அயல் சினிமா

பீட்டர் ரேபிட் விமர்சனம்
பீட்டர் ரேபிட் எனும் முயல் பாத்திரத்தினை, 1902 ஆம் ஆண்டு, ‘தி டேல் ஆஃப் பீட்டர் ரேபிட்’ எனும் புனைவில் அறிமுகப்படுத்தினார் எழுத்தாளர் ப்யாட்ரிக்ஸ் பாட்டர். ஆனால், 1893 ஆம் ஆண்டே, நோய்வாய்ப்பட்ட ஒரு சிறுவனைக் கலகலப்பூட்ட கடிதங்களில் எழுதப்பட்ட கதையின் நாயகனே பீட்டர் ரேபிட்.
துறுதுறுவெனப் பக்கத்துத் தோட்டத்தில் காய்கறிகளைத் திருடி உண்ணும் சாகசக்கார பீட்டர் ரேபிட்டைக் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துவிடும். மிக நேர்த்தியான லைவ் ஆக்ஷன் படமாக உருவாக்கியுள்ளனர் சோனி பிக்சர்ஸ் அனிமேஷன். அனிமேஷன் என்ற வார்த்தைப் பார்த்ததும் 2டி, 3டி போல் ஒரு சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டாம். உடை அணிவிக்கப்பட்ட உயிருள்ள முயல்களை அப்படியே பாத்திரங்களாகத் திரையில் உலாவ விட்டுள்ளார்கள்.
தன் பெற்றோரை இழந்து வாடும் பீட்டர் ரேபிட், ப்யா எனும் பெண்ணின் பாசத்தில் திளைக்கிறது. ப்யாவிற்கும், பக்கத்து வீட்டில் குடியேறும...

பசிஃபிக் ரிம்: அப்ரைசிங் விமர்சனம்
பசிஃபிக் ரிம் என்றால் பசிஃபிக் கடற்கரையின் ஓரத்தில் இருக்கும் ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐக்கிய அமெரிக்க நாடுகளின் (US) மேற்கு கரை மாகாணங்களை அடங்கிய பகுதியைக் குறிக்கும் சொல்லாகும். பசிஃபிக் பெருங்கடலின் விளிம்பிலுள்ள நாடுகள் என எளிமையாகப் புரிந்து கொள்ளலாம்.
பசிஃபிக் கடலுக்கடியில் இருந்து வெளிவரும் கைஜு (Kaiju) எனும் வேற்றுக் கிரக ஜந்துக்களை அழிப்பது தான் முதற்பாகமாகிய பசிஃபிக் ரிம் படத்தின் கதை. இரண்டாம் பாகத்தின் கதையும் அதன் தொடர்ச்சியே!
கைஜு பூமிக்குள் நுழைய முடியாதபடி, அது வந்து செல்லும் வழியைப் பாதுகாத்து வைத்திருப்பார்கள் பான்-பசிஃபிக் டெஃபன்ஸ் கார்ப்ஸ் (PPDC - Pan Pacific Defence Corps). ஜேகர்கள் எனும் பெரும் ரோபோக்களைக் கொண்டு பி.பி.டி.சி., கைஜுக்களை எதிர்க்கும். ஆனால், கைஜுவின் மூளையை ஜேகர்களில் இணைத்து பி.பி.டி.சி.யையே நிர்மூலம் செய்து விடுவார் நியூட் கெய்ஸ்லர் எனும் விஞ்ஞானி (அவ...

நம்மை நோக்கி வரும் பேராபத்து
2013 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பசிஃபிக் ரிம்’ என்கிற திரைப்படம் பற்றி நினைவிருக்கலாம். அதன் தொடர்ச்சியாக, ‘பசிஃபிக் ரிம்: அப்ரைசிங் (Pacific Rim: Uprising)’ எனும் படம் வருகிறது. ஸ்டீவென் டிநைட் என்பவர், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
முதல் பாகத்தில், எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத விதத்தில், கடல் பரப்பிலிரிந்து ராட்சச உருவில் முன் பின் கண்டிராத தோற்றத்தோடு சில உயிரினங்கள் மனிதக் குலத்தைத் தாக்க வர, மனித இனம ஒற்றுமையாக நின்று, அத்தாக்குதலுக்கு எதிர் தாக்குதலை நிகழ்த்தி, பேரழிவிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளும்..
இந்த இரண்டாம் பாகத்தில் மீண்டுமொரு முறை அத்தகையதோர் அபாயம் தோன்றிட, மனித இனத்திற்கு மீண்டும் பேராபத்து எழுகிறது. ஜான் என்கிற ஒரு விமானியின் தந்தைதான் முன்னர், ஆபத்து ஏற்பட்ட சமயம், அனைவரையும் ஒன்று திரட்டி, எதிர் தாக்குதல் நிகழ்த்தி அபாயத்தை அகற்றியவர். வேறு பாதையில் பய...

ஜாக்கி சானின் ப்ளீடிங் ஸ்டீல்
ஜாக்கி சான் நடிப்பில் உருவான “ப்ளீடிங் ஸ்டீல்” ஒரு சயின்ஸ்-ஃபிக்ஷன் த்ரில்லர் படம்.
இயந்திர இதயத்தோடு வாழும் ஒரு முன்னாள் கடற்படை வீரனைப் பற்றி ஒரு புத்தகம் எழுதுகிறார் ஓர் எழுத்தாளர். அந்தக் கதையை அவர் எங்கிருந்து எடுத்தார் எனக் கேட்டு ஒரு கும்பலும், ஜாக்கி சானும் அவரைத் தேடி வருகின்றனர். அந்த எழுத்தாளர் இறந்து விட, இயந்திர இதயம் கொண்டவனின் கும்பலிடம் இருந்து ஜாக்கி சான் எப்படித் தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
ஏஜென்ட் லின் டாங்காக ஆக்ஷனிலும், ஒரு பெண் குழந்தையின் தந்தையாகச் சென்ட்டிமென்டிலும் கலக்கியுள்ளார் ஜாக்கி சான். சீனாவில் போன வருடம் வெளியான இப்படத்தினை, விரைவில் ஹன்சா பிக்சர்ஸ் வெளியிடவுள்ளனர்....

ஹே ஜூட் விமர்சனம்
நிவின் பாலிக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். த்ரிஷாவின் முதல் மலையாளப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 'ஹே ஜூட்' என்பது 1968இல் வெளிவந்த 'தி பீட்டில்ஸ்' குழுவின் மிகப் பிரபலமான பாடல். த்ரிஷாவின் கேஃபே மற்றும் இசைக்குழுவின் (Music band) பெயரை 'தி பீட்டில்ஸ் கேஃபே' என வைத்துத் தலைப்பிற்கு ட்ரிப்யூட்டும் செய்துள்ளனர்.
ஜூடிற்கு மற்றவர்களைப் புரிந்து கொள்வதில் பிறந்தது முதலே சிக்கல் உள்ளது. கோபம், மகிழ்ச்சி என மனம் சார்ந்த உணர்வுகளை வேறுபடுத்திப் பார்க்க முடிவதில்லை. ஆனால், கணிதமோ உள்ளங்கை நெல்லிக்கனி போல் ஜூட்க்குப் புரிகிறது. கிட்டத்தட்ட கணித மேதை ராமானுஜம் அளவுக்கு. 28 வயதாகும் ஜூட் கொச்சியில் இருந்து கோவாவிற்குத் தன் பெற்றோர்களுடன் செல்கிறான்.
நண்பர்களற்ற ஜூட்க்கு, கோவாவில் பக்கத்து வீட்டுக்காரர்களான செபாஸ்டியனும் அவரது மகள் க்ரிஸ்டலும் நண்பர்களாகின்றனர். இருமன ஒழுங்கின்மையால் (Bi-pol...

ஃபேன்டம் த்ரெட் விமர்சனம்
உக்கிரமான காவியத்தன்மையுடனும் கலையழகுடனும், ஒரு மாய நூலைக் கொண்டு 'ஃபேன்டம் த்ரெட்' எனும் படத்தை அட்சுர சுத்தமாக வடிவமைத்துள்ளார் இயக்குநர் பால் தாமஸ் ஆண்டர்சன். அதனால் தான், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த ஆடை வடிவமைப்பாளர் ஆகிய ஆறு பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளுக்குப் போட்டியிடுகிறது.
ரெனால்ட் வுட்காக் மத்திம வயதைக் கடந்த மிகப் பிரபலமான ஆடை வடிவமைப்புக் கலைஞர். ஒரு பிரத்தியேகமான தனித்த உலகில் வாழ்பவர். தனது நாட்களை ஒரே மாதிரியான கண்டிப்பான ஒழுங்கில் கழிக்கவேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருப்பவர். காலையுணவின் பொழுது, ஒரு ஸ்பூன் வைக்கும் சத்தம் கூட அதிகப்படியாக அவருக்குக் கேட்கக்கூடாது. அவர் வேலையில் மும்மரமாக இருக்கும் பொழுது, சிநேகமாய்த் தேநீர் கோப்பையோடும் கூட அவரருகில் கூட யாரும் செல்லக்கூடாது. மனிதர் எரிந்து விழுவார். அப்பட...

பத்மாவதி விமர்சனம்
சஞ்சய் லீலா பன்சாலி பிரமாதப்படுத்தியுள்ளார். ராஜபுத்திரர்களைப் போல் வையகத்தில் வீரம் செறிந்தவர்கள் உண்டோ என்று தான் புகழ் பாடியுள்ளார். இதற்கு ஏன் இவ்வளவு அக்கப்போரும், அராஜக அலப்பறையும்? ஆண்ட பரம்பரை பெருமை பேசி, பள்ளி வாகணத்தைத் தாக்கிய ஸ்ரீ ராஜ்புட் கர்ணி சேணைக்குக் கடும் கண்டனங்கள்.
முத்துக்களைத் தேடிப் போகும் மேவாரின் மகாராஜா ராவல் ரத்தன் சிங், சிங்களத் தீவின் பேரழகி இளவரசி பத்மாவதியை திருமணம் புரிந்து கொண்டு சித்தூர் அழைத்து வருகிறார். பத்மாவதியின் அழகைக் கேள்விப்பட்டு போர் தொடுக்கிறார் அலாவுதீன் கில்ஜி. போரின் முடிவென்ன என்பதே படத்தின் கதை.
13 ஆம் நூற்றாண்டில் தொடங்கும் படத்தின் கதை, கண்டிப்பாகக் கவரும் வகையான வரலாற்றுக் காவியம் இல்லை. 15 ஆம் நூற்றாண்டில், சூஃபி கவிஞர் மாலிக் முஹம்மது ஜயாஸி எழுதிய ஒரு புனைவே இப்படத்திற்கான ஆதி மூலம். அசுவாரசியமான திரைக்கதையின் மெத்தனத்தைத் ப...

டார்கெஸ்ட் ஹவர் விமர்சனம்
'டார்கெஸ்ட் ஹவர் (Darkest Hour)' என்பது இரண்டாம் உலகப் போர் உருவாக்கிய நெருக்கடியைக் குறித்துச் சொல்ல வின்ஸ்டன் சர்ச்சில் பயன்படுத்திய பதம்.
நெவில் சேம்பர்லைன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதும், எதிர்க்கட்சிகளைச் சமாளிக்க வின்ஸ்டன் சர்ச்சில் இங்கிலாந்தின் பிரதம மந்திரியாக அறிவிக்கப்படுகிறார். ஏன் சர்ச்சில் என்று விருப்பமின்றி அரசர் ஜார்ஜ் VI வினவ, ஹிட்லர் பற்றிய அவரது யூகம் சரியாக இருந்ததென அவருக்குச் சொல்லப்படுகிறது. டன்கிர்க்கில் சுமார் 3 லட்சம் பிரிட்டிஷ் வீரர்கள் ஜெர்மனியரால் சூழப்பட, அவரது கட்சி உறுப்பினரோ ஹிட்லருடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்கிறார். அத்தகைய குழப்பமான இருண்ட காலகட்டத்தைச் சர்ச்சில் எப்படி அணுகினார் என்பதே படத்தின் கதை.
படத்தின் முதல் ஃப்ரேமிலேயே அசரடிக்கிறார் ஒளிப்பதிவாளர் ப்ரூனோ டெல்பொன்னெல் (Bruno Delbonnel). அமெரிக்க ஜனாதிபதி ஃப்...

ஜுமான்ஜி – வெல்கம் டூ தி ஜங்கிள் விமர்சனம்
காட்டுக்குள் ஜாலியான அட்வென்ச்சர் சஃபாரிக்கு உத்திரவாதம் அளிக்கிறது படம்.
பள்ளியில் நான்கு மாணவர்களை 'டெடன்ஷன்' செய்து அவர்களுக்கு ஓரறையைச் சுத்தம் செய்யும் பணியைத் தருகின்றனர். அங்குள்ள 'ஜுமான்ஜி' எனும் வீடியோ கேமை விளையாடி அதற்குள் உறிஞ்சப்படுகின்றனர் மாணவர்கள். ஜுமான்ஜி காட்டின் சாபத்தை அவர்கள் போக்கினால் தான் அந்தக் காட்டில் இருந்தும், விளையாட்டில் இருந்தும் வெளியேற முடியும். ஜுமான்ஜியின் சாபத்தை மாணவர்கள் எப்படிப் போக்குகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
மாணவர்கள் விளையாட்டுக்குள் போகும் பொழுது, வேறு உருவத்தில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் அவதாரங்களில் காட்டுக்குள் விழுகின்றனர். அதில், மேக்கப் மற்றும் செல்ஃபி விரும்பியான பெத்தானி எனும் பள்ளி மாணவி, 'கர்வி ஜீனியஸ்' என்று அவதாரத்தைத் தேர்ந்தெடுத்து ஆணாக ஜுமான்ஜியில் உலா வருகிறார். அந்தக் கதாபாத்திரம், அதாவது நடு வயது ஆணின் உடம்புக்குள் பு...

ஜுமாஞ்சி – காட்டிற்கு வரவேற்கும் விளையாட்டு
ஜோ ஜான்ஸ்டனின் நேர்த்தியான இயக்கத்தில், 1995 ஆம் ஆண்டு ஜுமாஞ்சி எனும் திரைப்படம் வந்தது. அப்படத்தைப் பார்த்தவர்கள் யாரும் அந்தப் படம் தந்த அற்புதமான அனுபவத்தை மறந்திருக்க வாய்ப்பே இல்லை. போலீஸ் வாகனத்தை ஓட்டும் குரங்குகள், வீட்டுக்குள் வரும் வெள்ளம், சிங்கம், நெடுஞ்சாலையில் ஓடும் மிருகங்கள் என அந்தப் படம் பற்றி நினைத்தாலே ஓர் உற்சாகம் எழும். அதனால் தான் அப்படம் வசூலில் ஒரு புதிய புரட்சியையே ஏற்படுத்தியிருந்தது.
க்றிஸ் வேன் ஆல்ஸ்பர்க், 1981-ஆம் ஆண்டு எழுதி வெளியாகிய குழந்தைகளுக்கான ஒரு நாவலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த திரைப்படமது! அப்படம் வெளி வருவதற்கு சற்று முன்னர் இறந்து விட்ட அப்படத்தின் விசேஷக் காட்சிகளின் சிருஷ்டிகர்த்தா ஸ்டீஃபன் L. ப்ரைஸின் நினைவாக அப்படம் அர்பணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2005இல், ஏறக்குறைய அதே கதைக்களத்தில், ‘Zathura - A Space Adventure’ வெளியானது. 199...

பிளேட் ரன்னர் 2049 விமர்சனம்
படத்தின் கதை 2049இல் நடக்கிறது. 1982இல் வந்த இப்படத்தின் முதல் பாகமான 'பிளேட் ரன்னர்' 2019 இல் நடப்பதாக எடுக்கப்பட்டிருக்கும். அந்தப் படத்தின் தொடர்ச்சி தான் என்றாலும், சுருக்கமாக முன் கதை போல் ரெப்ளிகன்ட்ஸ் என்றால் யார், பிளேட் ரன்னர்களின் வேலையென்ன என்று படத்தின் தொடக்கத்திலேயே எழுத்துக்களாகப் போட்டு விடுவது சிறப்பு. அதனால் முதல் பாகம் பார்க்கவில்லையென்றாலும் கதை நன்றாக புரியத் தொடங்கிவிடும்.
ரெப்ளிகன்ட்ஸ் என்றால் மனிதர்களின் வேலைக்காரர்கள் எனக் கொள்ளலாம். மனிதர்களை விட வலிமையான ரெப்ளிகன்ட்ஸின் உடல், ரத்தம் சதை எலும்புகளால் ஆய்வுக் கூடங்களில் தயாரிக்கப்படும். 2019 இல், அதாவது முதல் பாகத்தில் வரும் ரெப்ளிகன்ட் எல்லாம் நெக்சஸ்-6 வகையைச் சார்ந்தது. அதன் வாழ்நாட்களே மொத்தம் நான்கு வருடங்கள்தான். அதற்கு மேல் உயிர் வாழவிட்டால், அவர்களின் உணர்ச்சிகள் விழித்தெழுந்து விட்டால் மனிதர்களின் இருத்தல...

ஜாக்கி சானின் தி ஃபாரீனர்
ஏழு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஜாக்கி சானின் ஆக்ஷன் படம் ஒன்று ஹாலிவுட்டில் வெளியாகியுள்ளது. படத்தின் பெயர் ‘தி ஃபாரீனர்’. இப்படத்தின் மற்றொரு சிறப்பம்சம், இப்படத்தில் ஜாக்கி சானுடன் இணைந்து, 007 ஆகக் கலக்கிய பியர்ஸ் பிராஸ்னனும் நடித்துள்ளார்.
ஸ்டீஃபன் லெதர் எழுதிய 'தி சைனா மேன்' எனும் நாவலைத் தழுவித் திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் டேவிட் மார்கோனி. பிரபல ஹாலிவுட் இயக்குநர் இயக்குநர் மார்டின் கேம்பெல் படத்தை இயக்கியுள்ளார். 2006இல் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற 'கேசினோ ராயல்' படத்தை இயக்கியவர் கேம்பெல் என்பது குறிப்பிடத்தக்கது. பியார்ஸ் பிராஸ்னன் 007 ஆக நடித்த 'கோல்டன் ஐ' படத்தை இயக்கியவரும் இவரே! 22 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பியர்ஸ் பிராஸ்னனுடன் இணைகிறார்.
க்வான் (Quan) என்பவர் லண்டனைச் சேர்ந்த தொலிழதிபர். அவரது பதின் வயது மகள் ஒரு வெடி விபத்தில் இறந்து விடுகிறாள். அரசியல் கா...

விக்டோரியா & அப்துல் விமர்சனம்
பொறாமை கொள்ள வைக்கும் கதைக்கரு. மகாகனம் பொருந்திய இங்கிலாந்து பேரரசிக்கும், பிரிட்டிஷ் இந்தியாவைச் சேர்ந்த இந்தியப் பணியாளரான அப்துல் கரீம்க்கு இடையேயான நட்பினைச் சொல்லும் படம். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எனக் காட்டி, பின் சில மைக்ரோ நொடிகளில் ‘பெரும்பாலும்’ என்ற வார்த்தையைக் குசும்புடன் இணைக்கிறார் இயக்குநர் ஸ்டீஃபன் ஃப்ரேயர்ஸ்.
இந்தக் கதைக்கருவிற்கு ஏன் பொறாமைப்பட வேண்டும்? ஒரு வார்டு கவுன்சிலரையே மையக் கதாபாத்திரமாகக் கொண்டு, அவரைக் கலாய்க்க இயலாத முதிர்ச்சியற்ற உணர்ச்சி பொங்கும் சமூகத்தில் இருந்து, இப்படத்தை நோக்கினால் எழும் பிரம்மாண்ட பிரமிப்பைத் தவிர்க்கவே முடியவில்லை. படத்தின் முதற்பாதி அங்கதம் மிகவும் ரசிக்க வைக்கிறது. உதாரணத்திற்கு, அப்துலும் மொஹமதும் இங்கிலாந்து துறைமுகத்தில் காலடி வைத்ததும், அவர்களை வரவேற்கும் ஆங்கிலேயர், “நாகரிகத்திற்கு வரவேற்கிறோம்” என்கிறார். பின்னணிய...




