சமூகம்ஆன்லைன் சீட்டாட்டம் எனும் சமூகச் சீர்கேடு – ராஜ்கிரணின் ஆதங்கம்
“சீட்டாட்டம்” என்பது மிக மிக மோசமான சூது. சீட்டாட்டத்தினால் தெருவுக்கு வந்த குடும்பங்கள் ஏராளம். சீட்டாட்டத்தினால் ஏற்படும் வெறியும், போதை போன்ற மயக்கமும் அந்தப் பழக்கத்தைத் தொட்டவரை விடவே விடாது. சீட்டாடத் தேவைப்படும் பணத்துக்காக எவ்வித கீழ்நிலைக்கும் போவதற்குத் தயங்கமாட்டார்கள், அதற்கு அடிமையானவர்கள். இதில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான், “எல்லாமே என் ராசா தான்” என்று ஒரு படமே எடுத்தேன். அந்தக் காலகட்டங்களில் சீட்டாடுவது சட்டப்படி குற்றமாயிருந்தது. “காவல் துறை கைது செய்தால் கேவலமாகிவிடுமே” என்ற பயமும் இருந்தது. […]













