Shadow

சினிமா

எழுமின் – முதல் தற்காப்பு கலை திரைப்படம்

எழுமின் – முதல் தற்காப்பு கலை திரைப்படம்

சினிமா, திரைச் செய்தி
ஒரு படம் தயாரிப்பாளருக்கும் கதாநாயகனுக்கும் எதைத் தந்தது என்பதை விட அந்தப்படம் சமூகத்திற்கு என்ன தந்தது என்பது தான் முக்கியம். இதைக் கவனத்தில் கொண்டு உருவாகி இருக்கும் படம் தான் ‘எழுமின். தமிழில் வரும் முதல் தற்காப்பு கலை திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. வையம் மீடியாஸ் நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கியிருக்கும் இப்படத்திற்கு தோள் கொடுத்திருக்கிறார் நடிகர் விவேக். மேலும் தேவயானி, அழகம்பெருமாள், பிரேம் போன்ற நடிகர்களோடு சிறுவர் சிறுமிகளும் இப்படத்தின் பாகமாக இருக்கிறார்கள். அக்டோபர் 18ம் தேதி வெள்ளித்திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நடிகர் விவேக் பேசும்போது, “அக்டோபர் 18-ம் தேதி என்றதும் எல்லோர் முகத்திலும் ஒரு பரவசம் தெரிந்தது. ஏனென்றால் அன்று புரட்டாசி முடிகிறது. எழுமின் அன்று தான் ரிலீஸ். இந்தப் படத்தைப் பற்றி ஏற்கெனவே ...
கூத்தன் விமர்சனம்

கூத்தன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கூத்து என்பது வசனம், பாட்டு, அடவுகள் போன்றவற்றைக் கொண்டு நடிக்கும் நாட்டார் கலை. அந்தக் கலையைக் கற்றுத் தேர்ந்தவரைக் கூத்தன் என்றழைப்பார்கள். கலைகளின் தோற்றுவாய் எனக் கருதப்படும் சிவனுக்கும் அப்பெயர் வழங்கப்படுகிறது. இந்தப் படத்தைப் பொறுத்தவரை, நடிப்பிலும் நடனத்திலும் பேராவலுள்ள நாயகனைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. நாயகன் வசிக்கும் ஃப்லிம் நகரில், சினிமா கனவுகளோடு 35 குடும்பங்கள் வாழ்கின்றன. அதன் உரிமையாளர் அந்த நகரை விற்க முற்படுவதால், ஃப்லிம் நகர்வாசிகள் அவ்விடத்தை வாங்க முயற்சி செய்கின்றனர். நாயகிகளின் நாட்டியப் பள்ளி வளாகம் கடனில் மூழ்கியுள்ளது. அதை மீட்கப் போராடுகின்றனர். இவர்கள் எப்படி இந்தக் கஷ்ட சூழலைச் சமாளித்து தங்கள் சிக்கல்களைத் தீர்க்கின்றனரே என்பதே படத்தின் கதை. நடனத்தை மையப்படுத்திய படம். அதனாலேயே, பிரபுதேவவின் தம்பி நாகேந்திர பிரசாத்தை வில்லனாகப் போட்டுள்...
ஆண் தேவதை விமர்சனம்

ஆண் தேவதை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
முன்னாள் பத்திரிகையாளரான இயக்குநர் தாமிரா, இயக்குநர் இமயத்தையும் சிகரத்தையும் ஒன்றாக நடிக்க வைத்து ரெட்டச்சுழி எனும் படத்தை 2010 இல் எடுத்தவர். எட்டு வருடங்களுக்குப் பிறகு அவர் தனது அடுத்த படத்தை இயக்கியுள்ளார். சிறகுகள் உதிர வெண்ணிற இறக்கைகள் மேகத்தினூடே பறக்க, ஆண் தேவதை என்ற பெயர் திரையில் வருகிறது. படத்தின் தொடக்கமே, குழந்தைகளுக்குப் பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல் பற்றிய சமுத்திரக்கனியின் விளக்கத்தோடு, "தீதும் நன்றும் கற்றுத் தருவோம்"என படம் தொடங்குவது சிறப்பு. அந்தச் சிறப்பு, படம் முழுவதும் நீள்கிறது. எது சரி, எது தவறென விளக்கிக் கொண்டே இருக்கிறார் சமுத்திரக்கனி. ஒரு கட்டத்தில் கடுப்பாகும் நாயகி, "என்னை அட்வைஸ் பண்ணியே கொன்னுடாத!" எனக் கதவை டமாலென மூடுகிறார். நாயகி ரம்யா பாண்டியனும், சமுத்திரக்கனியும் காதலித்துக் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். ஆதிரா, அகரமுதல்வன் என இரட்டைக...
பூவரசம் பீப்பீ – சில்லு கருப்பட்டி

பூவரசம் பீப்பீ – சில்லு கருப்பட்டி

சினிமா, திரைத் துளி
திரையுலகில் தற்போது அன்த்தாலஜி (anthology) என்று அழைக்கப்படும் ‘குறும்படங்களின் திரட்டு’ பிரபலமாகி வருகிறது. 'பூவரசம் பீப்பீ ' என்ற படத்தை இயக்கிய ஹலீதா ஷமீம் தற்போது இயக்கி வரும் 'சில்லு கருப்பட்டி' திரைப்படம் இந்த வகையைச் சேர்ந்தது. சமுத்திரக்கனி, சுனைனா ஆகியோர் இணைந்து நடிக்கும் இந்தப் படத்தை டிவைன் ப்ரோடுக்ஷன்ஸ் சார்பில் வெங்கடேஷ் வெள்ளினேனி தயாரிக்கிறார். தனது முதற்படமான 'பூவரசம்பூ பீப்பீ' முலம் திரையுலகினர் கவனத்தை மட்டுமின்றி, ரசிகர்கள் கவனத்தையும் பெருமளவு கவர்ந்த இயக்குநர் ஹலீதா ஷமீம் இந்தப் படத்தை இயக்குகிறார். ‘இந்தப் படத்தில் நான்கு வெவ்வேறு கதைகள் உள்ளன. அதிலொரு கதையில் தான் சமுத்திரக்கனி, சுனைனா ஜோடி ஒரு நடுத்தர வயது தம்பதியராக நடித்துள்ளனர். நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் ஒரு சராசரி தம்பதியின் வாழ்வியல் முறையைப் பதிவு செய்யும் அத்தியாயம் இவர்களுடையது. இவர்களுடன் ‘ஒ காதல்...
ஐரா – இரட்டை வேடத்தில் நயன்

ஐரா – இரட்டை வேடத்தில் நயன்

சினிமா, திரைத் துளி
தொடர்ந்து தன்னுடைய தோற்ற பொலிவாலும், சீரிய நடிப்பு திறமையினாலும் திரை வர்த்தகத்தில் மட்டுமன்றி, ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்து தன்னுடைய ஆளுமையைச் செலுத்தி வரும் நயன்தாரா தன்னுடைய அடுத்த படமான "ஐரா" படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அறம் படத்தைத் தயாரித்த கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கொட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை லட்சுமி, மா ஆகிய குறும்படங்களையும், எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் திரைப்படத்தையும் இயக்கிய சர்ஜுன் கதை, வசனம் எழுதி இயக்குகிறார். ப்ரியங்கா ரவீந்திரன் திரைக்கதை அமைக்க, கே.எஸ்.சுந்தர மூர்த்தி இசை அமைக்க, சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில், கார்த்திக் ஜோகேஷ் படக்தொகுப்பு செய்ய, அவள் படத்தின் கலை இயக்குநர் சிவசங்கர் அரங்கு அமைக்க, டி. ஏழுமலை நிர்வாக தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் நயன்தாராவுடன் கலை அரசன், யோகி பாபு, ஜே பி ஆகியோருடன் பலர்...
தாதா 87 இயக்குநரின் அடுத்த படம்

தாதா 87 இயக்குநரின் அடுத்த படம்

சினிமா, திரைத் துளி
சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி நடிப்பில் "தாதா 87" படத்தை விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ளார். "தாதா 87" படத்தின் பாடல்களும், முன்னோட்டமும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது. தற்போது ஏ எஃப் எஃப் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி, நடிகர் அம்சன் நடிக்கும் புதிய படமொன்றை இயக்கவுள்ளார். தல அஜித்தின் தீவிர ரசிகராகவும், கல்லூரியின் சூப்பர் சினியராகவும் அம்சன் நடிக்கின்றார். மற்ற நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வரும் 18ஆம் தேதி வெளியிடப்படும் என்று தயாரிப்புத் தரப்புக் கூறியுள்ளது....
கூல் சுரேஷின் ‘சித்திரமே சொல்லடி’

கூல் சுரேஷின் ‘சித்திரமே சொல்லடி’

சினிமா, திரைத் துளி
'சித்திரமே சொல்லடி' எனுன் திரைப்படத்தை, எம்.ஜி.எம் ப்ரொடக்ஷன் பட நிறுவனம் சார்பில் கௌரி சங்கர் தயாரித்து இயக்குகிறார். இப்படத்தில் கூல் சுரேஷ் கதாநாயகனாகவும், கோபிகா நாயர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் தெனாலி, மகாநதி சங்கர், தேனி முருகன், விஜய் கணேசன், சுமதி, அஞ்சலி டேவி, அப்சர் மற்றும் பெரெரொ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஒளிப்பதிவை மகி பாலனும், ஒலிப்பதிவை ஆதிஷ் உத்ரியனும் செய்துள்ளனர். துப்பறியும் பாணியில் உருவாக்கபட்டுள்ள இப்படம் சென்னை, ஏலகிரி மற்றும் பாண்டிசேரி ஆகிய பகுதிகளில் படமாக்கப் பட்டுள்ளது. நவம்பர் மாதம் படத்தைத் திரைக்குக் கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். படத்தைப் பற்றி இயக்குநர் கௌரி சங்கர் கூறுகையில், “இந்தப் படம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம். பெண்கள் பாலியல் தொல்லைகளிலிருந்தும், தங்களை கேலி...
வெனம் விமர்சனம்

வெனம் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
உலகம் வாழத் தகுதியற்ற கிரகம் என நம்புகிறார் லைஃப் ஃபெளண்டேஷனின் கார்ல்டன் ட்ரேக். சமீபமாய் ஹாலிவுட் வில்லன்கள் அனைவரையுமே இந்த பயம் ஆட்டுவிக்கிறது. அவர்களை இரு சாரராகப் பிரிக்கலாம். முதல் வகையினர், மக்கள் தொகையைப் பாதியாகக் குறைத்துவிட்டால், பூமி பழையபடி பூத்துக் குலங்கத் தொடங்கிவிடும் என நம்புவர்கள். இன்னொரு சாரார், மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு பூமியை விட்டே போய்விடுவது என நம்புவர்கள். கார்ல்டன் ட்ரேக், இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்த வில்லன். சரி, பூமியை விட்டு வெளியில் போய்விட்டால் போதுமா? மனிதர்கள் விண்வெளியில் வாழ அவர்களின் உடலினை, அந்தச் சூழலுக்கு ஏற்றவாறு தகவமைக்க வேண்டுமா? அதனால் விண்கல்லில் ஒட்டிக் கொண்டிருக்கும் நான்கு கூட்டுயிரிகளை (Symbiote) ஆய்வு செய்கிறார். மனிதரோடு கூட்டுச் சேராமல், அவ்வுயிரிகள் கார்ல்டன் ட்ரேக்கிற்கு ஆட்டம் காட்டிக் கொண்டிருக்க, ஒரு விபத்து போல் எடி ப...
ராட்சசன் விமர்சனம்

ராட்சசன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கொலை என்று பதற்றத்துடன் கடந்து விட முடியாத அளவுக்கு, மிகக் கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டு பள்ளி மாணவிகள் ஒவ்வொருவராகக் கொலை செய்யப்படுகின்றனர். குலை நடுங்க வைக்கும் கொலைகள் அவை. புராணங்களில், வரும் ராட்சஷர்கள் யாரும் சைக்கோக்கள் கிடையாது. இதில் வரும் சைக்கோவைச் சித்தரிக்க, ராட்சசன் எனும் சொல் சரியயானதுதானா என்பது ஐயமே! சைக்கோவை எஸ்.ஐ. அருண் எவ்வாறு பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. த்ரில்லர் ரசிகர்களுக்குச் செமயான விருந்தளிக்கும் படம். ஆனால் அதே அளவு நடுக்கத்தையும் தருமளவு மிக இன்டன்ஸாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தளவுக்கு ஒரு படம் எடுக்கப்பட வேண்டியது அவசியம்தானா எனக் கேள்வியெழுமளவு மெனக்கெட்டுள்ளார் முண்டாசுப்பட்டி படத்தின் இயக்குநர் ராம் குமார். ஸ்பைடர் படத்திலும் இப்படிக் காட்சிகள் வரும். ஆனால், கவரில் சுற்றப்பட்டுப் பிடுங்கப்பட்ட பள்ளி மாணவியின் கண் குழிக்குள் இருந்து பூச்சிக...
நோட்டா விமர்சனம்

நோட்டா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஷான் கருப்புசாமியின் வெட்டாட்டம் நாவல் அப்படியே படமாக ஆனந்த் ஷங்கரால் எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் வினோதன் தனது மகன் வருணிடம் முதலமைச்சர் பதவியை, இரண்டு வாரத்திற்குக் கைமாற்றிவிட்டு தன் மீது நீதிமன்றதிலுள்ள வழக்கைச் சந்திக்கத் தயாராகிறார். வழக்கின் தீர்ப்பு வினோதனுக்குப் பாதகமாகி விட, வருண் முதலமைச்சர் பதவியில் நீடிக்குமாறு ஆகிவிடுகிறது. சொந்த கட்சி ஆட்களின் அத்துமீறல், இயற்கைச் சீற்றம், குடும்பத்தின் மீதான உயிர் அச்சுறுத்தல் என வருண் தனக்கு முன்னுள்ள சவால்களை எல்லாம் எப்படிச் சமாளிக்கிறான் என்பதுதான் படத்தின் கதை. சமகால அரசியல் பகடியும், ரெளடி முதல்வராக வரும் விஜய் தேவரகொண்டாவும் தான் படத்தின் பலம். விஜய் தேவரகொண்டாவைச் சுலபமாய் ஏற்றுக் கொள்ள முடிகிறது. படம் அவரைச் சுற்றித்தான் நடக்கிறது, என்றாலும் அவரைத் தவிர வேறு எவருக்குமே முக்கியத்துவம் தராதது ஏன் எனத் தெரியவில்லை? படம் அடுத்தடு...
பரியேறும் பெருமாள்: எங்கள் வீட்டு நிலவு

பரியேறும் பெருமாள்: எங்கள் வீட்டு நிலவு

சினிமா, திரைச் செய்தி
தமிழ் மக்களின் மனமேறி சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டான் “பரியேறும் பெருமாள். உலகெங்கும் வெற்றிநடை போட்டு வரும் இப்படத்தின் வெற்றிக்கு அடித்தளமிட்டது படத்தில் பதிவு செய்யப்பட்ட நிஜமும் நம் மக்களின் மனசாட்சியின் வடிவமான காட்சிகளும் தான். சமத்துவத்தையும் பேரன்பையும் அழுத்தமாகப் பதிவு செய்த இப்படத்திற்கு மக்கள் அளித்த மகத்தான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் பேசும்போது,“இது கொண்டாட்டமான மனநிலை. பரியேறும் பெருமாள் போன்ற படங்கள் ஓடாது என்று பலரும் பயம் காட்டினார்கள். ஆனால் எனக்கு நம்பிக்கை இருந்தது. மனித மாண்பை மீட்டு எடுக்கிற சாதிய முரண்களை உடைத்து எடுக்கிற படங்களை நிச்சயமாகக் கொண்டாடுவார்கள் என்று நம்பினேன். அது நடந்தது. அம்பேத்கர் புகைப்படத்தை, படத்தில் காட்டினாலே மதுரையில் கலவரம் நடக்கும் என்று பலரும் சொன்னார்கள்...
’96 விமர்சனம்

’96 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பத்தாம் வகுப்பில் மலரும் காதலை, K.ராமச்சந்திரனும் ஜானகி தேவியும் உணர்ந்தாலும், அதைப் பரஸ்பரம் சொல்லிக் கொள்ளும் முன்பு ஒரேடியாகப் பிரிந்து விடுகின்றனர். சரியாக 22 வருடங்களுக்குப் பின், ஓர் ஒருங்குகூடலில் சந்திக்கின்றனர். அவர்கள் சந்தித்துக் கொள்ளும் ஓரிரவு, காலத்தை உறைய வைத்து, இசையாயக் கரைந்து, அவர்களோடு பார்வையாளர்களையும் பின்னோக்கிக் கொண்டு சென்று விடுகிறது. மனதில் பதிந்துள்ள மிக மென்மையான பதின் காலத்து இனிய நினைவுப் பொக்கிஷங்களைக் கச்சிதமாக மீட்டுகிறார் கோவிந்த் வசந்தா. இசையால் என்னென்ன மாயம் செய்யமுடியும் என்பதைப் பார்வையாளர்களுக்கு உணர்த்துகிறார். ஆனால், அப்படி க்யூட்டான பால்யம் வாய்க்கப் பெறாதவர்களுக்குக் கூட, அந்தக் குறுகுறுப்பான ஓர் இனிய அவஸ்தையை உண்டாக்கிவிடுவது தான் 96 படத்தின் சாதனை. பள்ளிப்பருவத்தில், ஜானகி பாடும் பாடல்கள் அனைத்தும் மிக அட்டகாசம். இளையராஜாவை ஏன் போன மில்லியனத...
பரியேறும் பெருமாள் விமர்சனம்

பரியேறும் பெருமாள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'சாதியும் மதமும் மனித குலத்திற்கு விரோதமானது' என்ற வாசகத்துடன் படம் தொடங்குகிறது. இப்படத்தில், சாதி எப்படி மனித குலத்திற்கு விரோதமாகச் செயல்படுகிறதெனப் பரியேறும் பெருமாளின் வாழ்க்கையில் இருந்து சித்தரிக்கப்படுகிறது. கருப்புத் திரையில் வெள்ளையெழுத்துகளாக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர் போடும்பொழுதே சந்தோஷ் நாராயணன் ஒலிக்கத் தொடங்கிவிடுகிறார். படம் தொடங்கியவுடனே, "கருப்பி, அடி கருப்பி!" என்ற பாடலின் மூலமாக ஒரு வாழ்வியலுக்குத் தயார் செய்துவிடுகிறார். படத்தின் நாயகன் அவர்தான்! படத்தின் இசையும், ட்ரோன் மூலம் பறவைக் கோணத்தில் காட்டப்படும் நிலப்பரப்பும், படத்தோடு பார்வையாளர்களை ஒன்றச் செய்துவிடுகிறது. சட்டக்கல்லூரி மாணவனாக வரும் யோகி பாவுவின் ஒன்லைன் கவுன்ட்டர்கள் அட்டகாசம். நகைச்சுவைக்காக என்றில்லாமல் ஒரு கதாபாத்திரமாக படம் முழுவதும் வந்து அசத்துகிறார். பரியேறும் பெருமாளாகக் ...