32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4025 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 196)
கோனேரிப்பட்டி பாலத்தில் சினிமா

கோனேரிப்பட்டி பாலத்தில்

சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு “பவுனு பவுனுதான்” படத்தின் படப்பிடிப்பு கோனேரிப்பட்டிப் பாலத்தில் நடந்தது. அப்பாலம் சேலம் மாவட்டம் பவானி அருகேயுள்ளது. பாக்யராஜும் ரோகிணியும் தண்ணீருக்குள் குதிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. தற்போது, சுமார் இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, “மிக மிக அவசரம்” என்ற படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தக் கோனேரிப்பட்டி பாலம் கதைக்குத் தேவைப்படுவதால், 23 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்கியிருக்கிறார்கள். நீண்ட காலத்திற்குப் பின் படப்பிடிப்பு நடைபெறுவதால் சுற்று வட்டாரத்தில் […]

08/12/2016 Dinesh R
சைத்தான் விமர்சனம் சினிமா

சைத்தான் விமர்சனம்

நல்ல கதைகளைத் தேர்ந்தெடுப்பது தான் வெற்றியின் ரகசியம் என்பதில் நம்பிக்கை உள்ளவர் விஜய் ஆண்டனி. அதிலும், சுஜாதாவின் “ஆ” நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தி மேலும் எதிர்பார்ப்பை அதிகமாக்கியது. அதிலும் எண்ணெய் ஊற்றுவது போல், 10 நிமிட படத்தையும் யூ-ட்யூபில் போட்டு மாஸ் காட்டினார் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனிக்கு காதில் குரல்கள் கேட்கின்றன. தற்கொலை செய்து கொள்ளும்படியும், ஜெயலட்சுமியைக் கொல்லும்படியாகவும் கட்டளை இடுகிறது அக்குரல். இருந்தாற்போல் திடீரென அக்குரல்கள் கேட்கக் காரணம் என்னவென்றும், அது […]

03/12/2016 Dinesh R
அழகென்ற சொல்லுக்கு அமுதா விமர்சனம் சினிமா

அழகென்ற சொல்லுக்கு அமுதா விமர்சனம்

நாயகி கதாபாத்திரத்தின் பெயர் அமுதா என்பதை எந்தச் சிரமமுமின்றி யூகிக்கலாம். வியாசர்பாடியைச் சேர்ந்த நாயகன், நாயகியின் பிறந்தநாளுக்கு ஒரு கவிதை எழுதுகிறான். அதன் முதல் வரி தான் படத்தின் தலைப்பு. நாயகன் ரிஜன் சுரேஷ் நாயகி ஆர்ஷிதாவைக் காதலிக்கிறான். நாயகிக்கு அவனைச் சுத்தமாகப் பிடிக்கவே இல்லை. ஆனால், நாயகியைச் சுற்றுவதையே முழு நேர வேலையாகச் செய்கிறான். நாயகி கோபமாகத் தன்னை விட்டுவிடுமாறு கேட்கிறாள். நாயகன் ரொம்ப ஃபீலாவதால், டாஸ்மாக்கில் இருந்து அவனது நண்பர்களை அவனை அழைத்துக் கொண்டு […]

02/12/2016 Dinesh R
பார்க்க தோனுதே – இசை வெளியீட்டு விழா சினிமா

பார்க்க தோனுதே – இசை வெளியீட்டு விழா

“தோனுதேக்கு மூணு சுழியில்ல வரணும். ரெண்டு சுழிதான் தலைப்புல இருக்கு. ஏதாச்சும் அதன் மூலமா இயக்குநர் சொல்ல வர்றார் போல! படத்தைப் பார்க்கணும்னு தோணுது” என்றவர், தனது பாணியில் இறுதி பன்ச்சாக, “கூட்டமில்லா ஏ.டி.எம். பார்க்கத் தோணுதே! தியேட்டரில் கூட்டம் பார்க்கத் தோணுதே!” என தன் உரையை முடித்துக் கொண்டார் ‘போங்கு’ பட நாயகன் நட்டி. ‘பார்க்க தோனுதே’ படத்தின் ஒளிப்பதிவாளர் ஜி.ரமேஷ், நட்டியின் உதவியாளர் ஆவார். ‘பார்க்க தோனுதே’ படத்தின் இயக்குநர் ஜெய்செந்தில்குமாரை அருகில் அழைத்து, […]

01/12/2016 Dinesh R
பூனைக்குள் ஆவி – மியாவ் சினிமா

பூனைக்குள் ஆவி – மியாவ்

“பூனையைப் பிரதான கதாபாத்திரமாகக் கொண்டு இந்திய அளவில் எடுக்கப்பட்டிருக்கும் முதற்படம் இது தான்” எனப் பெருமிதப்படுகிறார் ‘மியாவ்’ படத்தின் இயக்குநர் சின்னாஸ் பழனிச்சாமி. இவரொரு விளம்பரப் பட இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பெண்ணைச் சீரழித்து விடுகின்றனர் இளைஞர்கள் சிலர். அந்தப் இளம்பெண்ணின் ஆவி பூனைக்குள் புகுந்து கொண்டு அவர்கள் அனைவரையும் பழி வாங்குகிறது. அவ்விளைஞர்கள் ஒவ்வொருவரையும், புதுப் புது விதமாகப் பழி வாங்குவதுதான் படத்தின் சுவாரசியம் என்கின்றனர். ஹரார் படம் தான் என்றாலும், குழந்தைகளை மகிழ்விக்கும் […]

29/11/2016 Dinesh R
விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் விமர்சனம் சினிமா

விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் விமர்சனம்

விருமாண்டியும் சிவனாண்டியும் முறையே இரண்டு ஊரின் தலைக்கட்டுகள். அந்த இரண்டு ஊர்களுக்கும் இடையில் தண்ணீர் பிரச்சனை உள்ளது. ஆனால், படம் அந்த ஊர்களைப் பற்றியோ, அந்தப் பிரச்சனையைப் பற்றியோ, அந்தத் தலைக்கட்டுகள் பற்றியோ அல்ல. படத்தின் தலைப்புக்கு மட்டுமே காரணமாக உள்ள கதாபாத்திரங்கள் அவர்கள். 50 வயதாகும் தம்பி ராமையா, ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற முனைப்பில் ஒரு லைவ் குறும்படம் எடுத்துச் சாதிக்க நினைக்கிறார். அதன்படி, பிசினஸ் செய்ய நினைக்கும் அறிமுக நாயகன் சஞ்சயை ஏமாற்றி […]

27/11/2016 Dinesh R
இளமி விமர்சனம் சினிமா

இளமி விமர்சனம்

எளிமையான மனிதர்களின் காதல், தியாகம், வீரம் ஆகியவற்றை மதித்துப் போற்றும் வகையில் அவர்களை சிறு தெய்வங்களாக்கி வழிபடுவது நம் மண்ணின் மரபு. அப்படி 18 ஆம் நூற்றாண்டில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம். மாங்குளத்தைச் சேர்ந்த வேட்டைக்காரனான கருப்புக்கும், கிளியூரைச் சேர்ந்த இளமிக்கும் இடையில் காதல் மலர்கிறது. ஆனால், இளமியின் தந்தையான வீரைய்யனோ, தனது வடம் ஜல்லிக்கட்டு மாட்டை அடக்குபவர்களுக்கே தன் மகளென ஊர்ப் பிரச்சனையொன்றின் பொழுது வாக்கு கொடுத்துவிடுகிறார். இளமி – […]

26/11/2016 Dinesh R
கண்ல காச காட்டப்பா விமர்சனம் சினிமா

கண்ல காச காட்டப்பா விமர்சனம்

தொடக்கத்தில் லேசான தடுமாற்றம் ஏற்பட்டாலும், கலகலப்பான படத்திற்கு உத்திரவாதம் அளித்துள்ளார் மேஜர் கெளதம். எம்.எஸ்.பாஸ்கரும், யோகி பாபுவும் தமது டைமிங் சென்ஸாலும், மாடுலேஷனாலும் 2 மணி நேரத்திற்கும் குறைவான படத்தைக் கரையேற்றியுள்ளனர். கழிவறை கட்டும் திட்டத்தில் தமிழக அமைச்சர் ஊழல் செய்து சுருட்டிய 100 கோடியைக் கொலம்பியா வங்கியில் டெப்பாசிட் செய்ய, முதற்கட்டமாக ஹவாலா மூலம் மலேஷியா அனுப்பி வைக்கப்படுகிறது. அப்பணத்தை நாயகன், நாயகிகள், நகைச்சுவை நடிகர்கள் என மொத்தம் 8 பேர் திருட முனைகின்றனர். அமைச்சரின் பணம் […]

26/11/2016 Dinesh R
கவலை வேண்டாம் விமர்சனம் சினிமா

கவலை வேண்டாம் விமர்சனம்

யாமிருக்க பயமே என்ற வெற்றிப்படத்தைக் கொடுத்த இயக்குநர் டி.கே-வின் இரண்டாம் படமென்ற எதிர்பார்ப்பு இருந்தது. பேய் உலகத்தில் இருந்து, முற்றிலும் விலகி இளமை, காதல் என்ற ஜானரை முயன்றுள்ளார் இயக்குநர். இரண்டு படத்துக்குமான ஒரே ஒற்றுமை, இரண்டு படங்களுமே நகைச்சுவையைப் பிரதான அம்சமாகக் கொண்டுள்ளது மட்டுமே! ஜீவாவும், காஜல் அகர்வாலும் சிறு வயது முதல் நண்பர்கள். காதலித்துக் கல்யாணம் செய்து கொண்ட முதல் நாளே பிரிந்து விடுகின்றனர். காஜல் அகர்வாலுக்கு பாபி சிம்ஹாவுடன் காதல் ஏற்படுகிறது. பிரிந்த […]

26/11/2016 Dinesh R
பட்டதாரி விமர்சனம் சினிமா

பட்டதாரி விமர்சனம்

வேலைக்குச் செல்லாமல், மதுரை மாநகரின் டீக்கடைகளில் பொழுது போக்குகிறார்கள் ஐந்து இளைஞர்கள். அவர்களில் நாயகன் சிவா மட்டும் பெண்கள் என்றால் பாராமுகமாய் உள்ளான். சிவா ஏன் அப்படி உள்ளான்? தன்னைக் காதலிக்கும் இலக்கியாவை அவன் ஏற்றுக் கொண்டானா? பட்டதாரி இளைஞர்கள் பிழைப்புக்கு என்ன செய்தார்கள் என்பதே படத்தின் கதை. சிவாவாக அபிசரவணன் நடித்துள்ளார். ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே!’ என்ற படத்தில் நாயகனாக நடித்தவர். ஊரோடு ஒத்துவாழ்வது போல், தற்போதைய ட்ரெண்டின் படி வேலை வெட்டியில்லாதவராக நடித்துள்ளார். அவரது […]

25/11/2016 Dinesh R
தணிக்கை அதிகாரியைக் கன்னாபின்னாவெனக் கண்டிக்கும் தியா சினிமா

தணிக்கை அதிகாரியைக் கன்னாபின்னாவெனக் கண்டிக்கும் தியா

‘கன்னா பின்னா’ படத்தின் இயக்குநர் தியா, ‘நாளைய இயக்குனர்’ குறும்படப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர். இந்தப் படத்தை இயக்கியுள்ளதோடு கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். திருமணம் செய்தால் அது அழகான பெண்ணைத்தான், திருமணம் செய்துகொள்வேன் என அழகான பெண்களைத் தேடி அல்லோலப்படும் நாயகனின் கதைதான் இந்த ‘கன்னா பின்னா’. இதை அக்மார்க் காமெடிப் படத்தை இயக்கியுள்ள தியா தனது படத்திற்கு உரிய சென்சார் சான்றிதழ் பெறப் போராடி வருகிறார். “ஜனரஞ்சகமான காமெடிப் படத்தையே நான் இயக்கியுள்ளேன். அதுவும் […]

23/11/2016 Dinesh R
குற்றம் 23 – இறங்கி விளையாடியுள்ள இயக்குநர் அறிவழகன் சினிமா

குற்றம் 23 – இறங்கி விளையாடியுள்ள இயக்குநர் அறிவழகன்

“ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க வேண்டும் என்பது என்னுடைய நண்பர் இந்தெர் குமாரின் நீண்ட நாள் கனவு. நல்லதொரு கதைக்களமமும், அந்தக் கதைக்களத்தில் இறங்கி விளையாடும் திறமையான கூட்டணிக்காகவும் காத்திருக்க வேண்டும் என்று நான் அவரிடம் சொன்னேன். அதன் படி இயக்குநர் அறிவழகன் செதுக்கி இருக்கும் குற்றம் 23 படத்தின் காட்சிகள் அனைத்தும் அற்புதமான முறையில் உருவாகி நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகப் பிரமாதமாக வர, பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் இந்தெர் குமார். சமீபத்தில் குற்றம் 23 படத்தின் […]

23/11/2016 Dinesh R
விழித்திரு – புத்தாண்டுக் கொண்டாட்டப் பாடல் சினிமா

விழித்திரு – புத்தாண்டுக் கொண்டாட்டப் பாடல்

இடம், பொருள், ஏவல் ஆகிய மூன்றும் தான் ஒரு செயலில் வெற்றி பெறுவதற்கு, அதுவும் திரையுலகில் நிலையான வெற்றி பெறுவதற்கு முக்கியமான சிறப்பம்சங்களாக கருதப்படுகிறது…..அத்தகைய சிறப்பம்சங்களை பின்பற்றி வரும் இயக்குநர் – தயாரிப்பாளர் மீரா கதிரவன், விரைவில் வெளியாக இருக்கும் தன்னுடைய ‘விழித்திரு’ படத்தின் ‘STAY AWAKE’ பாடலை துபாயில் மிக பிரம்மாண்டமாக வெளியிட முடிவு செய்திருக்கிறார். “என்னைப் பொறுத்தவரை நேரம் தான் இந்த உலகத்தில் எல்லாமுமாக இருக்கின்றது. வருகின்ற நவம்பர் 25 ஆம் தேதி, திரையுலகின் […]

23/11/2016 Dinesh R