
திருமணம் எனும் நிக்காஹ் – இசை வெளியீட்டு விழா
‘திருமணம் எனும் நிக்காஹ்’ நகைச்சுவை கலந்த காதல் படம். இந்து மத மற்றும் இஸ்லாம் மத திருமணச் சடங்குகளும் கலாச்சாரங்களும் படத்தில் அதன் அழகியலோடு பதியப்பட்டுள்ளதாம்.“படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம்னு யோசிச்சப்ப.. ‘நிக்காஹ் எனும் திருமணம்’ என்ற வீட்டிலிருந்த இன்விடேஷனில் பார்த்தேன். கொஞ்சம் உல்டா பண்ணி ‘திருமணம் எனும் நிக்காஹ்’ என மாத்திட்டேன். இந்தப் படத்தில் ஒரு அரசியல் வச்சிருக்கோம். அதாவது சகோதரத்துவத்துடன் இருவரும் இருக்கலாம் என்பதை.. ரொம்ப சிக்கலாக புனித நூல் கொண்டுலாம் சொல்லாமல் திருமணத்தில் வைக்கப்படும் உணவை வச்சியே சொல்லியிருக்கோம் ” என்றார் இயக்குநர் அனிஸ்.“இரண்டு கலாச்சாரங்களை இசையால் பிரதிபலிக்க ரீ-சர்ச் பண்ணி இந்தப் படத்திற்கு மியூசிக் பண்ணியிருக்கேன். அதனால இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்” என்றார் இசையமைப்பாளர் ஜிப்ரான். மேலும் இப்படத்தின் ஒளிப்பதிவாளரான லோகநாதனைப் பரி...








