Shadow

Tag: யுவராஜ்

வீர சந்திரஹாசா | இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இயக்கம்

வீர சந்திரஹாசா | இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இயக்கம்

அயல் சினிமா, திரைத் துளி
கேஜிஎஃப், சலார் போன்ற பிரம்மாண்டமான வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், 'வீர சந்திரஹாசா' எனும் திரைப்படத்தினை இயக்குகிறார். இதன் மூலம் மீண்டும் அவர் இயக்குநராகக் களமிறங்கி இருக்கிறார். இது அவரது இயக்கத்தில் உருவாகும் ஆறாவது திரைப்படமாகும். அத்துடன் இந்தத் திரைப்படம் அவரது கலையுலகப் பயணத்தில் முக்கிய அடையாளமாகவும் இருக்கும். இயக்குநர் ரவி பஸ்ரூரின் திரைப்படங்கள் அவற்றின் புதுமையான மற்றும் யதார்த்தமான கதை சொல்லலுக்குப் பெயர் பெற்றவை. மேலும் அவரது இயக்கத்தில் உருவாகும் 'வீர சந்திரஹாசா', பாரம்பரியத்தைக் குறிப்பிடத்தக்க வகையில் அதன் எல்லைகளை மேலும் விரிவடையச் செய்யும் என்கிறார். சந்திரஹாசன் என்பவர் மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரமென நம்பப்படுகிறது. 'வீர சந்திரஹாசா'வை வேறு படைப்புகளிலிருந்து வித்தியாசப்படுத்துவது கர்நாடகாவின் பழைமையான மற்றும் மரியாதைக்குரிய க...
கீர்த்தி சுரேஷ் – KCL திருவனந்தபுரம் அணி உரிமையாளர்

கீர்த்தி சுரேஷ் – KCL திருவனந்தபுரம் அணி உரிமையாளர்

சமூகம்
முன்னணி நட்சத்திர நடிகை கீர்த்தி சுரேஷ், கேரளாவில் நடைபெறவுள்ள KCL கேரள லீக் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள திருவனந்தபுரம் அணியின் இணை உரிமையாளாராகியுள்ளார். வரும் செப்டம்பர் மாதம் இப்போட்டிகள் கேரளாவில் நடைபெறவுள்ளது. இந்தியாவில் திரைத்துறைக்கு இணையாக கிரிக்கெட்டுக்குத் தீவிர ரசிகர்கள் உள்ளனர். ஐபில் போட்டிகள் மீதான மோகத்தைத் தொடர்ந்து, கேரளத்தில் கேரள ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், கேரளாவிற்கெனத் தனித்த கிரிக்கெட் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ளது. ஐபில் போட்டி அணிகளில், நட்சத்திர நடிகர்கள் உரிமையாளர்களாகச் செயல்பட்டு வருவது போல், கேரளத்துத் திருவனந்தபுரம் அணிக்கு உரிமையாளராக மாறி அசத்தியுள்ளார் கீர்த்தி சுரேஷ். கேரளாவில் கிரிக்கெட் விளையாட்டினை ஊக்கிவிக்கும் வகையிலும், திறமையான இளைஞர்களை இந்தியாவிற்கு அடையாளம் காட்டும் நோக்கிலும் இந்த KCL போட்டிகள் நடக்கவுள்ளன. 6 அணிகள் ...
“கோமணம் கூச்சம் மகிழ்ச்சி” – தங்கலான் விக்ரம்

“கோமணம் கூச்சம் மகிழ்ச்சி” – தங்கலான் விக்ரம்

சினிமா, திரைச் செய்தி
ரசிகர்களும் ஊடகங்களும் வழங்கிய அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினைத் தங்கலான் படக்குழுவினர் ஒருங்கிணைத்திருந்தனர்.இவ்விழாவில் பேசிய நடிகர் விக்ரம், ''இந்தப் படத்தைத் தொடங்கும் போது, இது போன்ற ஒரு கதை, இது போன்றதொரு மக்கள், இது போன்றதொரு வாழ்க்கை. அந்தக் காலகட்டத்தில் மக்கள் அவ்வளவு கஷ்டப்பட்டு, இன்னல்கள் சவால்கள் என பல விசயங்களை எதிர்கொண்டு தங்கத்தைத் தேடுகிறார்கள். எல்லாத்தையும் மீறி அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது. எட்டாத ஒரு விசயத்தை, சுலபமாக கிடைக்காத ஒரு விசயத்தைக் கஷ்டப்பட்டு வாங்க வேண்டியதாக இருந்தது. இந்தப் படத்திற்கான எங்களின் பயணமும் இப்படித்தான் இருந்தது. படத்தில் நாங்கள் அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்தோம். இந்தப் படத்தில் யாரும் நடிக்கவில்லை. அந்தக் கதாபாத்திரமாகவே வந்திருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் நடித்திருந்தால் அந்த மக்களின் உண்மையான கஷ்டம் பு...
“தங்கலான்: காலத்தைக் கடந்த பொக்கிஷம்” – பா. ரஞ்சித் பெருமிதம்

“தங்கலான்: காலத்தைக் கடந்த பொக்கிஷம்” – பா. ரஞ்சித் பெருமிதம்

சினிமா, திரைச் செய்தி
ரசிகர்களும் ஊடகங்களும் வழங்கிய அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினைத் தங்கலான் படக்குழுவினர் ஒருங்கிணைத்திருந்தனர். இயக்குநர் பா. ரஞ்சித், "திரைப்படங்கள் ஏன் எடுக்க வேண்டும் என்ற சிந்தனையுடன் திரையுலகில் நுழைந்தேன். இந்தக் கேள்வியுடன் தான் என்னுடைய திரைப் பயணம் தொடர்ந்து நீண்டு கொண்டிருக்கிறது. இந்தப் பயணத்தில் உருவான தங்கலான் முக்கியமான விவாதத்தையும், முக்கியமான வெற்றியையும் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கிறது. இதற்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வெற்றியை அளித்த அனைவருக்கும் நான் இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி சாதாரணமானதல்ல. பழக்கப்பட்ட மொழியில் ஒரு படைப்பை வழங்குவது எவ்வளவு கடினமோ, அதைவிட பழக்கமே இல்லாத ஒரு மொழியில் ஒரு படைப்பை வழங்கி அதனை வெற்றி பெற வைப்பது என்பது கடினமானது. மக்களுக்குப் புதுவிதமான அனுபவத்தை...
“விக்ரம்: தங்கலானின் ஜீவன்” – விநியோகஸ்தர் சக்தி வேலன்

“விக்ரம்: தங்கலானின் ஜீவன்” – விநியோகஸ்தர் சக்தி வேலன்

சினிமா, திரைச் செய்தி
ரசிகர்களும் ஊடகங்களும் வழங்கிய அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினைத் தங்கலான் படக்குழுவினர் ஒருங்கிணைத்திருந்தனர். இந்நிகழ்வில் பேசிய விநியோகஸ்தர் சக்தி வேலன், ''தங்கலான் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்குக் கடினமான காலகட்டமாக இருந்தது. இருந்தாலும் படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் மீது அளவு கடந்த நம்பிக்கையை வைத்து, இந்தப் படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்தார். அதன் பிறகு படத்தின் பணிகள் நிறைவடைந்தவுடன் முழுமை அடையாத முதல் பிரதியை அவர் காண்கிறார். அந்தத் தருணத்தில் என்னையும் அழைத்து இருந்தார். படத்தை முழுமையாகப் பார்த்த பிறகு, பத்து நிமிடம் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தார். அவர் எந்த மனநிலையில் இருக்கிறார் என எனக்குத் தெரியவில்லை. அவருடைய பார்வை என்னவென்று தெரிந்து கொண்டு பேசலாம் என்ற...
“தங்கலான்: வெறுப்பாற்றில் நீந்திய வெற்றி” – அழகிய பெரியவன்

“தங்கலான்: வெறுப்பாற்றில் நீந்திய வெற்றி” – அழகிய பெரியவன்

சினிமா, திரைச் செய்தி
ரசிகர்களும் ஊடகங்களும் வழங்கிய அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் தங்கலான் படக்குழுவினர் விழா ஒன்றினை ஒருங்கிணைத்திருந்தனர். இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் நேகா ஞானவேல் ராஜா, ''தங்கலான் வணிக ரீதியாகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. தங்கலான் திரைப்படம் தெலுங்கிலும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. அங்கு தற்போது அதிக திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருக்கிறது'' என்றார். கதாசிரியரும் எழுத்தாளருமான அழகிய பெரியவன், ''தங்கலான் படத்தில் பணியாற்றியது எனக்கு சிலிர்ப்பூட்டும் அனுபவங்களைத் தந்தன. நெருப்பாற்றில் நீந்தி வெற்றி பெறுவது என்பதைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ரஞ்சித் அவர்கள் வெறுப்பாற்றலின் நீந்தி வெற்றி பெற்றிருக்கிறார்.‌ இதுவரைக்கும் எந்தத் திரைப்படங்களுக்கும் எதிரும் புதிருமான விமர்சனங்கள், விவாதங்கள், கருத்துக்கள் வந்ததை நான் பார்த்ததில்லை.‌ இது ஒரு தனித்துவம...
கருடன் சூரி – விலங்கு இயக்குநர்

கருடன் சூரி – விலங்கு இயக்குநர்

சினிமா, திரைத் துளி
கதையின் நாயகனாக உயர்ந்து, வெற்றி வாகை சூடி இருக்கும் நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கருடன் படத்தைத் தொடர்ந்து, லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கும் புதிய திரைப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை 'விலங்கு' எனும் இணைய தொடரை இயக்கி அனைவரது கவனத்தையும் கவர்ந்த இயக்குநர் பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்குகிறார். இந்தத் திரைப்படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சூரி, பிரசாந்த் பாண்டியராஜ், லார்க் ஸ்டுடியோஸ் கே. குமார் ஆகியோர் ஒன்றிணைந்திருப்பது, இந்தப் படத்தின் மீது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது....
பிரபாஸ்ஹனு – பிரம்மாண்டமாய்த் தொடங்கியது

பிரபாஸ்ஹனு – பிரம்மாண்டமாய்த் தொடங்கியது

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரைத் துளி
'ரெபல் ஸ்டார்' பிரபாஸ், இயக்குநர் ஹனு ராகவபுடி, மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான 'பிரபாஸ்ஹனு', ஆகஸ்ட் மாதத்தில் பிரம்மாண்டமாகத் தொடங்கப்பட்டது. கற்பனைக்கும் எட்டாத பிரம்மாண்டமான படைப்பாகத் தயாராகும் இந்தத் திரைப்படத்தை பான் இந்திய தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிரபாஸ் , ஹனு ராகவபுடி மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் முதன்முறையாக 'பிரபாஸ் ஹனு' எனும் இந்தப் படத்தில் இணைகிறார்கள். இந்தக் கூட்டணியின் படைப்பாற்றல் மற்றும் கூட்டு நிபுணத்துவம் ஆகியவை ஒருங்கிணைக்கப்படுவதால், இந்தப் படைப்பின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. மேலும் பிரம்மாண்டமான பங்களிப்புடன் உருவாகும் இந்த #பிரபாஸ் ஹனு படைப்பின் மூலம், சினிமா ரசிகர்களுக்கு இதற்கு முன் கிடைத்திராத புதிய அனுபவத்தை வழங்கத் திட்டமிட்டுள்ளது . ஒவ்வொரு வரலாற்று நிகழ்வும், நம் உண...
“பிரியங்கா மோகன் தான் நேச்சுரல் ஸ்டார்” – நானி | சூர்யா’ஸ் சாட்டர்டே

“பிரியங்கா மோகன் தான் நேச்சுரல் ஸ்டார்” – நானி | சூர்யா’ஸ் சாட்டர்டே

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரைச் செய்தி
டி வி வி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோரின் தயாரிப்பில், இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில், 'நேச்சுரல் ஸ்டார்' நானி கதையின் நாயகனாக நடித்திருக்கும் “சூர்யா'ஸ் சாட்டர்டே” எனும் திரைப்படம் இம்மாதம் 29 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.இந்நிலையில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் 'நேச்சுரல் ஸ்டார்' நானி, இயக்குநரும், நடிகருமான எஸ். ஜே. சூர்யா, நடிகைகள் பிரியங்கா மோகன், அபிராமி, அதிதி பாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.நடிகர் நானி, “ஒவ்வொரு முறை தமிழகத்திற்கு வருகை தரும் போதெல்லாம் தமிழ் மக்களின் அன்பை வியந்து பார்க்கிறேன். தமிழ் சினிமாவை நான் தொடர்ந்து பார்த்து ரசித்து வருகிறேன்.‌ இங்கு ம...
சூர்யா’ஸ் சாட்டர்டே – இரண்டு கோபங்கள் சந்திக்கும் புள்ளி

சூர்யா’ஸ் சாட்டர்டே – இரண்டு கோபங்கள் சந்திக்கும் புள்ளி

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
டி வி வி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோரின் தயாரிப்பில், இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில், 'நேச்சுரல் ஸ்டார்' நானி கதையின் நாயகனாக நடித்திருக்கும் “சூர்யா'ஸ் சாட்டர்டே” எனும் திரைப்படம் இம்மாதம் 29 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் 'நேச்சுரல் ஸ்டார்' நானி, இயக்குநரும், நடிகருமான எஸ். ஜே. சூர்யா, நடிகைகள் பிரியங்கா மோகன், அபிராமி, அதிதி பாலன் ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகை பிரியங்கா மோகன், '' 'கேங் லீடர்' படத்திற்குப் பிறகு நானியுடன் நான் நடிக்கும் இரண்டாவது படம் இது. இந்தப் படத்தில் சாருலதா என்கிற ஒரு அழகான கதாபாத்திரத்தில் பெண் காவலராக நடி...
ரகு தாத்தா விமர்சனம்

ரகு தாத்தா விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஹிந்தித் திணிப்பு தீவிரமாக இருந்த காலகட்டத்தில் நிகழ்கிறது கதை. திராவிட இயக்கத்தின்பால் ஆழ்ந்த பற்றுடையவராக கதையின் நாயகி வலம் வருகிறார். க.பா. எனும் கயல்விழி பாண்டியன் ஓர் எழுத்தாளருமாவார். தனது தாத்தாவிற்குப் புற்றுநோய் என்பதாலும், அவரது கடைசி ஆசை தனது திருமணத்தைப் பார்க்கவேண்டும் என்பதாலும், திருமணத்திற்குச் சம்மதிக்கிறார் கயல்விழி. ஆனால், தனக்கு மாப்பிள்ளையாக வரப் போகிறவன் பசு தோல் போர்த்திய புலி என்றுணர்ந்து, எப்படியாவது கல்யாணம் தானாகவே நிற்கவேண்டும் எனப் போராடுகிறார். அவரது முயற்சி வெற்றி பெறுகின்றதா இல்லையா என்பதே கதை. நல்ல பகடியான தலைப்பு. 'இன்று போய் நாளை வா (1981)' எனும் இயக்குநர் கே. பாக்யராஜின் படத்தில் வரும் ஒரு வசனத்தைத் தலைப்பாக உபயோகித்துள்ளனர். விருப்பமின்றி ஹிந்தி கற்கும் ஒருவரின் மனோநிலையைச் சுட்டுவதற்காக இத்தலைப்பைப் பயன்படுத்தியுள்ளனர். ஹிந்தித் திணிப்பை ஊக்குவிப்பத...
மட்கா – ஃபர்ஸ்ட் லுக் | வருண் தேஜ்

மட்கா – ஃபர்ஸ்ட் லுக் | வருண் தேஜ்

Movie Posters, அயல் சினிமா, கேலரி
மெகா பிரின்ஸ் வருண் தேஜ், “மட்கா” படம் மூலம், பான் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளார். இப்படம், அவரது திரைவாழ்வின், மிகப் பெரும் பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படமாகும். கருணா குமார் இயக்கத்தில் வைரா என்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் எஸ்ஆர்டி என்டர்டெயின்மென்ட்ஸ் பேனர்களில் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா மற்றும் ரஜனி தல்லூரி தயாரிக்கும் இப்படம், மிகப் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. தற்போது ஹைதராபாத்தில் இப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், வருண் தேஜ் இளைஞன் மற்றும் நடுத்தர வயது மனிதன் என இரண்டு அவதாரங்களில் தோற்றமளிக்கிறார். கதாநாயகனின் 24 வருடப்பயணத்தைக் காணும் இத்திரைப்படத்தில், நான்கு விதமான கெட்-அப்களில் வருண் தேஜ் தோன்றுகிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், அடிதட்டு மனிதனாக இருந்து கிங்காக மா...
TOXIC: A Fairytale For Grown Ups | 8 – 8 – 8

TOXIC: A Fairytale For Grown Ups | 8 – 8 – 8

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
நடிகரும் தயாரிப்பாளருமான யாஷ், தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா, அவர்களது குடும்பத்தினருடன் கர்நாடகாவில் உள்ள பல கோயில்களுக்குச் சென்றதைக் காண முடிந்தது. நாள் முழுவதும், அவர்கள் ஸ்ரீ சதாசிவ ருத்ர சூர்யா கோயில், தர்மஸ்தலாவில் உள்ள ஸ்ரீ மஞ்சுநாதேஸ்வரர் கோயில், கர்நாடகாவில் உள்ள சுப்ரமண்யாவில் உள்ள குக்கே சுப்ரமண்யா கோயில் என பல கோயில்களில் வழிபாடு செய்தனர்.எந்தவொரு புதிய திரைப்படத்தையும் தொடங்குவதற்கு முன்பாகக் கோயில்களுக்குச் செல்லுவார் யாஷ். படக்குழு உறுதிப்படுத்திய தகவலின் படி, கீது மோகன்தாஸ் இயக்கும் இப்படம் ஆகஸ்ட் 8, 2024 அன்று (8-8-8) பெங்களூருவில் துவங்கவுள்ளது.இத்திரைப்படம் துவங்கும் தேதியின் கூட்டுத்தொகை 8-8-8 ஆகும். ராக்கிங் ஸ்டார் யாஷுக்கு ராசியான நம்பரான 8 என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது அவரது பிறந்த தேதியுமாகும். அவர் பிறந்த நாளில் தான், 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார...
“தங்கலானுக்கும் எனக்குமான ஆன்மிகத் தொடர்பு” – விக்ரம்

“தங்கலானுக்கும் எனக்குமான ஆன்மிகத் தொடர்பு” – விக்ரம்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில், திரையரங்குகளில் தங்கலான் படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று வெளியாகவிருக்கிறது. இந்தத் திரைப்படத்தை ஸ்டுடியோ க்ரீன், நீலம் புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சீயான் விக்ரம், ''இந்தப் படத்தை நீங்கள் பார்ப்பதை விட ஜீவி இசை மூலம் கேட்பீர்கள். இன்றைய விழாவின் நாயகன் அவர்தான். படத்தில் நாங்கள் உணர்ந்து நடித்த விஷயத்தை, நீங்கள் திரையில் அற்புதமான இசை மூலம் மேம்படுத்தி இருக்கிறீர்கள். ஜிவி உருவாக்கிய ஒலிகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானதாகவும் தனித்துவமானதாகவும் இருந்தது. ஒவ்வொரு நாளும் நான்கு மணி நேரம் மேக்கப் போட வேண்டும். இந்தக் கதாபாத்திரத்தை இயக்குநர் ரஞ்சித் கற்பனை செய்து உருவாக்கியிருந்தாலும், திரையில்‌ காணு...
“தங்கலான் | கருணையற்ற மனிதனாக இருந்ததால் மட்டுமே சாத்தியமானது” – பா. ரஞ்சித்

“தங்கலான் | கருணையற்ற மனிதனாக இருந்ததால் மட்டுமே சாத்தியமானது” – பா. ரஞ்சித்

சினிமா, திரைச் செய்தி
உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில், திரையரங்குகளில் தங்கலான் படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று வெளியாகவிருக்கிறது. இந்தத் திரைப்படத்தை ஸ்டுடியோ க்ரீன், நீலம் புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இயக்குநர் பா. ரஞ்சித், "படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு விக்ரமிடம் மீண்டும் ரீ-ஷூட் செய்ய வேண்டும் என்று சொன்னதும் உடனே ஒப்புக்கொண்டார். சண்டைக் காட்சிகளில் அவருடைய விலா எலும்பு முறிந்தது. அந்தக் காட்சி நிறைவடைந்ததும் உடனடியாக என்னுடைய உதவியாளரை அழைத்து, 'அவருக்கு ஏதாவது ஆகிவிட்டதா?' என்று கேள் எனச் சொல்வேன். அவர்கள் விக்ரமிடம் கேட்டுவிட்டு, 'வலி இருக்கிறது ஆனால் பொறுத்துக் கொள்கிறேன்' என பதில் அளிப்பார்கள். அதனால் மீண்டும் அதே காட்சியைப் படமாக்கினேன்...