Shadow

சினிமா

அசாசின்ஸ் கிரீட் விமர்சனம்

அசாசின்ஸ் கிரீட் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
அசாசின்ஸ் க்ரீட் – ஓர் அறிமுகம் க்ரீட் என்றால் நம்பிக்கை. அசாசின்ஸ்க்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. விருப்பம் போல் வாழுபவர்கள். சுதந்திர உணர்வோடு திரிபவர்கள். ஆனால், டெம்ப்ளர்ஸ்களோ அதீத ஒழுக்கக் கோட்பாடுகள் உடையவர்கள். மக்களின் சிந்தனையைக் கட்டுக்குள் கொண்டு வந்து, உலகையே ஒழுக்கமாக மாற்றத் துடிப்பவர்கள். அப்பேராசை சாத்தியமாக அவர்களுக்கு அசாசின்களிடமுள்ள ‘ஆப்பிள் ஆஃப் ஈடன்’ எனும் விதை தேவைப்படுகிறது. அதிலிருந்து தான் மனிதனின் முதல் ஒழுங்கீனச் செயல் பிறந்ததாகக் கருதுகிறார்கள். அவ்விதையை மட்டும் டெம்ப்ளர்ஸ்கள் அடைந்து விட்டால், அதைக் கட்டுக்குள் கொண்டு வந்து, ஒழுக்கமான உலகைக் கொண்டு வந்துவிடலாம் என நினைக்கின்றனர். ஆறு நூற்றாண்டுகளாக ‘ஆப்பிள் ஆஃப் ஈடன்’-ஐத் தேடி வருகிறார்கள் டெம்ப்ளர்ஸ். 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, அக்கொய்லர் (Aquilar de Nerha) என்பவர் அதை மறைத்து விடுகிறார். இந்த நூ...
சிங் விமர்சனம்

சிங் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
பிக்சார் அனிமேஷன் படங்களில், கதை சொல்லும் முறையில் ஒரு மேஜிக் இருக்கும். பொம்மையோ, காரோ, ரோபோவோ, எலியோ, மீனோ என இப்படி எதுவாக இருந்தாலும், அதை உயிருள்ள கதாபாத்திரங்களாக நம்மை உணரச் செய்து விடுவார்கள். இல்லூமினேஷன் என்டர்டெய்ன்மென்ட், தனதுமினியன்ஸ் எனும் கதாபாத்திர உருவாக்கத்தால், வயது வித்தியாசமின்றி அத்தனை ரசிகர்களையும் தன் பால்கவர்ந்தவர்கள். அவர்கள் நிறுவனத்தின் பிரம்மாண்ட ஹிட்டான மினியன்ஸ் படத்திலேயே கூட, பிக்சார் ஏற்படுத்தும் மேஜிக் இல்லாமல் இருந்தது. ஆனால், "சிங் (SING) படத்தில் மாயம் செய்துள்ளனர் இல்லூமினேஷன் என்டர்டெய்ன்மென்ட். பஸ்டர் மூன் எனும் கோலா கரடிக்கு, தன் தியேட்டரில் பிரம்மாண்டமான இசைப் போட்டி நடத்த ஆசை. கையிருப்போ தொள்ளாயத்து சில்லறை மட்டுமே இருக்கிறது. தனது அசிஸ்டென்ட்டான பச்சை ஓனானிடம் 1000 டாலர்கள் பரிசுத் தொகை என அறிவிக்கச் சொல்கிறார். ஆனால், மூதாட்டியான பச்சை ஓனானின...
துருவங்கள் பதினாறு விமர்சனம்

துருவங்கள் பதினாறு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'நைட் நாஸ்டால்ஜியா (Knight Nostalgia)' என்பது கார்த்திக் நரேனின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர். இப்பெயர், படத்தின் கதையோடு மிக நெருக்கமாகப் பொருந்துகிறது. விபத்து நடந்த இரவை நாஸ்டாலஜியா போல் தான் மனக்கண்ணில் கொண்டு வந்து அலசுகிறார் ரஹ்மான். ரஹ்மான் தான் இந்தப் படத்தில் வரும் knight எனக் கொள்ளலாம். கதை சொல்லும் பாணியும், தொழில்நுட்பத்தை நேர்த்தியாகக் கையாண்டுள்ள விதமும் மிகவும் ஃப்ரெஷாக உள்ளது. 21 வயது இயக்குநர் கார்த்திக் நரேன் பார்வையாளரை முழுவதும் தன் வயப்படுத்தி உள்ளார். பூங்காவின் அருகே ஒரு வாலிபர் கொல்லப்பட்டுக் கிடக்கிறார்; அப்பார்ட்மென்ட் ஒன்றில் வசிக்கும் இளம்பெண் மர்மமான முறையில் காணாமல் போகிறார். இவ்விரு வழக்கையும் கவனிக்கும் இன்ஸ்பெக்டர் ரஹ்மானின் ஒரு பகலிரவு விசாரணை தான் படத்தின் கதை. மிக மிகச் சாதாரணமான ஒரு கதை. கதையைக் கோர்வையாக்கி நேர்க்கோட்டில் பார்த்தால், எந்த முடிச்சுகளு...
கேரளத்து ஐஸ்வர்யா

கேரளத்து ஐஸ்வர்யா

சினிமா, திரைத் துளி
கேரளாவைப் பூர்விகமாகப் கொண்டிருந்தாலும், பொறியியல் பட்டதாரியான ஐஸ்வர்யா மேனன் பிறந்த வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில் தான். ஏற்கெனவே, கன்னடத்திலும் மலையாளத்திலும் நடித்து வருகிறார். "தமிழ்த் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய நீண்ட நாள் கனவு. அந்தக் கனவு தற்போது வீரா திரைப்படம் மூலம் நிஜமாகி இருக்கின்றது. இந்தப் படத்தில் எனக்கு மிக வலிமையான கதாபாத்திரம். தமிழ்த் திரையுலகில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்திருக்கும் ஆர்.எஸ். இன்ஃபோடைன்மென்ட் நிறுவனம் மூலம் நான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாவது, எனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது. இன்னும் இரண்டு திரைப்படங்களில் நடிப்பது பற்றிய பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது” என்றவர், “சூப்பர் ஸ்டாரின் படத் தலைப்பான வீராவின் மூலமாக தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைப்பது, எனக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது...
அசாசின்ஸ் க்ரீட் – ஓர் அறிமுகம்

அசாசின்ஸ் க்ரீட் – ஓர் அறிமுகம்

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
சில நூற்றாண்டுகளாகவே, இரண்டு ரகசிய குழுக்கள் இடையே துவந்த யுத்தம் நடந்து வருகிறது. இன்றளவும் அது தொடர்வதாக நம்பப்படுகிறது. அசாசின்ஸ் என்ற குழுவிற்கும், டெம்ப்ளர்ஸ் என்ற குழுவுக்கும் இடையே நிகழ்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மோதலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வீடியோ கேம் தான் ‘அசாசின்ஸ் க்ரீட்’.அசாசின் என்றால் மதம் அல்லது அரசியல் காரணங்களுக்காக முக்கியமான நபரைக் குறி வைத்துக் கொலை செய்யும் கொலைக்காரர் எனப் பொருள். ‘அசாசின்’ என்ற வார்த்தை உருவாவதற்கே ‘ஹஷாஷின்’ என்ற வடக்குப் பெர்ஷியாவைச் சேர்ந்த ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த நிஸாரி இஸ்மாயிலிகள் தான் காரணம். சிலுவைப் போர்களின் பொழுது, சுமார் 300 வருடங்களில் அவர்கள் எண்ணற்றவர்களைக் கொன்றுள்ளனர். ஓரிடத்தில் இருந்து சட்டெனப் பதுங்கி மறைவதில் வல்லவர்கள். பயம் என்றால் என்னவென்று அறியாத இவர்கள், சுதிந்திரமாகச் செயல்படக் கூடியவர்கள். டெம்ப்...
நண்பர்கள் – அன்புக்கு அடிமை

நண்பர்கள் – அன்புக்கு அடிமை

சினிமா, திரைச் செய்தி
லவ் ஃபெயிலியரான ஒருத்தனின் மூன்று பெஸ்ட் ஃப்ரெண்ட்கள் படும் அவஸ்தை தான் 'எனக்கு வாய்த்த அடிமைகள்' படத்தின் கதை. தில்லுக்கு துட்டு 'லொள்ளு சபா' ராம்பாலாவிடம் பணியாற்றிய மகேந்திரன் ராஜமணி இப்படத்தை இயக்குகிறார். 'ஆக, நண்பர்கள் தான் நாயகனின் அடிமைகளா?' என்ற கேள்விக்கு, "நண்பர்கள் அன்புக்கு அடிமை. நமக்காக எதுவும் செய்வார்கள் என்ற அர்த்தத்தில் தலைப்பை வைத்தோம். தலைவியிடம் (ஜெ.) சொல்லப்படும் இந்தப் பிரபலமான வசனத்தை எங்க கதைக்குத் தகுந்தாற்போல் உபயோகித்துக் கொண்டோம்" என்றார் மகேந்திரன் ராஜமணி. "இந்தக் கதாபாத்திரத்திற்கு என்னை விட்டா வேறு யாரும் பொருந்த மாட்டாங்க எனக் கதை கேட்டதும் ஜெய் சொன்னார். படம் பார்த்ததும் ஆடியன்ஸும் அதைச் சொல்வாங்க. நான் படத்துக்குப் போகணும்னா நினைச்சா ஜாலியான ஒரு படத்துக்குத்தான் போவேன். அந்த மாதிரி தான் என் படத்தையும் எடுத்திருக்கேன். கண்டிப்பா மக்களும் இந்தப் படத்தை ந...
சிங் – கோலாகலமான இசைப் போட்டி

சிங் – கோலாகலமான இசைப் போட்டி

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
மைக் என்கிற எலி, மீனாஎன்கிற யானை, ரோசிட்டா என்கிற பன்றி, ஜானி என்கிற கொரில்லா, ஆஷ் என்கிற முள்ளம்பன்றி ஆகிய ஐவரும் பங்கேற்க உள்ள இசைப் போட்டி அது. சிங் எனும் இந்த அனிமேஷன் இசைப்படத்திற்காக சுமார் 85 பாடல்கள் கம்போஸ் செய்யப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக “தி ஃபெயித் (The faith)” என்ற பாடல், கோல்டன் க்ளோப் விருதிற்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் அடிநாதத்தோடு சம்பந்தமுள்ள பாடல் அது. கையிருப்பிலுள்ள 1000 டாலர்களைக் கொண்டு 100,000 டாலர் பரிசுத் தொகை என தவறுதலாக வந்துவிடும் அறிக்கையைச் சமாளிக்க முயல்வார் தியேட்டர் ஓனரான கோலா கரடி பஸ்டர் மூன். மீனா யானைக்கு மேடை என்றால் பயம், கொரில்லா ஜானியின் தந்தைக்கு ஜானி பெரிய டானாக (Don) வேண்டுமென ஆசை. என அனைவரும் ஒருவித நம்பிக்கையில் மேடையேறுகின்றனர். சிங், எமோஷ்னல் படமும் கூட! டெஸ்பிக்கபிள் மீ, டெஸ்பிக்கபிள் மீ – 2, மினியன...
கத்தி சண்டை விமர்சனம்

கத்தி சண்டை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கொஞ்சமே கொஞ்சம் கூட யதார்த்தம் வந்து விடக் கூடாதென மிகவும் கவனமுடன் படத்தை எடுத்துள்ளனர். நாயகன் யாரென்பது சஸ்பென்ஸ். முக்கால் வாசி படத்திற்குப் பின் தான் ஓப்பன் செய்கிறார்கள். அந்த சஸ்பென்ஸ் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, படத்தில் வரும் கதாபாத்திரங்களுக்கும்தான். நாயகன் யாரென விசாரிக்காமல் தன்னுடன் தங்க வைத்துக் கொண்டு உதவி செய்கிறார் சூரி; தமன்னாவோ காதலிக்கவே செய்கிறார். 'எல்லா லவ்விலும் ஒரு பொய் இருக்கும்; உன் பொய்ல லவ்விருக்கு' என காரணமும் கண்டுபிடிக்கிறார். டெபுடி கமிஷ்னராக வருகிறார் ஜெகபதி பாபு. மிக சீரியசான முகத்தோடு படத்தில் காமெடி செய்கிறார். நாயகன் யார், என்ன செய்கிறான் என விசாரிக்கிறேன் என்று சொல்லி பெரிய ரவுடிகளை வைத்துக் கடத்தி அடிக்கிறார். 'பணம் தருகிறோம். ஓடிடு' என போலீஸ் மிரட்டுகிறது. அதற்கு மசியாத நாயகனை நல்லவனென அங்கீகரித்து, மாப்பிள்ளையாக ஏற்கிறார் ஜெகபதி பாபு. விஷால் யார், ...
“பலே” வெள்ளையத் தேவா விமர்சனம்

“பலே” வெள்ளையத் தேவா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தில், சிவாஜி தன் தளபதி ஜெமினியைப் பார்த்துச் சொல்லும் பிரபலமான வசனத்தைப் படத்தின் தலைப்பாக வைத்துள்ளனர். வெற்றியை நோக்கிப் போகும் பொழுது, கூட இருந்து உற்சாகம் தரச் சொல்லப்படுவது "பலே". இப்படத்தின் நாயகனது செயல், அப்படி பலே சொல்லிப் பாராட்டும்படி (!?) இருக்கும் என்பதை வலியுறுத்தும் காரணப் பெயராகத் தலைப்பை வைத்துள்ளனர். வயலூருக்கு ட்ரான்ஸ்ஃபராகி வருகிறார்கள் ஃபோஸ்ட் மாஸ்டர் ரோகினியும் அவர் மகன் சசிகுமாரும். அவருக்கு தான்யா மீது கண்டதும் காதல் மலர்வதோடு உள்ளூர் கேபிள்காரருடன் தகராறாகி விடுகிறது. காதலும் தகராறும் என்னானது என்பதே படத்தின் கதை. தணக்கனாக சங்கிலி முருகன் நடித்துள்ளார். கோவை சரளாவை நடிக்க விட்டு விட்டு, அசால்ட்டாக ஸ்கோர் செய்குறார். மிக வலுவான கேரக்டர் ரோல்களை இயக்குநர்கள் அவருக்குத் தரலாம். 'செல்ஃபி' காத்தாயியாக கோவை சரளா. படம் இவரை நம்பித்தான் எடுக்...