சமூகம்ஜெயலலிதா பிறந்தநாளில் உருக்கமாக அமைச்சர் எழுதிய கடிதம்
எல்லா விதைகளும் விருட்சம் ஆவதில்லை விருட்சங்கள் எல்லாம் நிழல் தருவதில்லை… எங்களின் போதி மரமே! உங்களை வணங்குகிறேன்… வேதா இல்லம் எங்கள் முகவரி மட்டுமல்ல; இந்த தேசத்தின் முகவரி! வீரம் உங்களிடம் விலாசம் கேட்கும் விவேகம் உங்களிடம் யாசகம் கேட்கும்… மக்களால் நான்; மக்களுக்காகவே நான்… வெறும் வார்த்தையல்ல, வாழ்க்கை! “இதய தெய்வம்” உதடுகளின் வார்த்தையல்ல உள்ளத்தின் உணர்ச்சி ஊற்று! எதிர்ப்பவர்களுக்கு நீங்கள் சிம்ம சொப்பனம்; எளியோர்கள் அமரும் அரியாசனம். கோபுரங்களைக் காட்டிலும் குடிசைகளை விரும்பியவர் நீங்கள். […]














