
ப்ரெடேட்டர்ஸ்
திடீரென வானத்தில் இருந்து மயக்கமுற்ற மனிதர்கள் தரை நோக்கி வீசப்படுகின்றனர். தரை தட்டும் முன் விழிப்படைவர்கள் அவசர அவசரமாக 'பாராச்சூட்'டினை இயக்கி காட்டினுள் இறங்குகின்றனர். அவர்கள் மொத்தம் 8 பேர். அந்த காட்டில் இருந்து வெளியேற ஏதேனும் வழி உள்ளதா என தேடி மலை உச்சியினை அடைகின்றனர். அங்கு அவர்கள் காணும் காட்சி அவர்களை உறைய வைக்கிறது.அவர்கள் வெறொரு கிரகத்தில் உள்ளனர். விசித்திர மிருகக் கூட்டம் ஒன்றால் தாக்கப்படுகின்றனர். அந்த கிரகத்தில் வேட்டையாடப் படுவதற்காக வரவழைக்கப் பட்டிருப்பதை உணர்கின்றனர். ஒருவர் பின் ஒருவராக இறக்க நாயகன் நாயகி மட்டும் உயிருடன் மிஞ்சும் பாரம்பரிய 'ஹாலிவுட் படம். வேற்று கிரகம், ப்ரெடேட்டர்ஸ், ஸ்பேஸ் ஷிப் என்ற வார்த்தைகள் எல்லாம் வருவதால் 'சையின்ஸ்- ஃபிக்ஷன் பிரிவில் இப்படம் அடக்கும்.ப்ரெடேட்டர்ஸ் முற்றும்.நாயகன், நாயகியை தவிர்த்து மீதமுள்ள ஆறு பேர் யார் என்ற...