Shadow

Tag: யுவராஜ்

மாயோன் – 25 நாட்களைக் கடந்த திரைமாயம்

மாயோன் – 25 நாட்களைக் கடந்த திரைமாயம்

சினிமா, திரைத் துளி
புத்தம் புதிய களத்தில் கடவுள் & அறிவியல், சிலை கடத்தல் மற்றும் புதையல் வேட்டை என பரபர த்ரில்லர் திரைப்படமாக வெளியான “மாயோன்” ரசிர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் 25 ஆம் நாளை கடந்துள்ளது. ஒரு திரைப்படம் ஒரு வாரம் முழுதாக ஓடினாலே மிகப்பெரிய வெற்றி என்று கொண்டாடப்படும் தற்போதைய தமிழ் சினிமாவில், மாயோன் திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து, ரசிகர்களின் பேராதரவில் 4 ஆவது வாரத்தில் அடியெடுத்து வைத்து, வெற்றிகரமாகத் திரையரங்குளில் 25 ஆம் நாளை கடந்துள்ளது. அறிவியலும் புராதனமும் கலந்து கட்டிய திரைக்கதை, அட்டகாசமான இசை, கண்ணைக் கவரும் பிரம்மாண்ட கலையமைப்பு முதலியன மாயோன் படத்தின் சிறப்புகள். மாமனிதன், வேழம் படங்களுடன் “மாயோன்” திரைப்படம் வெளியானது. மற்ற படங்கள் ஓடிடியில் வெளியான நிலையில், இப்படம் 25 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்து...
கார்த்திகேயா 2 – மாய சாகசப் பயணத்திற்கு இட்டுச் செல்லும் படம்

கார்த்திகேயா 2 – மாய சாகசப் பயணத்திற்கு இட்டுச் செல்லும் படம்

Teaser, காணொளிகள், சினிமா, திரைத் துளி
பீப்பள் மீடியா ஃபேக்டரியும், அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸும் இணைந்து வழங்கும் ‘கார்த்திகேயா 2’ திரைப்படம், 2014 ஆம் ஆண்டு வெளியான கார்த்திகேயா திரைப்படத்தின் இரண்டாம் பாகமாகும். இது தெலுங்கு மொழியில் வரவிருக்கும் (5 மொழிகளில் டப் செய்யப்படுகிறது) ஒரு சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி த்ரில்லர் திரைப்படமாகும். இப்படத்தினை இயக்குநர் சண்டூ மொண்டேட்டி எழுதி இயக்கியுள்ளார். T.G. விஸ்வ பிரசாத்தும் அபிஷேக் அகர்வாலும் இணைந்து தயாரிக்கின்றனர். நிகில் சித்தார்த்தா, அனுபமா பரமேஸ்வரன், ஸ்ரீனிவாஸ் ரெட்டி, விவா ஹர்ஷா, ஆதித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். கார்த்திக் கட்டமனேனியின் ஒளிப்பதிவு செய்ய, கால பைரவா இப்படத்திற்கு இசையமைக்கிறார். கார்த்திகேயா மீண்டும் வந்துவிட்டார். முன்னிருந்ததை விட சிறப்பான முறையில் திரும்பியுள்ளார். இந்த முறை எல்லாம் மனுஸ்மிருதியின் படி நடக்கும். தர்ம ஏவ ஹதோ ஹந்தி தர்மோ ரக்ஷதிரக்ஷிதஹ் தஸ்...
சீதா ராமம் – காஷ்மீரின் பனி படர்ந்த பின்னணியில் காதல்

சீதா ராமம் – காஷ்மீரின் பனி படர்ந்த பின்னணியில் காதல்

Songs, காணொளிகள், சினிமா, திரைத் துளி
நடிகர் துல்கர் சல்மான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'சீதா ராமம்' எனும் படத்தில் இடம்பெற்ற மூன்றாவது பாடல் வெளியாகி இருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டிருக்கிறார். மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் தெலுங்கின் முன்னணி இயக்குநரான ஹனு ராகவபுடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'சீதா ராமம்' எனும் படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தானா அழுத்தமான வேடத்தில் நடித்துள்ளார். பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். போர்க்களப் பின்னணியில் காதலை மையப்படுத்திய இந்தத் திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் சார்ப...
சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

சினிமா, திரைத் துளி
ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு நேற்று மைசூரில் பூஜையுடன் தொடங்கியிருப்பதாகப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்க, 'வைகைப் புயல்' வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தைப் பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியானது அனைவரும் அறிந்ததே. தற்போது இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மைசூரில் தொடங்கி இருக்கிறது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில் 'சந்திரமுகி 2' எனும் புதிய பிரம்மாண்டத் திரைப்படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கிறார்கள். இதனை 'சந்திரமுகி' படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி. வாசு இயக்குகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், அந்நிறுவனத்தி...
பா. ரஞ்சித்தின் சீயான் 61

பா. ரஞ்சித்தின் சீயான் 61

சினிமா, திரைத் துளி
சீயான் விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. விரைவில் வெளியாக இருக்கும் 'கோப்ரா', 'பொன்னியின் செல்வன்’ எனும் இரண்டு பிரம்மாண்ட அகில இந்திய அளவிலான படங்களைத் தொடர்ந்து, சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தினை முன்னணி இயக்குநர் பா. ரஞ்சித் இயக்குகிறார். இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ.ஞானவேல் ராஜா, நீலம் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தயாரிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 22 ஆவது தயாரிப்பாகத் தயாராகும் இந்தப் படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர்கள் சிவகுமார், ஆர்யா, தயாரிப்பாளர்கள் T. சிவா, S.R. பிரபு, அபினேஷ் இளங்கோவன், C.V. குமார், இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் ஆகியோர் சிற...
“மாமனிதன் உங்களுக்கு நெருக்கமாகி விடுவான்” – விஜய் சேதுபதி

“மாமனிதன் உங்களுக்கு நெருக்கமாகி விடுவான்” – விஜய் சேதுபதி

சினிமா, திரைச் செய்தி
தமிழ் ஓடிடி தளத்தில் கோலோச்ச ஆரம்பித்திருக்கும் ஆஹா ஓடிடி தளத்தின் அடுத்த அதிரடி வெளியீடாக, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “மாமனிதன்” திரைப்படம் ஜூன் 14 ஆம் தேதி ஒளிபரப்பியாகியுள்ளது. இப்படத்தை இப்போது 155 நாடுகளில் ஆஹா ஓடிடி தளத்தின் வழியாகக் கண்டுகளிக்கலாம். மாமனிதன் படம் ஓடிடியில் வெளியாவதையொட்டி, இப்படத்தின் நன்றி அறிவித்தலும், பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெற்றது. இயக்குநர் சீனு ராமசாமி, “கலாப்பிரியாவின் கவிதை ஒன்று இருக்கிறது. காயங்களோடு இருப்பவனை விரட்டிக் கொத்தும் காக்கையைப் பற்றியது. அப்படி காயத்தோடு இருந்த ஒரு படைப்பைத் தங்கள் தோளில் தூக்கி உலகம் முழுக்க கொண்டு சேர்த்த பத்திரிக்கை நண்பர்களுக்கு என் மகள்களின் கைகளால் நன்றி சொல்கிறேன். நீங்கள் இல்லையென்றால் இந்தப் படம் இல்லை. ஒரு படத்தின் வெற்றி என்பது இந்தக் காலத்தில் பல அடுக்குகளாக இருக்கிறது. தயாரிப்பாளருக்கு...
குழந்தைகளின் அழகான உலகத்தைக் காட்டும் ‘மை டியர் பூதம்’

குழந்தைகளின் அழகான உலகத்தைக் காட்டும் ‘மை டியர் பூதம்’

சினிமா, திரைத் துளி
அபிஷேக் ஃபிலிம்ஸ் சார்பில் ரமேஷ் P. பிள்ளை தயாரிப்பில் மஞ்சப்பை படப்புகழ் N. ராகவன் இயக்கியுள்ள திரைப்படம் “மை டியர் பூதம்”. தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான படம் குறைவாக உள்ள ஏக்கதைப் போக்கும் விதமாக ஒரு அழகான ஃபேன்டஸி குழந்தைகள் படமாக இப்படம் உருவாகியுள்ளது. நடிகர் பிரபுதேவா வித்தியாசமான தோற்றத்தில் பூதமாக இப்படத்தில் நடித்துள்ளார். ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்துள்ளார். ஜூலை 15 ஆம் தேதி, இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. படம் குறித்து இயக்குநர் N. ராகவன், “என்னுடைய முதல் படம் மஞ்சப்பை ஒரு ஃபீல் குட் டிராமா. அடுத்த படமான கடம்பன் ஆக்சன் டிராமா. எனக்கு எல்லா ஜானரிலும் படம் செய்ய வேண்டும் என்பது ஆசை. அதனால் அடுத்த படம் என்ன செய்யலாம் என்று யோசித்த போது, குழந்தைகளுக்கான படம் செய்யலாம் எனத் தோன்றியது. தமிழில் குழந்தைகள் உலகைச் சொல்லும் படங்கள் இப்போது அதிகமாக இல்லை. எனவே அதைச்...
சேத்துமான் புகழும், உறியடி விஜயகுமாரும்

சேத்துமான் புகழும், உறியடி விஜயகுமாரும்

சினிமா, திரைத் துளி
உறியடி விஜய் குமார், ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் இணைந்து அடுத்த படத்திற்கான படப்பிடிப்பைத் துவங்கியுள்ளார். இப்படத்தை சேத்துமான் புகழ் தமிழ் இயக்குகிறார். கிராமப்புற பின்னணியில் அரசியல், ஆக்‌ஷன், காதல், கலந்த குடும்பப் பாங்கான திரைப்படமாகவும், ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாகவும் உருவாகிறது. இதற்கான படப்பிடிப்பு ஒரே கட்டமாகத் தொடர்ந்து 60 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். மேலும் திலீபன், பாவெல் நவகீதன், மரியம் ஜார்ஜ் மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர். '96 படத்திற்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய மகேந்திரன் ஜெயராஜூ ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். C.S.பிரேம் குமார் படத்தொகுப்பாளராகவும், ஸ்டன்னர் சாம் சண்டைப் பயிற்சியாளராகவும், ஏழுமலை கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனங்...
“விக்ரம்: 100% அளிக்கும் பர்ஃபெக்ஷனிஸ்ட்” – அஜய் ஞானமுத்து | கோப்ரா

“விக்ரம்: 100% அளிக்கும் பர்ஃபெக்ஷனிஸ்ட்” – அஜய் ஞானமுத்து | கோப்ரா

சினிமா, திரைச் செய்தி
‘சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் உள்ள பிரம்மாண்டமான பீனிக்ஸ் சிட்டி வணிக வளாகத்தில் அமைக்கப்பட்ட பிரத்தியேக அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் 'கோப்ரா' படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களும், ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரகுமான் மற்றும் அவரது குழுவினர் மேடையில் பாடி, படத்தின் பாடல்களை அறிமுகப்படுத்தி, ரசிகர்களை உற்சாகமடையச் செய்தனர். இயக்குநர் அஜய் ஞானமுத்து, “நான் ‘ஏழாம் அறிவு’ படத்தில் கடைநிலை உதவியாளராகப் பணியாற்றியபோது, அதன் தயாரிப்பாளரான உதயநிதி அவர்களிடமிருந்து தான், முதன் முதலில் ஊதியம் பெற்றேன். தற்போது ‘கோப்ரா’ படத்தை அவர் பிரம்மாண்டமாக வெளியிடுகிறார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படத்தில் நாயகனான சீயான் விக்ரம் அவர்களைச் சந்தித்து கதையை விவரித்த போது, மௌனமாகக் கேட்டார். படப்பிடிப்புத் தளத்தில் நான்...
கோப்ரா – தமிழ் பேசும் இர்ஃபான் பதான்

கோப்ரா – தமிழ் பேசும் இர்ஃபான் பதான்

சினிமா, திரைச் செய்தி
‘சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் உள்ள பிரம்மாண்டமான பீனிக்ஸ் சிட்டி வணிக வளாகத்தில் அமைக்கப்பட்ட பிரத்தியேக அரங்கத்தில் நடைபெற்றது. இயக்குநர் அஜ்ய ஞானமுத்து, “இர்ஃபான் பதானைச் சந்தித்து கதையைச் சொன்னபோது, ‘என்னால் நடிக்க முடியுமா?’ எனக் கேட்டார். ‘உங்களால் முடியும்’ என்று நம்பிக்கை அளித்தேன். அத்துடன் அவருக்காகத் தமிழ் மொழி பயிற்சியாளர் ஒருவரை நியமித்து, தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கற்பித்தோம். உடன் நடிப்பு பயிற்சியையும் அளித்தோம். சில தினங்களிலேயே தமிழ் மொழி உச்சரிப்பைத் தெளிவாக உச்சரித்து நடித்து அசத்தினார். ‘கே.ஜி.எஃப்’ படத்தின் முதல் பாகம் வெளியாகி இருந்த நிலையில் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியைச் சந்தித்தோம். அந்தப் படத்திற்கும், ‘கோப்ரா’ படத்திற்கும் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரம். அவரின் வேறு காணொளிகளைக்...
ஏ.ஆர்.ரஹ்மானின் மாயாஜாலத்தில் கோப்ரா

ஏ.ஆர்.ரஹ்மானின் மாயாஜாலத்தில் கோப்ரா

சினிமா, திரைச் செய்தி
‘சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் உள்ள பிரம்மாண்டமான பீனிக்ஸ் சிட்டி வணிக வளாகத்தில் அமைக்கப்பட்ட பிரத்தியேக அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித் குமார், இயக்குநர் அஜய் ஞானமுத்து, படத்தின் நாயகன் சீயான் விக்ரம், அவரது வாரிசும், நடிகருமான துருவ் விக்ரம், ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், பாடலாசிரியர் தாமரை ஆகியோருடன் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரகுமான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 'கோப்ரா' படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களும், ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரகுமான் மற்றும...
மாயோனையும், பக்ரீத பண்டிகையையும் இணைக்கும் நிலா

மாயோனையும், பக்ரீத பண்டிகையையும் இணைக்கும் நிலா

சினிமா, திரைத் துளி
‘ஒருவரையும் வெறுக்காமல் அனைவரையும் நேசிப்போம்’ எனும் கருத்தை வலியுறுத்தும் விதமாக மாயோன் திரைப்படக்குழு, “பக்ரீத்” பண்டிகைக்கு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளது. புத்தம் புதிய களத்தில் மாறுபட்ட திரைக்கதையில், கடவுள் & அறிவியல், சிலை கடத்தல் மற்றும் புதையல் வேட்டை என பரபர த்ரில்லர் திரைப்படமாக அனைவரையும் கவர்ந்த, இத்திரைப்படம் 3 வாரங்களைக் கடந்த பிறகும், மக்களின் அளவு கடந்த வரவேற்பைத் தொடர்ந்து, திரையரங்குகள் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. “மாயோன் படத்திற்கும் பக்ரீத் பண்டிகைக்கு, ஓர் அழகான தொடர்பு உண்டு அது தான் நிலா” என்று தயாரிப்பு நிறுவன டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கிறது. தேசமெங்கும் அன்பைப் பரப்புவோம் என்பதை முழக்கமாக முன்னெடுக்கும் விதமாக பக்ரீத் பண்டிகையை அனைவரும் அன்போடு கொண்டாடுவோம் என வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது மாயோன் படக்குழ...
லைகாவின் ‘பொன்னியின் செல்வன்’ டீசர் வெளியீடு

லைகாவின் ‘பொன்னியின் செல்வன்’ டீசர் வெளியீடு

சினிமா, திரைத் துளி
லைகா நிறுவனம் பிரம்மாண்டமான தயாரிப்பில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் டீஸர் வெளியீடு ‘மக்கள் திலகம்’ எம்ஜிஆர் மற்றும் இயக்குநர் மணிரத்னத்தின் கனவு படைப்பான அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல், தயாரிப்பாளர் சுபாஷ்கரனின் லைகா நிறுவனம் என்ற முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் பங்களிப்பு இல்லாமல், உருவாகச் சாத்தியமேயில்லை என்பது இப்படத்தின் டீஸர் மூலம் தெரிய வருகிறது. 'பாகுபலி' படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் ரசிகர்களிடம் இது போன்ற வரலாற்றுக் கதைகள் தமிழ் மொழியில் வெளியாகாதா என்ற எண்ணம் ஏற்பட்டது. அதிலும் அமரர் கல்கி உலகம் போற்றும் சோழ சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ராஜராஜ சோழன் பற்றிய வரலாற்றை உரிய திருவாலங்காடு செப்பேடுகளின் ஆதாரங்களுடன் 'பொன்னியின் செல்வன்' என்ற நாவலாகப் படைத்திருக்கிறார். இந்நிலையில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் திரைப்படங்களைத் தயாரித்து, அதனை சர்வதேச அளவிலான...
பாலமுரளி நாத மஹோத்சவம் தேசிய விருதுகள்

பாலமுரளி நாத மஹோத்சவம் தேசிய விருதுகள்

சமூகம்
பாலமுரளி நாத மஹோத்சவம் விருது நிகழ்ச்சியில் Dr.T.K.மூர்த்தி, திரு. M. சந்திரசேகரன் மற்றும் திரு. விக்கு விநாயக ராம் முரளி ஆகியோர் நாத லஹிரி விருது பெற்றனர். பாலமுரளி நாத மஹோத்சவம் விருது நிகழ்ச்சி Dr.M.பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் 92ஆவது பிறந்த நாளான ஜூலை 6 ஆம் தேதி அன்று விருது வழங்கும் நிகழ்ச்சியாகவும்,இசை நிகழ்ச்சியாகவும் கோலாகலமாக நடைபெற்றது. Dr. M. பால முரளிகிருஷ்ணா நினைவு அறக்கட்டளையுடன் பாரதிய வித்யா பவன் மற்றும் ssvm நிறுவனங்கள் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சியின் தொடக்கமாக பால முரளி கிருஷ்ணா அவர்களின் பிரதான சீடர்களான Dr. K. கிருஷ்ணகுமார் மற்றும் திருமதி பின்னி கிருஷ்ணகுமார் அவர்களின் குழு,  பால முரளி பஞ்ச ரத்ன கீர்த்தனைகளைப் பாடித் துவக்கி வைத்தனர். கர்நாடக இசை உலகின் உச்சத்தைத் தொட்ட இசைக் கலைஞர்கள் Dr.T.K. மூர்த்தி (மிருதங்கம்), திரு.M. சந்திரசேகரன் (வயலின்...
தமிழ் சினிமாவின் பெருமையான ‘கடைசி விவசாயி’

தமிழ் சினிமாவின் பெருமையான ‘கடைசி விவசாயி’

சினிமா, திரைத் துளி
இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் 'கடைசி விவசாயி'. நல்ல படங்களைத் தயாரிப்பதில், ஒரு தயாரிப்பாளராக ‘மேற்குத் தொடர்ச்சி மலை’யின் உச்சியில் அமர்ந்திருக்கும் விஜய் சேதுபதியின் இன்னொரு பெருமை மிகு தயாரிப்பும் கூட இந்த ‘கடைசி விவசாயி’. ‘கடந்த 100 ஆண்டுகால தமிழ் சினிமாவின் தலை சிறந்த படம்’, மண் மணம் வீசும் காவியம்’ என்பது போன்ற உயர்ந்த அபிப்பிராயங்களுடன் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படம், தியேட்டர் வசூலில் தயாரிப்பாளருக்குச் சாதகமாக அமையவில்லை. இருப்பினும் 'கடைசி விவசாயி' படத்தைப் பார்த்த ரசிகர்கள் கதையின் நாயகனாக நடித்த நிஜ விவசாயி நல்லாண்டி ஐயாவும், உலகத்தரம் வாய்ந்த படத்தைத் தயாரித்ததற்காக 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியும் பாராட்டைப் பெற்றார்கள். பல திரையரங்குகளில் படம் நிறைவடைந்ததும் பார்வையாளர்கள் எழுந்து நின...