Shadow

திரைச் செய்தி

ஜோதி – 10800 குழந்தைகள் எங்கே?

ஜோதி – 10800 குழந்தைகள் எங்கே?

சினிமா, திரைச் செய்தி
சில ஆண்டுகளுக்கு முன்பாகக் கடலூர் அரசு மருத்துவமனையில் நடந்த மனதை உலுக்கும் உண்மைச் சம்பவமாகிய குழந்தைக் கடத்தலை மையமாக வைத்து உருவாகியுள்ள எமோஷ்னர் த்ரில்லர் படம் ‘ஜோதி.’ இந்தப் படத்தை எஸ்.பி.ஆர். ஸ்டூடியோ புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பிரபல படத்தொகுப்பாளரான எஸ்.பி.ராஜா சேதுபதி தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் நாயகனாக வெற்றி நடிக்கிறார். மேலும் ஷீலா ராஜ்குமார், கிருஷா குரூப், மைம் கோபி, எஸ்.பி.ராஜா சேதுபதி, இளங்கோ குமரவேல் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜோதி படத்தை டிக்-டாக் பிரபலமான ஜி.பி.முத்து பார்த்துவிட்டு படத்தையும், படக் குழுவினரையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.“படத்தில் இருக்கும் சஸ்பென்ஸ் கடைசி வரையிலும் நீடித்திருக்கிறது. எதிர்பாராத சில திருப்பங்களும் படத்தைக் கடைசி வரையிலும் பார்க்க வைக்கிறது. இதுவரையிலும் நம் நாட்டில் 11 ஆயிரம் குழந்தைகளைக் கடத்தியிருக்கிறார்கள். அதி...
நண்பேன்டா பார்த்தாவின் ‘குலுகுலு’ – உதயநிதி ஸ்டாலின்

நண்பேன்டா பார்த்தாவின் ‘குலுகுலு’ – உதயநிதி ஸ்டாலின்

சினிமா, திரைச் செய்தி
சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ராஜ் நாராயணன் தயாரிப்பில், மேயாத மான் படப்புகழ் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “குலுகுலு”. ஜூலை 29 அன்று படம் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர், திரைப்பிரபலங்கள் கலந்துகொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு, ஜூலை 22 அன்று மாலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், “நான் வேலை பார்த்த படங்களில் இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்தமான படம். இயக்குநரிடம் ஒரு புத்துணர்வான எழுத்து வடிவம் இருக்கிறது. என்னை இந்தப் படத்தில் சுதந்திரமாக வேலை பார்க்க அனுமதித்தார். ரத்னகுமாருக்குத் தமிழ் சினிமாவில் பெரிய இடம் இருக்கிறது. இந்தப் படத்தை வெளியிட முடிவு செய்த உதயநிதி சாருக்கு நன்றி. சந்தானம் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இந்தப் படம் எனது இண்டிபெண்டண்...
துரிதம் – இயக்குநர் ஹெச். வினோத்தின் சீடர் இயக்கிய படம்

துரிதம் – இயக்குநர் ஹெச். வினோத்தின் சீடர் இயக்கிய படம்

சினிமா, திரைச் செய்தி
இதுவரை தமிழ் சினிமாவில் பல ரோட் மூவிக்கள் வந்திருந்தாலும் அவை எதுவும் தமிழகத்தை மையப்படுத்தி வெளியானது இல்லை. ஆனால் முதன்முறையாக அந்தக் குறையைப் போக்கும் விதமாக உருவாகியுள்ள படம் தான் ‘துரிதம்’. இயக்குநர் ஹெச்.வினோத்தின் சீடர் இயக்குநர் சீனிவாசன் துரிதம் படத்தை இயக்கியுள்ளார். 'சண்டியர்' என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்த ஜெகன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ‘மிஸ் சவுத் இந்தியா’ பட்டம் வென்ற ஈடன் நடித்துள்ளார். கதாநாயகியின் தந்தையாக இயக்குநர் ஏ.வெங்கடேஷ், நாயகனின் நண்பனாக பாலசரவணன் மற்றும் பூ ராமு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, வில்லனாக ராமச்சந்திரன் (ராம்ஸ்) நடித்துள்ளார். புதியவரான நரேஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜய் மில்டனின் உதவியாளராகப் பணியாற்றிய வாசன் என்பவர் தான் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை நாகூரான் கவனிக்க, ஆக்சன் காட்சிகளை மணி என...
நதி – சமூக அவலங்களைச் சாடும் கமர்ஷியல் டிராமா

நதி – சமூக அவலங்களைச் சாடும் கமர்ஷியல் டிராமா

சினிமா, திரைச் செய்தி
மாஸ் சினிமாஸ் சார்பில், சாம் ஜோன்ஸ் நடித்து தயாரிக்க, இயக்குநர் K. தாமரைசெல்வன் இயக்கத்தில், காதலையும் நட்பையும் மையமாகக் கொண்டு, சமூக அவலங்களைச் சாடும், ஒரு கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் "நதி". படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து, ஜூலை 22 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. யூ-ட்யூப்பில் கோடங்கி எனும் பெயரில் விமர்சனம் செய்யும் நடிகர் வடிவேல் முருகன், “இந்தப் படத்தின் மூலம் கரு. பழனியப்பன் போன்ற ஒரு சகோதரர் எனக்குக் கிடைத்துள்ளார். இயக்குநர் எந்தவித பதட்டமும் இல்லாமல், படத்தை எழுதி இயக்கியுள்ளார்” என்றார். இயக்குநர் A. வெங்கடேஷ், “AP International உடன் இந்தப் படத்தை இணைந்து தயாரிப்பாளர் வெளியிடுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கயல் ஆனந்தி திரையில் குடும்பப் பாங்கான பாத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார். இயக்குநர் தாமரைசெல்வன...
“மாமனிதன் உங்களுக்கு நெருக்கமாகி விடுவான்” – விஜய் சேதுபதி

“மாமனிதன் உங்களுக்கு நெருக்கமாகி விடுவான்” – விஜய் சேதுபதி

சினிமா, திரைச் செய்தி
தமிழ் ஓடிடி தளத்தில் கோலோச்ச ஆரம்பித்திருக்கும் ஆஹா ஓடிடி தளத்தின் அடுத்த அதிரடி வெளியீடாக, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “மாமனிதன்” திரைப்படம் ஜூன் 14 ஆம் தேதி ஒளிபரப்பியாகியுள்ளது. இப்படத்தை இப்போது 155 நாடுகளில் ஆஹா ஓடிடி தளத்தின் வழியாகக் கண்டுகளிக்கலாம். மாமனிதன் படம் ஓடிடியில் வெளியாவதையொட்டி, இப்படத்தின் நன்றி அறிவித்தலும், பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெற்றது. இயக்குநர் சீனு ராமசாமி, “கலாப்பிரியாவின் கவிதை ஒன்று இருக்கிறது. காயங்களோடு இருப்பவனை விரட்டிக் கொத்தும் காக்கையைப் பற்றியது. அப்படி காயத்தோடு இருந்த ஒரு படைப்பைத் தங்கள் தோளில் தூக்கி உலகம் முழுக்க கொண்டு சேர்த்த பத்திரிக்கை நண்பர்களுக்கு என் மகள்களின் கைகளால் நன்றி சொல்கிறேன். நீங்கள் இல்லையென்றால் இந்தப் படம் இல்லை. ஒரு படத்தின் வெற்றி என்பது இந்தக் காலத்தில் பல அடுக்குகளாக இருக்கிறது. தயாரிப்பாளருக்கு...
“விக்ரம்: 100% அளிக்கும் பர்ஃபெக்ஷனிஸ்ட்” – அஜய் ஞானமுத்து | கோப்ரா

“விக்ரம்: 100% அளிக்கும் பர்ஃபெக்ஷனிஸ்ட்” – அஜய் ஞானமுத்து | கோப்ரா

சினிமா, திரைச் செய்தி
‘சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் உள்ள பிரம்மாண்டமான பீனிக்ஸ் சிட்டி வணிக வளாகத்தில் அமைக்கப்பட்ட பிரத்தியேக அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் 'கோப்ரா' படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களும், ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரகுமான் மற்றும் அவரது குழுவினர் மேடையில் பாடி, படத்தின் பாடல்களை அறிமுகப்படுத்தி, ரசிகர்களை உற்சாகமடையச் செய்தனர். இயக்குநர் அஜய் ஞானமுத்து, “நான் ‘ஏழாம் அறிவு’ படத்தில் கடைநிலை உதவியாளராகப் பணியாற்றியபோது, அதன் தயாரிப்பாளரான உதயநிதி அவர்களிடமிருந்து தான், முதன் முதலில் ஊதியம் பெற்றேன். தற்போது ‘கோப்ரா’ படத்தை அவர் பிரம்மாண்டமாக வெளியிடுகிறார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படத்தில் நாயகனான சீயான் விக்ரம் அவர்களைச் சந்தித்து கதையை விவரித்த போது, மௌனமாகக் கேட்டார். படப்பிடிப்புத் தளத்தில் நான்...
கோப்ரா – தமிழ் பேசும் இர்ஃபான் பதான்

கோப்ரா – தமிழ் பேசும் இர்ஃபான் பதான்

சினிமா, திரைச் செய்தி
‘சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் உள்ள பிரம்மாண்டமான பீனிக்ஸ் சிட்டி வணிக வளாகத்தில் அமைக்கப்பட்ட பிரத்தியேக அரங்கத்தில் நடைபெற்றது. இயக்குநர் அஜ்ய ஞானமுத்து, “இர்ஃபான் பதானைச் சந்தித்து கதையைச் சொன்னபோது, ‘என்னால் நடிக்க முடியுமா?’ எனக் கேட்டார். ‘உங்களால் முடியும்’ என்று நம்பிக்கை அளித்தேன். அத்துடன் அவருக்காகத் தமிழ் மொழி பயிற்சியாளர் ஒருவரை நியமித்து, தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கற்பித்தோம். உடன் நடிப்பு பயிற்சியையும் அளித்தோம். சில தினங்களிலேயே தமிழ் மொழி உச்சரிப்பைத் தெளிவாக உச்சரித்து நடித்து அசத்தினார். ‘கே.ஜி.எஃப்’ படத்தின் முதல் பாகம் வெளியாகி இருந்த நிலையில் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியைச் சந்தித்தோம். அந்தப் படத்திற்கும், ‘கோப்ரா’ படத்திற்கும் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரம். அவரின் வேறு காணொளிகளைக்...
ஏ.ஆர்.ரஹ்மானின் மாயாஜாலத்தில் கோப்ரா

ஏ.ஆர்.ரஹ்மானின் மாயாஜாலத்தில் கோப்ரா

சினிமா, திரைச் செய்தி
‘சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் உள்ள பிரம்மாண்டமான பீனிக்ஸ் சிட்டி வணிக வளாகத்தில் அமைக்கப்பட்ட பிரத்தியேக அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித் குமார், இயக்குநர் அஜய் ஞானமுத்து, படத்தின் நாயகன் சீயான் விக்ரம், அவரது வாரிசும், நடிகருமான துருவ் விக்ரம், ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், பாடலாசிரியர் தாமரை ஆகியோருடன் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரகுமான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 'கோப்ரா' படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களும், ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரகுமான் மற்றும...
நெஞ்சுக்கு நீதி – 50 ஆவது நாள் வெற்றி விழா

நெஞ்சுக்கு நீதி – 50 ஆவது நாள் வெற்றி விழா

சினிமா, திரைச் செய்தி
தயாரிப்பாளர் போனி கபூர் வழங்க, ஜீ ஸ்டுடியோஸ் & பேவியூ ப்ராஜெக்ட்ஸுடன் ரோமியோ பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”. சமூக அவலத்தைச் சாடும் ஓர் அழுத்தமான திரைப்படமாக, ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்ட இப்படம், திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்து பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி அடைந்த நிலையில், படக்குழு இன்று படத்தின் 50 ஆவது நாளைப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கொண்டாடினர். முதலில் மேடையேறி நன்றி தெரிவித்த தயாரிப்பாளர் போனிகபூர் நடிகர் உதயநிதி, ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணைத் தயாரிப்பாளர்கள் M.செண்பகமூர்த்தி, R.அர்ஜூன் துரை ஆகியோருக்கு தங்க செயின் அணிவித்தார். இயக்குநர் அருண்ராஜா காமராஜுக்கு மோதிரம் அளித்தார். மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு பரிசுகள் அளித்...
கார்கி – திகில் படத்தை விஞ்சும் இறுதிக்காட்சி

கார்கி – திகில் படத்தை விஞ்சும் இறுதிக்காட்சி

சினிமா, திரைச் செய்தி
பிளாக்கி ஜெனி & மை லிஃப்ட் புட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெருமையுடன் வழங்கும் திரைப்படம் "கார்கி" ஆகும். இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகை சாய் பல்லவி, இயக்குநர் கெளதம் ராமசந்திரன், நடிகை தயாரிப்பாளர் ஐஸ்வர்ய லட்சுமி, 2D ராஜசேகர், சக்தி பிலிம் பேக்டரி சக்தி வேலன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இயக்குநர் கெளதம் ராமசந்திரன், "என்னுடைய முதல் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் படம் நன்றாக இருந்தால் உடனே கூறுங்கள். இல்லையென்றால், சிறிது தாமதமாக கூறுங்கள் என்று சொல்லி இருந்தேன். ஆனால், இப்படம் நன்றாக இருக்கிறது என்று தான் கூறுவீர்கள். ஜூலை 15 ஆம் தேதி வெளியாகிறது. சாய் பல்லவி இப்படத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். நான் திருப்தி அடைந...
“நிஜத்தில் பேயைப் பார்ப்பது சுலபம்” – விஜய் ஆண்டனியிடம் எஸ்.ஜே.சூர்யா

“நிஜத்தில் பேயைப் பார்ப்பது சுலபம்” – விஜய் ஆண்டனியிடம் எஸ்.ஜே.சூர்யா

திரைச் செய்தி
தமிழ் மொழிக்கென்றே பிரத்தியேகமாக சிறப்பான படைப்புகளை வழங்கி, அசத்துகீரது ஆஹா ஓடிடி தளம். ஆஹா தளத்தின் அடுத்த படைப்பாக வெளியாகிறது “ஆன்யா’ஸ் டுடோரியல்” எனும் இணையத் தொடர். இயக்குநர் பல்லவி கங்கி ரெட்டி இயக்கத்தில் ரெஜினா கஸண்ட்ரா, நிவேதிதா சதீஷ் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இத்தொடர் ஒரு புதுமையான ஹாரர் தொடராக உருவாகியுள்ளது. பாகுபலியை உருவாக்கிய ஆர்கா மீடியா ஒர்க்ஸ் இத்தொடரைத் தயாரித்துள்ளது. ஜூலை 1 அன்று வெளியாகவுள்ள இந்த இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, “பெரிய ஓடிடி நிறுவனங்களுடன் போட்டியிடும் ஆஹாவிற்கு வாழ்த்துகள். படத்தை இயக்குவதே பெரிய சவாலான விஷயம் எனும்போது, ஒரு வெப் சீரிஸை இயக்குவது என்பது மிகப் பெரிய விஷயம். ஒளிப்பதிவாளர் விஜய் சக்ரவர்த்தி அவர் சிறப்பான விஷுவல்களை கொடுக்க கூடியவர். அவர் பணிபுரிவதை வள்ளி மயில் எனும் எனது பட...
ஜோதி திரைப்படம் – மனதை உலுக்கும் உண்மைச் சம்பவங்கள்

ஜோதி திரைப்படம் – மனதை உலுக்கும் உண்மைச் சம்பவங்கள்

சினிமா, திரைச் செய்தி
கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் 11 மாநிலங்களில் 43 இடங்களில் நடந்த மனதை உலுக்கும் உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து உருவான திரைப்படம் ‘ஜோதி.’ இந்தப் படத்தின் முதல் பாடலான ‘போவதெங்கே’ என்ற பாடல் நேற்று S.R.M. மருத்துவக் கல்லூரியில் ஆயிரம் மருத்துவ மாணவ, மாணவியர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் S.P.ராஜா சேதுபதி, இயக்குநர் A.V.கிருஷ்ண பரமாத்மா, நாயகி ஷீலா ராஜ்குமார், இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, துணை நடிகர் ஹரி க்ரிஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி அனைத்து மாணவ மருத்துவகள் முன்னிலையில் தயாரிப்பாளர் வீடியோ எடுக்க, ‘Let’s launch Povathengea from JOTHI’ என்று மாணவர்கள் கரகோஷமிட படத்தின் முதல் பாடல் காட்சி திரையிடப்பட்டது. “இப்பாடலின் இறுதியில் வரும் கடைசி மூன்று shots ஒரு ஹைக்கூ கவிதை போன்று இருந்ததாகவும், படத்தை...
“துவா துவா” பாடல் | அமேசானின் ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ தொடர்

“துவா துவா” பாடல் | அமேசானின் ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ தொடர்

Songs, காணொளிகள், சினிமா, திரைச் செய்தி
அமேசான் பிரைம் வீடியோவின் தமிழ் ஒரிஜினல் தொடர் 'சுழல் தி வோர்டெக்ஸ்'-இற்காக சாம் சி.எஸ் இசையமைத்த 'துவா துவா..' எனத் தொடங்கும் பாடலில், பாடகர்கள் ஜோனிடா காந்தி, ஆண்ட்ரியா ஜெர்மியா மற்றும் 'ராப்பர்' அறிவு ஆகியோர் இணைந்து பணியாற்றியுள்ளனர். புஷ்கர் & காயத்ரி ஆகியோரால் எழுதி உருவாக்கப்பட்ட தொடர் 'சுழல் -தி வோர்டெக்ஸ்'. இதில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, ஆர். பார்த்திபன் ஆகியோர் நடித்துள்ளனர். வால்வாட்சர் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர்கள் பிரம்மா மற்றும் அனுசரண் இயக்கத்தில் உருவான 'சுழல்- தி வோர்டெக்ஸ்' அமேசான் பிரைம் வீடியோவின் முதல் தமிழ் ஒரிஜினல் வலைதளத் தொடராகும். தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட இந்திய மொழிகளுடன், வெளிநாட்டு மொழிகளான பிரெஞ்சு, ஜெர்மன், இட்டாலியன், ஜப்பானியம், போலந்து, போர்த்துகீசியம், காஸ்டிலியன் ஸ்பானிஷ், லத்தீன் ஸ்பானிஷ்...
மாயோன் – மாய கிருஷ்ணனும், தூய அறிவியலும்

மாயோன் – மாய கிருஷ்ணனும், தூய அறிவியலும்

சினிமா, திரைச் செய்தி
டபுள் மீனிங்க் ப்ரொடக்ஷன் (Double Meaning Production) சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதித் தயாரித்து வழங்க, N.கிஷோர் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ், தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள திரைப்படம் “மாயோன்” ஆகும். புத்தம் புதிய களத்தில் கடவுள் & அறிவியல், சிலை கடத்தல் மற்றும் புதையல் வேட்டை என பரபர த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள, இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகிப் பரவலான கவனத்தை ஈர்த்தது. ராமாபுரம் SRM கல்லூரியில், படத்தின் விளம்பர முன்னோட்டமாக ஒரு வண்டியில் படத்தில் வரும் விஷ்ணு சிலை வைக்கப்பட்டு ரதம் போல் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த ரதத்தில் ‘மாயோன்’ பட விளம்பரங்களும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த ரதம் 40 நாட்கள், தமிழகம் முழுவதும் வலம் வரப்போகிறது. இந்த விழாவினில் இந்த ரதத்தின் பயணம் படக்குழுவினரால் துவக்கி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நம் பாரம்பரிய கல...
யானை – இயக்குநர் ஹரியின் வேற மாதிரி படம்

யானை – இயக்குநர் ஹரியின் வேற மாதிரி படம்

சினிமா, திரைச் செய்தி
அருண் விஜயும், இயக்குநர் ஹரியும் இணையும் யானை திரைப்படம், ஜுன் 17 அன்று வெளியாகவுள்ளது. ட்ரம்ஸ்டிக்ஸ் ப்ரொடக்ஷன்ஸ் சார்பாகத் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி S.சக்திவேல் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஹரி, “நானும், அருண் விஜயும் இணைந்து பணியாற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக விரும்பினோம். அது அமையவில்லை. இந்தக் கதை நாங்கள் இணைய மிக முக்கியமான காரணமாக இருந்தது. இந்த வாய்ப்பு அமைய காரணம் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி S.சக்திவேல் அவர்கள்தான். இந்தப் படம் பெரிய படம், பட்ஜெட் வகையில் இது அதிகம். இது உணர்வுகள் மிகுந்த கதை. ஒரு மனிதன் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்வான், அப்படியானவன் கோபப்படும் தருணம் எப்படி இருக்கும் என்பது தான் கதை. கடந்த 3 வருடங்கள் எனக்கு நிறைய கற்று கொடுத்தது. படத்தைக் கொஞ்சம் வேற மாதிரி எடு...