
வீரம் – பத்திரிகையாளர் சந்திப்பு
“அஜித் சார், கிராமத்துப் பின்னணில படம் பண்ணி நாளாச்சு. இது மலையாளப் படத் தழுவலோ, ரஜினியின் முரட்டுக்காளை படத் தழுவலோ இல்லை. அஜித் சாருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். அவரோட அந்த முகத்தை இந்தப் படத்தில் காட்டியிருக்கோம். படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. எல்லாத் தரப்பினருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் ஃபேமிலி என்ட்டர்டெயினராக இருக்கும்” என்றார் இயக்குநர் சிவா. “அஜித் சாரோடவும், ஷிவா சாரோடவும் இது எனக்கு முதல்படம்” என மகிழ்ச்சியில் இருக்கிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத். படத்தின் தீம் மியூசிக் படத்திற்கான எதிர்பார்ப்பை அடுத்த கட்டதிற்கு நகர்த்தியுள்ளதாக இயக்குநர் சிவாவும் இசையமைப்பாளருக்கு நன்றியினைச் சொல்லிக்கொண்டார்.“எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கும். எனக்கு அஜித் சார் படத்தில் வொர்க் பண்ணணும் என்பது தான் அந்தக் கனவு. அது நிறைவேறியதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கேன். 110 நாள் ஷூட்...