32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4025 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 188)
மே 12 முதல் ‘உள்குத்து’ சினிமா

மே 12 முதல் ‘உள்குத்து’

‘அட்டக்கத்தி’ திரைப்படத்திற்குப் பிறகு தினேஷும் நந்திதாவும் மீண்டும் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘உள்குத்து’. அதிரடியான கதைக்களத்தில் உருவாகியிருக்கும் ‘உள்குத்து’ திரைப்படத்தைக் கார்த்திக் ராஜு இயக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க நாகர்கோவிலில் படமாக்கப்பட்டிருக்கும் உள்குத்து திரைப்படம் மூலம், ரசிகர்கள் இதுவரை கண்டிராத தினேஷைக் காண இருக்கிறார்கள் என்பதை உறுதியாகவே சொல்லலாம். ‘பி கே பிலிம் பேக்டரி’ ஜி.விட்டல் குமாரின் தயாரிப்பில், வலுவான கருத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் ‘உள்குத்து’ திரைப்படம் வருகின்ற மே 12 ஆம் தேதி அன்று வெளியாக […]

27/04/2017 Dinesh R
நாளை நமதே – 3 வேடங்களில் விஷால் சினிமா

நாளை நமதே – 3 வேடங்களில் விஷால்

தயாரிப்பு நிறுவனங்கள் சீ.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் அபினேஷ் இளங்கோவனின் அபி & அபி பிக்சர்ஸ் இணைந்து நடிகர் விஷால் மூன்று பரிமாணங்களில் முதன் முறையாகத் தோன்றும் “நாளை நமதே” படத்தை, மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றனர். இயக்குநர் பொன்ராம் அவர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வெங்கடேசன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். விஷால் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இரு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். நடிகர் சதீஷ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் நடிகர் நடிகையர் […]

26/04/2017 Dinesh R
சென்னை மாலில் “ஸ்குவாஷ்” போட்டிகள் மற்றவை

சென்னை மாலில் “ஸ்குவாஷ்” போட்டிகள்

19வது ஆசிய ஸ்குவாஷ் சேம்பியன்ஷிப் போட்டி, மூன்றாம் முறையாகச் சென்னையில் நிகழ்கிறது. இப்போட்டியை, ஸ்குவாஷ் ரேக்கட்ஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் ஏஷியன் ஸ்குவாஷ் ஃபெடரேஷனுடன் இணைந்து, தமிழ்நாடு ஸ்குவாஷ் ரேக்கட்ஸ் அசோசியேஷன்   நடத்துகிறது. இதற்கு முன்னர், இப்போட்டி 2002இலும், 2010இலும் சென்னையில் நடந்துள்ளது. ஸ்குவாஷ் போட்டியை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும், ஸ்குவாஷைப் பிரபலப்படுத்தவும், ஆசிய ஸ்குவாஷ் சேம்பியன்ஷிப் போட்டியைச் சென்னை ராயப்பேட்டையிலுள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடத்துகின்றனர். இன்று முதல் 30 ஆம் […]

26/04/2017 Dinesh R
ஸ்மர்ஃப்ஸ்: தி லாஸ்ட் வில்லேஜ் விமர்சனம் அயல் சினிமா

ஸ்மர்ஃப்ஸ்: தி லாஸ்ட் வில்லேஜ் விமர்சனம்

அனிமேஷன் படங்கள் குழந்தைகளுக்கானது எனத் தவறான கற்பிதம் உள்ளது. ஆனால், ‘ஸ்மர்ஃப்ஸ்: தி லாஸ்ட் வில்லேஜ்’, முற்றிலுமே குழந்தைகளுக்கான ஒரு படம். ஏனென்றால் ஸ்மர்ஃப்ஸ் 1 & 2 போல், இது லைவ் ஆக்ஷனுடன் கலந்த அனிமேஷன் படமன்று. முதல் இரண்டு பாகங்களுக்குச் சம்பந்தமில்லாத தனி படம் என்பதோடு, வண்ணஜாலம் நிகழ்த்தும் முழு அனிமேஷன் படம். ஒரு தொலைந்த கிராமத்தைச் சாகசப் பயணமொன்றில் கண்டுபிடிக்கிறார்கள் ஸ்மர்ஃபெட்டும் அவளது மூன்று நண்பர்களும். கதையாக, ஒரு வரியில் சொல்லும் பொழுது […]

22/04/2017 Dinesh R
யாத்ரீகா மியூசிக் வீடியோ – ப்ரோமோ Trailer

யாத்ரீகா மியூசிக் வீடியோ – ப்ரோமோ

கூடைப்பந்து வீராங்கனையான வைஷாலி கெம்கர் தோன்றும் இந்த மியூசிக் வீடியோவை, நிகிதா கணேசன் இயக்குகிறார். காதல் பிரிவைத் தைரியமாக எதிர்கொள்ளும் பெண் பற்றிய வீடியோ அது. சிக்மகளூர் மலைப்பாதையில், ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் ரைடர் ஓட்டிச் செல்கிறார். சோகமாகத் தொடங்கும் பாடல், பெண்ணின் தைரியத்தையும் நம்பிக்கையின் அளவையும் பறைசாற்றும் விதமாக வீடியோவை எடுத்துள்ளார் நிகிதா கணேசன். ஸ்ரீராம் ராகவன் ஒளிப்பதிவில், அல்-ருஃபீயான் இசையில், “யாத்ரீகா” வீடியோ உருவாகிறது. சியா ஸ்ரீ உடை வடிவமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.தமிழ், ஹிந்தி, கன்னடம், […]

22/04/2017 Dinesh R
துபாயில் உருவாகும் முதல் தமிழ்ப்படம் சினிமா

துபாயில் உருவாகும் முதல் தமிழ்ப்படம்

‘அரபு தாக்கு’ படத்தைப் பற்றி இயக்குநர் பிரான்ஸிஸ் பேசும் போது, “துபாயைக் கதைக்களமாகக் கொண்டு முதன்முதலாக தமிழில் தயாராகும் படமிது. தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து ஏராளமானவர்கள் வேலை தேடித் துபாய்க்குச் செல்கிறார்கள். அங்கு அவர்கள் படும் பாட்டையும், கடினமாக உழைத்து எப்படி முன்னேறுகிறார்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் சவால்களை எப்படிச் சாதனையாக்குகிறார்கள் என்பதைப் பற்றியும் அழகாகச் சொல்லவிருக்கிறோம். அதே போல் சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளைப் பின்னணியில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து இதுவரை ஏராளமான படங்கள் வெளியாகியிருக்கிறது. […]

18/04/2017 Dinesh R
ஸ்மர்ஃப்ஸ் – மர்ம கிராமம் அயல் சினிமா

ஸ்மர்ஃப்ஸ் – மர்ம கிராமம்

ஸ்மர்ஃப்ஸ் படம் 2011இலும், அதன் இரண்டாம் பாகம் 2013இலும் வெளிவந்து ரசிகர்களை ஈர்த்தது. அந்த சின்னஞ்சிறு நீள நிற கதாபாத்திரங்கள், குழந்தைகளைப் பெரிதாகக் கவர்ந்தார்கள் என்பதே ஸ்மர்ஃப்ஸின் வெற்றிக்குக் காரணம். பெல்ஜியன் காமிக்ஸ் ஆர்டிஸ்ட்டான பெயோ (Peyo) உருவாக்கிய கதாபாத்திரங்களே ஸ்மர்ஃப்ஸ். காமிக்ஸை அடிப்படையாகக் கொண்டு தான் இரண்டு படங்களும் உருவாக்கப்பட்டன. ஏப்ரல் 21 அன்று வெளியாகும் இப்படத்தின் மூன்றாம் பாகம், ஒரு சாகச ஃபேன்டசி வகைமையைச் சேர்ந்தபடம். ஸ்மர்ஃபெட்டி, ப்ரெய்னி, க்ளம்ஸி, ஹெஃப்டி ஆகிய நண்பர்களுக்கு […]

18/04/2017 Dinesh R
“படங்கள் பார்த்தேன்; இயக்குநர் ஆனேன்” – திரி இயக்குநர் சினிமா

“படங்கள் பார்த்தேன்; இயக்குநர் ஆனேன்” – திரி இயக்குநர்

திரி கல்வியை மையப்படுத்திய யதார்த்தமான ஒரு கமர்ஷியல் படம். “தியேட்டரில் நான் 465 படங்களை பார்த்து விட்டு தான் படம் இயக்கவே வந்தேன். ஒரு ரசிகனாய் நான் பல படங்களை விமர்சித்திருக்கிறேன். அதனால் என்ன பண்ணலாம் பண்ணக்கூடாதுன்னு தெரிந்து கொண்டேன். நிச்சயம் என் படம் ரசிகர்களை திருப்திப்படுத்தும். திரி என்றால் இளைஞர்களைத் தூண்டி விடுதல் என்ற பொருளில் தலைப்பு வச்சிருக்கேன். சினிமாவால் தான் சமுதாயம் கெட்டுப் போகுது. நல்ல கருத்துகளையே அவைச் சொல்வதில்லை என்றொரு கம்ப்ளெயின்ட் இருக்கு. […]

18/04/2017 Dinesh R
தப்பு தண்டா ஸ்ரீகண்டன் சினிமா

தப்பு தண்டா ஸ்ரீகண்டன்

பாலு மகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்றவர் இயக்குநர் ஸ்ரீகண்டன். அந்தப் பட்டறையில் இருந்து வெளிவரும் முதல் இயக்குநர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. “படத்தின் தலைப்பும், டிரைலரும் சற்று திரில்லர் பாணியில் இருந்தாலும், இந்தப் படத்தை எல்லாத் தரப்பு ரசிகர்களும் ரசிக்கக்கூடிய விதத்தில் தான் உருவாக்கி இருக்கின்றேன். ‘தப்பு தண்டா’ ஒரு டார்க் காமெடி படம். படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கும் அஜய் கோஷ் மற்றும் ஜான் விஜய் ஆகியோரின் நடிப்பு நிச்சயமாக அனைவராலும் பாரட்டப்படும். தப்பு […]

17/04/2017 Dinesh R