Shadow

சினிமா

தங்கையின் கனவு நனவானது – நடிகர் சூர்யா

தங்கையின் கனவு நனவானது – நடிகர் சூர்யா

சினிமா, திரைத் துளி
நடிகர் சிவகுமாரின் மகள் பிருந்தா, மிஸ்டர் சந்திரமெளலி படத்தில் பாடகராக அறிமுகமாகியுள்ளார். “என் தங்கை பிருந்தாவுக்கு குழந்தை பருவத்தில் இருந்தே பாடகி ஆவது கனவு. எங்கள் குடும்பத்தில் நான், கார்த்தி யாருமே சிபாரிசில் எதுவும் செய்ததில்லை. பிருந்தாவும் அவள் முயற்சியால் மட்டுமே இன்று பாடகி ஆகியிருக்கிறாள். என்னை இயக்குநர் வசந்த் அழைத்து ‘நேருக்கு நேர்’ படத்தில் நடிக்க வைத்தார். தம்பியை ஞானவேல்ராஜா தான், ‘நான் பார்த்துக்கிறேன்’ எனச் சொல்லி நாயகன் ஆக்கினார். அதே போல், பிருந்தாவிற்கும் தயாரிப்பாளர் தனஞ்செயன் அழைத்து இந்த வாய்ப்பைக் கொடுத்துள்ளார். அவர் எங்கப்பாக்கு மூத்த மகன் போல். அவருக்கு மிகவும் நன்றி” என்றார் நடிகர் சூர்யா. “அந்தக் குடும்பத்தில் இருந்து இலட்சுமி சிவகுமாரும், ரஞ்சனி கார்த்தி, இரண்டு பேரும் தான் திரைத்துறைக்கு இன்னும் வரவில்லை. மற்றவர்கள் அனைவரும் வந்துட்டாங்க” என்றார் மிஸ்டர்...
அல்லு அர்ஜுனின் – என் பெயர் சூர்யா

அல்லு அர்ஜுனின் – என் பெயர் சூர்யா

சினிமா, திரைச் செய்தி
ராமலட்சுமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் நாகபாபு தயாரித்துள்ள படம் 'என் பெயர் சூர்யா - என் வீடு இந்தியா'. அல்லு அர்ஜுன், அனு இம்மானுவேல், அர்ஜுன், சரத்குமார், நதியா, பொமன் இரானி நடித்திருக்கின்றனர். "அல்லு அர்ஜுன் கேரியரில் இது ஒரு சிறந்த படம். இந்தப் படத்தைப் பார்த்தவுடன் என் பெயர் ஸ்ரீதர், என் வீடு இந்தியா என்று தான் சொல்லத் தோன்றியது. பாகுபலி, பாகமதி உட்பட தெலுங்குப் படங்களைத் தமிழ்நாட்டில் முழுமனதோடு வரவேற்ற அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் நன்றி. இந்தப் படத்துக்கும் உங்கள் ஆதரவு கிடைக்கும் என நம்புகிறோம்" என்றார் தயாரிப்பாளர் ஸ்ரீதர் லகடபாடி. "பாகுபலிக்குப் பிறகு இந்திய மொழிகளில் ஒரே நாளில் வெளியாகும் இந்தப் படத்தில் நான் வேலை செய்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்தியாவுக்காக எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற கதாபாத்திரம் தான் நாயகன் அல்லு அர்ஜுன் கதாபாத்திரம். தளபதி ரஜினி சார், நடிகர் ...
ஐல – ஹாரர் த்ரில்லர் படம்

ஐல – ஹாரர் த்ரில்லர் படம்

சினிமா, திரைத் துளி
சினிமாவைப் பொறுத்தவரை என்றுமே வரவேற்பு குறையாதவை என்றால் அது ஹாரர் படங்களாகத்தான் இருக்கும். மினிமம் கியாரண்டி வசூலையும் வெற்றியையும் ஹாரர் படங்கள் பெற்றுத் தருவதால் அறிமுக இயக்குநர்கள் கூட ஹாரர் பக்கமே கவனத்தைத் திருப்புகின்றனர். அந்த வகையில் அறிமுக இயக்குநர் ஆர்.வி.சுரேஷ் இயக்கவுள்ள ஹாரர் த்ரில்லர் படம் ‘ஐல’ என்கிற ஐஸ்வர்ய லட்சுமி. ரியங்கா ஃபிலிம் புரொடக்சன்ஸ் சார்பில் தம்பி உன்னி கிருஷ்ணன் மற்றும் ஜே.ரவீந்திரன் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். இப்படத்தின் தயாரிப்பாளர்கள் திரு. தம்பி உன்னி கிருஷ்ணன் பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்றவர், ஜே.ரவீந்திரன் சுவிஸ் நாட்டு குடியுரிமை பெற்றவர். தற்சமயம் இருவரும் ஃப்ரான்ஸ், சுவிஸ் & இந்தியாவில் Resort and Restaurant நடத்தி வருகிறார்கள். திரு. தம்பி உன்னிகிருஷ்ணன் ஏற்கனவே மம்மூட்டி, ரேவதி, சிவகுமார் மற்றும் முன்னனி நடிகர்களை வைத்து தமிழ், மலைய...
சேரனின் ராஜாவுக்கு செக்

சேரனின் ராஜாவுக்கு செக்

சினிமா, திரைத் துளி
தமிழ்த் திரையுலகைச் சூழ்ந்திருந்த கருமேகங்கள் முற்றிலும் விலகி விட, நல்ல கதையம்சத்தோடு மிக வேகமாக உருவாகி வந்த "ராஜாவுக்கு செக்" படம் மீண்டும் பணிகளைத் துவக்கியுள்ளது. சேரன், நந்தனா வர்மா, சராயு மோகன், ஸ்ருஷ்டி டாங்கே, இர்ஃபான் ஆகியோர் நடிக்கிறார்கள். மலையாளத் திரைத்துறையில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் தயாரிப்பாளர்களான சோமன் பல்லாட், தாமஸ் கொக்காட் இந்தப் படத்தை, 'பல்லாட் கொக்கட் ஃபிலிம் ஹவுஸ்' சார்பில் தயாரிக்கிறார்கள். படத்தைப் பற்றிப் பகிர்ந்து கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளதாகச் சொல்கிறார்கள். "மலையாளத் திரையுலகில் கதை ரீதியாகவும், தரம் ரீதியாகவும் நல்ல தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரைப் பெற்றிருக்கிறோம். உலகம் முழுக்க தமிழ் சினிமாவின் பரவலும், வர்த்தகத்துக்கு நிறைய வாய்ப்புகளும், மிகுதியான திறமையாளர்களும் இருப்பதால் தமிழ் சினிமாவில் படம் எடுக்க காலடி எடுத்து வைத்திருக்கிறோம். ஒரு நடி...
மெர்க்குரி விமர்சனம்

மெர்க்குரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘நிசப்தம் தான் வலுமிகு அலறல்’ என்ற கேப்ஷனோடு படம் சத்தமின்றித் தொடங்குகிறது. வசனங்களற்று தொழில்நுட்பம் கோலேச்சும் அற்புதமான முயற்சி. அப்படியும் முதற்பாதியில் தமிழ் சப்-டைட்டில் வருகிறது. கதையைப் படித்துப் புரிந்து கொள்ளுமாறு செய்கின்றனர். ஒருவழியாக ரசிகர்கள் மீது நம்பிக்கை வைத்து, இடைவேளைக்குப் பிறகு சப்-டைட்டிலுக்கும் குட்பை சொல்லிப் பெருமைப்படுத்தியுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். கதைக்களனும், கதையின் மாந்தர்களும், திரையின் நிறமும் மிகவும் புதிது. ஃப்ரேமில் பரவி நிற்கும் பச்சை நிற பின்புலம் திகிலையும் அமானுஷ்யத்தன்மையையும் தருகிறது. பச்சை நிற பின்புலம் பசுமையின் செழுமையாக இல்லாமல், மெர்க்குரியின் நச்சுத்தன்மையைக் குறிக்கிறது. அதனால் ஒரு நகரமே எப்படிப் பாதிக்கப்படுகிறது என நடுக்கம் தருமளவு சித்தரித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். காது கேளாதவர்களை நடித்திருக்கும் சனந்த், இந்துஜா...
ட்ரூத் ஆர் டேர் விமர்சனம்

ட்ரூத் ஆர் டேர் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஒரு விளையாட்டு - நட்பை உடைக்கிறது; காதலை முறிக்கிறது; நம்பிக்கையைக் காலி செய்கிறது; உயிரையும் எடுத்துவிடுகிறது. தெரியாத்தனமாகச் சிக்கிக் கொண்டால் அவ்விளையாட்டிலிருந்து மீள வழியே இல்லை. மெக்சிகோவிற்குச் சுற்றுலா சென்ற ஒலிவியாவும் அவரது நண்பர்களும், அங்குச் சந்திக்கும் நபரின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு விளையாட்டைத் தொடங்குகிறார்கள். அதன் பெயர் “ட்ரூத் ஆர் டேர்”. விளையாடுபவரிடம் சுற்றியுள்ளவர்கள், ட்ரூத் ஆர் டேர் எனக் கேட்பார்கள். ‘ட்ரூத்’தைத் தேர்ந்தெடுத்தால், நண்பர்களிடம் உண்மையைச் சொல்லவேண்டும். ‘டேர்’ எனத் தேர்ந்தெடுத்தால், நண்பர்கள் சொல்லும் டாஸ்க்கைச் செய்யவேண்டும். உதாரணம், ‘மேலாடையைக் கழட்டவும்’ எனச் சொல்லப்பட்டால், மேலாடைகளைக் கழட்டவேண்டும். இப்படிக் குதூகலமாய்த் தொடங்கும் ஒரு விளையாட்டு, அவர்கள் மெக்சிகோவை விட்டு வந்த பின்பும் அவர்களைத் தொடங்குகிறது. அனைத்தையும் கட்டுபடுத்தும் ஏதோ ஓர்...
தரமணி நாயகனுக்கு வில்லனாகும் மிஷ்கின்

தரமணி நாயகனுக்கு வில்லனாகும் மிஷ்கின்

சினிமா, திரைத் துளி
தரமணி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பலரின் பாராட்டுக்களையும் பெற்ற நடிகர் வசந்த் ரவி தனது அடுத்த படத்திற்கு ஆயுத்தமாகிவிட்டார். RA Studios சார்பாக C.R.மனோஜ் குமாரின் பிரம்மாண்டமான தயாரிப்பில் இயக்குநர் தியாகராஜா குமார ராஜாவிடம் பணியாற்றிய அருண் மாதேஷ்வரன் இயக்கும் புதிய படத்தில் வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்கின்றார். இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் அருண் மாதேஷ்வரன், இறுதிச்சுற்று படத்தின் வசனங்களை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் படியான திரைக்கதை அமைத்து ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இப்படம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படவுள்ளது. இப்படத்தின் ஒவ்வொரு சண்டைக்காட்சிகளுக்கும் ஒவ்வொரு வகையான சண்டை அமைப்பை உருவாக்கி, ஆக்ரோஷமான காட்சிகளாக வெளிவர தினேஷ் சுப்பராயன் புதிய யுக்தியை வடிவமைத்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இயக்குநர் மிஷ்க...
பொய் சொன்னால் மரணம்

பொய் சொன்னால் மரணம்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
விளையாட்டாய்த் தொடங்கும் ஒரு விளையாட்டு மரணத்தைக் கொணரும் வினையாகிவிட்டால்? ‘ட்ரூத் ஆர் டேர் (Truthu or Dare)’ படத்தின் கதைக்கரு வினையாகும் அத்தகைய விளையாட்டைக் குறித்துத்தான். இந்த உயிர் போகும் விளையாட்டில், பத்தொன்பது வயதே நிரம்பிய மூன்று மாணவர்கள் சிக்கிக் கொள்கின்றனர். பொதுநலனை மையமாகக் கொண்டு யூ-ட்யூப்பில் வீடியோ ப்ளாக்கிங் செய்யும் ஒலிவியாவும், தன் தந்தையின் தற்கொலையில் இருந்து மீள முடியாமல் அவள் தோழி மார்கியும், தங்களைத் துரத்தும் மரணத்தில் இருந்து எப்படித் தப்புகின்றனர் என்பதுதான் படத்தின் கதை. சூப்பர் நேட்சுரல் த்ரில்லர் வகைமையைச் சேர்ந்தது இப்படம். ஏப்ரல் 20ஆம் தேதி, ஹன்ஸா பிக்சர்ஸ் ‘ட்ரூத் ஆர் டேர்’ படத்தை வெளியிடுகிறது....
ஈரான் இயக்குநரின் ஹிந்திப்படம்

ஈரான் இயக்குநரின் ஹிந்திப்படம்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
எந்தப் புதுமுக நடிகருக்கும் கிடைக்காத பெருமை, ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகும் நடிகர் இஷான் கட்டாருக்குக் கிடைத்திருக்கிறது. அது உலகப்புகழ் பெற்ற இயக்குநர் மஜீத் மஜிதியின் இயக்கத்தில் ஹிந்தி படத்தில் அறிமுகமாவது. அதனைப் பெற்றிருக்கும் இஷான் தன்னுடைய கனவு நனவாகியிருக்கும் சந்தோஷத்தில் இருக்கிறார். இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் என்ற புதுமுக நடிகையுடன் இஷான் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் அமீர் என்ற கேரக்டரில் தாராவிப் பகுதியில் சுற்றித் திரியும் இயல்பான பையனாக நடித்திருக்கிறார் இஷான் கட்டார். பிரபலமானவராக இருந்தாலும், இந்தப் படத்தில் தாராவிப் பகுதியைச் சேர்ந்த பையனாக நடிக்க வேண்டியதிருந்ததால், இஷான் கட்டார், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுடன் இணைந்து, பழகி, அவர்களுடன் நட்பு பாராட்டி, உண்மையாகவே அப்பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபனாக அற்புதமாக நடித்திருக்கிறார். இப்படத்தி...
வெல்வெட் நகரம் – பழங்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி

வெல்வெட் நகரம் – பழங்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி

சினிமா, திரைத் துளி
மேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் கார்த்திக் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வெல்வெட் நகரம்.’ இதில் முதல் முறையாக கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் வரலட்சுமி. இவருடன் மாளவிகா சுந்தர், ரமேஷ் திலக், அர்ஜெய், ‘துருவங்கள் பதினாறு ’ புகழ் பிரகாஷ் ராகவன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பகத்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, ‘அருவி’ படத்தின் படத்தொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா எடிட்டிங் செய்கிறார். ‘கோலி சோடா 2’ புகழ் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். இப்படத்திற்கு சண்டைப்பயிற்சி 'துப்பறிவாளன்' தினேஷ். இதற்குத் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் மனோஜ்குமார் நடராஜன். படத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது, “கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஃபீமேல் சென்ட்ரிக் (female centric) திரைப்படம் இது. சில ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானல் மற...
ஹெச்.ராஜாவின் கிண்டலுக்குப் பதிலளித்த செளந்தர்ராஜா

ஹெச்.ராஜாவின் கிண்டலுக்குப் பதிலளித்த செளந்தர்ராஜா

சினிமா, திரைத் துளி
சமீபத்தில் நடிகர் சங்கம் நடத்திய காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மற்றும் ஸ்டெர்லைட் ஆலை மூடக்கோரி நடைபெற்ற அறப் போராட்டத்தில் பேசிய நடிகர் சத்தியராஜ், ‘இது இராணுவமே வந்தாலும் எதிர்கொள்ள தயங்காத கூட்டம்’ என்றார். அதனைத் தொடர்ந்து தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை தொடங்கப்பட்ட அன்றும், ‘தமிழர்கள் நாங்கள் இராணுவமே வந்தாலும் அதை எதிர்கொள்ள தயங்கமாட்டோம்’ என்று கோஷமிட்டனர். இதில் பாரதிராஜா, அமீர், வ. கௌதமன், வெற்றிமாறன், R.K. செல்வமணி, தங்கர் பச்சான் ஆகியரோடு நடிகர் ஆரியும் சௌந்தர்ராஜாவும் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைக் கொச்சைப் படுத்தும் விதமாக சௌந்தர்ராஜா காவல்துறையினர் மத்தியில் கைகூப்பிக் கொண்டிருந்த போட்டோவை வைத்து ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இதுதான் ராணுவத்திற்கே அஞ்சாத கூட்டம்’ என கிண்டல் செய்து உள்ளார். அதற்கு சௌந்தர்ராஜா, “என்ன சொல்ல, இது மெரினா போர...
பீட்டர் ரேபிட் விமர்சனம்

பீட்டர் ரேபிட் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
பீட்டர் ரேபிட் எனும் முயல் பாத்திரத்தினை, 1902 ஆம் ஆண்டு, ‘தி டேல் ஆஃப் பீட்டர் ரேபிட்’ எனும் புனைவில் அறிமுகப்படுத்தினார் எழுத்தாளர் ப்யாட்ரிக்ஸ் பாட்டர். ஆனால், 1893 ஆம் ஆண்டே, நோய்வாய்ப்பட்ட ஒரு சிறுவனைக் கலகலப்பூட்ட கடிதங்களில் எழுதப்பட்ட கதையின் நாயகனே பீட்டர் ரேபிட். துறுதுறுவெனப் பக்கத்துத் தோட்டத்தில் காய்கறிகளைத் திருடி உண்ணும் சாகசக்கார பீட்டர் ரேபிட்டைக் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துவிடும். மிக நேர்த்தியான லைவ் ஆக்ஷன் படமாக உருவாக்கியுள்ளனர் சோனி பிக்சர்ஸ் அனிமேஷன். அனிமேஷன் என்ற வார்த்தைப் பார்த்ததும் 2டி, 3டி போல் ஒரு சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டாம். உடை அணிவிக்கப்பட்ட உயிருள்ள முயல்களை அப்படியே பாத்திரங்களாகத் திரையில் உலாவ விட்டுள்ளார்கள். தன் பெற்றோரை இழந்து வாடும் பீட்டர் ரேபிட், ப்யா எனும் பெண்ணின் பாசத்தில் திளைக்கிறது. ப்யாவிற்கும், பக்கத்து வீட்டில் குடியேறும...
இசைக் கலைஞனின் உயிர் மூச்சு – ஜஸ்டின் பிரபாகரன்

இசைக் கலைஞனின் உயிர் மூச்சு – ஜஸ்டின் பிரபாகரன்

சினிமா, திரைத் துளி
தனது இசையால் தமிழ் மனங்களைக் கொள்ளை கொண்ட இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் தெலுங்கில் அறிமுகமாகிறார். "நான் அறிமுகமாகும் தெலுங்கு படத்தின் கதாநாயகன் ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவேர்கொண்டா. இளம் ரசிகர்கள் இடையே அவருக்கு இருக்கும் புகழ் சொல்லில் அடங்காதது. அவர் படத்தின் மூலம் அறிமுகமாவது என் பாக்கியம். இப்போது அந்த திரைப்படத்துக்கான இசைக்கோர்ப்பு நடந்து வருகிறது. விரைவில் தலைப்பு பற்றிய முறையான தகவல் வரும். இந்தப் படத்தின் இயக்குநர் எனக்கு நீண்ட நாள் நண்பர். நாங்கள் இருவரும் ஏற்கனவே ‘மரோ பிரபஞ்சம்’ என்ற குறும்படத்தில் பணியாற்றினோம். தமிழில் சசிகுமார் நடிக்கும் "நாடோடிகள் 2" , அதர்வா நடிக்கும் ஒத்தைக்கு ஒத்த, எஸ்.ஜே,சூர்யாவின் பெயரிடப்படாத ஒரு புதிய படம் என்று படங்கள் இருக்கிறது. மலையாளத்தில் ஏற்கனவே அறிமுகம் ஆகிவிட்டேன். தற்போது தெலுங்கிலும் அறிமுகமாவது எனக்கு மிகுந்த பெருமை. இசைக்கு எப்...