Shadow

Tag: சந்தோஷ் நாராயணன்

”நீயே ஒளி இசைநிகழ்ச்சியின் தொடக்கத்தை யாரும் தவறவிட வேண்டாம்” – சந்தோஷ் நாராயணன்

”நீயே ஒளி இசைநிகழ்ச்சியின் தொடக்கத்தை யாரும் தவறவிட வேண்டாம்” – சந்தோஷ் நாராயணன்

இது புதிது
‘அட்டக்கத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசை கலைஞர் சந்தோஷ் நாராயணன். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் கிட்டத்தட்ட ஐம்பது படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழ் ரசிகர்களிடம் தனித்துவமான இசைகலைஞர் என்ற அடையாளத்தைப் பெற்றிருக்கும் சந்தோஷ் நாராயணன்.. முதன்முதலாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‘நீயே ஒளி’ எனும் பெயரில் இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்.இது தொடர்பாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன் போது இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் துணை மேலாளர் விஜய்குமார், இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான ‘மேக்கிங் மொமெண்ட்ஸ்’ அர்ஜுன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதன் போது சந்தோஷ் நாராயணன் பேசியதாவது...உலகளவில் இசைநிகழ்ச்சி என்றால் திறந்தவெளியில் ஆயிரத்திற்கு ம...
‘சைந்தவ்’  திரைப்படத்தின்  கதாபாத்திர  அறிமுக  காணொளி  வெளியீடு

‘சைந்தவ்’  திரைப்படத்தின்  கதாபாத்திர  அறிமுக  காணொளி  வெளியீடு

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் 75வது படமாக உருவாகி வரும்  திரைப்படம் “சைந்தவ்”. இப்படத்தை Hit  Series திரைப்படங்களை இயக்கிய சைலேஷ் கொலனு இயக்குகிறார்.  வெங்கட் போயனப் பள்ளி மற்றும் நிஹாரிகா எண்டர்டெயின்மெண்ட் கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தின் உச்ச கட்ட காட்சியை எட்டு முக்கியமான நடிகர்கள் பங்கேற்க படப்பிடிப்பு நடத்தி முடித்திருப்பதாக தகவல்கள் சமீபத்தில் வெளியானது.அதைத் தொடர்ந்து இன்று சுதந்திர தினத்தினை முன்னிட்டு “சைந்தவ்” படக்குழுவினர் ஒரு காணொலி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக விளங்கும் வெங்கடேஷ், நவாசுதீன் சித்திக், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா,  ருஹானி சர்மா, சாரா, ஜெயப்பிரகாஷ் ஆகிய எட்டு பேரும் ஒரு பாலத்தில் இரவு நேரத்தில் நடந்து வருவது போன்ற காட்சி வெளியாகியுள்ளது.  திரைப்படத்தில் இந்த எட்டு பேரைச் சுற்றித் தான் ...
 “சைந்தவ்” – உணர்ச்சிகரமான க்ளைமாக்ஸ் காட்சி

 “சைந்தவ்” – உணர்ச்சிகரமான க்ளைமாக்ஸ் காட்சி

சினிமா, திரைச் செய்தி
Hit 1, 2,3 திரைப்பட வரிசை மூலம் புகழ் பெற்ற இயக்குநரான சைலேஷ் கொளனு இயக்கத்தில், ஷியாம் சிங்க ராய் படத்தைத் தயாரித்த  வெங்கட் போயனப்பள்ளியின் தயாரிப்பு நிறுவனமான நிஹாரிகா தயாரிப்பு நிறுவனத்தின் மூலம்  வெங்கடேஷ், நவாசுதீன் சித்திக், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ருஹானி சர்மா, சாரா மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் “சைந்தவ்”.முதன்முதலாக வெங்கடேஷ் நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகிவரும் இத்திரைப்படம், நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் 75வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. “சைந்தவ்” திரைப்படத்தை நிஹாரிகா எண்டர்டெயின்மெண்ட் மிகப் பெரும் பொருட்செலவில் எந்தவொரு சமரசமும் இன்றி உருவாக்கி வருகிறது.சமீபத்தில் “சைந்தவ்” படத்தின் உணர்ச்சிகரமான க்ளைமாக்ஸ் காட்சியை 8 முக்கிய நடிகர்களை உள்ளடக்கி கடுமையான சூழ்நிலைக்கு மத்தியில் 16 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி, முடித்து வெற்றிகரமாக ...
மாரி செல்வராஜ் தயாரிப்பில் ‘வாழை’ சிறுவர் திரைப்படம்

மாரி செல்வராஜ் தயாரிப்பில் ‘வாழை’ சிறுவர் திரைப்படம்

இது புதிது, சினிமா, திரைத் துளி
Navvi Studios நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar மற்றும் Navvi Studios வழங்கும், “வாழை” திரைப்படம் இன்று இனிதே துவங்கியது. இப்படத்தினை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை நடிகரும் தயாரிப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் க்ளாப் அடித்துத் துவக்கி வைத்தார். தமிழ்த் திரையுலகில் முதல் படத்திலேயே அழுத்தமான படைப்பாளியாக அனைவராலும் பாராட்டப்பட்ட இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து, தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் “மாமன்னன்” படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜ், அவரது நான்காவது திரைப்படமாக “வாழை” படத்தை, அவரே தயாரித்து இயக்குகிறார்.  தற்போது நடிகர் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் “மாமன்னன்” படத்தின் பணிகள் ...
குலுகுலு விமர்சனம்

குலுகுலு விமர்சனம்

இசை விமர்சனம், இது புதிது, சினிமா
மேயாத மான், ஆடை படங்களை இயக்கிய ரத்னகுமாரின் அடுத்த படைப்பு. ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபட்ட ஜானராகவே தன் படங்களைக் கொடுத்து வருகிறார். இம்முறை, மிகவும் மாறுபட்ட நகைச்சுவைப் படத்தை இயக்கி அசத்தியுள்ளார். அமேசான காடுகளில் வசிக்கும் ஓர் இனக்குழுவில் பிறந்த மாரியோ, பல நாடுகள் பயணித்து, பதிமூன்று மொழிகள் கற்று தமிழகத்தில் வாழ்ந்து வருகிறார். வாழ்க்கை முழுவதும் பயணமும், அதனால பலவற்றைப் பற்றிய ஞானத்தினையுடைய மாரியோ, அனைத்தும் தெரிந்தவர் என்ற பெயரில் கூகுள் என அழைக்கப்படுகிறார். அதுவும் மழுவி குலுபாய் என்றும் அழைக்கப்படுகிறார். யாரெந்த உதவி கேட்டாலும் செய்யக் கூடியவரான குலுபாயிடம், கடத்தப்படும் தன் நண்பனைக் கண்டுபிடிக்கச் சொல்லி உதவி கேட்கிறார்கள் மூன்று இளைஞர்கள். பிரான்ஸில் இருந்து வரும் மதில்டா எனும் இளம்பெண்ணை, அவளது அண்ணன்மார் இருவர் கொலை செய்யத் துரத்துகின்றனர். தன் தம்பியை விடுவிக்க, க...
நண்பேன்டா பார்த்தாவின் ‘குலுகுலு’ – உதயநிதி ஸ்டாலின்

நண்பேன்டா பார்த்தாவின் ‘குலுகுலு’ – உதயநிதி ஸ்டாலின்

சினிமா, திரைச் செய்தி
சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ராஜ் நாராயணன் தயாரிப்பில், மேயாத மான் படப்புகழ் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “குலுகுலு”. ஜூலை 29 அன்று படம் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர், திரைப்பிரபலங்கள் கலந்துகொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு, ஜூலை 22 அன்று மாலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், “நான் வேலை பார்த்த படங்களில் இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்தமான படம். இயக்குநரிடம் ஒரு புத்துணர்வான எழுத்து வடிவம் இருக்கிறது. என்னை இந்தப் படத்தில் சுதந்திரமாக வேலை பார்க்க அனுமதித்தார். ரத்னகுமாருக்குத் தமிழ் சினிமாவில் பெரிய இடம் இருக்கிறது. இந்தப் படத்தை வெளியிட முடிவு செய்த உதயநிதி சாருக்கு நன்றி. சந்தானம் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இந்தப் படம் எனது இண்டிபெண்ட...
வடிவேலு @ லண்டன் | நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்

வடிவேலு @ லண்டன் | நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்

சினிமா, திரைச் செய்தி
வைகைப் புயல் வடிவேலு நடிப்பில் தயாராகி வரும் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்திற்காக, அப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் லண்டனில் பாடல்களை உருவாக்கி வருகிறார். இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இதில் 'வைகைப்புயல்' வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் 'குக் வித் கோமாளி' புகழ் நடிகை சிவாங்கி, 'டாக்டர்' படப் புகழ் நடிகர் கிங்ஸ்லி, ஆனந்த்ராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் இந்தப் படத்தின் தொடக்க விழா அண்மையில் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து படத்திற்கு இசையமைக்கும் பணிகள் தொடங்கின. வடிவேலுவுடன் பல நாய்களும் பிரதான வேடத்தில் நடித்திருப்பதா...
கர்ணன் விமர்சனம்

கர்ணன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
"என்னத்துக்கு பழங்கதைகள் எல்லாம் பேசிக் கொண்டு? முன்பு இப்படியான சாதியக் கொடுமைகள் நடந்திருக்கும். இப்போ அப்படியில்லை தானே? அதைச் சொல்லிக் காட்ட வேண்டிய அவசியமென்ன?" என்ற கேள்வியைக் கடக்காமல், இந்தப் படத்தைப் பார்க்கச் சுற்றம் சூழத் திரையரங்கிற்குச் செல்பவர்கள் பாக்கியசாலிகள். ஏன் சுதந்திர தினம் கொண்டாடுகிறோம்? நாம் ஆங்கிலேயரிடம் அடிமைகளாக இருந்தோம் என்பதை நினைவுப்படுத்தி நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளவா? இல்லை. எதேச்சதிகாரம், காலனிய ஆட்சியின் அடக்குமுறை, சுதந்திரத் தாகம், சுதந்திரத்துக்காகப் போராடிய மக்களின் எழுச்சி, அவர்களின் வீரம் என சுதந்திர தினம் அடுத்த தலைமுறைக்குச் சொல்லும் செய்திகள் முக்கியமானவை. முன்னோர் பெருமையைப் பழங்கதையாகப் புறக்கணிக்காமல், வாட்ஸ்-அப்பில் ஃபார்வேர்ட் செய்து மகிழ்ச்சியடையும் ஒரு சமூகத்திற்கு, முன்னோர்கள் அனுஷ்டித்த சமூக அநீதியைப் பற்றித் தெரிந்த...
ஜிப்ஸி விமர்சனம்

ஜிப்ஸி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஜிப்ஸி என்றால் நாடோடி எனப் பொருள்படும். காஷ்மீரில், ஒரு முஸ்லீம் அம்மாக்கும், ஹிந்து அப்பாக்கும் பிறக்கும் குழந்தை, இந்தியாவெங்கும் பயணிக்கும் ஒரு நாடோடியிடம் வளர நேருகிறது. அந்நாடோடி குழந்தைக்கு ‘ஜிப்ஸி’ எனப் பெயரிடுகிறார். அரசியல் புரிதலுள்ளவனாக வளரும் ஜிப்ஸிக்குக் கட்சிச் சார்போ, கொள்கைச் சார்போ எதுவும் கிடையாது. ஆனாலும், புரட்சிகர தெருப் பாடகனாக அடையாளம் காணப்படுகிறான். தனக்கான முகம் என நாகூரில் ஒரு பெண்ணை அடையாளம் காணுகிறான். அந்தப் பெண், திருமணத்திற்கு முன் தினம் அழுது கொண்டிருப்பதைப் பார்க்கிறான். உடனே ஜிப்ஸி, “கவலைப்படாதீங்க உங்க ஆளுங்க (பாகிஸ்தான்) தான் ஜெயிப்பாங்க (கிரிக்கெட்டில்)” என வஹிதாவிடம் சம்பந்தமே இல்லாமல் சொல்கிறான். அதுவரை அழகான விஷுவல்ஸ்களினால் கள்ளுண்ட போதையில் மதி மயங்கி படம் பார்த்துக் கொண்டிருந்த மயக்கம் சட்டெனத் தெளிகிறது. நம்முடன் வாழும் முஸ்லிம்கள் இந்தியர்கள...
ஒத்த செருப்பு சைஸ் – 7 விமர்சனம்

ஒத்த செருப்பு சைஸ் – 7 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு கொலை வழக்கு விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்படுகிறான் மாசிலாமணி. அவ்விசாரணையும், அது சம்பந்தமான முழு நீள உரையாடலும் தான் படம். ஒருவரைச் சுற்றி மட்டுமே நடக்கும் கதையில்லை இது. ஒரு சுவாரசியமான த்ரில்லரில், மற்ற கதாபாத்திரங்களை வெறும் குரல்களாக்கி, மாசிலாமணியாக நடித்திருக்கும் பார்த்திபனை மட்டுமே கேமரா காட்டுகிறது. முழுப் படத்திலும், ஒரு முகம் மட்டுமே திரையில் காட்டப்பட்டாலும், படத்தின் சுவாரசியம் எள்ளளவும் குறையாமல் பார்த்துக் கொள்கிறார் பார்த்திபன். படத்தின் கால அளவு 105 நிமிடங்கள் மட்டுமே! படத்தின் ஓட்டத்திலிருந்து விலகக் கூடாது என்பதற்காக, 120 நிமிடப் படத்தில் இருந்து, சந்தோஷ் நாராயணனின் பாடலையும், சில காட்சிகளையும் நீக்கி மேலும் க்றிஸ்பாகப் படைத்துள்ளார். சிறுவன் மகேஷ், மகேஷின் அம்மா, ஐயப்பனுக்கு மாலை போட்டிருக்கும் ஒரு காவலர், பெண் காவலர் ரோசி, முன் கோபியான ஏ.சி....
A1 – எந்த சர்ச்சையும் இல்லாக் காதற்படம்

A1 – எந்த சர்ச்சையும் இல்லாக் காதற்படம்

சினிமா, திரைச் செய்தி
சர்க்கிள் பாக்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள படம் A1. இப்படம் வரும் ஜுலை 26 அன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது. ஜான்சன் கே எழுதி இயக்கியுள்ள இப்படத்தை 18 ரீல்ஸ் எஸ்.பி.செளத்ரி வெளியிடுகிறார். அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ந்தது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், "சூது கவ்வும் படத்திற்குப் பிறகு எனக்கு மிகப் பிடித்த படம் இது. ஈக்குவாலிட்டி பற்றிய படங்கள் எப்பவாவது வரும். இந்தப் படமும் சமத்துவத்தை ஜாலியாகப் பேசி இருக்கிறது. அந்த வகையில் படத்தைச் சிறப்பாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். ஒரு காமெடி நடிகர் தன்னை நிலைத்துக் கொண்டு மக்களை என்டெர்டெய்ன் பண்றது ரொம்பக் கஷ்டம். அதைச் சந்தானம் சார் சரியாகச் செய்து வருகிறார். இந்தப் படத் தயாரிப்பாளரிடம் ஒரு சந்தோஷம் இருக்கிறது. காரணம் இந்தப் படம். தியேட்டரிகல் எக்ஸ்பிரீயன்ஸில் இந்தப் படம் நல்லா இருக்கும் என்று நம்பிக...
பரியேறும் பெருமாள் விமர்சனம்

பரியேறும் பெருமாள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'சாதியும் மதமும் மனித குலத்திற்கு விரோதமானது' என்ற வாசகத்துடன் படம் தொடங்குகிறது. இப்படத்தில், சாதி எப்படி மனித குலத்திற்கு விரோதமாகச் செயல்படுகிறதெனப் பரியேறும் பெருமாளின் வாழ்க்கையில் இருந்து சித்தரிக்கப்படுகிறது. கருப்புத் திரையில் வெள்ளையெழுத்துகளாக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர் போடும்பொழுதே சந்தோஷ் நாராயணன் ஒலிக்கத் தொடங்கிவிடுகிறார். படம் தொடங்கியவுடனே, "கருப்பி, அடி கருப்பி!" என்ற பாடலின் மூலமாக ஒரு வாழ்வியலுக்குத் தயார் செய்துவிடுகிறார். படத்தின் நாயகன் அவர்தான்! படத்தின் இசையும், ட்ரோன் மூலம் பறவைக் கோணத்தில் காட்டப்படும் நிலப்பரப்பும், படத்தோடு பார்வையாளர்களை ஒன்றச் செய்துவிடுகிறது. சட்டக்கல்லூரி மாணவனாக வரும் யோகி பாவுவின் ஒன்லைன் கவுன்ட்டர்கள் அட்டகாசம். நகைச்சுவைக்காக என்றில்லாமல் ஒரு கதாபாத்திரமாக படம் முழுவதும் வந்து அசத்துகிறார். பரியேறும் பெருமாளாகக...
பரியேறும் பெருமாள்: மிகச் சிறந்த திரைப்படம் -சந்தோஷ் நாராயணன்

பரியேறும் பெருமாள்: மிகச் சிறந்த திரைப்படம் -சந்தோஷ் நாராயணன்

சினிமா, திரைத் துளி
நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் “பரியேறும் பெருமாள்”. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் ராம், "பரியேறும் பெருமாள்" இயக்குநர் மாரி செல்வராஜ், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் கதிர், நடிகை கயல் ஆனந்தி, நகைச்சுவை நடிகர் யோகிபாபு, லிஜீஸ், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், எடிட்டர் செல்வா ஆர்.கே., கலை இயக்குநர் ராமு, சண்டைப் பயிற்சியாளர் ஸ்டன்னர் சாம், உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசும்போது, “இந்தப் படத்தில் என்னைத் தாக்கின விஷயம் மட்டும் சொல்கிறேன். பல வருஷங்களில் ஒரு சில இயக்குநர்கள் பெரிய அளவில் வருவார்கள். இது, மாரி செல்வராஜிடம் ஆரம்பத்திலேயே தெரிந்தது. இந்தப் படம் எனக்கு வாழ்க்கையில் மிகச் சிறந்த திரைப்படம். பொதுவாக ஊர்ப்பக்கம் சென்று படம் எடுப்பதற்கு ஒரு அளவீடு இருக்கி...
மெர்க்குரி விமர்சனம்

மெர்க்குரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘நிசப்தம் தான் வலுமிகு அலறல்’ என்ற கேப்ஷனோடு படம் சத்தமின்றித் தொடங்குகிறது. வசனங்களற்று தொழில்நுட்பம் கோலேச்சும் அற்புதமான முயற்சி. அப்படியும் முதற்பாதியில் தமிழ் சப்-டைட்டில் வருகிறது. கதையைப் படித்துப் புரிந்து கொள்ளுமாறு செய்கின்றனர். ஒருவழியாக ரசிகர்கள் மீது நம்பிக்கை வைத்து, இடைவேளைக்குப் பிறகு சப்-டைட்டிலுக்கும் குட்பை சொல்லிப் பெருமைப்படுத்தியுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். கதைக்களனும், கதையின் மாந்தர்களும், திரையின் நிறமும் மிகவும் புதிது. ஃப்ரேமில் பரவி நிற்கும் பச்சை நிற பின்புலம் திகிலையும் அமானுஷ்யத்தன்மையையும் தருகிறது. பச்சை நிற பின்புலம் பசுமையின் செழுமையாக இல்லாமல், மெர்க்குரியின் நச்சுத்தன்மையைக் குறிக்கிறது. அதனால் ஒரு நகரமே எப்படிப் பாதிக்கப்படுகிறது என நடுக்கம் தருமளவு சித்தரித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். காது கேளாதவர்களை நடித்திருக்கும் சனந்த், இந்து...
மேயாத மான் விமர்சனம்

மேயாத மான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மேயாத மான் என்ற தலைப்பு மிகவும் ஆச்சரியமூட்டுகிறது. ஏன் பரவசமூட்டுகிறது என்று கூடச் சொல்லலாம். தலைப்பு விஷயத்திலேயே நாயகன் ஓர் அடிப்படை நேர்மையைக் கடைபிடித்துள்ளார் என்றே தோன்றுகிறது. 'ஸ்ரீவள்ளி (1945)' படத்தில் வரும் பாடல் வரியில் இருந்து தலைப்பு எடுத்தாளப்பட்டுள்ளது. முருகன் வள்ளியைக் கரெக்ட் செய்யப் பாடும் பாடலில், வள்ளியினது கற்பைப் போற்றும் வகையில் வரும் பதம்தான் 'மேயாத மான்'. அதாவது படி தாண்டா விர்ஜின் கேர்ள் என்பதன் கவித்துவ பதம் தான் மேயாத மான். ஆனால் இதையே இயக்குநர் ரத்ன குமார், நாயகன் தான் மேயாத மான் என மிகச் சாதுரியமாக நிறுவுகிறார். ஒரே வகுப்பில் படித்தும், மூன்று வருடமாக நாயகியிடம் காதலைச் சொல்லாத நாயகன் (இதயம் முரளி) தான் மேயாத மேனாம். கண் முன் புல்லுக்கட்டு இருந்தும் அதை மேயாதவன், அதாவது காதலைச் சொல்லாததால் நாயகன் மேயாத மேனாம். அடடே.! ஆனால், நாயகனுக்கு ஏன் நாயகியைப் பிடிக்...