Shadow

சினிமா

நெஞ்சை நிமர்த்தாத சமுத்திரக்கனி – கோலி சோடா 2

நெஞ்சை நிமர்த்தாத சமுத்திரக்கனி – கோலி சோடா 2

சினிமா, திரைச் செய்தி
"விஜய் மில்டன் என்னை நடிக்கக் கூப்பிட்டார், யாரெல்லாம் நடிக்கிறாங்கன்னு கேட்டேன். சமுத்திரக்கனி மட்டும் தான் நடிக்கிறார், மத்தவங்க எல்லாரும் புதுமுகம் என்றார். யாருக்கும் யோசிக்காமல் உதவிகளைச் செய்பவர் சமுத்திரக்கனி. அவர் எனக்கும் பல உதவிகளைச் செய்திருக்கிறார். அவருடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி. இந்தப் படத்தில் பல இளைஞர்களுடன் வேலை செய்தது நல்ல அனுபவம்" என்றார் கௌதம் வாசுதேவ் மேனன். கோலி சோடா மாதிரி இது இல்லைனு மக்கள் சொல்லிட கூடாதுனு நினைச்சி தான் இந்த படத்தை எடுத்திருக்கோம். கோலி சோடாவுக்கு உதவிய பாண்டிராஜ், லிங்குசாமிக்கு நன்றி. கோலி சோடா படத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் குறைந்தபட்சம் அடையாளம் கிடைக்கணும் என்பதைப் பற்றிப் பேசியிருக்கிறோம். இதில் அவர்களுக்கு கிடைத்த அடையாளம் அடுத்த நிலைக்கு போக விடாமல் தடுப்பதைப் பற்றி பேசியிருக்கிறோம். நான் கதை சொல்லிய, 4 மணி நேரத்தில் அச்சு, 'பொண்டாட்...
காலா நிகழ்த்தும் வண்ணக்கோலங்கள்

காலா நிகழ்த்தும் வண்ணக்கோலங்கள்

சினிமா
என்னுடைய அண்மைக்கால கொள்கையில் ஒன்றாக, இயன்றளவு கேளிக்கைக்குக் குறைவாகப் பணம் செலவழிப்பது என்று எண்ணத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன். விலையில்லாமலே எவ்வளவோ சிறந்த புத்தகங்களும், நல்ல எழுத்துகளும், தரமான ஆவணப்படங்களும் காணக் கிடைக்கின்ற இக்காலத்தில், ஏனோ நாம் peer pressure-இல் அதிக பணம் செலவழித்து, புதிய படங்களைப் பார்க்க ஓடுகிறோம். அதுவும் ரஜினிகாந்த் போன்ற செல்வாக்கான, பெரும் ஆளுமைகள் நடித்த திரைப்படம் என்றால் நம் ஆவல் கட்டுக்கடங்காமல் பெருகி விடுகிறது. தற்போது வெளியாகியிருக்கும் 'காலா' திரைப்படத்தைப் பற்றி நிறைய எதிர்பார்ப்புகள் பெருகி வர, திரைப்படத்தின் இயக்குநர் பா. ரஞ்சித்தின் பேட்டிகளும், முந்தைய படங்களும் முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. 'நான் திரைப்படம் எடுக்க வந்திருப்பதே, நான் நம்பும் கருத்தியலை, பொதுமக்களுக்கான வெளியில் பேசுவதற்காகத்தான்' என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார். இதுத...
காலா: ரெளடியா? தலைவரா? – ரஞ்சித்தின் அரசியல்

காலா: ரெளடியா? தலைவரா? – ரஞ்சித்தின் அரசியல்

சினிமா
சுவர் அரசியலைக் கலாபூர்வமாக வழங்கிய ரஞ்சித் எங்கே போனார் என்று ஆச்சரியமாக இருக்கிறது. சமூக அறிவுடன் கூடிய கல்வியின் அவசியத்தைச் சொன்ன ரஞ்சித்தால் 'காலா'வில் எதையும் சொல்ல முடியவில்லை. சமூக ஆவேசத்தில் தன்னைத் தொலைத்துக் கொண்ட பரிதாபமான படைப்பாளியாய்த் தெரிகிறார். 'மனு பில்டர்ஸ்' எனப் பெயர் வைப்பதெல்லாம் சரி. ஆனால், அதெல்லாம் name dropping போல் உபயோகிப்படுகிறதே தவிர, காவி அரசியலைக் கழுவி ஊற்றும் குறியீடெல்லாம் இல்லை. இல்லவே இல்லை. படம் நெடுகேவும் காலாவை ஒரு காமெடியனாகவே அணுகுகிறார் ரஞ்சித். மகா பரிதாபம். ஓர் உதாரணத்துடன் பார்க்கலாம். காலா கூட்டத்தில் இருந்து ஆவேசமாக எழுந்து நடக்கும் பொழுது, ஒருவர் ஓடி வந்து அவருக்குக் குடை பிடிக்கிறார். ஆண்டானுக்குச் சாமரம் வீச வேண்டியது அடிமையின் பாக்கியம் என்ற மேட்டிமை எண்ணம் காலாவிற்கு உள்ளதாக ரஞ்சித் சித்தரிக்கிறாரா? காலா எனும் ரெளடியின் மீது மக்களுக்க...
காலா விமர்சனம்

காலா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மும்பையின் மத்தியில் இருக்கும் தாராவி எனும் சேரிப்பகுதி கரிகாலனின் கோட்டையாக விளங்குகிறது. அதைத் தரைமட்டமாகிக் கட்டடங்களாக்குவது தான் அரசியல்வாதி ஹரி தாதாவின் 'ப்யூர் மும்பை' திட்டத்தின் நோக்கம். சாமானிய மக்களின் பாதுகாவலனாக விளங்கும் காலாவிற்கும், மும்பையின் மொத்த அதிகாரத்தையும் கைக்குள் கொண்டுள்ள ஹரி தாதாவிற்கும் நடக்கும் போர் தான் 'காலா'. ஆம், படத்தின் இடைவேளையின் பொழுது போர் தொடங்குகிறது. தாராவியின் சிஸ்டம் ஸ்தம்பிக்கிறது. காலா, மக்களை ஒருங்கிணைத்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்துகின்றார். அதில் சமூக விரோதிகள் என்ட்டரியாகி விடுகின்றனர். மக்கள் போராட்டத்தைப் போலீஸார் அடாவடியாகக் கலைக்கின்றனர். கருப்பு மலர்கிறது. சுபம். பில்டப் அளவிற்கு, காலா பாத்திரத்தை வலுவானதாய்ச் சித்தரிக்காததோடு, பில்டப்பே இன்றி ஹரி தாதா பாத்திரத்தை மிக அழகாகச் செதுக்கியுள்ளார் ரஞ்சித். ஹரி தாதாவாய் நானா படேகர் பிர...
X வீடியோஸ் விமர்சனம்

X வீடியோஸ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
“இப்படம் முழுக்க முழுக்க X வீடியோஸ் என்கிற இணையதளத்திற்கு எதிரான படம். இந்த இணையதளம் மூலம் மக்களின் வாழ்க்கையில் எப்படி அவர்கள் விளையாடுகிறார்கள் என்பதைத்தான் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறோம்” என்கிறார் படத்தின் இயக்குநர் சஜோ சுந்தர். அந்தரங்கமான நேரத்தை மொபைலிலோ, கேமிராவிலோ விளையாட்டாய் எடுக்கப்படும் வீடியோக்கள் எப்படியெல்லாம் ஆபாச இணையதளங்கள் சேகரித்து ஒளிபரப்புகின்றனர் என்பதை உறித்துக் காட்டியுள்ளார் இயக்குநர். அப்பட்டமாகவே உறிப்பதால் A சான்றிதழ் பெற்றுள்ளது படம். அரை நிர்வாணக் காட்சிகளின் துல்லியம் சற்றே திடுக்கிட வைக்கின்றன. இயக்குநர் சஜோ சுந்தரின் தைரியம் ஆச்சரியமூட்டுகிறது. கதைக்கருவை மட்டுமின்றி, காட்சிப்படுத்திய விதத்திலும் பெரிதும் சமரசமின்றி எடுத்துள்ளார். ஆனால், அத்தகைய காட்சிகள் திரைக்கதையின் நோக்கில் இருந்து விலகாமல் கட்டுக்குளேயே அவிழ்வது ஆறுதல். முற்றிலும் புதிய முகங்கள...
செம விமர்சனம்

செம விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நாயகன் பெயர் குழந்தை. குழந்தையாக ஜீ.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ளார். குழந்தைக்கு 3 மாசத்துக்குள் கல்யாணம் செய்யவேண்டும். இல்லையென்றால் 6 வருடம் கல்யாணம் தள்ளிப் போகும் என்பதால், குழந்தையின் அம்மாவான ஆரவல்லி பெண் பார்க்கும் படலத்தில் தீவிரமாக ஈடுபடுகிறார். சில அவமானங்களுக்குப் பிறகு, மகிழினியை நிச்சயம் செய்கின்றனர். திடீரென, மகிழினியின் தந்தை அட்டாக் பாலா நிச்சயத்தை நிறுத்தி விடுகிறார். அவமானம் தாங்காமல் குழந்தையின் அம்மா ஆரவல்லி கிணற்றில் குதித்து விடுகிறார். அதற்குக் காரணமான அட்டாக் பாலா மீது ஆத்திரம் கொள்ளும் குழந்தை, அவரை எப்படிப் பழி வாங்குகிறார் என்பதே படத்தின் கதை. மிகக் குழந்தைத்தனமான பழி வாங்குதல்தான் படத்தின் பலவீனம். ஒரு சீரியஸ்னஸே இல்லாத நேர்க்கோட்டில் பயணிக்கும் கதை. நகைச்சுவையும் முழுவதுமாக இழையோடாத திரைக்கதை. ஆனால், போரடிக்காமல் பார்த்துக் கொள்கின்றனர் யோகிபாபுவும், கோவை சர...
காளி விமர்சனம்

காளி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு கனவு, அமெரிக்க மருத்துவர் பரத்திற்கு தினம் வருகிறது. தனது கனவிற்கும், தனது சிறு வயது இந்திய வாழ்க்கைக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குமென அதைக் கண்டுபிடிக்க, இந்தியா வருகிறார் பரத். அவரது கனவிற்கான புதிருக்கும், கடந்த கால வாழ்க்கை பற்றிய அவரது தேடலுக்கும் விடை கிடைத்ததா என்பதே படத்தின் முடிவு. படத்தின் தொடக்கமே எரிச்சலூட்டுவதாய் அமைகிறது. சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்குத் சிறுநீரகம் தரும் டோனர் (Donor), ரத்தச் சம்பந்தமுள்ள உறவாக இருக்கவேண்டுமெனச் சொல்கிறார்கள். என்ன கொடுமை இது? படத்தின் க்ளைமேக்ஸிலும் இது போன்றதொரு லாஜிக்கை அழுத்தமாக வலியுறுத்துவது போல் ஒரு காட்சி வருகிறது. நாயகன் எடுத்து வளர்க்கப்படும் வளர்ப்பு மகன் என அவனது பெற்றோர்கள் நாயகனிடம் சொல்லவும், தாய் சென்ட்டிமென்ட்டிற்காகவும் திணிக்கப்பட்ட அந்தப் பிற்போக்குத்தனமான லாஜிக் மிகக் கொடூரம். முழுக்க முழுக்க அமெரிக்காவில் வளர்ந்...
செயல் விமர்சனம்

செயல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மார்க்கெட் தண்டபாணி எனும் ரெளடியை, யாரெனத் தெரியாமல் மார்க்கெட்டில் வைத்துச் செமயாக அடித்து விடுகிறான் கார்த்திக். அந்த வீடியோ வைரலாகி தண்டபாணியின் மானம் ஆன்லைன் ஏறிவிடுகிறது. இழந்த தன் கெளரவத்தை மீட்க கார்த்திக்கை மார்க்கெட்டில் வைத்துக் கொல்லத் திட்டமிடுகிறான் தண்டபாணி. அவனது திட்டம் நிறைவேறியதா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. கார்த்திக்காக ராஜன் தேஜேஸ்வர் எனும் அறிமுக நாயகன் நடித்துள்ளார். நடிப்பும் நடனமும் கை கூடியிருந்தாலும், அவரது தமிழ் உச்சரிப்பு ஓர் அந்நியத்தன்மையைத் தருகிறது. அதுவும் கதைப்படி அவர் வடச்சென்னைவாசி எனும் போது, அவரது பேச்சு குழந்தைத்தனமாக ஒலிக்கிறது. அவரது அம்மா லக்‌ஷ்மியாக வரும் ரேணுகோவோ தனது வழக்கமான பாணியில் பேசியே தன் இருப்பை அழுத்தமாகப் பதிகிறார். இது முழுநீள ஆக்‌ஷன் படமன்று. ஒரு கட்டத்திற்கு மேல், மார்க்கெட் தண்டபாணி முனீஷ்காந்த், சூப்பர் குட் சுப்பிரமணியோடு ...
ஒரு குப்பைக் கதை – மைனா போலொரு படம்

ஒரு குப்பைக் கதை – மைனா போலொரு படம்

சினிமா, திரைச் செய்தி
‘ஆடுகளம்’ படத்திற்குத் தேசிய விருதை வென்ற டான்ஸ் மாஸ்டர் தினேஷ், “ஒரு குப்பைக் கதை” எனும் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வழக்கு எண் மனிஷா நடித்துள்ளார். பாகன் படத்தின் இயக்குநரான அஸ்லம், தன்னிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்த காளி ரங்கசாமியை இயக்குநராக அறிமுகம் செய்து, இப்படத்தைத் தயாரித்துள்ளார். ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனத்தின் மூலம், மே 25 ஆம் தேதி இப்படத்தை வெளியிடுகிறார் உதயநிதி ஸ்டாலின். மே 16 அன்று, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த், நாகேந்திர பிரசாத், இயக்குநர்கள் அமீர், பாண்டிராஜ், எழில், சீனு ராமசாமி, பொன்ராம், சுசீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “விஜய் சார் நடித்த குருவி படம் மூலமாகத் தயாரிப்பில் இறங்கி இதோ பத்து வருட...
இரும்புத் திரை விமர்சனம்

இரும்புத் திரை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மிலிட்டரி ஆஃபீஸரான விஷாலுக்கு வங்கியில் பெர்ஸனல் லோன் தர மறுக்க, ஒரு ஏஜென்ட் போலி ஆவணங்கள் மூலம் பிசினஸ் லோன் வாங்கித் தருகிறான். தங்கையின் கல்யாணத்திற்காக வாங்கின அப்பணம், நூதன முறையில் திருடப்படுகிறது. போலி ஆவணங்கள் காட்டி வாங்கப்பட்டதால் போலிஸிலும் புகார் அளிக்க முடியாத பட்சத்தில், சோல்ஜரான விஷால் எப்படித் தான் இழந்த பணத்தை மீட்கிறார் என்பதே படத்தின் கதை. டிஜிட்டல் இந்தியா என ஆசை காட்டுகிறது மோடி அரசாங்கம். அது நிராசையில் தான் முடியுமென மரண பயத்தைக் காட்டியுள்ளார் அறிமுக இயக்குநர் மித்ரன். மிலிட்டரி ஆஃபீசர் பாத்திரத்திற்கு அழகாய்ப் பொருந்துகிறார் விஷால். ஆனாலும், மறைந்திருந்து செயல்படும் ஒரு மிகப் பெரிய நெட்வொர்க்கைப் பின் தொடர, சைக்காட்ரிஸ்டான சமந்தாவை அனுப்புவது எல்லாம் ரொம்பவே தமாஷாக உள்ளது. சாமானிய மக்களின் ஆசையைத் தூண்டி, போலி ஆவணங்களை வங்கிக்குக் கொடுக்க வைத்தே அப்பணத்தை அபகரிக்...
இரவுக்கு ஆயிரம் கண்கள் விமர்சனம்

இரவுக்கு ஆயிரம் கண்கள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு கொலை, நான்கு பேர் மீது சந்தேகம் என்ற அகதா கிறிஸ்டி பாணி மர்டர் மிஸ்ட்டரி படத்தை நான் லீனியர் திரைக்கதையில் விறுவிறுப்பாக சொல்ல முயற்சி செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் மாறன். நாயகனை அதிமனிதனாகக் காட்டுவது தமிழ் சினிமாவில் தொன்று தொட்டு வரும் பாரம்பரியப் பண்பாடுகளில் ஒன்று. ஆனால் அதற்கான நியாயத்தை 99% படங்கள் தந்ததேயில்லை. இதிலும் பரத்தாக வரும் அருள்நிதி சர்வ சாதாரணமாக அனைவருடனும் சண்டையிடுகிறார். போலீஸை அடித்துத் தப்பிக்கின்றார், கொலையாளியைப் பிடிக்கத் திட்டமிடுகின்றார், வியூகங்கள் வகுக்கின்றார். இதற்கான குறைந்தபட்ச நியாயம் கூட அந்தக் கதாபாத்திரத்திற்கு இயக்குநர் வழங்கவில்லை. ‘எவ்வளவோ பார்க்குறீங்க, இதையும் ஏத்துக்கோங்க’ என வைத்து விட்டார் போல. வசதியானவர்களின் பலவீனங்களை உபயோகித்து பணம் பறிக்கும் கும்பலால் பாதிக்கப்பட்ட சிலர் அவர்களைப் பழி வாங்க முயற்சி செய்கின்றனர். இந்தச் சிக்கலில...
நடிகையர் திலகம் விமர்சனம்

நடிகையர் திலகம் விமர்சனம்

அயல் சினிமா, கட்டுரை, சினிமா, திரை விமர்சனம்
சினிமா, இன்றளவும், ஆண்கள் மட்டுமே கோலேச்சி வரும் துறையாக உள்ளது. டி.பி.ராஜலட்சுமி, பானுமதி, சாவித்திரி போன்ற மிகச் சிலரே விதிவிலக்குகளாகத் தங்களுக்கான முத்திரையை அழுத்தமாகத் திரையுலகில் பதித்துள்ளனர். துடுக்கான உடற்மொழியாலும், துள்ளலான பாவனைகளாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்ற கலைஞர் சாவித்திரி. அவரைப் பற்றிய 'பையோ-பிக்' படமாகத் தெலுங்கில் "மகாநதி" என படம் எடுத்துள்ளார் நாக் அஷ்வின். மிக அற்புதமான ஒரு காண் அனுபவத்தைப் படம் தருகிறது. தமிழ் டப்பிங்கும் உறுத்தாமல், தேவையான இடத்தில் தெலுங்கு வசனங்களையே அப்படியே பயன்படுத்தியுள்ளது சிறப்பு. 'தொடரி' படத்தைப் பார்த்து விட்டு கீர்த்தி சுரேஷை, இந்தப் படத்தில் சாவித்திரியாக நடிக்க வாய்ப்பு வழங்கியுள்ளார் நாக் அஷ்வின். படத்தின் உயிராய் மாறியுள்ளார் கீர்த்தி சுரேஷ். படத்தின் இரண்டாம் பாதியில், கீர்த்தி சுரேஷ் முற்றிலும் மறைந்து சாவித்திர...