ஆர்யா கலந்து கொண்ட ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ திறப்பு விழா
ஓ எம் ஆர் என்று குறிப்பிடப்படும் பழைய மகாபலிபுரம் சாலையில் ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ எனும் உடற்பயிற்சி கூடம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதன் திறப்பு விழாவில் நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.இன்றைய இளைய தலைமுறையினர் தங்களது உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க நேரத்தை ஒதுக்கி வருகிறார்கள். அதிலும் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் இளைய தலைமுறையினர் தாங்கள் பணியாற்றும் அல்லது தங்கியிருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று தங்களை உடல் ஆரோக்கியத்திற்கான உடற்பயிற்சிகளை செய்வதில் பெருவிருப்பம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.இந்நிலையில் தகவல் தொழில்நுட்ப துறையை சார்ந்த நிறுவனங்கள் அதிகளவில் இருக்கும் ஓஎம்ஆர் சாலையில் சர்வதேச தரத்துடன் கூடிய ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ எனும் ஜிம் தொடங்கப்பட்டிருக்கிறது.இதன் திறப்பு விழாவில் காவல்துறை...