Shadow

சினிமா

வருத்தத்துடன் ஒரு கடிதம் – நிவேதா பெத்துராஜ்

வருத்தத்துடன் ஒரு கடிதம் – நிவேதா பெத்துராஜ்

சினிமா, திரைத் துளி
'ஒரு நாள் கூத்து' படத்தில் தினேஷிற்கு ஜோடியாக நடித்திருந்த நிவேதா பெத்துராஜ் தன் நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். நன்றாகத் தமிழ் பேசக் கூடிய நாயகி என்பது அவரைப் பற்றிய கூடுதல் சிறப்பம்சம். சமீபமாக ஒரு சில ஊடங்கங்களில் வேறு ஒரு நடிகையின் மிகக் கவர்ச்சிகரமான படங்களை, நிவேதா பெத்துராஜுவின் பெயர் போட்டுப் பிரசுரித்ததால் மிகவும் வருத்தத்தில் உள்ளார். "கடந்த சில நாட்களாக ஒரு சில ஊடகங்களில் வேறு ஒரு நடிகையின் புகைப்படங்களை வெளியிட்டு, அது நான் தான் என்று பொய்ப் பரப்புரை செய்து வருகின்றனர். என் மேல் அக்கறை கொண்ட சிலர் தொடர்ந்து இதைப் பற்றிய கவனத்தை என்னிடம் கொண்டு வந்தனர். இந்தச் செயலை வெறும் கவனக்குறைவான செயலாக என்னால் பார்க்க முடியவில்லை. என் பெயரைக் கெடுக்க வேண்டும் என்றே யாரோ இவ்வாறு செய்கிறார்கள் என்று சந்தேகப்பட வேண்டியுள்ளது. இத்தகைய நிகழ்வுகள் என்னை மிகவும் காயப்படுத்தியுள்ளது. இ...
“ஹன்சிகாவிற்கான கதை” – இயக்குநர் ஜமீல்

“ஹன்சிகாவிற்கான கதை” – இயக்குநர் ஜமீல்

சினிமா, திரைத் துளி
ஹன்சிகா மோத்வானி பிரதான கதாப்பாத்திரத்தில் நடிக்கும் புதிய பெயரிடப்படாத படத்தை அறிவித்திருக்கிறது ஜியோஸ்டார் எண்டர்பிரைசஸ். இதுவரை ஜாலியான பெண் கதாபாத்திரங்களையே ஏற்று நடித்து வந்த ஹன்சிகா, மிகுந்த ஈடுபாடும் அர்ப்பணிப்பும் உள்ள ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். சவாலான அக்கதாபாத்திரத்தை ஏற்று நேர்த்தியாக நடிப்பதற்காக தற்போது ஹோம் வொர்க் செய்து வருகிறார். நாயகியை மையப்படுத்திச் சுழலும் இந்த த்ரில்லர் கதையில் மிகவும் பவர்ஃபுல்லான நடிப்பை வெளிப்படுத்த இருக்கிறார் ஹன்சிகா. மசாலா படம், ரோமியோ ஜூலியட், போகன் படங்களில் இணை இயக்குநராகப் பணிபுரிந்த ஜமீல் கதை, திரைக்கதை எழுதிப் படத்தை இயக்குகிறார். வணிக மற்றும் தொழில்நுட்ப விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் தயாராக இருக்கிறது. “ரசிகர்கள் பார்க்க விரும்பும் வகையில் வணிக ரீதியில் திரைக்கதையை மேம்படுத்த நிறைய உழைப்பைக் கொடுத்திருக்...
என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா விமர்சனம்

என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
இந்தியாவின் மீது தீவிர காதல் கொண்ட பெருங்கோபக்காரனான சூர்யா இராணுவத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறான். அவன் விருப்பப்பட்ட எல்லைக் காவல் வேலை, சூர்யாவிற்குக் கிடைத்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. 'கோபம் வந்துச்சு. அடிச்சேன்' என்ற சூர்யாவின் அறிமுக அத்தியாயமே தூள். 'இவன் தான் சூர்யா' எனப் பார்வையாளர்களை முழுப் படத்திற்கும் தயாராக்கிவிடுகிறார் இயக்குநர் வம்சி. முறுக்கேறிய உடலுடம் ஸ்டைலிஷ் ஆக்டர் அல்லு அர்ஜுன், சூர்யா பாத்திரத்திற்குக் கனகச்சிதமாய்ப் பொருந்துகிறார். கோச்சா, ரவி வர்மா, பீட்டர் ஹெய்ன், ராம் லக்‌ஷ்மன் என நான்கு ஸ்டன்ட் மாஸ்டர்களும் சூர்யா பாத்திரத்திற்கு உரம் சேர்த்துள்ளனர் என்றே சொல்லவேண்டும். அதகளமான சண்டையில் தொடங்கும் படம், அதே போலொரு சண்டையினோடு இடைவேளையில் முடிகிறது. அதன் பின், அதிரடியான சண்டை ப்ரீ-க்ளைமேக்ஸில் தான் வருகிறது. ஆம், படத்தின் க்ளைமேக்ஸில் சண்டை இல்லை. மா...
காத்திருப்போர் பட்டியல் விமர்சனம்

காத்திருப்போர் பட்டியல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'வெயிட்டிங் லிஸ்ட்' என்பதன் தமிழாக்கமாகத் தலைப்பைப் புரிந்து கொள்ளலாம். படம் இரயில்வே ஸ்டேஷனில், அதாவது இரயில்வே ஸ்டேஷனில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் நிகழ்கிறது. சின்னச் சின்ன குற்றங்களுக்குக் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதற்காகக் காத்திருக்கின்றனர். காதலைச் சொல்லிவிட்டுப் பதிலுக்காகக் காத்திருப்போரின் பட்டியல் என்றும் தலைப்பிற்கு ஓர் உபப்பொருளை ஒரு பாடலின் வரியில் அளித்துள்ளனர். சத்யாவும் மேகலாவும் காதலிக்கின்றனர். அவர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான நாளன்று தாம்பரம் இரயில்வே போலீஸாரினால் கைது செய்யப்படுகிறான் சத்யா. அவர்களின் காதல் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான படம். புதுமையான கதைக்களன், கலவையான கதாபாத்திரங்கள் எனச் சுவாரசியமாகத் தொடங்குகிறது. எனினும் படம், 'தன்னைப் பார்த்து பொதுமக்கள் பயப்பட வேண்டும்' எ...
இயக்குநர் ராஜேஷுடன் இணைகிறார் சிவகார்த்திகேயன்

இயக்குநர் ராஜேஷுடன் இணைகிறார் சிவகார்த்திகேயன்

சினிமா, திரைத் துளி
திரையரங்கில் இருந்து வெளியே வரும் ரசிகர்கள், "இது முழுக்க முழுக்க ஒரு எண்டர்டெயினர் படம்" என்று சொல்லி விட்டு, மகிழ்ச்சியோடும் கொண்டாட்டத்தோடும் வீட்டுக்கு போகும்போது அப்படி ஒரு படத்தை எடுத்து, அவர்களுக்கு வழங்கிய படக்குழுவுக்கு அதை விட பெரிய மகிழ்ச்சி என்னவாக இருக்க முடியும்? இதுநாள் வரையில் ஸ்டுடியோக்ரீன் K.E.ஞானவேல்ராஜா, இயக்குநர் ராஜேஷ், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் தங்களது துறைகளில் முழுக்க பொழுதுபோக்கு படங்களை வழங்கியவர்கள். தற்போது இந்த மூன்று பேரும் ஒரு படத்தில் இணைவது ட்ரிபிள் ட்ரீட்டாக ரசிகர்களுக்கு அமையப் போவது உறுதி. ஸ்டுடியோ க்ரீன் ப்ரொடக்ஷன் நம்பர் 9 தற்போதைக்கு, 'சிவகார்த்திகேயன் 13' #SK13 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் சம்பிரதாய பூஜையுடன் இன்று துவங்கியது....
“இந்தப் படம் என் மாமியாரின் கடைசி ஆசை” – ஒரு பெண் தயாரிப்பாளர்

“இந்தப் படம் என் மாமியாரின் கடைசி ஆசை” – ஒரு பெண் தயாரிப்பாளர்

சினிமா, திரைச் செய்தி
நடிகர் பாண்டியராஜின் மகன் ப்ரித்விராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ள படம் “தொட்ரா”. ஜெ.எஸ்.அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில், டெக்ஸ்டைல் துறையைச் சேர்ந்த ஜெய்சந்திரா சரவணக்குமார் எனும் பெண்மணி தயாரித்துள்ளார். “ 'என் மகனுக்குத் திரைப்படங்களில் நடிக்க மிகவும் ஆசை. அவனை ஒரு படத்திலாவது நடிக்க வைத்துவிடு' என்றார் என் மாமியார். அவரின் கடைசி ஆசையை நிறைவேற்றும் விதமாகவும் எனது கணவரை நடிகராகப் பார்க்கவேண்டும் என்பதற்காகவும் தான் தயாரிப்பாளராக மாறினேன். என் வாழ்க்கையில் இதுவரை இரண்டே இரண்டு படங்கள் மட்டுமே நான் பார்த்துள்ளேன். இயக்குநர் மதுராஜ் சொன்ன கதை என்னைக் கவர்ந்துவிட்டது. அதற்காக எடுத்ததுமே என் கணவரை ஹீரோவாகப் பார்க்க என்னால் முடியவில்லை. ஹீரோவாக அவருக்குச் செட்டாகுமா எனத் தீர்மானிக்க முடியவில்லை. இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களிடம் அவருக்கான வரவேற்பு கிடைத்தால், அடுத்...
“சீனியர் எனக்கில்லாத ஃபீலிங்கா?” – பாக்கியராஜ்

“சீனியர் எனக்கில்லாத ஃபீலிங்கா?” – பாக்கியராஜ்

சினிமா, திரைச் செய்தி
ஆணவக்கொலைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் "தொட்ரா". இயக்குநர் பாக்கியராஜின் சீடரான மதுராஜ் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். நடிகர் பாண்டியராஜனின் மகன் ப்ரித்வி நாயகனாக நடித்துள்ளார்.  அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பாண்டியராஜன், “ப்ரித்வி இவ்வளவு நண்பர்களைச் சேர்த்து வைத்திருப்பான் என நினைத்தே பார்க்கவில்லை. என் கவலையெல்லாம் இன்னும் அவன் சினிமாவில் ஒரு நல்ல நிலைக்கு வரவில்லையே என்பதுதான். வெற்றி அவ்வளவு சாதாரணமாக வந்துவிடாது. உடனே வந்துவிட்டால் அதற்கு மரியாதையும் கிடையாது. எதற்கும் ஒரு நல்ல நேரம் வரவேண்டும். ஆனால் இந்தப் படத்தை பார்த்ததும் பிருத்விக்கு அந்த நல்ல நேரம் வந்துவிட்டது என்றே தோன்றுகிறது. அந்த அளவுக்கு இந்தப் படத்தில் பிருத்வியைப் பார்க்கும்போது புது தேஜஸ் தெரிகிறது” என ஒரு தகப்பனாக தனது உணர்வுகளை நெகிழ்ச்சியுடன் கூறி கண் கலங்கினார். நிகழ்ச்சிய...
“தொட்ரா என்றால்?” – இயக்குநர் பேரரசு

“தொட்ரா என்றால்?” – இயக்குநர் பேரரசு

சினிமா, திரைத் துளி
“ரசிகர்களும் தியேட்டர்களும் கணவன் மனைவி போலத்தான். கணவனை விட்டுவிட்டு மனைவி கோபித்துக் கொண்டு சில நாட்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டால் சீக்கிரமே திரும்பி வந்துவிட வேண்டும். இல்லையென்றால் மனைவி இல்லாமல் எல்லா வேலைகளும் செய்வதற்குக் கணவனுக்குப் பழகிவிடும். அப்படித்தான் போராட்டம் என்கிற பெயரில் திரையரங்குகளை நீண்ட நாட்கள் மூடி வைத்திருந்தால் போகப் போக ரசிகர்களுக்கு சினிமா பார்ப்பது என்கிற ஒன்றே மறந்துவிடும். நல்லவேளையாக சீக்கிரமே வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது” எனக் கூறினார் 'தொட்ரா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பேரரசு. உத்தமராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தில், பிருத்வி ராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளனர். இயக்குநர் பாக்கியராஜின் சீடரான மதுராஜ் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். "தொட்ரா என்றால் என்ன? இந்தத் தலைப்பி...
சில சமயங்களில் – இந்தியாவின் முதல் நெட்ஃப்ளிக்ஸ் படம்

சில சமயங்களில் – இந்தியாவின் முதல் நெட்ஃப்ளிக்ஸ் படம்

சினிமா, திரைத் துளி
விமர்சன ரீதியாகக் கவனிக்கப்படும் படங்களைக் கொடுக்கும் பிரியதர்ஷன், கலையம்சம் பொருந்திய படங்களைத் தருவதில் ஒரு முன்னோடி. தனித்துவமான கதை சொல்லலில் வித்தகரான பிரியதர்ஷன், அனைத்து விதமான கதைகளிலும் அவர் பெற்ற வெற்றி, அவருக்கு இந்திய சினிமாவில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது. இதுபோன்ற வெற்றிகளால் உந்தப்பட்ட அவரது திரைப் பயணத்தில், இன்னொரு வைரக்கல்லாகச் சேர்ந்திருக்கிறது அவர் இயக்கிய 'சில சமயங்களில்' திரைப்படம். இந்தியாவின் முதல் நெட்ஃபிளிக்ஸ் ஒரிஜினல் படமாக வெளியாகிறது. டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவனங்கள் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அவற்றில் உலகம் முழுக்க முதன்மையானதாக தன்னை நிரூபித்துள்ளது நெட்ஃபிளிக்ஸ். இந்தியாவின் முன்னணி கலைஞர்கள் டிஜிட்டல் நிறுவனங்களோடு கைகோர்த்திருக்க, பிரியதர்ஷன் இயக்கியிருக்கும் சில சமயங்களில், உலகம் முழுக்கச் சென்று சேரும் விதமான கதையைக் கொ...
“படத்தில் மெஸ்சேஜ் சொல்லியுள்ளேன்” – ஹரஹர மஹாதேவகி இயக்குநர்

“படத்தில் மெஸ்சேஜ் சொல்லியுள்ளேன்” – ஹரஹர மஹாதேவகி இயக்குநர்

சினிமா, திரைச் செய்தி
ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் தயாராகியிருக்கும் படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'. அடல்ட் ஹாரர் காமெடி வகை சேர்ந்த படம் என்பதாலும், ஹர ஹர மஹாதேவகி இயக்குநர் சன்தோஷ் P. ஜெயக்குமார் இயக்கியுள்ளதாலும், இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் உள்ளது. படத்தின் இயக்குநர் சன்தோஷ் P. ஜெயக்குமார் பேசுகையில், "நான் இயக்கும் இரண்டாவது படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. அடல்ட் ஹாரர் காமெடி படம். இவர் ஏன் இது போன்ற படங்களை எடுக்கிறார்? கருத்துச் சொல்லும் படங்களை எடுக்காமல் ஏன் இப்படியான படங்களை எடுத்துத் திரைத்துறையை சீரழிக்கிறீர்கள் என உங்களுக்குள் ஏராளமான கேள்விகள் இருக்கும். ஆனால் இது ஒரு ஜானர். உலக சினிமாவில் எல்லா இடத்திலும் இருக்கிறது. தமிழில் இல்லை. இந்தப் படத்தை ஒரு பொழுதுபோக்கு படமாகப் பார்த்தால் பொழுது போக்கு படமாக மட்டுமே தெரியும். அப்படித்தான் இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும் என்...
பக்கா விமர்சனம்

பக்கா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
விக்ரம் பிரபு முதல் முறையாக இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். அரசன்குடியைச் சேர்ந்த ஜமீன்தாரின் மகளான நதியாவிற்கு, திருவிழாவில் பொம்மை கடை வைக்கும் பாண்டி மீது காதல் வருகிறது. தனது அந்தஸ்தினை நினைத்துத் தயங்கும் பாண்டியை ஊர் ஊராய்த் தேடிச் சமாதானம் செய்து சென்னைக்கு அழைத்து வந்துவிடுகிறார் நதியா. தாம்பரம் ரயில் நிலையத்தில் நதியாவை உட்கார வைத்து விட்டுச் செல்லும் பாண்டி திடீரெனக் காணாமல் போவதால், தற்கொலை புரிந்து கொள்ள தண்டவாளத்தில் படுத்துக் கொள்கிறார் நதியா. அச்சமயம், குடித்து விட்டு தண்டவாளத்தில் வீழ்ந்து கிடக்கும் தோனி குமார் நதியாவைக் காப்பாற்றுகிறார். பாண்டி போலவே இருக்கும் தோனி குமாரிடம் தன் காதல் கதையைச் சொல்கிறார் நதியா. இது படத்தின் முதல் பாதி. நதியாவிடம், ரஜினி ராதாவுடனான தன் காதல் கதையைச் சொல்கிறார் தோனி குமார். இது ப்ரீ க்ளைமேக்ஸ் வரைக்குமான கதை. பாண்டி என்னானார்? நதியா ...
தியா விமர்சனம்

தியா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'கரு' உருமாறி 'லைக்காவின் கரு'வாகி, தியாவாக ஜனித்துள்ளாள். பக்தொன்பது வயதான துளசி கர்ப்பமடைந்து விடுகிறாள். துளசியின் வீட்டினரும், அவளது காதலனான கிருஷ்ணாவின் வீட்டினரும், சிறு சச்சரவிற்குப் பின், இவர்கள் காதலை ஏற்றுக் கொண்டு, துளிசியின் கருவைக் கலைக்கச் சொல்கின்றனர். 24 வயதில் இருவருக்கும் சொன்னபடி திருமணமும் செய்து வைக்கின்றனர். அதன் பின் அவர்கள் வீட்டில் தொடர் மரணங்கள் நிகழ்கிறது. எதனால் ஏன் என்பது தான் படத்தின் கதை. 'ப்ரேமம்' படப் புகழ் மலர் டீச்சரான சாய் பல்லவி தமிழில் அறிமுகமாகும் முதற்படமிது. கண்களால் புன்னகைக்கவோ, துள்ளலாய் நடனமாடவோ வாய்ப்பில்லாத ஒரு பாத்திரத்தில் வருகிறார் சாய் பல்லவி. ஆனால், மென் சோகத்தோடு வளைய வரும் அவர் தான் படத்தின் பிரதான குவிமையம். அதனைக் கச்சிதமாக உள்வாங்கிப் படத்திற்கு உயிரினை அளித்துள்ளார் துளசியாக வரும் சாய் பல்லவி. கதாநாயகியின் பாத்திரம் பிரதானமாய் இர...