32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4026 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 185)
நாகேஷ் திரையரங்கம் – வழக்கு தொடர்ந்த ஆனந்த் பாபு சினிமா

நாகேஷ் திரையரங்கம் – வழக்கு தொடர்ந்த ஆனந்த் பாபு

சமீபத்தில், நாகேஷ் திரையரங்கம் படத்தின் டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். நடிகர் ஆரி, ஆஷ்னா சவேரி நடிப்பில் இசாக் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரான்ஸ் இண்டியா மீடியா எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனர் ராஜேந்திர எம். ராஜன் தயாரித்துள்ளார். நாகேஷ் திரையரங்கம் படத்தை வெளியிட தடைகேட்டு, மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் மகனும் நடிகருமான ஆனந்த்பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளார். ‘என்னுடைய தந்தை நாகேஷ், 1958ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவர் பல […]

01/07/2017 Dinesh R
மாம்: பெண்ணின் வலிமை சினிமா

மாம்: பெண்ணின் வலிமை

‘ஒருபோதும் பெண்ணுடைய வலிமையை குறைத்து மதிப்பிட வேண்டாம். ஏனெனில் சவால் என்று வந்துவிட்டால், அவள் நரகத்தையும் விலை பேசுவாள்’ என்பதுதான் ‘மாம்’ படத்தின் மையக்கரு. தேவகி சபர்வால், கணவர் ஆனந்துடனும் இரு அழகான பெண் குழந்தைகள் ஆர்யாவுடனும் பிரியாவுடனும் மன மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார். ஆனால் ஏனோ ஒரு தாயுள்ளத்தின் உண்மையான மனமகிழ்ச்சியைத்தான் இன்னும் உணரவில்லை என்பது அவருக்குப் புரிகிறது. ஆரியாவால் தன் தந்தையிடம் காட்டும் நெருக்கத்தை தன் தாயிடம் காட்ட இயலவில்லை. ஒரு மகள் தன்னுடைய […]

24/06/2017 Dinesh R
மாம் – மொத்த உலகத்திற்குமான படம் சினிமா

மாம் – மொத்த உலகத்திற்குமான படம்

“மாம் ஒரு ஹிந்திப் படம். ஆனா அது மொத்த இந்தியாவிற்கான கதைக்களத்தைக் கொண்டுள்ளது. ஏன், உலகம் முழுவதற்குமான கதையைக் கொண்டது. சைனா, அமெரிக்கா, ஈரோப் என எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும், குடும்பம் என்ற அமைப்பை ரொம்ப மதிக்கிறாங்க. இந்தப் படம் பெற்றோர்கள் செய்யும் தியாகம் பற்றிப் பேசுகிறது” என்றார்படத்தின் இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரஹ்மான். “என் கணவர் இந்தக் கதையின் கருவை என்னிடம் சொன்னார். இப்படத்தை நான் கண்டிப்பாகப் பண்ணணும்னு முடுவு பண்ணேன். பின் கதையை டெவலப் செய்யவே […]

22/06/2017 Dinesh R
சிலந்திகளுக்கு நடுங்கும் ஸ்பைடர்-மேன் அயல் சினிமா

சிலந்திகளுக்கு நடுங்கும் ஸ்பைடர்-மேன்

குடும்பம், படிப்பு, காதலி என ஒரு வட்டத்திற்குள் வாழ்க்கை நடத்தி வரும் ஓர் இளைஞன், பொதுமக்களது பாதுகாப்பிற்குப் பங்கம் விளைவிக்க விழையும் அதீத சக்தி பெற்ற வில்லன், தலைதூக்க முற்படும் தருணங்களிலெல்லாம் உருமாறி, செவ்வண்ணத்தில் கட்டம் போடப்பட்ட உடையணிந்து, பொது மக்களின் பாதுகாவலனாகச் செயல்படத் தயாராகிவிடுவான்! அவன் ஸ்பைடர்மேன். ஆனால், ஸ்பைடர் மெனாக நடிக்கும் 21 வயது இளைஞனான டாம் ஹாலண்டிற்கு சிலந்திகள் என்றால் பயம். 2016இல் வெளியான ‘கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்’ படத்தில் ஸ்பைடர்மேனாக […]

20/06/2017 Dinesh R
தங்கரதம் விமர்சனம் சினிமா

தங்கரதம் விமர்சனம்

நாயகன் வெற்றி ஓட்டும் டெம்போ வேனின் பெயர் ‘தங்கரதம்’ என்பதே படத்தின் தலைப்பிற்குக் காரணம். ஆனாலும், டாஸ்மாக் பாரில் வரும் பாடலில், ‘தங்கரதம் போல ஸ்டீல் பாடி’ என குடிக்காரர் ‘நான் கடவுள்’ ராஜேந்திரனைப் புகழும் வரி ஒன்று வருகிறது. கரியாம்பட்டியிலிருந்து ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்குக் காய்கறிகளை இரண்டு டெம்போ வேன் கொண்டு செல்கிறது. ஒன்று, நாயகன் வெற்றியுடைய ‘தங்கரதம்’; இன்னொன்று, கதாநாயகியின் அண்ணன் செளந்தரராஜாவினுடைய ‘பரமன்’ வேன். இருவருக்குமிடையே எப்பொழுதும் பலமான தொழிற்போட்டி நிலவி வருகிறது. நாயகனுக்கோ […]

17/06/2017 Dinesh R
டெஸ்பிக்கபிள் மீ 3 விமர்சனம் அயல் சினிமா

டெஸ்பிக்கபிள் மீ 3 விமர்சனம்

2010இல் தொடங்கியது ‘டெஸ்பிக்கபிள் மீ’ தொடர். அதில் வரும் மினியன்ஸ் எனும் திரைப்பாத்திரங்களுக்கு ரசிகர்களிடம் கிடைத்த பரவலான வரவேற்பின் காரணமாக வசூலில் தொடர்ந்து சாதனை புரிந்து வருகிறது. சமீபத்தில், மினியன்ஸ் போன்று மக்களின் ஏகோபித்த வரவேற்பினைப் பெற்ற திரைப்பாத்திரம் வேறில்லை என்றே சொல்லவேண்டும். சமூக வலைத்தளங்களில் எமோட்டிகான்களாகப் பயன்படுத்தப்படும் மினியன்ஸ், மக்களின் எல்லா விதமான உணர்ச்சிகளையும் தங்கள் சின்னஞ்சிறு மஞ்சள் உருவங்களின் மூலம் பிரதிபலிக்கின்றன. மக்களுக்கு மினியன்ஸிடமுள்ள மோகத்தினை மனதில் கொண்டே, யுனிவர்சல் பிக்சர்ஸ் முதல் முறையாக டெஸ்பிக்கபிள் மீ […]

16/06/2017 Dinesh R
கண்ணன் தந்த கவிஞர் கட்டுரை

கண்ணன் தந்த கவிஞர்

குழந்தைக் கவிஞர் என்றதுமே நம் அனைவருக்கும் அழ.வள்ளியப்பாவின் நினைவு உடனே வந்துவிடுகிறது. அது சரிதான். குழந்தைகளுக்காக வள்ளியப்பா ஆயிரக்கணக்கில் பாடல்கள் எழுதியிருக்கிறார். ‘மலரும் உள்ளம்’ என்கிற தலைப்பில் இவரெழுதிய புத்தகமொன்று ஒன்பது பதிப்புகளுக்கு மேல் அச்சாகி, முப்பதாயிரம் பிரதிகளுக்கும் அதிகமாக விற்றுத் தீர்ந்திருப்பதாகவும் அறிய முடிகிறது. எனவே இவருக்குக் கிடைத்திருக்கும் குழந்தைக் கவிஞர் பட்டம் ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான். குழந்தைக் கவிஞர் என்றால் அழ.வள்ளியப்பா தான் என்கிற பிம்பம், தமிழ் சிறுவர் இலக்கியத்தில் உருவாகிவிட்டது என்ற உண்மையை எவரும் […]

16/06/2017 Dinesh R
லண்டனில் இசை ஆல்பம் – ஸ்ருதிஹாசன் சினிமா

லண்டனில் இசை ஆல்பம் – ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஹிந்திப் படம், ‘பெஹன் ஹோகி தேரி. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சியைத் தன்னுடைய தந்தைக்காகவும், தன்னுடைய நெருங்கிய நண்பர்களுக்காகவும் சென்னையில் திரையிட்டார் ஸ்ருதிஹாசன். படம் முடிந்ததும் பேசிய ஸ்ருதிஹாசன், “இந்தப் படம், என்னுடைய தந்தைக்காகவும், என்னுடைய பள்ளிக்காலத்திலிருந்து என்னுடன் தொடர்பில் இருக்கும் நண்பர்களுக்காகவும் சென்னையில் திரையிடப்பட்டது. எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. படத்தைப் பார்த்த பின்னர் படத்தைப் பற்றி என்னிடம் நிறைய பேசினார் அப்பா. அவர் எனக்குத் தந்தை மட்டுமல்ல, […]

13/06/2017 Dinesh R
மினியன்ஸ் கலக்கப் போகும் டெஸ்பிக்கபிள் மீ 3 அயல் சினிமா

மினியன்ஸ் கலக்கப் போகும் டெஸ்பிக்கபிள் மீ 3

ஃப்ரான்ஸில் உள்ள ‘மெக் கஃப்’ என்கிற மிகப் பெரிய அனிமேஷன் ஸ்டூடியோவில் மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாக்கப்பட்ட படம்தான், ‘டெஸ்பிக்கபிள் மீ’ திரைப்படம். 69 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் 2010 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அப்படம், 543.1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துக் குவித்தது. அதன் தொடர் படமாக 2013 இல் வெளிவந்த டெஸ்பிக்கபிள் மீ 2 அமெரிக்க டாலர்கள் செலவில் தயாரிக்கப்பட்டு 970.8 மில்லியன் அமெரிக்க டாலர்களைச் சம்பாதித்தது. அவ்விரு படங்களையும் பியரீ காஃபின் […]

12/06/2017 Dinesh R
தி மம்மி விமர்சனம் அயல் சினிமா

தி மம்மி விமர்சனம்

மம்மி படத்தில் டாம் க்ரூஸ் நடிக்கிறார் என்ற செய்தி, ரசிகர்கள் மத்தியில் பலமான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. ரகசிய தீவிரவாத சிண்டிகேட்களை வேரறுக்கும் டாம் க்ரூஸ் எகிப்தியக் கல்லறைக்கு என்ன வேலையாகப் போயிருப்பார் என்ற ஆவலே அதற்குக் காரணம். ஈராக்கில் (மெசொப்பொதாமியா), எதிர்பாராத விதமாய்ப் புராதனமான கல்லறை (சிறை) ஒன்றைக் கண்டுபிடிக்கிறார் நிக் மோர்டன். அந்தப் பாதாளச் சிறையில் புதைக்கப்பட்டிருக்கும் எகிப்திய இளவரசி அஹமனெத்தின் கல்லறைப் பெட்டி பாதரசத்திலிருந்து எடுக்கப்பட்டதும், பாலைவனப் புயல்களைக் கட்டுப்படுத்தும் இருள் கடவுளான செத்துடன் […]

12/06/2017 Dinesh R
ரங்கூன் விமர்சனம் சினிமா

ரங்கூன் விமர்சனம்

ரங்கூன் என்ற தலைப்பு இப்படத்திற்குப் பொருத்தமானதா என்பதே ஐயம்தான். ரங்கூன் என்ற நகரம் படத்தின் கதைக்குப் பெரிதும் உதவாததோடு, சில நிமிடங்களே படத்தில் வந்து போகிறது. நாயகனின் சொந்த கிராமம் கூட ரங்கூனில் இருந்து 90 கி.மீ.இலுள்ள ‘டேடயே’ என்றே காட்சிப்படுத்தியுள்ளனர். பர்மாவிலிருந்து சிறு வயதிலேயே அகதியாகச் சென்னைக்கு வரும் கெளதம் கார்த்திக்கிற்கு வாழ்க்கை அளிக்கும் படிப்பிணை தான் படத்தின் கதை. கெளதம் கார்த்திக்கின் நண்பர் ‘அத்தோ’ குமாராக லல்லு கலக்கியுள்ளார். அவர் வடச்சென்னைத் தமிழில் வெகு […]

10/06/2017 Dinesh R
ஒரே நேரத்தில் 12 படங்கள் – செம ஜீ.வி. சினிமா

ஒரே நேரத்தில் 12 படங்கள் – செம ஜீ.வி.

பசங்க புரொடக்சன்ஸ் பாண்டிராஜ் மற்றும் லிங்க பைரவி கிரியேஷன்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஜீ.வி.பிரகாஷ் குமார், அர்த்தனா நடிப்பில் அறிமுக இயக்குநர் வள்ளிகாந்த் இயக்கியுள்ள படம் ‘செம’. படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமாரே இசையமைத்துள்ளார். “இயக்குநர் வள்ளிகாந்த் ஒரு காட்சிக்கு 40 டேக் வரை பொறுமையாக எடுப்பார். டப்பிங்கிலும் சரி, ஷூட்டிங்கிலும் சரி அவரைத் திருப்திப்படுத்தவே முடியாது. பாண்டிராஜ் பட்டறையில் இருந்து நிறைய இயக்குநர்கள் உருவாகியிருக்கிறார்கள். அப்படி இந்த வள்ளிகாந்தும் நல்ல இயக்குநராக வருவார்” என்றார் நடிகர் மன்சூர் அலிகான். […]

09/06/2017 Dinesh R