Shadow

சினிமா

கேன்ஸ் திரைப்பட விழாவில் “கிராண்ட் பிரிக்ஸ்” விருதை முதல்முறை வென்ற இந்தியப் படம்

கேன்ஸ் திரைப்பட விழாவில் “கிராண்ட் பிரிக்ஸ்” விருதை முதல்முறை வென்ற இந்தியப் படம்

சினிமா, திரைச் செய்தி
பாயல் கபாடியாவின் ஆல் வி இமேஜின் அஸ் லைட் திரைப்படம், வரலாற்றில் முதல் முறையாக ஒரு இந்திய திரைப்படமாக, கேன்ஸில் கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்றுள்ளது.நமது பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஜி, கேரளா மற்றும் பல மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள பல முன்னணி திரையுலகப் பிரபலங்கள் #PayalKapadia பாயல் கபாடியா மற்றும் படத்தில் பங்குகொண்ட நடிகர்களான கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, ஹிருது ஹாரூன், சாயா கதம் மற்றும் அஜீஸ் ஆகியோருக்கு தனிப்பட்ட முறையில் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இந்த சந்தர்ப்பத்தில், ஆல் வி இமேஜின் அஸ் லைட் திரைப்படத்தின் நடிகர்களில் ஒருவரான ஹிருது ஹாரூன் இது குறித்து கூறுகையில்… இயக்குநர் #PayalKapadia, தயாரிப்பாளர்கள் மற்றும் குழுவினர், எனக்கு வழிகாட்டியாக விளங்கிய அனைவருக்கும், ஆதரவு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்த ஒவ்வொருவருக்கும் நன்றியை...
”என் தந்தையின் திரை வாழ்வை கௌரவப்படுத்துவது எனக்கு கிடைத்த கௌரவம்.” – ஸ்ருதிஹாசன்-ஸ்ருதிஹாசன்

”என் தந்தையின் திரை வாழ்வை கௌரவப்படுத்துவது எனக்கு கிடைத்த கௌரவம்.” – ஸ்ருதிஹாசன்-ஸ்ருதிஹாசன்

சினிமா, திரைச் செய்தி
இசைக் கலைஞரும், முன்னணி பாடகியும், முன்னணி நட்சத்திர நடிகையுமான ஸ்ருதிஹாசன் அண்மையில் 'இந்தியன் 2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு, அவருடைய தந்தை கமல்ஹாசனை கொண்டாடும் விதமாக அவரது ஹிட்டான பாடல்களை தொகுத்து ஒரு இசை நடன நிகழ்வை அரங்கேற்றினார்.ஸ்ருதிஹாசன் தனது தந்தையின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பாடல்களை, தொகுத்து அதை தன் இசை மற்றும் நடனத்தால் மெருகேற்றி பார்வையாளர்களை கவர்ந்தார். அவரது குழுவுடன் அவர் இணைந்து பாடி நடனமாடியது.. இசை வெளியீட்டு விழாவை மேலும் மிளிரச் செய்தது. இந்த தருணத்தை தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக, காணொளி ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.அந்த காணொளியில் ஸ்ருதிஹாசன் தன் தந்தை கமல்ஹாசனின் பாதங்களை தொட்டு வணங்கி அவரது ஆசீர்வாதத்தை பெறுகிறார். அதே தருணத்தில் கமல்ஹாசன், ஸ்ருதிஹாசனை ஆரத்தழுவி அவரது அன்...
பல சர்வதேச விருதுகளை வென்ற “பயமறியா பிரம்மை” பட பர்ஸ்ட் லுக் வெளியீடு

பல சர்வதேச விருதுகளை வென்ற “பயமறியா பிரம்மை” பட பர்ஸ்ட் லுக் வெளியீடு

சினிமா, திரைச் செய்தி
புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'பயமறியா பிரம்மை' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநரும், தயாரிப்பாளரும், தமிழ் திரையுலகின் படைப்புலக ஆளுமையுமான பா. ரஞ்சித் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.அறிமுக இயக்குநர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பயமறியா பிரம்மை' எனும் திரைப்படத்தில் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நந்தா- வி. பிரவீண் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார்.‌ சதீஷ் கலை இயக்கத்தை கவனிக்க, படத்தின் படத்தொகுப்பு பணிகளை அகில் பிரகாஷ் மேற்கொண்டிருக்கிறார்....
திரைக்கதையாசிரியராக மாறிய தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்

திரைக்கதையாசிரியராக மாறிய தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்

சினிமா, திரைச் செய்தி
தமிழ் சினிமாவில் மினிமம் கியாரண்டி வெற்றிப்பட இயக்குநர் ஆர்.கண்ணன். மணிரத்னத்திடம் உதவியாளராக பணியாற்றி, ‘ஜெயம்கொண்டான்’ படத்தின் மூலம் வெற்றிகர இயக்குநராக ஆரம்பித்து தயாரிப்பாளராகவும் மாறிய ஆர்.கண்ணன் தற்போது ஹன்சிகா மோத்வானி நாயகியாக நடித்துள்ள ‘காந்தாரி’ படத்தை இயக்கி தனது மசாலா பிக்ஸ் சார்பில் தயாரித்து இருக்கிறார்.எமோஷனல் ஹாரர் திரில்லர் ஆக உருவாகியுள்ள இந்தப்படத்திற்கு தொல்காப்பியனின் கதையை எடுத்துக்கொண்டு அதில் பல கமர்ஷியல் அம்சங்களை சேர்த்து திரைக்கதை எழுதியுள்ளார் ஆர்.கண்ணனின் நண்பரும் தயாரிப்பாளருமான தனஞ்செயன். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவை மேற்கொள்ள எல்.வி.முத்து கணேஷ் இசை அமைக்கிறார்கள். தற்போது ஹன்சிகாவின் வித்தியாசமான தோற்றத்துடன் இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து காந்தாரி படத்தின் அறிமுக நிகழ்வு நடைபெற்றது.இதில், படத்தின் கதாசிரியரான தயாரி...
மாஸ்டர் செஃப் இந்தியா தமிழ் நிகழ்ச்சியில் “மேட் செஃப் ஆன் ய பிளேட்” சவால்

மாஸ்டர் செஃப் இந்தியா தமிழ் நிகழ்ச்சியில் “மேட் செஃப் ஆன் ய பிளேட்” சவால்

சினிமா, திரைச் செய்தி
மாஸ்டர் செஃப் இந்தியா நிகழ்ச்சி அதன் மாபெரும் இறுதி நிகழ்வை நோக்கி மிக நெருக்கமாக நகர்ந்து வரும் நிலையில், எதிர்கொள்கின்ற சவால்கள் வெறுமனே கடுமையானதாக மட்டும் மாறவில்லை; முழு மூச்சுடன் இப்போட்டியில் பங்கேற்கும் ஹோம் குக்ஸ், திறனை வளர்த்துக் கொள்பவர்களாகவும் தங்களை மாற்றிக்கொண்டு வருகின்றனர். இந்த அரையிறுதிப் போட்டி வாரமானது, பரபரப்பிற்கு பஞ்சமில்லாத நிகழ்வாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. மாஸ்டர் செஃப் இந்தியா தமிழ் நிகழ்ச்சியின் மதிப்பிற்குரிய நடுவர் செஃப் கௌசிக் சங்கர் தீர்மானித்திருக்கின்ற பிரஷர் டெஸ்ட் இந்த வாரம் நடைபெற்றதால், ஆர்வமும், பரபரப்பும் உச்சத்தை தொட்டதில் வியப்பில்லை.இந்த கடுமையான பிரஷர் டெஸ்ட்டில், செஃப் கௌசிக் அவர்களின் முத்திரை பதித்த சமையல் தயாரிப்பான “மேட் செஃப் ஆன் ய பிளேட்” என்பதனை அதேபோல மறுஉருவாக்கம் செய்யும் மிகக் கடுமையான சவாலை ஹோம் குக்குகள் எதிர்கொண்டனர். ஆன...
Multiple Sclerosis என்ற நோய் பற்றிய படம் Calcutta I’m Sorry

Multiple Sclerosis என்ற நோய் பற்றிய படம் Calcutta I’m Sorry

சினிமா, திரைச் செய்தி
Calcutta I’m Sorry Banner- Pepper Watcher Productions Multiple Sclerosis, என்பது ஒரு விசித்திரமான நோயாகும். இது முதுகுத் தண்டு மற்றும் மூளையின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது, இது தனிநபரின் வாழ்க்கையை மிகக் கடுமையான அளவிற்கு பாதிக்கிறது. ஒரு சிலர் மட்டுமே நிலைமையை ஏற்றுக்கொண்டு முன்னேறுகிறார்கள். Multiple Sclerosis Society of India பாதிக்கப்பட்டவர்களுக்கு மகத்தான சேவையை செய்து வருகிறது, மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்த எல்லா முயற்சியையும் எடுக்கிறது; பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குகிறது!மிகவும் பாராட்டப்பட்ட திரைப்படமான Calcutta I’m Sorry, Harry MacLure திரைக்கதை மற்றும் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. Conoor - இல் இசை ஆசிரியையாகப் பணிபுரியும் Amanda Wright என்ற ஆங்கிலோ-இந்தியப் பெண்ணுக்கு Multiple Sclerosis இருப்பது கண்டறியப்பட்டது. ! Multipl...
பாகுபலி அனிமேஷன் தொடரை அறிமுகப்படுத்திய டிஸ்னி ஹாட் ஸ்டார்

பாகுபலி அனிமேஷன் தொடரை அறிமுகப்படுத்திய டிஸ்னி ஹாட் ஸ்டார்

சினிமா, திரைச் செய்தி
பாகுபலி மற்றும் மகிழ்மதி உலகில் கேள்விப்படாத, கண்டிராத மற்றும் சாட்சியமில்லாத பல நிகழ்வுகளும் கதைகளும் உள்ளன. டிஸ்னி + ஹாட்ஸ்டாரும் கிராஃபிக் இந்தியாவும் சமீபத்தில் இந்திய ரசிகர்களின் விருப்பத்திற்குரிய திரைப்பட ஃப்ராஞ்ச்சைஸான ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸின் 'பாகுபலி: கிரீடம் ஆஃப் ப்ளட்' என்ற அனிமேஷன் தொடரை அறிமுகப்படுத்தின. இது பாகுபலியும் பல்வாழ்தேவனுவும் கைகோர்த்து மாபெரும் சாம்ராஜ்யம் மகிஸ்மதியையும் அதன் சிம்மாசனத்தையும் அதன் மிகப்பெரிய அச்சுறுத்தலான, மர்மமான போர்வீரன், ரக்ததேவனிடமிருந்து பாதுகாக்கும் கதையாகும்.கிராஃபிக் இந்தியா மற்றும் ஆர்கா மீடியாவொர்க்ஸ் தயாரிப்பான பாகுபலி: கிரௌன் ஆஃப் ப்ளட், தொலைநோக்குப் பார்வையுள்ள S.S. ராஜமௌலி, ஷரத் தேவராஜன், ஷோபு யார்லகட்டா ஆகியோரால் தயாரிக்கப்பட்டது, ஜீவன் ஜே. காங், நவின் ஜான் ஆகியோரால் இயக்கித் தயாரிக்கப்பட்டது.பெரிதும் விரும்பப்படும் கதாபா...
“ஓர் உயிரைத் தேடிப் பயணம் செய்யும் இரு உயிர்களின் கதை” – புஜ்ஜி அட் அனுப்பட்டி’

“ஓர் உயிரைத் தேடிப் பயணம் செய்யும் இரு உயிர்களின் கதை” – புஜ்ஜி அட் அனுப்பட்டி’

சினிமா, திரைத் துளி
குழந்தைகளின் உணர்வுகளை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் 'புஜ்ஜி அட் அனுப்பட்டி'. இப்படம் வரும் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.இப்படத்தை ராம் கந்தசாமி எழுதி, இயக்கி, தன் கலாலயா நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.இப்படத்தில் கமல்குமார், நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி, கார்த்திக் விஜய் , குழந்தை நட்சத்திரம் பிரணிதி சிவ சங்கரன், லாவண்யா கண்மணி, நக்கலைட்ஸ் ராம்குமார் , நக்கலைட்ஸ் மீனா , வரதராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை 9 வி ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.புஜ்ஜி திரைப்படத்தின் திரை வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா ஊடகங்கள் முன்னிலையில் இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் படத்தின் இயக்குநர் ராம் கந்தசாமி பேசும்போது,"ஒரு படம் எடுக்க இரண்டு கோடி ரூபாய் தேவைப்படும். சிக்கனமாகப் பட்ஜெட்டில் படம் எடுப்பது என்றால் கூட ...
”தெருக்கூத்து கலைக்கு ஒரு மணி முடி சூட்டியதாக எண்ணி நான் மகிழ்கிறேன்” – சங்ககிரி ராச்குமார்

”தெருக்கூத்து கலைக்கு ஒரு மணி முடி சூட்டியதாக எண்ணி நான் மகிழ்கிறேன்” – சங்ககிரி ராச்குமார்

சினிமா, திரைச் செய்தி
கடந்த சில வருடங்களுக்கு முன் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான ‘வெங்காயம்’ திரைப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றது. இயக்குநர் சங்ககிரி ராச்குமார் இயக்கிய இப்படத்தில் தெருக்கூத்து கலை பிரதான இடம் பிடித்திருந்தது. பாரம்பரிய தெருக்கூத்து குடும்பத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர் என்பதால், தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியலை இதில் அழுத்தமாக சொல்லி இருந்தார் இயக்குநர் சங்ககிரி ராச்குமார். மேலும் அதனை மெருகேற்றி முதன்முதலாக கம்போடியா அங்கோவார்ட் கோயில் முன்பாக நிகழ்த்தி அந்த நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது.இருப்பினும் கோவில் திருவிழாக்களில் மட்டுமே நடத்தப்படுகிற கலையாக இல்லாமல் இன்னும் பெரிய அளவில் உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் இந்த கலை சென்று சேரவேண்டும் என விரும்பினார் இயக்குநர் சங்ககிரி ராச்குமார். அந்தவகையில் தமிழ்நாடு அறக்கட்டளையின் ஐம்ப...
அக்காலி விமர்சனம்

அக்காலி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சாத்தான் வழிபாட்டின் மூலமாக தங்களை சக்தி வாய்ந்த மனிதராக மாற்றிக் கொள்ள முயலும் கூட்டத்தைப் பற்றிய கதை.சாத்தான் வழிபாடு, ப்ளாக் மேஜிக் என வெகுஜன யதார்தத்திற்கு வெகு தொலைவில் இருக்கும் கதைக்களம். ஒரு கல்லறையில் புதைக்கப்பட்ட பிணங்கள் எல்லாம் காணாமல் போகின்றன என ஒரு வழக்கு வருகிறது. அந்த பிதை குழியில் போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கலாம் என்ற கணக்கில் அங்கு வேட்டைக்கு வரும் போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. ஒரு கும்பல் பிணங்கள் மற்றும் மண்டை ஓட்டைக் கொண்டு விசித்திரமான பூஜை செய்து கொண்டிருக்க, அதே இரவில் அமானுஷ்யமாக நடந்து கொள்ளும் ஒரு இளம் பெண் கடத்தப்படுகிறாள். அந்த இளம் பெண் ஏன் கடத்தப்பட்டாள்; அந்த விசித்திர பூஜையில் ஈடுபட்ட கூட்டத்தினர் யார் என்பதை அந்த வழக்கை விசாரித்த போலீஸ் இன்ஸ்பெக்டரின் வாயிலாக கதை சொல்லும் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.9...
கருடன் விமர்சனம்

கருடன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நீதியா, விசுவாசமா என்பதற்கு இடையில் மாட்டிக் கொண்டு முழிக்கும் ஒரு விசுவாசமான வேலைக்காரனின் தடுமாற்றமும் தடமாற்றமும் தான் இந்த கருடன். நாயகனுடன் இருந்து கொண்டே தீங்கிற்கு துணை போன துரோகிகளைத் தமிழ் சினிமா வால்டர் வெற்றிவேல் திரைப்படத்திற்கு முன்பிருந்தே பார்த்து வருகிறது. ஆக, கதையாக இது பழைய ஃபார்முலா கதை தான். ஆனால் அந்த தீங்கிற்கு துணை போகுமளவிற்கு அவர்கள் துரோகிகள் ஆகும் அந்த மனமாற்றத்திற்கான திரைக்கதை தான் இந்த கருடனை கருட சேவைக்குரியவனாக மாற்றுகிறது. மீண்டும் பழைய ஃபார்முலா தான். மனிதனுக்கு வரக்கூடாத மூணு ஆசை மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்று ரஜினி பேசும் அந்த வசனங்கள், அதே மாடுலேஷனுடன் நம்மில் பலருக்கு இன்றும் நினைவில் இருக்கும். இந்த மூன்று ஆசைகளில் எதுவும் மனிதனுக்கு வந்துவிடக் கூடாது என்று இவர் சொல்ல, இந்த மூன்று ஆசைகளுமே முந்தியடித்துக் கொண்டு பிரச்சனைகளுக்கு தூபம் போடுகிறது. த...
”எந்த வெயிலுக்கும் காயாத; எந்த புயலுக்கும் சாயாத மரம் பனை” – வைரமுத்து

”எந்த வெயிலுக்கும் காயாத; எந்த புயலுக்கும் சாயாத மரம் பனை” – வைரமுத்து

Audio Launch, சினிமா, திரைச் செய்தி
வைரமுத்து பங்கேற்ற "பனை’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா! ----------------------------------------------- ஏ.எம்.ஆர் கிரியேஷன்ஸ் சார்பில் எம்.ராஜேந்திரன் தயாரித்திருக்கும் படம் ‘பனை’. நலிந்து வரும் பனைமரத் தொழில் மற்றும் தொழிலாளர்களைப் பற்றி பேசும் இப்படத்தை தயாரித்திருப்பதோடு, படத்தின் கதையையும் எம்.ராஜேந்திரன் எழுதியிருக்கிறார்.ஆதி பி.ஆறுமுகம் இயக்கியிருக்கும் இப்படத்தின் பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருக்கிறார். கீரவாணியிடம் பணியாற்றிய மீராலால் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். சிவக்குமார் ரங்கசாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.இப்படத்தில் ஹரிஷ் பிரபாகரன் நாயகனாக நடிக்க, மேக்னா நாயகியாக நடிக்க வடிவுக்கரசி, இமான் அண்ணாச்சி, கஞ்சா கருப்பு, டி.எஸ்.ஆர், ஜி.பி.முத்து, தயாரிப்பாளரும் கதாசிரியருமான எம்.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்....
2.26 மில்லியன் விருப்பங்களை அள்ளிய புஷ்பா 2 வின் முதல் சிங்கிள்

2.26 மில்லியன் விருப்பங்களை அள்ளிய புஷ்பா 2 வின் முதல் சிங்கிள்

சினிமா, திரைச் செய்தி
இந்திய சினிமா ரசிகர்களின் அபிமான ஜோடி புஷ்பா & ஸ்ரீவள்ளி இருவரும் ’புஷ்பா2’ படத்தில் இருந்து ‘தி கப்புள் சாங்க்’ என்ற அழகான பெப்பி பாடலான ‘சூசேகி’யுடன் வந்துள்ளனர்!தேசிய விருது பெற்ற அல்லு அர்ஜூன் புஷ்பாராஜாகவும், சார்மிங் ராஷ்மிகா மந்தனா ஸ்ரீவள்ளியாகவும் நடித்திருக்கும் ‘புஷ்பா 2’ படத்தில் இருந்து 'தி கப்புள் சாங்' என்ற இரண்டாவது சிங்கிள் வெளியாகியுள்ளது. முதல் சிங்கிள் ‘புஷ்பா புஷ்பா’ பாடலும் படத்தின் டீசரும் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இரண்டாவது சிங்கிளும் ரசிகர்களைக் கவந்துள்ளது.இந்த வீடியோ பாடல் படத்தின் பிரம்மாண்ட செட்டில் இருந்து எப்படி உருவாகிறது என்ற காட்சிகளோடு வெளியாகியுள்ளது. இது நிச்சயம் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான அனுபவத்தைக் கொடுக்கும். இந்த காட்சிகளில் படக்குழுவினரிடையே இருக்கும் நட்பும் தெளிவாக தெரிகிறது. மேஸ்ட்ரோ இயக்குநர் சுகுமார் இந்த பாடலை ப...
”கடவுளுக்கு என்னைப் பிடிக்கும்” – சத்யராஜ்

”கடவுளுக்கு என்னைப் பிடிக்கும்” – சத்யராஜ்

Audio Launch, சினிமா, திரைச் செய்தி
இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது, “இந்தப் படத்திற்கு வேறு சில டைட்டிலும் யோசித்தோம். ஆனால், ‘மழை பிடிக்காத மனிதன்’ என கவித்துவமாக இதுவே தான் வேண்டும் என இயக்குநர் விஜய் மில்டன் பிடிவாதமாக சொன்னார். தமிழில் நல்ல தலைப்பு படங்களுக்கு வருவதில்லை என சிலர் ஆதங்கப்படும்போது, இந்த தலைப்பை எல்லோரும் வரவேற்க வேண்டும் என விரும்புகிறேன். இந்தப் படம் கேப்டன் விஜயகாந்துக்கு டிரிபியூட்டாக இருக்கும். இந்தப் படம் 2021ல் தொடங்கியபோது, இதில் விஜயகாந்த் சார் நடிக்க வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய்தோம். ஆனால், அவரது உடல்நலன் காரணமாக அது நடக்காமல் போனது. அவரது மறைவுக்குப் பின் ஏஐ தொழில்நுட்பத்திலாவ...
துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் வெளியீடு தொடர்பான அறிவிப்பு

துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் வெளியீடு தொடர்பான அறிவிப்பு

சினிமா, திரைச் செய்தி
துல்கர் சல்மான் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'லக்கி பாஸ்கர்' செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது!துல்கர் சல்மான் இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். அவரது வசீகரமான ஆளுமை மற்றும் ஈடுசெய்ய முடியாத நடிப்புத் திறனுக்காக மலையாளம், தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் மிகவும் விரும்பப்படும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இப்போது, அவர் ஒரு சாதாரண மனிதனின் அசாதாரண கதையான 'லக்கி பாஸ்கர்' படம் மூலம் வசீகரிக்க வருகிறார்.படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து படக்குழுவினர் தொடர்ந்து அடுத்தடுத்து அப்டேட் கொடுத்து வருகின்றனர். மே 29 அன்று படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் செப்டம்பர் 27, 2024 அன்று உலகம் முழுவதும் வெளிய...