32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4038 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 194)
25 வகை திருஷ்டியும், தமிழகத்தை ஆண்டவர்களும் சினிமா

25 வகை திருஷ்டியும், தமிழகத்தை ஆண்டவர்களும்

சாயா படத்தில், நாயகி காயத்ரி ஒரே டேக்கில் நீண்ட பெரிய வசனத்தை படத்தில் இரண்டு இடத்தில் பேசி நடித்துள்ளார். ஒரு காட்சியில் நாயகன் வெளியூரிலிருந்து வருவார். அப்போது நாயகி அவரை வரவேற்று திருஷ்டி சுத்திப்போடுவார். கிட்டத்தட்ட இருபத்தைந்து வகையான திருஷ்டியை மூச்சுவிடாமல் ஒரே டேக்கில் பேசி அசத்தியுள்ளார். இன்னொரு காட்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் பத்து முதல்வர்கள் பேர் சொல்ல வேண்டும் எனக் கேட்க, நாயகி காயத்ரி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து சமீபத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வரை தமிழகத்தை […]

29/01/2017 Dinesh R
ஓர் இயக்குநரின் ஆசையும் நம்பிக்கையும் சினிமா

ஓர் இயக்குநரின் ஆசையும் நம்பிக்கையும்

“பைரவா படத்துடன் ‘சாயா’ படத்தை வெளியிடலாமென்று முடிவெடுத்துக் களமிறங்கினோம். நல்ல தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல். பெரிய படங்கள் வெளிவரும்போது சிறு படங்களுக்கும் தியேட்டர்கள் கிடைக்க வேண்டும். அதற்கு எப்போ வழிபிறக்கும்னு தெரியலை. போதாக்குறைக்கு நம்ம வீட்டில் ஒரு இளைய தளபதி ரசிகர் இருக்கிறார். அவர், ‘எங்கள் தளபதி படம் வெளியாகும்போது நீங்கள் எப்படி வெளியிடலாம்?’ என ஒரே தகராறு. வீட்டிலேயே எதிர்ப்பிருந்தா எப்படி வெளியிடுறது? தள்ளிப்போட வேண்டியதாயிற்று. மறுபடியும் வெளியிட தேதி குறித்தபோது சல்லிக்கட்டு போராட்டம். ஒட்டுமொத்த […]

28/01/2017 Dinesh R
அசோக் அமிர்தராஜ் – ஐ.நா.வின் இந்திய நல்லெண்ணத் தூதர் சமூகம்

அசோக் அமிர்தராஜ் – ஐ.நா.வின் இந்திய நல்லெண்ணத் தூதர்

இந்தியாவில் நீடித்த வளர்ச்சி திட்டங்களுக்கான இந்தியாவின் நல்லெண்ணத் தூதராக, பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளரும், சர்வதேச விம்பிள்டன் டென்னிஸ் வீரருமான அசோக் அமிர்தராஜ் ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்டுள்ளார். ஹைட் பார்க் எண்டர்டெய்ன்மெண்ட் குழுமத்தின் தலைவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருக்கும் திரு. அமிர்தராஜ், ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட இந்தியாவின் முதல் தூதர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல், இப்பெருமையினைப் பெறும் முதல் திரைப்படத் தயாரிப்பாளர் என்பதும் அவருக்குக் கிடைத்துள்ள கூடுதல் அங்கீகாரம். சென்னையில் பிறந்து, சர்வதே […]

27/01/2017 Dinesh R
அதே கண்கள் விமர்சனம் சினிமா

அதே கண்கள் விமர்சனம்

1967 இல், இயக்குநர் திரிலோகசந்தர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த பெரும் வெற்றி பெற்ற த்ரில்லர் படம் “அதே கண்கள்”. அந்தப் படத்திற்கு மிகக் கச்சிதமாகத் தலைப்பு பொருந்தியது போல், இப்படத்திற்குப் பொருந்தவில்லை. ரெஸ்டாரன்ட் ஓனரான சமையல் கலைஞர் வருணுக்குத் தீபா மீது காதல் ஏற்படுகிறது. தீபாவிடம் காதலைச் சொன்ன அன்றே ஏற்படும் விபத்தில், கண் பார்வையை மீண்டும் பெறுகிறான் வருண். ஆனால், அவனது காதலி தீபா பற்றி எந்தத் தகவலும் தெரியாமல் போய் விடுகிறது. பின் என்னாகிறது […]

27/01/2017 Dinesh R
பலம் விமர்சனம் அயல் சினிமா

பலம் விமர்சனம்

காபில் என்ற ஹிந்தி வார்த்தைக்குத் ‘திறமையுள்ள’ அல்லது ‘சாதித்து முடிக்கக் கூடிய’ எனப் பொருள் கொள்ளலாம். தமிழில், ‘பலம்’ என்ற தலைப்பில் டப் செய்து வெளியிட்டுள்ளனர். ரோஹன் பாண்டியராஜ்க்கும், சுப்ரியாவுக்கும் கண் பார்வை இல்லையெனினும், முதல் சந்திப்பிலேயே சுப்ரியா மீது காதல் வயப்படுகிறார் ரோஹன். திருமணம் ஆன இரண்டாவது நாளே அவர்கள் வாழ்வின் போக்கையே இரண்டு நபர்கள் சீர்குலைக்கின்றனர். விவேகத்தையும் நம்பிக்கையையும் மட்டுமே துணையாகக் கொண்டு வாழும் ரோஹன், தன் வாழ்க்கையை அழித்தவர்களை எப்படிப் பழிவாங்குகிறார் என்பதுதான் […]

26/01/2017 Dinesh R
கதைகள் சொல்லும் சுண்டைக்காய் கட்டுரை

கதைகள் சொல்லும் சுண்டைக்காய்

ஏழு கடல், ஏழு மலை தாண்டியிருக்கும் வியாசபுரியை எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும். அந்நாட்டில், கற்றல் என்பது கதைகளைப் படிப்பது மூலமாக மட்டுந்தானாம். அதாவது பள்ளிகளில் கதைகளை மட்டுமே சிலபஸாக உடைய நாடு அது. வாவ்! அந்நாட்டின் இளவரசன் ஒரு சாபம் காரணமாக சுண்டைக்காயாக மாறி, ஐந்தாம் வகுப்பு படிக்கும் தமிழகத்துச் சிறுவன் சூர்யா கையில் சிக்குகிறான். ‘சுண்டைக்காய் இளவரசன்’ எனும் சிறுவர் நாவலின் கதைக்கரு இதுதான். கதைக்குள் கதையென, சூர்யாவிற்கு இளவரசன் மூன்று மாயாஜாலக் கதைகளைச் சொல்கிறான். […]

25/01/2017 Dinesh R
பைரவா விமர்சனம் சினிமா

பைரவா விமர்சனம்

பொங்கலுக்கு ஒரு படம், நாயகன் விஜயின் கணக்கில் வரவு வைக்கவேண்டுமென்ற ஆவலில் உருவாகியுள்ள படம். தீமையை எதிர்த்து ஒற்றை ஆளாய்ப் போராடி, பைரவா வாகை சூடுவதுதான் படத்தின் கதை. வில்லனாகப்பட்டவர் கல்வித் தந்தை, நாயகி மருத்துவம் படிக்கும் மாணவி, விஜய் மாஸ் ஹீரோ என்பதை முதல் பாதியில் நீட்டி முழக்கியும், வில்லனை நாயகன் எப்படி வீழ்த்துகிறார் என்பதை இரண்டாம் பாதியிலும் சொல்லியுள்ளனர். சுவாரசியமோ, புதுமையோ, திருப்பமோ அற்ற திரைக்கதையின் நீளம் சற்றே அதிகம். விஜய் அழகாக, அசத்தலாக, […]

12/01/2017 Dinesh R
மாய வலி நீக்கிய தமிழன் மருத்துவம்

மாய வலி நீக்கிய தமிழன்

மாய வலி என்றால்? அதற்கு முன் பார் போற்றும் தமிழரான S.ராமச்சந்திரனைப் பற்றித் தெரிந்து கொள்வோம். ரிச்சார்ட் டாகின்ஸால், ‘நியூரோசைன்ஸின் மார்கோபோலோ’ எனப் புகழப்பட்ட ராமச்சந்திரனுக்கு, 2007இல் இந்திய அரசு “பத்ம பூஷன்” விருது கொடுத்துக் கெளரவித்துள்ளது. நரம்பியல் மற்றும் உளவியல் துறையில் இவர் எழுதிய புத்தகங்களின் மூலம் பலருக்கு ஆதர்சமாக விளங்கி வருகிறார். சான் டியாகோவிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். நியூரோகிருஷ் ஒருங்கிணைத்த செமினாரில் கலந்து கொண்ட மருத்துவர் ராமச்சந்திரன், நாள்பட்ட வியாதிகளுக்கு […]

09/01/2017 Dinesh R
பலம் காட்ட வரும் ஹ்ரிதிக் ரோஷன் அயல் சினிமா

பலம் காட்ட வரும் ஹ்ரிதிக் ரோஷன்

ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் சஞ்சய் குப்தா இயக்கத்தில் உருவான காபில் எனும் ஹிந்திப் படம் தமிழில், “பலம்” என்ற பெயரில் டப்பிங் செய்யப்படு வெளிவரவுள்ளது.. 31 வயதான பிண்ணனிக் குரல் கலைஞனான ரோஹன் தனது பெரும்பான்மையான வாழ்கையை ஸ்டுடியோக்களிலும், இரவைத் தனது இல்லத்திலும் கழிக்கிறான். பிறப்பிலேயே பார்வையற்றவனான ரோஹனுக்கு அனைவரும் வாழும் ஒரு சாதரணமான வாழ்க்கையை மேற்கொள்வதே அவன் வாழ்வின் கனவாக இருக்கிறது. ஒரு தருணத்தில் சுப்ரியாவைச் சந்திக்க நேர, அவள் மீது காதல் வயப்படுகிறான். ரோஹனின் […]

05/01/2017 Dinesh R
அசாசின்ஸ் கிரீட் விமர்சனம் அயல் சினிமா

அசாசின்ஸ் கிரீட் விமர்சனம்

அசாசின்ஸ் க்ரீட் – ஓர் அறிமுகம் க்ரீட் என்றால் நம்பிக்கை. அசாசின்ஸ்க்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. விருப்பம் போல் வாழுபவர்கள். சுதந்திர உணர்வோடு திரிபவர்கள். ஆனால், டெம்ப்ளர்ஸ்களோ அதீத ஒழுக்கக் கோட்பாடுகள் உடையவர்கள். மக்களின் சிந்தனையைக் கட்டுக்குள் கொண்டு வந்து, உலகையே ஒழுக்கமாக மாற்றத் துடிப்பவர்கள். அப்பேராசை சாத்தியமாக அவர்களுக்கு அசாசின்களிடமுள்ள ‘ஆப்பிள் ஆஃப் ஈடன்’ எனும் விதை தேவைப்படுகிறது. அதிலிருந்து தான் மனிதனின் முதல் ஒழுங்கீனச் செயல் பிறந்ததாகக் கருதுகிறார்கள். அவ்விதையை மட்டும் டெம்ப்ளர்ஸ்கள் அடைந்து விட்டால், […]

01/01/2017 Dinesh R