Shadow

சினிமா

என்னோடு விளையாடு – குதிரைப் பந்தயமும் சூதாட்டமும்

என்னோடு விளையாடு – குதிரைப் பந்தயமும் சூதாட்டமும்

சினிமா, திரைச் செய்தி
ரொமான்டிக் த்ரில்லர் வகைமையைச் சேர்ந்த 'என்னோடு விளையாடு' திரைப்படம், கெளதம் வாசுதேவ் மேனன் பாணியில் 'ஸ்டலிஷான லவ்' படமாக வந்துள்ளது எனச் சிலாகித்தார் படத்தின் எடிட்டர் கோபிகிருஷ்ணா. இவர், 'வழக்கு எண்:18/9', 'எனக்கு வாய்த்த அடிமைகள்' போன்ற படங்களுக்குப் படத்தொகுப்பாளராக இருந்துள்ளார். இரண்டு லவ் ட்ராக், ஒரு சேஸிங் (chasing) ட்ராக் கொண்ட இப்படம், 'தனி ஒருவன்' போல் சுவாரசியமாக உள்ளதென நம்பிக்கையோடு தெரிவித்தார். படத்தில், பரத் - கதிர் என படத்தில் இரண்டு கதாநாயகன்கள். பரத்திற்கு ஜோடியாக சாந்தினி தமிழரசனும், கதிருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டியும் நடித்துள்ளனர். காதல் பாடல்களை அறிமுக இசையமைப்பாளர் மோசஸும், சேஸிங் போன்ற மற்ற ஜானர் பாடல்களை 'பர்மா' படத்தின் இசையமைப்பாளர் சுதர்ஷன் M.குமாரும் மெட்டமைத்துள்ளனர். 'ஒரு சின்ன பிரேக் இருந்தால் நல்லாயிருக்கும்' என ஒன்பது மாதங்கள் இடைவெளி விட்ட பின், மிக ...
மீண்டும் வுல்வெரின்

மீண்டும் வுல்வெரின்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
அகாதெமி விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்ட ஹ்யூ ஜாக்மேன் மீண்டுமொரு முறையும், இறுதியாகவும் வுல்வெரின் வேடத்தில் தோன்றுகிறார். லோகன் என்ற இப்படத்தை, முந்தைய ‘தி வுல்வெரின்’ படத்தை இயக்கியிருந்த ஜேம்ஸ் மேங்கோல்ட் இயக்கியுள்ளார். 2000 ஆம் ஆண்டு வெளிவந்த ப்ரையன் சிங்கரின் எக்ஸ்-மேன் (X-Men) படத்தில் தான் முதல் முறையாக ஹ்யூ ஜாக்மேன், வுல்வெரின் வேடத்தில் தோன்றிக் கலக்கியிருந்தார். இப்பொழுது ஒன்பதாவது முறையாக, அதே வேடத்தில் இப்படத்தில் தோன்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை வெளிவந்த அந்தத் தொடர் படங்களில் எல்லாம், வுல்வெரினின் அதிசய சக்திகள் மட்டுமே பறைசாற்றப்பட்டன. மனித நேயத்திலும் வுல்வெரின் சற்றும் குறைந்தவர் அல்ல என்பதை இப்படம் நிலைநாட்டுகிறது. வுல்வெரினின் இக்குணமே, இதர படங்களில் இருந்து இப்படத்தை மாறுபட்டதாக்கியுள்ளது. இப்படத்தின் கதை நிகழும் ஆண்டு, 20...
கலக்கப் போகும் கவண்

கலக்கப் போகும் கவண்

சினிமா, திரைத் துளி
சவால், காதல், அவமானம், மீண்டெழுதல், கொண்டாட்டம் என மனிதனின் வாழ்வில் நிகழும் அத்தனையையும் தொடும் சுவாரசியமாகப் படமாக இருக்கும் "கவண்". இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி முதல் முறையாக நடிக்கவுள்ளார். மேலும், விஜய் சேதுபதியுடன் மிக முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று டி.ராஜேந்தரும் நடித்துள்ளார். அவரது அடுக்குமொழி வசனமும், அடங்காத நடிப்பும் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக இருக்கப் போகிறது. டி.ஆர் - விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் காட்சிகள் அரங்கை அதிரவைக்கப் போகின்றதாம். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபஸ்டியன் நடிக்கிறார். மேலும், பாண்டியராஜன், விக்ராந்த், 'அயன்' ஆகாஷ், போஸ் வெங்கட், 'நண்டு' ஜகன், பவர் ஸ்டார் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். 'கனா கண்டேன்' முதல் இயக்குநர் கே.வி.ஆனந்த் அவர்களோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் இரட்டை எழுத...
ரசிகர்களைச் சுமக்கும் வேதாளம்

ரசிகர்களைச் சுமக்கும் வேதாளம்

சினிமா, திரைச் செய்தி
இது வேதாளம் சொல்லும் கதை எனும் படத்தில் பல விசேஷங்கள் உண்டு. முதலாவதாக, க்ரெக் புரிட்ஜ் எனும் வெள்ளைக்கார வ்ரெஸ்ட்லர் ஸ்டன்ட் மாஸ்டராகப் படத்தில் பணியாற்றுவதோடு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்கிறார். முதல்முறையாக புரிட்ஜைப் பார்க்கும்போது, க்ரெக் தன் குழுவினருடன் உண்மையாகவே மல்யுத்தம் செய்வதாக நினைத்துள்ளார் இயக்குநர் ரதீந்தரன். புரிட்ஜ் உருவாக்கிய வ்ரெஸ்ட்லிங் டெக்னிக்களைக் கொண்டு, 'ட்ரையல் ஆஃப் பிளட் (Trial of blood)' எனும் குறும்படத்தை இயக்கியுள்ளார் ரதீந்தரன். நான்கு வருடங்களாகவே முழு நீள ஆக்‌ஷன் படம் ஒன்றினை இருவரும் இணைந்து எடுக்கப் பேசி வந்த நிலையில், 'இது வேதாளம் சொல்லும் கதை' படத்திற்காகத் தன் அனைத்து வேலையையும் ஓரங்கட்டி விட்டு இந்தியா வந்துள்ளார் க்ரெக். அறுபதுகளுக்குப் பின்னான சண்டைக் காட்சிகளில் யதார்த்தம் கம்மியாகக் காணப்படுவதாக ஓரெண்ணம் ரதீந்தரனுக்கு. ரோப் கட்ட...
சிIII விமர்சனம்

சிIII விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சிங்கம் மூன்றாம் பாகத்தின் தலைப்பு செல்லமாகச் சுருங்கி "சி3" ஆகிவிட்டது. ஆந்திரக் கமிஷ்னர் கொல்லப்படுகிறார். புலனாய்வு செய்ய தமிழகத்தில் இருந்து டி.சி.பி. துரைசிங்கம் ஆந்திர அரசால் அழைக்கப்படுகிறார். கமிஷ்னரைக் கொன்றவர்களை நூல் பிடித்துப் போனால், ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு பெரும் வில்லன் கிளம்புகிறார். பணம் சம்பாதிக்கும் போதையில் தெரிந்தே தவறு செய்யும் வில்லனை துரைசிங்கம் எப்படி வேட்டையாடுகிறார் என்பதுதான் படத்தின் கதை. அப்படியொரு வேகம் கதையின் நகர்வில். இடையில், சம்பந்தமில்லாமல் சூரி செய்யும் அசட்டுக் காமெடிகளால் நியாயமாகப் பார்வையாளர்கள் கொலைவெறி ஆகவேண்டும். ஆனால், நின்று நிதானித்து மூச்சு விட சூரியே உதவுகிறார். இரண்டாம் பாதிக்கு பின் தான் விட்டல் எனும் வில்லனைச் சேர்ந்தாற்போல் திரையில் 30 நொடிகளுக்கு மேல் பார்க்க முடிகிறது. முதல் பாதியில், எக்சர்சைஸ் செய்கிறார்; தனி விமானம் சள்ளெனத் ...
காஸி – நீர்மூழ்கி போர்க் கப்பலின் கதை

காஸி – நீர்மூழ்கி போர்க் கப்பலின் கதை

சினிமா, திரைத் துளி
காஸி -  ஒரு போர்க்களத் திரைப்படமாக உருவாகியுள்ளது. பிப்ரவரி மாத வெளியீடாக வரவுள்ள இப்படத்தில் ராணா டகுபதி,டாப்ஸி பன்னு, நாசர்,கே.கே.மேனன்,அதுல் குல்கர்னி ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மறைந்த பழம்பெரும் நடிகரான ஓம்பூரி நடித்த கடைசி திரைப்படம் இது தான் என்பது பெருமைக்குரிய ஒன்றாகும். மிகப் பிரம்மாண்டமான படைப்பாக உருவாகி வரும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சங்கல்ப் இயக்கியுள்ளார். யாராலும் வீழ்த்த முடியாத நீர் முழ்கிக் கப்பலான PNS காஸியைப் பற்றி மிக ஆழமாகப் பேசும் ஒரு படைப்பாக இருக்கும். ஒளிப்பதிவாளர் மதி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தைத் தேசிய விருது வென்ற படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்ய, பல வெற்றி படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் கே இசையமைக்கிறார். எந்தவிதச் சமரசமுமின்றி பி.வி.பி சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை மிகப் பிரம்மாண்டமாகத் தயாரித்துள...
இவன் நல்ல சிவா

இவன் நல்ல சிவா

சினிமா, திரைத் துளி
பல வெற்றி படங்களைத் தயாரித்த ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் பட நிறுவனம் அடுத்து பிரம்மாண்டமாகத் தயாரித்திடுக்கும் படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 88 வது படம் இது. “இரண்டு போலீஸ் அதிகாரிகளுக்குள் ஈகோ யுத்தம் நடக்கிறது. இரண்டு அதிகாரிகளுக்குள் உண்டான மோதலில் நுழைந்து லாபம் பார்க்க நினைக்கிறான் சமூக விரோதி ஒருவன். அவனது எண்ணம் நிறைவேறியதா? இல்லையா? என்பது பரபரப்பான திரைக்கதை! ராகவா லாரன்ஸ் இதுவரை ஏற்றிராத போலீஸ் கதாபாத்திரம் அவருக்கு இன்னொரு பரிணாமத்தைக் கொடுக்கும். பக்கா கமர்ஷியல் படம் தான் மொட்ட சிவா கெட்ட சிவா” என்றார் இயக்குநர் சாய்ரமணி. படத்தை உலகம் முழுவதும் வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் வெளியிடுகிறார். தமிழகம் முழுவதும் டாக்டர் சிவபாலன் வெளியிடுகிறார். நடிகர்கள்: >> ராகவா லாரன்ஸ் >> சத்யராஜ் >> நிக்கி கல்ராணி >> கோவ...
போகன் விமர்சனம்

போகன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனி ஒருவன் வெற்றி ஜோடியான அரவிந்த் சாமி – ஜெயம் ரவி மீண்டும் இணைகிறார் என்பதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்குப் பிரதான காரணம். அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளனர் என்றே சொல்லவேண்டும். ‘போகன்’ என்றால் புலன்களால் பெறும் இன்பத்தை அனுபவிப்பவன் எனப் பொருள் கொள்ளலாம். அப்படி, வாழ்விலுள்ள ராஜ சுகம் அனைத்தையும் அனுபவிக்கும் பெரும் இச்சையுடைய போகனாக அரவிந்த் சாமி கலக்கியுள்ளார். தனக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்ள, ஆய கலைகளில் 52வது கலையான ‘பரகாயப் பிரவேசம்’ எனும் சக்தியை அரவிந்த் சாமி பிரயோகிப்பதாகக் காட்டியுள்ளார் இயக்குநர் லக்ஷ்மன். ஆனால், கூடு விட்டு கூடு பாய்தல் என்பது இறந்த உடலில் ஒருவர் தன் உயிரினைப் புகுத்திக் கொள்வதாகும். படத்தில் காட்டப்படுவது ‘கூடு மாறுதல் (Body Swapping)’ எனும் கலை. இந்த அழகான ஹாலிவுட் கற்பனைக்கும், சித்தர் போகர் அருளியதாகப் படத்தில் காட்டப்படும் பரகாயப் பிரவ...
எனக்கு வாய்த்த அடிமைகள் விமர்சனம்

எனக்கு வாய்த்த அடிமைகள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு நண்பனுக்காக எந்தச் சிரமத்தையும் மேற்கொள்ளும் நண்பர்களைச் செல்லமாக 'அடிமைகள்' என்கிறார் இயக்குநர். அப்படி, ஐ.டி.யில் வேலை செய்யும் ஜெய்க்கு மூன்று அடிமைகள் உள்ளனர். அவர்கள், வங்கியில் கேஷியராக உள்ள கருணாகரன், ஷேர் ஆட்டோ ஓட்டும் காளி வெங்கட், கஸ்டமர் கேரில் வேலை செய்யும் நவீன் ஆகியோர் ஆவர். காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கிறார் ஜெய். அவரைத் தேடித் தடுக்க முயற்சி செய்யும் அவரின் 3 அடிமைகளுமே அநாவசிய பிரச்சனையில் சிக்கிக் கொள்கின்றனர். அடிமைகளை எப்படிப் பிரச்சனையில் இருந்து ஜெய் மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை. படத்தில் நாயகன் நாயகி பெயரளவிற்குத்தான். கருணாகரனும், காளி வெங்கட்டும்தான் படத்தின் உண்மையான நாயகர்கள். ஷேர் ஆட்டோ பின்னால் சென்று ரத்தம் சூடேறுபவர்களுக்கு, காளி வெங்கட்டின் அறிமுக காட்சி மிக நெருக்கமாக அமையும். காளி வெங்கட்டின் கதாபாத்திரத்தை அனுபவித்து எழுதிய...
சீனப் பெருஞ்சுவரைத் தாக்கும் வினோத மிருகங்கள்

சீனப் பெருஞ்சுவரைத் தாக்கும் வினோத மிருகங்கள்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
வில்லியம் கெரினும், பெரோ டோவாரும் வெடிமருந்தினைத் தேடி சீனா வருகிறார்கள். வழியில் வினோத மிருகத்தினால் அவர்கள் குழு தாக்கப்பட வில்லியமும் பெரோவும் மட்டும் உயிர் தப்புகின்றனர். 5500 மைல்கள் நீளம் கொண்ட சீனப் பெருஞ்சுவரைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஜெனரல் ஷாவ், உயிர் தப்பிய ஐரோப்பியர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்கிறார். தொடரும் சம்பவங்கள், வினோத மிருகங்களிற்கு எதிரான போரில் வில்லியமைத் தலைமை தாங்கச் செய்கிறது. வில்லியமாக ஹாலிவுட் நாயகன் மேட் டேமன் நடித்துள்ளார். ஆனால், ‘தி கிரேட் வால்’ ஹாலிவுட் படமன்று. படத்தை இயக்கியுள்ளவர் சீன இயக்குநரான ஷாங் யிமோ (Zhang Yimou). சீனப் படங்களை இயக்கி பல விருதுகளைப் பெற்றுள்ள ஷாங் இயக்கும் முதல் நேரடி ஆங்கிலப்படமிது. படத்தின் பட்ஜெட் 150 மில்லியன் டாலர் என்பதன் மூலமே படத்தின் பிரம்மாண்டத்தை யூகிக்கலாம். சீனப் பெருஞ்சுவரில் படப்பிடிப்ப...