குஷீ விமர்சனம்
படத்தின் தலைப்பு ஏற்கனவே தமிழில் ஹிட்டடித்த ஒரு ப்ளாக்பஸ்டர் படத்தின் தலைப்பு. படத்தின் ட்ரைலரில் வரும் ஒரு வசனம் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா எனும் தமிழ் திரைப்படத்தை நினைவு கூறும் வசனம், படத்தின் ஹீரோவான விஜய் தேவரகொண்டா பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, படத்தின் இயக்குநர் சிவ நிர்வானா ஒரு தீவிரமான மணிரத்னத்தின் ரசிகர் என்று கூறி, அதனால் படத்தில் அவரின் பாதிப்புகள் இருக்கும் என்று கூறினார். இருக்கலாம். தவறில்லை. அதற்காக அவரின் படத்தையே திருப்பி எடுத்தால் எப்படி..? படத்தின் முதல்பாதி பம்பாயின் சாயல் என்றால் இரண்டாம் பாதி முழுக்க அலைபாயுதேவின் அலை வீசுகிறது. இருப்பினும் ஷாலினி இடத்தில் சமந்தாவைப் வைத்துப் பார்க்கும் போது மனம் அலைபாயத்தான் செய்கிறது. மேலும் துறுதுறுப்புக்கும் வசீகரத்திற்கும் பேர் போன மாதவனை ஈடு செய்யும் விதமாக அங்கு விஜய் தேவரகொண்டா நிற்கும் போது, சிவ நிர...