32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4025 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 187)
காஷ்மீரில் “ரங்கா” சினிமா

காஷ்மீரில் “ரங்கா”

பாஸ் மூவிஸ் சார்பில் விஜய் கே.செல்லையா தயாரிக்கும் “ரங்கா” படத்தின் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரின் பஹால்கம் மற்றும் குல்மார்க் என்ற இடங்களில் நடந்தது. சிபிராஜ் – நிகிலா விமல் ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்கிறது. “இயக்குநர் வினோத் இந்தப் படத்துக்கான படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்த வேண்டும் என்று என்னைக் கேட்ட போது அங்கு அதற்கான சூழ்நிலை அரசியல் ரீதியாகவும் இல்லை, பாதுகாப்பு ரீதியாகவும் இல்லை, இயற்கையும் ஆதரவாக இல்லை எனப் பலர் […]

09/05/2017 Dinesh R
மீண்டும் ஏலியன்கள் அயல் சினிமா

மீண்டும் ஏலியன்கள்

இயக்குநர் ரிட்லீ ஸ்காட், 1979இல் தனது ஏலியன் படம் மூலம் முதல் விதையைப் போட்டார். ஏலியன்ஸ் (1986), ஏலியன் 3 (1992), ஏலியன்: ரெசரக்ஷன் (1997), ப்ரொமீத்தியஸ் (2012) என ஐந்து படங்களைத் தொடர்ந்து, ஏலியன் தொடர் படங்களில் ஆறாவதாக வரவிருக்கிறது ‘ஏலியன்: காவெனன்ட்’. Covenant என்றால் உடன்படிக்கை எனப் பொருளாகும்; ஆனால், படத்தில் அது ஒரு விண்கப்பலின் பெயர். முதல் படத்திற்குப் பிறகு, மீண்டும் அத்தொடரின் நான்காவது படமான ப்ரோமோத்தியஸை 33 வருடங்கள் கழித்து 2012இல் […]

08/05/2017 Dinesh R
பாகுபலி – 1000 கோடி நாயகன் சினிமா

பாகுபலி – 1000 கோடி நாயகன்

பாகுபலி 2-இன் நட்சத்திர நாயகன் பிரபாஸ், வசூலில் ஆயிரம் கோடிகளைக் கடந்த முதல் இந்தியத் திரைப்பட நாயகன் என்ற பெருமையை ஈட்டியுள்ளார். திரையிட்டு பத்து நாட்களுக்குள் அந்த வசூல் சாதனையைப் படைத்திருப்பது ஒரு மாபெரும் சரித்திரமாகும். பாகுபலி 2 திரையிடப்பட்ட ஒன்பது நாட்களில் இந்தியாவில் ரூ. 800 கோடியையும், அயல் நாடுகளில் ரூ. 200 கோடியையும் வசூலித்து இச்சாதனையை படைத்துள்ளது. முதல் நாளில் ரூ. 121 கோடியில் துவங்கிப் பின், வெகு வேகமாய் தொடர்ச்சியாய் அடுத்தடுத்த நாட்களில் […]

08/05/2017 Dinesh R
வாள் பயிற்சியில் சங்கமித்ரா ஸ்ருதி சினிமா

வாள் பயிற்சியில் சங்கமித்ரா ஸ்ருதி

பெரும் பொருட்செலவில் மூன்று மொழிகளில் சுந்தர்.சி இயக்கும் சங்கமித்ரா திரைப்படத்திற்காக வாள்வீச்சில் பயிற்சி பெற்று வருகிறார் ஸ்ருதிஹாசன். போரில் வல்லமை படைத்த இளவரசியாக நடிக்கும் ஸ்ருதிஹாசன், அதற்காகவே வாள்வீச்சு கலையை லண்டனில் கற்று வருகிறார். இதைப் பற்றி படக்குழுவினர் கூறியதாவது, “வீரம் நிறைந்த இளவரசி கதாபாத்திரத்திற்காக ஸ்ருதிஹாசன் தன்னை முழுமையாக தயார்படுத்திக் கொள்கிறார். அதற்காக வாள்வீச்சில் நிபுணத்துவம் பெற்ற சண்டைபயிற்சி கலைஞரிடம் லண்டனில் கற்று வருகிறார்” என்றனர். பயிற்சியின் முதல் கட்டமாக வாள்வீச்சின் அடிப்படை நுணுக்கங்களையும் பின்னர் […]

04/05/2017 Dinesh R
பாகுபலி 2 விமர்சனம் சினிமா

பாகுபலி 2 விமர்சனம்

பாகுபலி – தொடக்கம் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் எவ்வளவு உழைப்பினைச் செலுத்தியுள்ளனர் என்ற பிரமிப்பு, டைட்டில் கார்டிலிருந்தே தொடங்கி விடுகிறது. நல்ல திரையரங்கில் இப்படத்தினைப் பார்த்தால், அதன் பிரம்மாண்டத்தில் இருந்தும், விஷூவல் மேஜிக்கில் இருந்தும் மீளக் குறைந்தது ஓரிரு நாட்களாவது ஆகும். நேரடியாக ஃப்ளாஷ்-பேக்கிற்குள் நுழைந்து விடுகின்றனர். இயக்குநர் ராஜமெளலி சொன்னது போல், கதாபாத்திரங்களை முதல் பாகத்தில் ரசிகர்களுக்கு அறிமுகம் மட்டுமே செய்து வைத்துள்ளார். உண்மையில், கதை இந்த முடிவில் தான் தொடங்குகிறது. படத்தின் முதல் பாதி […]

29/04/2017 Dinesh R
அய்யனார் வீதி விமர்சனம் சினிமா

அய்யனார் வீதி விமர்சனம்

பாகுபலி 2 படத்தினுடைய வெளியீட்டின் பொழுது நமக்கென்ன வேலை என்று தமிழ், தெலுங்கு, ஹிந்தித் திரையுலகங்கள் வசவசவென்ற வெளியீட்டில் இருந்து சற்றே ஓய்வெடுத்துக் கொள்ள, ‘அய்யனார் வீதி’ எனும் படமெட்டும் பாகுபலியுடன் சேர்ந்து வெளியாகி, வரலாற்றில் தனக்கென்றொரு நிரந்திர இடத்தைப் பிடித்துள்ளது இப்படம். ‘நாட்டாமை’ படத்தின் கரு, ‘நட்புக்காக’ படத்தினுடைய கதையின் கரத்தைப் பற்றி ‘அய்யனார் வீதி’க்குள் திரைக்கதையாக நுழைந்துள்ளது. அய்யனார் வீதி என்பது ஊர்ப் பெயர். அய்யனாராக பொன்வண்ணனும், சுப்ரமணிய சாஸ்திரிகளாக கே.பாக்கியராஜும், செந்திலாக யுவனும் […]

28/04/2017 Dinesh R
மின்மினி: விஷ்ணு விஷால் – அமலா பால் சினிமா

மின்மினி: விஷ்ணு விஷால் – அமலா பால்

‘முண்டாசுப்பட்டி’ படத்திற்குப் பிறகு இயக்குநர் ராமும், விஷ்ணு விஷாலும் மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணைந்து பணியாற்றி வருகின்றனர். அமலா பால் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்திற்குத் தற்போது ‘மின்மினி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். ‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ சார்பில் ஜி.டில்லிபாபு தயாரிக்கும் ‘மின்மினி’ படம், இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் பி.வி.ஷங்கர், படத்தொகுப்பாளர் சான் லோகேஷ், கலை இயக்குநர் ஏ.கோபி ஆனந்த், ஸ்டண்ட் மாஸ்டர் விக்கி, ஆடை வடிவமைப்பாளர் ஏ.கீர்த்தி வாசன் என பல திறமையான தொழில் […]

27/04/2017 Dinesh R