
Dev cinemas | நடுத்தர வர்க்கத்து இளைஞனின் வாழ்வும் காதலும்
தேவ் சினிமாஸ் தயாரிப்பில், யோகிபாபு நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் ரா.ராஜ்மோகன் இயக்கத்தில், உண்மைச்சம்பவத்தின் பின்னணியில், ஓர் அழகான காதல் கதையுடன் புதிய படம் உருவாகிறது. தமிழ்ப் புத்தாண்டையொட்டி, இப்படத்தின் படப்பிடிப்பு, அருள் முருகன் கோவிலில் எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. மேற்குத் தொடர்ச்சி மலை பட இயக்குநர் லெனின் பாரதியிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ரா.ராஜ்மோகன் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
சென்னையில் இரும்புக்கடை தொழிலாளியான நடுத்தர வர்க்கத்து இளைஞனின் வாழ்வும், அவனது காதலுமாக இப்படம் உருவாகிறது. ரசிகர்களுக்கு மாறுபட்ட அனுபவம் தரும் வகையில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் ரசிக்கும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகிறது. நகைச்சுவை நாயகன் யோகிபாபு, காதல் நாயகனாகவும், எமோஷனலாகவும் புதுமையான ப...