32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சமூகம்

193 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 6 / 13
செய்திகள் வரிசை (பக்கம் 6)
மத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை சமூகம்

மத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை

தமிழகத்தில் கொரானா வைரஸ் தொற்றைத் தடுக்க மார்ச் 19 அன்று திரையரங்குகளை மூடத் தமிழக அரசு உத்தரவிட்டது. மார்ச் 31 முதல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு தமிழகத்தில் இன்றுவரை சில மாற்றங்களுடன் தொடர்ந்து வருகிறது. கொரானோ தொற்றுப் பரவலைப் பொறுத்து, சிறு மற்றும் குறுந்தொழில்கள் அத்தியாவசிய பொருட்களை உற்பத்திச் செய்யும் தொழிற்சாலைகள் என எல்லாத் தொழில்களையும் நடத்துவதற்குத் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. முதலில் மூடப்பட்ட தனித்திரையரங்குகள், மால், மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கு […]

01/06/2020 Dinesh R
“சினிமாவின் அடுத்த கட்டம் ஓடிடி (OTT)” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா சமூகம்

“சினிமாவின் அடுத்த கட்டம் ஓடிடி (OTT)” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா

திரையரங்கு உரிமையாளர்களின் கடும் அதிருப்திக்கும், கோபத்திற்கும் இடையில், “பொன்மகள் வந்தால்” படம் அமேசான் ப்ரைமில் மே 29 அன்று வெளியாகவுள்ளது. ஓடிடி என்பது சினிமாவிற்கு மாற்றா, இல்லை சினிமா என்பதே தியேட்டரில் பார்த்து மகிழும் ஓர் அனுபவம், அதற்கு எந்தப் பாதிப்பும் மாறாது என விவாதங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜோதிகா தனது படத்தைப் பற்றியும், ஓடிடி பிளாட்ஃபார்ம் குறித்தும் பேசியுள்ளார். “எங்களுடைய நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் போது வசதியாக […]

25/05/2020 Dinesh R
புற்றுநோயியல் நிபுணரின் லாக்டவுன் நேரச்சேவை சமூகம்

புற்றுநோயியல் நிபுணரின் லாக்டவுன் நேரச்சேவை

பா.ஜ.க.வின் மருத்துவக் கிளை உறுப்பினரான புற்றுநோயியல் நிபுணரான மருத்துவர் அனிதா ரமேஷ், வட சென்னை கிழக்கு பகுதியின் தலைவர் திரு. கிருஷ்ண குமார் மற்றும் மத்திய சென்னை மேற்கு பகுதியின் தலைவர் திரு. தனசேகரன் மூலமாக, ஏழ்மையில் வாடும் தினக்கூலித் தொழிலாளர்களுக்கு, மளிகைப் பொருட்களை (Modi kit) வழங்கினார். இந்நிவாரணப் பணியை, பா.ஜ.க.வின் மாநில தலைவர் டாக்டர் L. முருகன் அவர்களின் வழிகாட்டுதலின் படி, சென்னை மண்டலத்தின் பொறுப்பாளரான திரு. காளிதாஸ் முன்னின்று ஒருங்கிணத்தார். நிவாரணப் பொருட்கள்: […]

18/05/2020 Dinesh R
வாத்துகள் – இயற்கையின் பெருங்கொடை கட்டுரை

வாத்துகள் – இயற்கையின் பெருங்கொடை

நீரிலும், நிலத்திலும் வாழும் பறவை இனம் இந்த மல்லார்ட் வாத்துகள். பனிக்காலத்தில் உறைந்த குளங்களின் மேல் வழுக்கிக் கொண்டு நடந்து செல்வதும், கூட்டமாக நெருங்கி நின்று பனிக்காற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதும், சில பறவைகள் தெற்கு நோக்கிப் பறந்து போவதுமாய்க் கடும் குளிர், பனி, வெயில், மழையிலிருந்து இவர்களின் வாழ்க்கை முழுவதற்கும் அதன் இறக்கைகளே கவசங்களாக இருக்கிறது. ஆறுகள், ஏரி, குளங்களென நீர்நிலைகள் தோறும் இவற்றைக் காண முடிகிறது. பல வண்ணங்களில் பெண் வாத்துகளைக் கவரும் வண்ணம் வசீகரமாக […]

15/04/2020 Dinesh R
எழுதாப் பயணம் – ஒரு போராட்ட வீரரின் கள அறிக்கை கட்டுரை

எழுதாப் பயணம் – ஒரு போராட்ட வீரரின் கள அறிக்கை

ஒரு ஆட்டிசக் குழந்தையின் அம்மாவாக, சிறப்புக் குழந்தைகளின் ஆசிரியையாக, தனது அனுபவங்களை அழகாகத் தொகுத்து, ‘எழுதாப் பயணம்’ எனும் நூலை எழுதியுள்ளார் லக்‌ஷ்மி பாலகிருஷ்ணன். இந்நூலின் சிறப்பம்சம், எவருக்கும் புரியும்படியாக எழுதப்பட்டுள்ள ரொம்ப எளிமையான மொழிநடையே ஆகும். சமூகத்தில், ஆட்டிசம் பற்றிய போதுமான விழிப்புணர்வு இல்லை. அது ஏற்படுவதற்கு முன்பாகவே, அதை வைத்துச் சம்பாதிக்க சிலர் தொடங்கிவிட்டனர். நம் மக்களின் அறியாமை மேல உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையில், ஆட்டிசத்துக்குத் தீர்வு உண்டு என மக்களை நம்ப […]

14/04/2020 Dinesh R
யூனிவர்செல் லைவ் ரேடியோ – இசைப் பிரியர்களுக்காக! சமூகம்

யூனிவர்செல் லைவ் ரேடியோ – இசைப் பிரியர்களுக்காக!

இசைக்கு மயங்காத உள்ளம் உண்டோ? அனைத்து இதயங்களிலும் ஏதேனும் ஒரு பாடலாவது அவர்களது மனதை வருடியிருக்கும். அப்படிப்பட்ட இசைப் பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி. அமெரிக்காவைச் சார்ந்த யூனிவர்செல் லைவ் ரேடியோ என்ற தனியார் வானொலி நிறுவனம் தமிழிலும் களம் இறங்குகிறது. தகுந்த உரிமம் பெற்ற இந்நிறுவனம், மக்களிடம் எளிதில் சென்றடைய வெப் மற்றும் மொபைல் ஆப்பின் மூலமாக தங்கள் சேவையைத் துவக்கியுள்ளது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்தச் சேவையைத் துவக்கி வைத்தார். இதற்காக அந்தக் குழுவினர் […]

20/02/2020 Dinesh R
தூத்துக்குடியில் 49000 கோடி முதலீடு – அல் க்யுப்லா அல் வாடயா நிறுவனம் சமூகம்

தூத்துக்குடியில் 49000 கோடி முதலீடு – அல் க்யுப்லா அல் வாடயா நிறுவனம்

சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த மாதம் 20ஆம் தேதி, தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்  நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. குறிப்பாகத் தென்மாவட்டங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழில் நிறுவனங்கள் மூலம் முதலீடுகளை அதிகரிக்கவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து, தூத்துக்குடியில்  ரூ. 49,000 கோடி முதலீட்டில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க குவைத் நாட்டில் செயல்பட்டுவரும் அல் க்யுப்லா அல் வட்யா […]

18/02/2020 Dinesh R
“பிரதான் மந்திரி ஜன் கல்யாண்காரி யோஜனா” – ஜெய் கணேஷ் சமூகம்

“பிரதான் மந்திரி ஜன் கல்யாண்காரி யோஜனா” – ஜெய் கணேஷ்

நம்மவர் மோடி பைக் ரேலி முன்னோட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் நியமன கூட்டத்தால் கேளம்பாக்கத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்! பிரதான் மந்திரி ஜன் கல்யாண்காரி யோஜனா பிரசார் பிரசார் அபியான் PMJKYPPA (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) நடத்தும் ‘நம்மவர் மோடி’ இரு சக்கர வாகன ஊர்வலம் முன்னோட்டம். பிரதான் மந்திரி ஜன் கல்யாண்காரி யோஜனா பிரசார் பிரசர் அபியான் அமைப்பின் சென்னை மற்றும் காஞ்சிபுரம் நிர்வாகிகளை அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜெய் கணேஷ் […]

28/01/2020 Dinesh R
அம்மாவும் நானும் – உணவில் பரிமாறப்படும் அன்பு சமூகம்

அம்மாவும் நானும் – உணவில் பரிமாறப்படும் அன்பு

தமிழில் உணவு, உணவுகளின் செய்முறை , பழமையான உணவுகளின் நினைவுகள், பழங்கால உணவு பழக்கங்கள் ஆகியவற்றைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியைப் பிரபல உணவு ஆராய்சியாளரும், மிகச் சிறந்த செஃப்புமாகிய ராகேஷ் ரோஷன் தொகுத்து வழங்க “அம்மாவும் நானும்” எனும் பெயரில்  வெப் சீரிஸ் ஒன்று உருவாகியுள்ளது.   உணவு  தயாரிக்கும் துறையில் மிகவும் பிரபலமாக விளங்குபவர் ராகேஷ். உணவு பற்றிய நிகழ்ச்சிகளான ‘Dakshin Diaries for Living Foodz’ & நியூஸ் 7 தொலைக்காட்சியின் ‘சுற்றலாம் சுவைக்கலாம்’ […]

19/10/2019 Dinesh R
ஃப்ராவ்லியன் ஃபேஷன் வாரம் – விவசாயிகளின் நலனுக்காக.. சமூகம்

ஃப்ராவ்லியன் ஃபேஷன் வாரம் – விவசாயிகளின் நலனுக்காக..

ஃபேஷன் உலகில் தலைசிறந்த முன்னணி அமைப்பாக விளங்கும் ப்ராவோலியன் எவென்ட்ஸ் (PRAAWOLION EVENTZ) சென்னையில் சமூக நல நோக்கத்துடன் மிகப்பெரும் ஃபேஷன் ஷோ “PRAWLION FASHION WEEK” ஒன்றை சென்னையில் அரங்கேற்றுகிறது. ஃபேஷன் உலகின் மிகப்பெரும் டிசைனர்கள், திறமையாளர்கள் கலந்து கொள்ளும் இவ்விழா விவசாயிகளின் நலனை முன்னிட்டு நடத்தப்படுகிறது. இதனை முன்னிட்டு ஷோ நடத்தும் அமைப்பாளர்கள் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். நடிகர் பிரபாகரன் PC, “ஃபேஷன் உலகைப் பொறுத்தவரை சென்னை எப்போதும் திறமையாளர்களுக்கு முக்கியமான தளமாக இருக்கிறது. இங்கு […]

18/10/2019 Dinesh R
45வது மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி சமூகம்

45வது மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி

புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான், ‘தி ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப்’ என்ற அமைப்பை நிறுவி நடத்தி வருகிறார். இந்த அமைப்பும், தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கமும் இணைந்து நடத்திய மாநில அளவிலான 45 ஆவது துப்பாக்கி சுடுதல் போட்டி, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள ஆவாரங்குடிபட்டியில் உள்ள புதுக்கோட்டை மகாராஜா துப்பாக்கி சுடும் தளத்தில் செப்டம்பர் 29 ஆம் தேதி தொடங்கியது. போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 275-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து […]

06/09/2019 Dinesh R
வசீகரிக்கும் பாப் சிங்கர் ஹிதா சமூகம்

வசீகரிக்கும் பாப் சிங்கர் ஹிதா

கலிஃபோர்னியாவில் புகழ் பெற்ற பாப் பாடகியான ஹிதா தன் இசையின் மூலம் கலிபோர்னிய மக்களை தன் வசம் ஈர்த்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான இவரின் பூர்வீகம் கர்நாடகம் ஆகும். 14 வயதான இவருக்கு, முக்கியமாக இவரின் குரலுக்கு கலிஃபோர்னிய மக்கள் அடிமை என்றே சொல்லலாம். ஹிதாவின் பாடல்களை வலைதளத்தில் கண்டு ரசித்த குவியம் மீடியா ஒர்க்ஸ் யோகேந்திரன் ஹிதாவை அணுகி சென்னையில் ஒரு பாப் இசை நிகழ்ச்சி நடத்தி தருமாறு கோரிக்கை வைக்தார். அதை ஏற்றுக் கொண்டு, […]

20/08/2019 Dinesh R
சென்னை திருமங்கல ரக்க்ஷகர்களுக்கு  ராக்கி சமூகம்

சென்னை திருமங்கல ரக்க்ஷகர்களுக்கு ராக்கி

மெட்ராஸ் மெட்ரோபாலிடன் ரெளண்ட் டேபிள் 95 மற்றும் மெட்ராஸ் மெட்ரோபாலிடன் லேடிஸ் சர்க்கிள் 70 -இன் உறுப்பினர்கள், இன்று திருமங்கலம் காவல் நிலையத்திற்குத் தங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்றனர். “எங்கள் குழந்தைகளுடன் திருமங்கலம் காவல் நிலையத்தைப் பார்வையிட்டோம். 24/7 எங்களைப் பாதுகாக்கும் காவல்துறையினர் தான் எங்களுக்கு உண்மையான ரக்‌ஷகர்கள் என்ற உண்மையை நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு வலியுறுத்தினோம். நாங்கள் அங்குள்ள 50 காவல்துறையினர்க்கு ராக்கிகளைக் கட்டி இனிப்புகளை விநியோகித்தோம். இன்ஸ்பெக்டர் திரு.ரவி குழந்தைகளுக்குக் காவல் நிலையத்தைச் சுற்றிக் […]

19/08/2019 Dinesh R
லிடியன் நாதஸ்வரம் – ஓர் இசைப் பிரவாகம் சமூகம்

லிடியன் நாதஸ்வரம் – ஓர் இசைப் பிரவாகம்

ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் இந்தியன் பப்ளிக் ஸ்கூல், குழந்தைகளுக்கென பிரத்தியேக செய்தி மற்றும் கலை, புகைப்படத் திறமையை ஊக்குவிக்கும் இரண்டு புதிய முயற்சிகளை ஆகஸ்ட் 6 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்தது. கிட்ஸ் நியூஸ் மற்றும் அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி என்ற இரு புதிய முயற்சிகளை உலக மேடையில் புகழ்பெற்ற லிடியன் நாதஸ்வரம் துவங்கி வைத்தார். அறிமுக நிகழ்வைத் தொடர்ந்து லிடியன் நாதஸ்வரம் பள்ளி மாணவர்களுடன் உரையாடி, அவர்களின் கேள்விக்கு அற்புதமாக […]

08/08/2019 Dinesh R
பிக் பாஸ் 3 – நாள் 20 சமூகம்

பிக் பாஸ் 3 – நாள் 20

பளபளவென கமல் என்ட்ரி கொடுத்தார். வீட்டில் இருப்பவர்கள் நடந்து கொள்வதைப் பற்றி ஒரு முன்னுரை கொடுத்துவிட்டு, வெள்ளி நிகழ்வைப் பார்க்கலாமென அழைத்துக் கொண்டு போனார். காலை 8 மணி ‘சொடக்கு மேல சொடுக்கு போடுது’ எனும் பாடலுடன் விடிந்தது அன்றைய நாள். முதல் டாஸ்க்: வனிதா கிண்டர் கார்டன் ஸ்கூல் டீச்சராக, மற்ற ஹவுஸ்மேட்ஸ்க்குப் பாடம் நடத்தவேண்டும். அலோ பிக்பாஸ், கிரியேட்டிவ் டீம்ல இருக்கிறவர்களுக்குத் தண்டத்துக்குச் சம்பளம் கொடுக்கறீங்க. கன்டென்ட் இல்லேன்னா சோஷியல் மீடியால கேளுங்க. சூப்பரான […]

14/07/2019 Dinesh R