனது எல்லாப் படங்களையும் விட மிகச் சிறந்த பாடல்களைக் கொண்டதாக நிச்சயம் அமையும். ‘லைகாவின் கரு’ […]

02/03/2018 Dinesh R
பேய்ப்பசியில் பாடும் விஜய் சேதுபதி சினிமா

பேய்ப்பசியில் பாடும் விஜய் சேதுபதி

ஸ்ரீநிவாஸ் கவிநயன் இயக்கத்தில் ஹரி கிருஷ்ணா பாஸ்கர் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘பேய் பசி’. இந்தப் படத்தை ‘ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின் மென்ட் ப்ரைவேட் லிமிடெட் (Rise East Entertainment Private Limited)’ நிறுவனம் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை இப்படத்தின் சிறப்பம்சங்களில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தப் படத்தின் ஒரு கிளப் பாடலிற்கு அனைவரையும் உடனே கவரும் ஒரு வித்தியாசமான குரல் தேவைப்பட்டது. இதற்கு நடிகர் விஜய் சேதுபதி […]

01/03/2018 Dinesh R
கல்கி – கிஷோரின் குறும்படம் Teaser

கல்கி – கிஷோரின் குறும்படம்

சிறப்பாக எடுக்கப்படும் உணர்வுப்பூர்வமான குறும்படங்கள் மக்கள் மனதில் என்றுமே தனக்கென ஒரு இடம் பிடிக்கும். திலீப் குமார் இயக்கத்தில் கிஷோர், யாஸ்மின் பொன்னப்பா ஆகியோர் நடிப்பில் உருவாகிய 45 நிமிட குறும்படம் ‘கல்கி’ உலகமெங்கும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுவருகிறது. ஒரு இயற்பியலாளருக்கும், தனது வயதில் பாதி வயதே இருக்கும் தனது காதலிக்கும் இடையே நடக்கும் உணர்வுப்பூர்வமான குறும்படம் தான் ‘கல்கி’. இந்தக் குறும்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பும் ஆதரவும் உலகமெங்கும் கிடைத்து வருகிறது. தற்பொழுது இந்தக் குறும்படத்தை டிஜிட்டல் […]

01/03/2018 Dinesh R