32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

திரைச் செய்தி

1062 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 67 / 71
செய்திகள் வரிசை (பக்கம் 67)
விஷாலையும் கார்த்தியையும் இயக்கும் பிரபுதேவா சினிமா

விஷாலையும் கார்த்தியையும் இயக்கும் பிரபுதேவா

‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ எனும் படத்தில் விஷாலும் கார்த்தியும் முதல்முறையாக ஒன்றாக இணைந்து நடிக்கிறார்கள். சத்ரியன் முதலிய படங்களை இயக்கிய மறைந்த இயக்குநர் K.சுபாஷ், இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். இரட்டை எழுத்தாளர்களான சுபா வசனமெழுதுகின்றனர். இப்படத்தை ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ தனது ஐந்தாவது படமாகத் தயாரிக்கவுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இயையமைக்கிறார். இரண்டு நாயகர்கள் இணைந்து நடிக்கும் இப்படம், அமிதாப் பச்சனும் தர்மேந்திராவும் நடித்துப் பெரும்புகழ் ஈட்டிய ஹிந்திப் படமான “ஷோலே” போல் இருக்கும் எனப் படக்குழு நம்பிக்கை […]

11/04/2017 Dinesh R
இன்னும் உருப்படாமல்தான் இருக்கோம் – ராதாரவி சினிமா

இன்னும் உருப்படாமல்தான் இருக்கோம் – ராதாரவி

“சிவலிங்கா அபடத்தில் அழகா வர்றார் லாரன்ஸ். எப்பவும் அமைதியா தான் பேசுவார். ஆனா புரட்சி உள்ளம் படைச்சவர். இல்லைன்னா, ஒரு மனுஷன் ஜல்லிக்கட்டில் வந்து உட்காருவானா? நிறைய பேர் சொன்னாங்க, விளம்பரத்துக்காக வந்து உட்கார்ந்தார்னு. அவருக்கு விளம்பரம்லாம் தேவையில்ல! ‘கூட்டிக் கழிச்சுப் பாரு கணக்கு சரியா வரும். எங்கண்ணன் படத்தில் வரும் வசனம்’ என மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் ராகவா வசனம் பேசியிருப்பார். படம் ஃபுல்லா நான் சொல்லியிருப்பேன். அவர் ரஜினி ரசிகர்னு எனக்குத் […]

06/04/2017 Dinesh R
ரித்திகா சிங் – முதல் ஹீரோ சினிமா

ரித்திகா சிங் – முதல் ஹீரோ

“பாக்ஸராக இறுதிச்சுற்று படத்தில் அறிமுகமான ரித்திகா சிங்கைப் பார்த்தால் எனக்குக் கொஞ்சம் பயம். கையில் வித்தை வச்சிருக்காங்க எனச் சொன்னாங்க. நான் நேர்ல ரிங்லயே அதைப் பார்த்திருக்கேன். சிவலிங்கா படத்தில் தான் தைரியமாக அவங்க கூட நடிக்கிறேன். அவங்க நேச்சுரல் ஆர்டிஸ்ட். நதி போல். படத்தில் பிரமாதமா பண்ணியிருக்காங்க” என்றார் ராதாரவி. “எனக்குத் தெலுங்கில் ரவி தேஜா ரொம்ப பிடிக்கும். ரொம்ப எனர்ஜிட்டிக்கான நடிகர். அதே போல், ஹீரோயின்ஸ்ல ரித்திகா சிங் ரொம்ப பிடிக்கும். அவங்க ரொம்ப […]

03/04/2017 Dinesh R
சின்ன மாப்பிள்ளை 1995 டூ கொலையுதிர் காலம் 2017 சினிமா

சின்ன மாப்பிள்ளை 1995 டூ கொலையுதிர் காலம் 2017

நயன்தாரா நடிக்கும் ‘கொலையுதிர் காலம்’ படத்தை இயக்குகிறார் சக்ரி டோலெட்டி. இவர், ‘ உன்னை போல் ஒருவன்’ படமும், ‘பில்லா 2’ படமும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை  ‘பூஜா என்டர்டைன்மெண்ட்  & பிலிம்ஸ் லிமிடெட்’ என்ற நிறுவனம் இயக்குகிறது. வட இந்தியத் திரையுலகில், குறிப்பாக ஹிந்தித் திரையுலகின் தயாரிப்புத் துறையில் மிகப் பெரிய ஜாம்பவனாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் வாசு பக்னானி அவர்களின் நிறுவனம் அது. “சினிமா மீது எனக்குக் காதல் ஏற்பட முக்கிய காரணம், தமிழில் […]

01/04/2017 Dinesh R
முதல் கைதட்டல் – குறும்படப் போட்டி சினிமா

முதல் கைதட்டல் – குறும்படப் போட்டி

ஆயிரம் விருதுகள் கிடைத்தாலும், கலைஞர்களுக்கு கைதட்டல் என்பது தான் ஊக்க சக்தி. அதுவும் முதல் கைதட்டல் என்பது அவர்களுக்குக் கிடைக்கப் பெறும் முதல் அங்கீகாரம். அவர்களது நம்பிக்கையைப் பன்மடங்கு உறுதி செய்யும் தருணம் அது. தன் படைப்பு, பெருவாரியான மக்களைச் சென்று சேர்ந்துள்ளது என்ற உணர்வு தரும் சொல்லொன்னா பரவசத்திற்கு அளவுகோலே கிடையாது. அப்படி, இளம் படைப்பாளிகளைப் பரவசப்படுத்தும் முன்முயற்சியைத் தான் மூவி பஃப் (Movie Buff – First Clap) மேற்கொண்டுள்ளது. மூன்று நிமிடங்கள் காலளவு […]

14/03/2017 Dinesh R
என்னோடு விளையாடு – குதிரைப் பந்தயமும் சூதாட்டமும் சினிமா

என்னோடு விளையாடு – குதிரைப் பந்தயமும் சூதாட்டமும்

ரொமான்டிக் த்ரில்லர் வகைமையைச் சேர்ந்த ‘என்னோடு விளையாடு’ திரைப்படம், கெளதம் வாசுதேவ் மேனன் பாணியில் ‘ஸ்டலிஷான லவ்’ படமாக வந்துள்ளது எனச் சிலாகித்தார் படத்தின் எடிட்டர் கோபிகிருஷ்ணா. இவர், ‘வழக்கு எண்:18/9’, ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ போன்ற படங்களுக்குப் படத்தொகுப்பாளராக இருந்துள்ளார். இரண்டு லவ் ட்ராக், ஒரு சேஸிங் (chasing) ட்ராக் கொண்ட இப்படம், ‘தனி ஒருவன்’ போல் சுவாரசியமாக உள்ளதென நம்பிக்கையோடு தெரிவித்தார். படத்தில், பரத் – கதிர் என படத்தில் இரண்டு கதாநாயகன்கள். பரத்திற்கு […]

14/02/2017 Dinesh R
ரசிகர்களைச் சுமக்கும் வேதாளம் சினிமா

ரசிகர்களைச் சுமக்கும் வேதாளம்

இது வேதாளம் சொல்லும் கதை எனும் படத்தில் பல விசேஷங்கள் உண்டு. முதலாவதாக, க்ரெக் புரிட்ஜ் எனும் வெள்ளைக்கார வ்ரெஸ்ட்லர் ஸ்டன்ட் மாஸ்டராகப் படத்தில் பணியாற்றுவதோடு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்கிறார். முதல்முறையாக புரிட்ஜைப் பார்க்கும்போது, க்ரெக் தன் குழுவினருடன் உண்மையாகவே மல்யுத்தம் செய்வதாக நினைத்துள்ளார் இயக்குநர் ரதீந்தரன். புரிட்ஜ் உருவாக்கிய வ்ரெஸ்ட்லிங் டெக்னிக்களைக் கொண்டு, ‘ட்ரையல் ஆஃப் பிளட் (Trial of blood)’ எனும் குறும்படத்தை இயக்கியுள்ளார் ரதீந்தரன். நான்கு வருடங்களாகவே முழு நீள ஆக்‌ஷன் […]

11/02/2017 Dinesh R
அசாசின்ஸ் க்ரீட் – ஓர் அறிமுகம் அயல் சினிமா

அசாசின்ஸ் க்ரீட் – ஓர் அறிமுகம்

சில நூற்றாண்டுகளாகவே, இரண்டு ரகசிய குழுக்கள் இடையே துவந்த யுத்தம் நடந்து வருகிறது. இன்றளவும் அது தொடர்வதாக நம்பப்படுகிறது. அசாசின்ஸ் என்ற குழுவிற்கும், டெம்ப்ளர்ஸ் என்ற குழுவுக்கும் இடையே நிகழ்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மோதலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வீடியோ கேம் தான் ‘அசாசின்ஸ் க்ரீட்’. அசாசின் என்றால் மதம் அல்லது அரசியல் காரணங்களுக்காக முக்கியமான நபரைக் குறி வைத்துக் கொலை செய்யும் கொலைக்காரர் எனப் பொருள். ‘அசாசின்’ என்ற வார்த்தை உருவாவதற்கே ‘ஹஷாஷின்’ என்ற வடக்குப் […]

28/12/2016 Dinesh R
நண்பர்கள் – அன்புக்கு அடிமை சினிமா

நண்பர்கள் – அன்புக்கு அடிமை

லவ் ஃபெயிலியரான ஒருத்தனின் மூன்று பெஸ்ட் ஃப்ரெண்ட்கள் படும் அவஸ்தை தான் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ படத்தின் கதை. தில்லுக்கு துட்டு ‘லொள்ளு சபா’ ராம்பாலாவிடம் பணியாற்றிய மகேந்திரன் ராஜமணி இப்படத்தை இயக்குகிறார். ‘ஆக, நண்பர்கள் தான் நாயகனின் அடிமைகளா?’ என்ற கேள்விக்கு, “நண்பர்கள் அன்புக்கு அடிமை. நமக்காக எதுவும் செய்வார்கள் என்ற அர்த்தத்தில் தலைப்பை வைத்தோம். தலைவியிடம் (ஜெ.) சொல்லப்படும் இந்தப் பிரபலமான வசனத்தை எங்க கதைக்குத் தகுந்தாற்போல் உபயோகித்துக் கொண்டோம்” என்றார் மகேந்திரன் ராஜமணி. […]

27/12/2016 Dinesh R
பலே சசிகுமார் சினிமா

பலே சசிகுமார்

“மகளிர் மட்டும்-க்குப் பிறகு ஜாலியான சூழல் இருந்த படப்பிடிப்பு இங்கே தான் மீண்டும் அமைந்தது. டிமானிட்டைசேஷன், புயல், அம்மாவின் மறைவு என மக்கள் இந்த ஒரு மாதமாகப் பட்ட கஷ்டங்களை மறந்து குடும்பத்தோடு ரசித்து மகிழ நல்லதொரு காமெடிப் படம்” என்றார் சசிகுமாருக்கு அம்மாவாக நடித்துள்ள நடிகை ரோகினி. “அரிவாள், முரட்டு மீசை என ரத்தம் தெறிக்கிற சசிகுமாரைத் திரையில் பார்த்துட்டு, ‘நானோ காமெடி பீஸ்? எப்படி செட் ஆகும்?’ எனப் பயந்துக்கிட்டே ஷூட்டிங்கிற்குப் போனேன். ஆனா, […]

18/12/2016 Dinesh R
ஓர் அறை – தாயம் சினிமா

ஓர் அறை – தாயம்

தாயம் என்ற தமிழ்ப்படம், இந்தியாவின் முதல் சிங்கிள் ரூம் த்ரில்லராக எடுக்கப்பட்டுள்ளது. “நான் நிறைய ஹாலிவுட் படங்கள் பார்ப்பேன். சிங்கிள் ரூமில் எடுக்கப்பட்ட படங்கள் ஏராளமாய் ஹாலிவுட்டில் வந்திருக்கின்றன. என் படத்தில், எந்தக் காட்சியிலும் அந்தப் படங்களின் சாயல் வந்துவிடக் கூடாதென மிகக் கவனமாக இப்படத்தை எடுத்துள்ளேன்” என்றார் தாயம் படத்தின் இயக்குநர் கண்ணன் ரங்கசாமி. எட்டுக் கதாபாத்திரங்கள் ஓர் அறையில், நேர்க்காணலுக்காகக் கூடுகின்றனர். எதனை நோக்கி அந்த நேர்க்காணல் நகர்கிறது என்பதுதான் தாயம் படத்தின் கதை. […]

15/12/2016 Dinesh R
பார்க்க தோனுதே – இசை வெளியீட்டு விழா சினிமா

பார்க்க தோனுதே – இசை வெளியீட்டு விழா

“தோனுதேக்கு மூணு சுழியில்ல வரணும். ரெண்டு சுழிதான் தலைப்புல இருக்கு. ஏதாச்சும் அதன் மூலமா இயக்குநர் சொல்ல வர்றார் போல! படத்தைப் பார்க்கணும்னு தோணுது” என்றவர், தனது பாணியில் இறுதி பன்ச்சாக, “கூட்டமில்லா ஏ.டி.எம். பார்க்கத் தோணுதே! தியேட்டரில் கூட்டம் பார்க்கத் தோணுதே!” என தன் உரையை முடித்துக் கொண்டார் ‘போங்கு’ பட நாயகன் நட்டி. ‘பார்க்க தோனுதே’ படத்தின் ஒளிப்பதிவாளர் ஜி.ரமேஷ், நட்டியின் உதவியாளர் ஆவார். ‘பார்க்க தோனுதே’ படத்தின் இயக்குநர் ஜெய்செந்தில்குமாரை அருகில் அழைத்து, […]

01/12/2016 Dinesh R
பூனைக்குள் ஆவி – மியாவ் சினிமா

பூனைக்குள் ஆவி – மியாவ்

“பூனையைப் பிரதான கதாபாத்திரமாகக் கொண்டு இந்திய அளவில் எடுக்கப்பட்டிருக்கும் முதற்படம் இது தான்” எனப் பெருமிதப்படுகிறார் ‘மியாவ்’ படத்தின் இயக்குநர் சின்னாஸ் பழனிச்சாமி. இவரொரு விளம்பரப் பட இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பெண்ணைச் சீரழித்து விடுகின்றனர் இளைஞர்கள் சிலர். அந்தப் இளம்பெண்ணின் ஆவி பூனைக்குள் புகுந்து கொண்டு அவர்கள் அனைவரையும் பழி வாங்குகிறது. அவ்விளைஞர்கள் ஒவ்வொருவரையும், புதுப் புது விதமாகப் பழி வாங்குவதுதான் படத்தின் சுவாரசியம் என்கின்றனர். ஹரார் படம் தான் என்றாலும், குழந்தைகளை மகிழ்விக்கும் […]

29/11/2016 Dinesh R
மேஜர் கெளதமின் டைமிங் தலைப்பு சினிமா

மேஜர் கெளதமின் டைமிங் தலைப்பு

ப்ரேக் டான்ஸராக இருந்து நடிகராக மாறிய ‘மேஜர்’ கெளதம் தற்போது இயக்குநர் அவதாரம் பூண்டுள்ளார். ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், அனைவரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள இந்நேரத்தில் ‘மேஜர்’ கெளதமும் அவரது குழுவும் மட்டும் மகிழ்ச்சியாக உள்ளனர். காலத்தின் அவசியம் உணர்ந்த வைக்கப்பட்டது போல், “கண்ல காச காட்டப்பா” என அவர்களின் படத் தலைப்பு அமைந்துவிட்டதே அதற்குக் காரணம். தலைப்பு மட்டுமன்று, படத்தின் கருவும் கறுப்புப் பணத்தை மையப்படுத்தியே! படத்தைப் பார்த்து விட்ட இயக்குநர் வெங்கட் பிரபு, […]

17/11/2016 Dinesh R
இதுவரை வந்திராத கதை – சாயா படம் சினிமா

இதுவரை வந்திராத கதை – சாயா படம்

“இதுவரை தமிழ்ப்படங்களில் சொல்லப்படாத வித்தியாசமான கதை” என்பதில் மிக உறுதியாக உள்ளார் சாயா படத்தின் இயக்குநர் வி.எஸ்.பழனிவேல். ஒவ்வொரு மனிதனைச் சுற்றியும் மின்காந்த அலைகள் இருக்கும்; அதை ஆரா என்பார்கள்; ஆராவின் ஒளியைக் கொண்டே, உடலிலுள்ள நோயினை அறிய முடியுமெனப் படத்தைப் பற்றிக் கூறும் பொழுது இயம்பினார் இயக்குநர். இந்தப் படத்தின் நாயகன், மனிதர்களைச் சுற்றி இருக்கும் ஆராவைக் காணக் கூடிய சக்தி பெற்றவர் என படத்தின் ட்ரெயிலரில் இருந்து யூகிக்க முடிகிறது. நாயகன் இறந்தவர்களுக்கே உயிர் […]

14/11/2016 Dinesh R