
கூரன் விமர்சனம்
கூரன் என்றால் கூர்மையான அறிவை உடையவன் எனப் பொருள் கொள்ளலாம். ஆனால், இப்படத்தில் கூர்மையான அறிவைக் கொண்டுள்லதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது ஒரு பெண் நாயாகும்.
தன் குட்டியைக் காரில் மோதிக் கொல்லுபவனுக்கு எதிராக வழக்கு தொடுக்கிறது ஜான்சி எனும் நாய். நாயின் அந்த வேதனையைப் புரிந்து, நாயின் சார்பாக வழக்காடுகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். நாய்க்கு நீதி கிடைத்ததா என்பதே படத்தின் கதை.
கொஞ்சம் நம்ப முடியாத கதை என்றாலும், திரைக்கதையின் மூலமாகப் பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்ளும்படி படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. திரைக்கதை, வசனமெழுதி நடித்துள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர். அவரை ‘குருவே’ என்றழைத்துக் கொண்டு அவரது வீட்டில் வளர்கிறார் இந்திரஜா. சந்திரசேகர் இந்திரஜாவை எப்பொழுதுமே ‘குண்டம்மா’ என்றே அழைக்கிறார். பெட்டிக்கடையில் ஒருவன் இந்திரஜாவின் உடலைக் கேலி செய்யும் விதமாகப் பேசி, ‘குட்டி யானை’ எனும் விளிக்கும்பொழுது, அவன...