“13 வருட காத்திருப்பு” – மரியான் தனுஷ்
ஏ.ஆர்.ரஹ்மானுடன் முதல்முறையாக இணைகிறார் தனுஷ். அதைப் பற்றிக் குறிப்பிடுகையில், இது பதிமூன்று வருட காத்திருப்பு என்கிறார். 50 அடி ஆழக் கடலினுள் நடப்பது, நமீபியா பாலைவனங்களில் வெறும் காலுடன் நல்ல வெயிலில் நடப்பது என தனுஷை இயக்குநர் பரத்பாலா சக்கையாகப் பிழிந்துள்ளார்.
“எந்தப் படத்திற்கும் இவ்வளவு கஷ்டப்பட்டதில்லை. இனி பரத்பாலா படத்தில் நடிக்கவே கூடாது என முடிவு பண்ணேன். ஆனா இப்ப ரிசல்ட்டைப் பார்க்கிறப்ப, மீண்டும் அவர் படத்தில் நடிக்கணும்னு தோணுது. படத்தில் ஒரு சீனுல சிறுத்தை வரும். அது எப்படி எடுத்தாங்கன்னா.. சிறுத்தை ஓடிடக் கூடாதுன்னு பெரிய கூண்டு ஒன்னுப் போட்டுட்டாங்க. ஒன்னு இல்லை மூனு சிறுத்தை. சும்மா கொஞ்ச நேரம் எடுக்கல. காலையில் தொடங்கி மாலை வரை, ரொம்ப கஷ்டம். ‘சீக்கிரம் மறைஞ்சுடுப்பா’ என நான் சூரியனை வேண்டிக்கிட்டேன்.
கேமிராவைக் கூண்டுக்கு வெளில வச்சுட்டாங்...