32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சினிமா

3872 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 114 / 259
செய்திகள் வரிசை (பக்கம் 114)
நிலை மறந்தவன் – மதமும் மோசடியும் சினிமா

நிலை மறந்தவன் – மதமும் மோசடியும்

தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ் சார்பில் ஜூலை 15இல் தமிழில் வெளியாக இருக்கும் படம் ‘நிலை மறந்தவன்’. மலையாளத்தில் இளம் முன்னணி நடிகராகவும், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிரட்டல் வில்லனாகவும் நடித்துவரும் நடிகர் பஹத் பாசில் கதாநாயகனாக நடித்துள்ளார். ராஜாராணி, நையாண்டி படங்களில் கதாநாயகியாக நடித்தவரும் பஹத் பாசிலின் மனைவியுமான நடிகை நஸ்ரியா நசீம், இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். வில்லன்களாக இயக்குநர் கெளதம் மேனனும், அவருடன் விக்ரம் படத்தில் கெட்ட போலீஸாக நடித்த செம்பன் வினோத்தும் […]

09/07/2022 Dinesh R
பன்னிகுட்டி விமர்சனம் சினிமா

பன்னிகுட்டி விமர்சனம்

கருணாகரன், யோகிபாபு, சிங்கம்புலி, விஜய் டிவி ராமர், பழைய ஜோக் தங்கதுரை, திண்டுக்கல் லியோனி, T.P.கஜேந்திரன் ஆகியோரோடு ஓர் அழகான பன்னிகுட்டியும் நடித்துள்ளது. வேலையில்லா உத்ராவதிக்குத் தொட்டதெல்லாம் பிரச்சனையாகத் தெரிய, நன்றாகச் சாப்பிட்டுவிட்டு தூக்கு மாட்டிக்க பலமுறை முயல்கிறார். அவரை ஒருமுறை காப்பாற்றும் ப்ரூனே, கோடாங்கியிடம் அழைத்துச் செல்கிறார். சம்பந்தம் சம்பந்தமில்லாமல் அவர் சொல்லும் பரிகாரத்தைச் செய்ததும், அவரது பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து நல்லது நடக்கிறது உத்ராவதிக்கு. மகிழ்ச்சியில் கோடாங்கிக்கு நன்றி சொல்ல வரும் வழியில், பன்னிக்குட்டி […]

09/07/2022 Dinesh R
தோர்: லவ் அண்ட் தண்டர் விமர்சனம் அயல் சினிமா

தோர்: லவ் அண்ட் தண்டர் விமர்சனம்

கடவுள்களைக் கொல்லும் கோர், நிழல் உருவங்களை ஏவி புது ஆஸ்கார்டின் குழந்தைகளைக் கடத்தி விடுகிறான். நிழல் உலகில் சிறைப்பட்டிருக்கும் குழந்தைகளை தோர் எப்படி மீட்கிறார் என்பதுதான் கதை. அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்க்குப் பிறகு, மார்வெலின் படங்களில் அவர்களது மேஜிக் மிஸ்ஸாகிறது. மாயாஜாலங்களை மட்டுமே நம்பிக் களங்கமிறங்குவதை மார்வெல் என்டர்டெயின்மென்ட் தவிர்க்கவேண்டும். டிசி என்டர்டெயின்மென்டில் இருந்து கிறிஸ்டியன் பேலை மார்வெல் என்டர்டெயின்மென்டின் வில்லனாக வருகிறார். தானோஸ் போலொரு வில்லனுக்குப் பிறகு, மார்வெல் காமிக்ஸின் புது வில்லன்கள் யாரும் அச்சுறுத்தவோ, […]

09/07/2022 Dinesh R
கன்னட நடிகருக்குப் பின்னணி பேசிய நகுல் சினிமா

கன்னட நடிகருக்குப் பின்னணி பேசிய நகுல்

கமல் போஹ்ரா, ஜி. தனஞ்சயன், பிரதீப் B மற்றும் Infiniti Film Ventures பங்கஜ் போரா ஆகியோரின் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நடிப்பில் வரவிருக்கும், பெரிய பட்ஜெட் படமான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் கன்னட நடிகர் பிருத்வி அம்பர் நடித்த காட்சிகளுக்குத் தமிழில் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார் நகுல். தமிழ்த் திரையில் நடிகராக மட்மில்லாமல், பிரபல இசையமைப்பாளர்களுடன் இணைந்து பின்னணிப் பாடகராகப் பணியாற்றி கவனத்தை ஈர்த்தவர் நகுல். அவர் பல்வேறு தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகப் […]

08/07/2022 Dinesh R
கார்கி – திகில் படத்தை விஞ்சும் இறுதிக்காட்சி சினிமா

கார்கி – திகில் படத்தை விஞ்சும் இறுதிக்காட்சி

பிளாக்கி ஜெனி & மை லிஃப்ட் புட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெருமையுடன் வழங்கும் திரைப்படம் “கார்கி” ஆகும். இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகை சாய் பல்லவி, இயக்குநர் கெளதம் ராமசந்திரன், நடிகை தயாரிப்பாளர் ஐஸ்வர்ய லட்சுமி, 2D ராஜசேகர், சக்தி பிலிம் பேக்டரி சக்தி வேலன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இயக்குநர் கெளதம் ராமசந்திரன், “என்னுடைய […]

07/07/2022 Dinesh R
“லெஜண்ட் வெற்றி நிச்சயம்” – அன்புச்செழியன் சினிமா

“லெஜண்ட் வெற்றி நிச்சயம்” – அன்புச்செழியன்

லெஜண்ட் சரவணன் முதல் முறையாகத் தயாரித்து அதிரடி நாயகனாக அறிமுகமாகும் ‘தி லெஜண்ட்’ படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரைலர் 29 மில்லியன் பார்வைகளையும், ‘மொசலோ மொசலு’ பாடல் 14 மில்லியன் மற்றும் ‘வாடிவாசல்’ பாடல் 18 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ள நிலையில், முதல் படம் வெளிவருவதற்கு முன்பே தான் ஒரு லெஜண்ட் என தடம் பதித்திருக்கிறார் லெஜண்ட் சரவணன். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடித்த பல […]

06/07/2022 Dinesh R
தமிழ் சினிமாவின் பெருமையான ‘கடைசி விவசாயி’ சினிமா

தமிழ் சினிமாவின் பெருமையான ‘கடைசி விவசாயி’

இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கடைசி விவசாயி’. நல்ல படங்களைத் தயாரிப்பதில், ஒரு தயாரிப்பாளராக ‘மேற்குத் தொடர்ச்சி மலை’யின் உச்சியில் அமர்ந்திருக்கும் விஜய் சேதுபதியின் இன்னொரு பெருமை மிகு தயாரிப்பும் கூட இந்த ‘கடைசி விவசாயி’. ‘கடந்த 100 ஆண்டுகால தமிழ் சினிமாவின் தலை சிறந்த படம்’, மண் மணம் வீசும் காவியம்’ என்பது போன்ற உயர்ந்த அபிப்பிராயங்களுடன் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படம், […]

06/07/2022 Dinesh R
பீரியட் ஃப்லிமாக உருவாகும் ‘மூத்தகுடி’ சினிமா

பீரியட் ஃப்லிமாக உருவாகும் ‘மூத்தகுடி’

தி ஸ்பார்க்லேண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்து பலரின் பாராட்டைப் பெற்ற “சாவி” திரைப்படத்தை தொடர்ந்து, தங்களது இரண்டாவது படமாக “மூத்தகுடி” என்று பெயரிடப்பட்டுள்ள படத்தைத் தயாரிக்கின்றனர். இப்படத்தில் ராசு மதுரவன் இயக்கத்தில் வெளியான ‘முத்துக்கு முத்தாக’, ‘கோரிப்பாளையம்’, மற்றும் ‘சாவி’ படத்தில் கதாநாயகனாக நடித்த பிரகாஷ் சந்திராவும், மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த தருண்கோபியும் இணைந்து நடிக்கின்றனர். ‘வெல்டன்’, ‘கடைசி பெஞ்ச் கார்த்தி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ரவி பார்கவன் “மூத்தகுடி” படத்தின் திரைக்கதை எழுதி […]

06/07/2022 Dinesh R
சிரஞ்சீவியின் ‘காட் ஃபாதர்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் Movie Stills

சிரஞ்சீவியின் ‘காட் ஃபாதர்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் ‘காட் ஃபாதர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அதற்கான வீடியோ வெளியாகியிருக்கிறது. அத்துடன் நவராத்திரி திருவிழா கொண்டாட்டத்தின் போது ‘காட் ஃபாதர்’ திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொனிடேலா புரொடக்ஷன்ஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்டமான திரைப்படம் ‘காட் ஃபாதர்’. மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்தத் திரைப்படத்தை முன்னணி இயக்குநரான மோகன் ராஜா இயக்கியிருக்கிறார். இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கான […]

04/07/2022 Dinesh R
ராக்கெட்ரி: நம்பி விளைவு விமர்சனம் சினிமா

ராக்கெட்ரி: நம்பி விளைவு விமர்சனம்

நம்பி நாராயணனுடைய வரலாற்றுப் படம் (Biopic) எடுக்கிறார்கள் எனும்போதே எனக்கு இயல்பாக ஆர்வம் எழுந்தது. 90களின் சமயத்தில்தான், இந்திய பத்திரிகைத் துறையில் இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசம் மையம் கொண்டிருந்தது. இப்படியெல்லாம் நடப்புலகின் புதிரான சம்பவங்களை அம்பலப்படுத்துவது அல்லவா பத்திரிகை தர்மம் என்று மிகவும் உணர்ச்சி மேலீட்டோடு கவனித்து வந்த பல வழக்குகளில் ஒன்று நம்பி நாராயணன் வழக்கு. பிறகு அவர் ஜாமீனில் வெளிவந்தது, அவர் மேலான குற்றசாட்டுகள் நிரூபணம் ஆகாமல் சிபிஐ கோர்ட்டில் வழக்கு தள்ளுபடி ஆனதெல்லாம் நடந்ததும், […]

03/07/2022 Dinesh R
உறியடி விஜய்குமாரின் ஆக்சன் படம் சினிமா

உறியடி விஜய்குமாரின் ஆக்சன் படம்

உறியடி படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் விஜய்குமார் நடிப்பில் தயாராகி வரும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. ரீல் குட் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்து வரும் புதிய ஆக்சன் படத்தை அறிமுக இயக்குநர் அப்பாஸ் அ. ரஹமத் இயக்குகிறார். ‘உறியடி’ படத்தின் இரண்டு பாகங்களிலும் கதாநாயகனாக நடித்த நடிகர் இயக்குநர் விஜய்குமார் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாகத் தெரிவித்திருக்கிறார்கள். இதனிடையே நடிகர் […]

02/07/2022 Dinesh R
விதார்த் நடிக்கும் புலனாய்வு சைக்கோ த்ரில்லர் திரைப்படம் சினிமா

விதார்த் நடிக்கும் புலனாய்வு சைக்கோ த்ரில்லர் திரைப்படம்

‘யதார்த்த நாயகன்’ நடிகர் விதார்த் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் தொடக்கவிழா ஜூலை 1 அன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. கிரினேடிவ் குழுமத்தைச் சேர்ந்த கிரினேடிவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். மோகன் ராகேஷ் பாபு தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் நடிகர் விதார்த் கதையின் நாயகனாக நடிக்கிறார். பெயரிடப்படாத இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மணிமாறன் நடராஜன் இயக்குகிறார். இதன் கதை, திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் ஸ்ரீனிவாசன் சுந்தர் எழுத, […]

01/07/2022 Dinesh R
ஜோதி – குழந்தைக் கடத்தலுக்குத் தீர்வளிக்கும் எமோஷ்னல் த்ரில்லர் சினிமா

ஜோதி – குழந்தைக் கடத்தலுக்குத் தீர்வளிக்கும் எமோஷ்னல் த்ரில்லர்

சில ஆண்டுகளுக்கு முன்பாகக் கடலூரில் நடந்த மனதை உலுக்கும் உண்மை சம்பவமாகிய குழந்தை கடத்தலை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘ஜோதி.’ இந்த ‘ஜோதி’ திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘ஆரிராரோ’ என்ற பாடல் வெளியீட்டின் சிறப்பு நிகழ்ச்சி Radio City FM இல் சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநரான A.V.கிருஷ்ண பரமாத்மா பேசும்போது, “சென்ற வாரம் இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘போவதெங்கே’ என்ற காதல் பாடல் வெளியானது. அதைத் தொடர்ந்து ‘ஆரிராரோ’ என்ற […]

30/06/2022 Dinesh R
‘மாய கங்கா..’ பாடல் | பனாரஸ் Songs

‘மாய கங்கா..’ பாடல் | பனாரஸ்

‘கே ஜி எஃப்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கன்னட திரையுலகிலிருந்து அறிமுகமாகும் புதுமுக நடிகர் ஜையீத் கான், கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பனாரஸ்’ படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியானது. இதனைத் தமிழ்த் திரையுலகின் மூத்த தயாரிப்பாளரும், நடிகர் விஷாலின் தந்தையுமான ஜி. கே. ரெட்டி வெளியிட்டார். கன்னடத் திரையுலகின் முன்னணி இயக்குநரான ஜெய தீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘பனாரஸ்’. இந்தப் படத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு […]

30/06/2022 Dinesh R
Calcutta, I’m sorry விமர்சனம் அயல் சினிமா

Calcutta, I’m sorry விமர்சனம்

சீராகச் செல்லும் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் ஓர் உலுக்கும் சம்பவம் ஏற்படும் வரை, நாம் வாழும் வாழ்வின் பொருளென்ன என்ற தத்துவார்த்த கேள்விக்குள் மனிதன் செல்லுவதில்லை. வாழப் போகும் நாட்கள் குறைவென்று நிச்சயமான பின், இருக்கும் நாட்களுக்குள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள வேண்டித் துடிக்கிறான். அச்சமயத்தில், சரி, தவறு என மனம் போட்டு வைத்துள்ள எல்லாக் கணக்குகளும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட மனம் இளகுகிறது. கடைசி நொடி வரையும் இளகாமல் வாழ்ந்து மடிவோர் உண்டு என்ற போதிலும், மனம் […]

25/06/2022 Dinesh R