Shadow

Tag: வெற்றிமாறன்

கொட்டுக்காளி – உலக சினிமாவின் அடையாளம் | இயக்குநர்கள் புகழாரம்

கொட்டுக்காளி – உலக சினிமாவின் அடையாளம் | இயக்குநர்கள் புகழாரம்

சினிமா, திரைச் செய்தி
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் வழங்கும், பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, அன்னா பென் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொட்டுக்காளி’ ஆகும். இந்த மாதம் ஆகஸ்ட் 23 அன்று வெளியாகிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் கலையரசு, “நாங்கள் தயாரித்து வழங்கும் ஏழாவது படம் ‘கொட்டுக்காளி’. உலகம் முழுவதும் இந்தப் படம் பல பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுத் தந்தது எங்களுக்குப் பெருமை. கூழாங்கல் படம் பார்த்ததும் நாங்கள் வினோத்துடன் வேலை செய்ய வேண்டும் என நினைத்தோம். ‘கொட்டுக்காளி’ மூலம் அது நடந்துள்ளது. வினோத்ராஜ், சூரி, அன்னா பென் என அனைவரும் சிறப்பான வேலையைக் கொடுத்துள்ளனர். தொழில்நுட்பக் குழுவினரும் நன்றாக வேலை செய்திருக்கின்றனர். படம் நிச்சயம் பேசப்படும்” என்றார். படத்தொகுப்பாளர் கணேஷ் சிவன், “இது நம் ஊரின...
கருடன் விமர்சனம்

கருடன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நீதியா, விசுவாசமா என்பதற்கு இடையில் மாட்டிக் கொண்டு முழிக்கும் ஒரு விசுவாசமான வேலைக்காரனின் தடுமாற்றமும் தடமாற்றமும் தான் இந்த கருடன். நாயகனுடன் இருந்து கொண்டே தீங்கிற்கு துணை போன துரோகிகளைத் தமிழ் சினிமா வால்டர் வெற்றிவேல் திரைப்படத்திற்கு முன்பிருந்தே பார்த்து வருகிறது. ஆக, கதையாக இது பழைய ஃபார்முலா கதை தான். ஆனால் அந்த தீங்கிற்கு துணை போகுமளவிற்கு அவர்கள் துரோகிகள் ஆகும் அந்த மனமாற்றத்திற்கான திரைக்கதை தான் இந்த கருடனை கருட சேவைக்குரியவனாக மாற்றுகிறது. மீண்டும் பழைய ஃபார்முலா தான். மனிதனுக்கு வரக்கூடாத மூணு ஆசை மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்று ரஜினி பேசும் அந்த வசனங்கள், அதே மாடுலேஷனுடன் நம்மில் பலருக்கு இன்றும் நினைவில் இருக்கும். இந்த மூன்று ஆசைகளில் எதுவும் மனிதனுக்கு வந்துவிடக் கூடாது என்று இவர் சொல்ல, இந்த மூன்று ஆசைகளுமே முந்தியடித்துக் கொண்டு பிரச்சனைகளுக்கு தூபம் போடுகிறது. த...
ஸ்டார் விமர்சனம்

ஸ்டார் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
திரைத்துறையில் நாயகனாக சாதிக்க வேண்டுமென்கின்ற கனவுடன் வாழ்ந்து வரும் இளைஞன், தன் கனவை நிஜமாக்க வாழ்க்கையில் என்ன மாதிரியான தடைகளையும் சிக்கல்களையும் பிரச்சனைகளையும் சந்திக்கிறான், அவற்றைக் கடந்து அவன் தன் கனவை அடைந்தானா என்பதைப் பேசும் படமே இந்த “ஸ்டார்”. சினிமாவில் சாதிக்க முடியாமல் அன்றாட வாழ்க்கையின் அவஸ்தைகளில் சிக்கி, சின்னாபின்னமாகி இறுதியில் தன்னை ஒரு புகைப்படக் கலைஞராக நிலைநிறுத்திக் கொண்ட ஒரு நடுத்தர மனிதன் (லால்), தன் ஒட்டுமொத்தக் கனவையும் வளர்ந்து வரும் மகன் (கவின்) தோள்களில் தூக்கி வைக்க, பள்ளியில் ஆறு வயதில் பாரதியார் வேஷம் போட்டு மேடை ஏறப் போகும் மகன் கலை, அப்பாவின் வார்த்தைகளின் வழியே எதிர்காலத்தில் தான் ஒரு நடிகனாக நாயகனாக வரவேண்டும் என்கின்ற கனவையும் தன் மனதில் ஏற்றிக் கொள்கிறான். அந்தக் கனவு அவனை எப்படி தூக்கத்தையும் நிம்மதியையும் தொலைக்கச் செய்து துரத்தியது என்பதை வி...
“பாரதிராஜா அருகில் உட்காரத் தகுதியானவர் வெற்றிமாறன்” – இயக்குநர் லிங்குசாமி

“பாரதிராஜா அருகில் உட்காரத் தகுதியானவர் வெற்றிமாறன்” – இயக்குநர் லிங்குசாமி

சினிமா, திரைச் செய்தி
ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு வழங்கும், இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ், பாரதிராஜா நடிக்கும் ‘கள்வன்’ படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. பாடலாசிரியர் சிநேகன், “ஜிவி சாருடன் சேர்ந்து நிறைய படங்களில் பயணப்பட்டிருக்கிறேன். பாடல்களும் ஹிட் ஆகி இருக்கிறது. இசையமைப்பாளர்களுக்குப் பாடல் எழுதும்போது வரிகளை ரசிக்கும் இசையமைப்பாளர் இருந்தால் எழுதுவதற்கு இன்னும் உற்சாகமாக இருக்கும். அப்படியான ஒருவர்தான் ஜிவி. இந்தப் படத்தின் பாடல்களும் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். இயக்குநர் ஷங்கர் அவ்வளவு ஒற்றுமையுடன் அணியை எடுத்துச் சென்றார். ஜிவி பிரகாஷ் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் அடுத்தடுத்த உயரத்திற்குச் செல்வார்” என்றார். இசையமைப்பாளர் ரேவா, “ 'கள்வன்' படம் எங்கள் எல்லோருக்குமே ஸ்பெஷல் படம். என்னை நம்பி இசையமைக்க வா...
இயக்குனர் வெற்றிமாறனின் IIFC-சார்பில் வெற்றி துரைசாமிக்கு நினைவஞ்சலி!

இயக்குனர் வெற்றிமாறனின் IIFC-சார்பில் வெற்றி துரைசாமிக்கு நினைவஞ்சலி!

அரசியல், சமூகம், சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் பன்னாட்டு திரை-பண்பாடு ஆய்வகம்[IIFC] சார்பில் சமீபத்தில் அகால மரணம் அடைந்த வெற்றி துரைசாமிக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்வில் தயாரிப்பாளர் தாணு,இயக்குனர் வெற்றிமாறன்,அவரது மனைவி ஆர்த்தி வெற்றி மாறன்,பேராசிரியர் ராஜநாயகம், முன்னாள் ராணுவ வீரர் மேஜர் மதன்குமார், மருத்துவர் வந்தனா,ஜெகதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.முதலாவதாக பேசிய பேராசிரியர் ராஜநாயகம்," கையறு நிலையில் துக்கமான சூழ்நிலையில்,இந்த பன்னாட்டு திரை-பண்பாடு ஆய்வகத்தின் முதுகெலும்பாக, இருபெரும் தூண்களில் ஒரு பெரும் தூணாக இருந்த வெற்றி துரைசாமியின் எதிர்பாராத மறைவு அஞ்சலி செலுத்த ஆற்றல் குன்றிய சூழலானாலும், இந்த ஆய்வகத்திற்கு அவர் செய்த உதவிகளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். அவரது மறைவை அவரது குடும்பத்தினர்,இந்த சூழலை கடந்து வர தேவையான ஆற்றலை இறைவன் அளிக்க வேண்டும்.வெற்ற...
”சேருமிடம் ஒன்று இருக்குமானால் அது இளையராஜாவின் பாதங்களே!” – மிஷ்கினின் இசைப்பயணம்

”சேருமிடம் ஒன்று இருக்குமானால் அது இளையராஜாவின் பாதங்களே!” – மிஷ்கினின் இசைப்பயணம்

சினிமா, திரைச் செய்தி
மாருதி ப்லிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில்  எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “DEVIL” . சவரக்கத்தி திரைப்படத்தை இயக்கிய  இயக்குநர் ஆதித்யா இப்படத்தை இயக்கியுள்ளார். விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகுரு மற்றும் மிஷ்கின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சத்யம் திரையரங்கில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட எழுத்தாளர் ஜெயமோகன் பேசும் போது, ”இந்த உலகத்தில் இருக்கிற எல்லா விசயங்களையும் குறித்து கருத்து சொல்பவன் நான், ஆனால் ஒன்றைக் குறித்துப் பேச மட்டும் எனக்குத் தகுதியில்லை என்று கூறினால் அது கண்டிப்பாக இசை குறித்துத்தான். ஏனென்றால் எனக்கு இசையைப் பற்றி ஒன்ற...
விடுதலை பாகம் 1-100 மில்லியன் பார்வை நிமிடங்கள்

விடுதலை பாகம் 1-100 மில்லியன் பார்வை நிமிடங்கள்

OTT, சினிமா, திரைச் செய்தி
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் வெளியான ”விடுதலை பாகம் 1” திரைப்படம் ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.கடந்த மார்ச் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் தமிழ்த் திரை வரலாற்றில் முத்திரை பதிக்குமளவு, ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து ஏப்ரல் 28, ஜீ5 தளத்தில் டிஜிட்டல் பிரீமியராக வெளியான இப்படம் பார்வையாளர்களிடம் மிகச் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ் சினிமா ரசிகனின் ரசனையை உயர்த்துவதுடன், தமிழ் சினிமாவின் தரத்தை உலகளவில் நிலை நிறுத்துபவர்களில் முக்கியமானவர் இயக்குநர் வெற்றிமாறன். அந்த வகையில் அவரது புதிய திரைப்படமான 'விடுதலை பாகம் 1' சமூகத்திற்கு அவசியமான படைப்பாகவும், ரசிகர்கள் கொண்டாடும் படைப்பாகவும் அமைந்துள்ளது. இதுவரையிலும் காமெடியில் கலக்கி வந்த நடிகர் சூரி முதன்...
வெற்றிமாறன், பிரகாஷ்ராஜ், ராதிகா சரத்குமார் – தமிழ்ப் புத்தாண்டை வரவேற்கும் ஜீ5

வெற்றிமாறன், பிரகாஷ்ராஜ், ராதிகா சரத்குமார் – தமிழ்ப் புத்தாண்டை வரவேற்கும் ஜீ5

சினிமா, திரைச் செய்தி
ஜீ5, சென்னையில் மிளிரும் நட்சத்திரங்கள் நிரம்பிய பிரம்மாண்டமாக நடந்த “ஒரு ஆசம் தொடக்கம்” நிகழ்ச்சியில், தமிழில் அடுத்தடுத்து வரவிருக்கும் அழுத்தமான கதைகளின் வரிசையை அறிவித்தது. பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரிஜினல் தொடர் “நிலமெல்லாம் ரத்தம்” எனும் ஜீ5 பிரத்தியேக தொடர் அறிவிக்கப்பட்டது. இவருடன் பன்முக ஆளுமையாளரான பிரகாஷ் ராஜ் நடிப்பில் ‘அனந்தம்’ என்ற அழகிய டிராமா தொடர், நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் திரில்லர் தொடர் “கார்மேகம்” மற்றும் அரசியல் டிராமாவான “தலைமை செயலகம்” ஆகிய தொடருடன், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் இளைஞர்கள் இதயம் வென்ற காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் வரவிருக்கும் “பேப்பர் ராக்கெட்” தொடர்கள் பற்றி இந்நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது. இவை தவிர, ஜீ5 தளத்தில், இயக்குநர் விஜய்யின் டீன் ஏஜ் டான்ஸ் டிராமா ஃபைவ் - சிக்ஸ்- செவன்- எயிட், வசந்த பாலன் இயக்கத்தில் 'தலைமை செயல...
காவல்துறை உங்கள் நண்பன் விமர்சனம்

காவல்துறை உங்கள் நண்பன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இந்தப் படத்திற்குள் தன்னை இணைத்துக் கொண்ட இயக்குநர் வெற்றிமாறன், அதற்கான காரணமாக, 'இது ஒரு மரியாதையான முயற்சி' என்றார். சாத்தாங்குளம் இரட்டைக் கொலை சம்பவம் ஏற்படுத்திய அதிர்வை நினைவுறுத்துகிறது படம். மேலே உள்ள அந்தப் போஸ்டரே அதற்கு சாட்சி. லாக்கப் மரணம், கஸ்டடியல் வயலன்ஸ் என போலீஸின் அராஜகப் பக்கங்களில் ஒன்றை அழுத்தமாகப் பதிந்துள்ளது படம். இரு உருளை வண்டியில் மனைவியுடன் வரும் பிரபுவைக் காவல்துறை மறித்து விசாரிக்கின்றனர். ஆவணங்களை சரியாக வைத்திருந்தும், 'குடித்துள்ளார்; RC புக் இல்லை' என எனச் சொல்லி பிரபுவை கைது செய்கிறது போலீஸ். அதன் பின், பிரபுவை அடிபணிய வைத்து, அலைகழித்து, அவனது வாழ்வைக் கேள்விக்குறியாக்கி, சீர்குலைத்து சொல்லொண்ணாத் துன்பத்திற்கு ஆட்படுத்துகிறது, பொதுமக்களின் ஊழியரும் நண்பரும் பாதுகாவலருமான போலீஸ். இன்ஸ்பெக்டர் கண்ணபிரானாக மைம் கோபி வெறுப்பைச் சம்பாதித்துள்ளார். படத...
அசுரன் விமர்சனம்

அசுரன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
லாக்கப் எனும் நாவல் விசாரணை ஆனதை விட, பல மடங்கு வீரியத்துடன், வெக்கை நாவலை அசுரன் எனும் திரைப்படமாக மாற்றியுள்ளார் வெற்றிமாறன். எழுத்தாளர் பூமணியின் மூலக்கதையை மிஞ்சும் அளவு, மிகச் சிரத்தையுடன் திரைக்கதை அமைத்து அசக்தியுள்ளனர் மணிமாறனும் வெற்றிமாறனும். ஒரு நாவல் திரைப்படமான முயற்சியில், இயக்குநர் மகேந்திரனின் 'முள்ளும் மலரும்' பெற்ற இடத்திற்கு நிகராக வைக்கக் கூடிய கலைப்படைப்பாக வந்துள்ளது அசுரன். நிலத்தைக் கையகப்படுத்துவதில் ஏற்படும் தகராறும், அது தொடர்பான கொலையும் பழிவாங்குதலும் தான் படத்தின் கதை என்றாலும் கூட, சமூகத்தில் நிலவி வரும் சாதிய அடக்குமுறைகளும், ஒடுக்கப்பட்டவர்கள் மீது ஏவப்படும் வன்முறைகளுமே படத்தின் அடிநாதம். ஹிந்திப்படமான ஆர்ட்டிகிள் 15 போல் எதையும் உடைத்துப் பேசாவிட்டாலும், இன்னது தான் பேசுகிறோம் என தனது திரைமொழியால் புரிய வைத்துவிடுகிறார் வெற்றிமாறன். அவரது படைப்புகள் தன...
வடசென்னை விமர்சனம்

வடசென்னை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அரசாங்கம் மக்களுக்குச் செய்யும் துரோகம், வளர்த்து விட்டவருக்கு அவரது பிள்ளைகள் செய்யும் துரோகம், நட்பெனும் போர்வையில் நம்பியவர்களுக்குச் செய்யப்படும் நம்பிக்கைத் துரோகம், பழிவாங்க உறவாடிக் கெடுக்கும் துரோகம் என துரோகத்தின் அத்தனை வடிவங்களையும் கொண்டுள்ளது வடசென்னை. இப்படம், மெட்ராஸ் போலவும், காலா போலவும், 'நிலம் எங்கள் உரிமை' என்பதையே பேசுகிறது. வளர்ச்சியெனும் பேரில் மீனவக் குப்பங்களும், அதன் மனிதர்களும் எப்படி அந்நியப்படுத்தப்பட்டு நசுக்கப்படுவார்கள் என அமீர் பேசும் அரசியலைச் சேலம் எட்டு வழி பாதை திட்டத்தோடு பொருத்திப் பார்த்தால் படத்தில் இழையோடும் அரசியலின் வீரியம் புரியும். அமீரின் பாத்திரம் தெறி! வெற்றிமாறன், மேக்கிங்கிலும் கதைசொல்லும் பாணியிலும் மிகுந்த சிரத்தை எடுத்து அசத்தியுள்ளார். ஒரு நேர்க்கோட்டுக் கதையை, பல அத்தியாயங்களாகப் பிரித்து, மூன்று கதாபாத்திரங்களுக்குள் உள்ள தொடர்பா...
விசாரணை விமர்சனம்

விசாரணை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரே ஓர் அட்டகாசமான கதை போதும் - நீங்களும் பயங்கரவாதி தான். கதை கூட வேண்டாம். அதிகார வர்க்கம் யாரை வேண்டுமானாலும் குற்றவாளியெனச் சுலபமாக அடையாளப்படுத்தும். அப்படி அதிகார வர்க்கத்தால் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்படும் வீடற்ற பிளாட்ஃபாரவாசிகள் (பூங்காவாசிகள்) நால்வர் பற்றிய படமிது. நிரபராதிகளான அந்நால்வரும் முதலில் ஆந்திரக் காவல்துறையினரிடம், பின் தமிழகக் காவல்துறையினரிடம் சிக்கிப் சின்னாபின்னமாகின்றனர். அதிகாரம் - ஜாதி, இன, மத, மொழி, "வர்க்கம்" என எந்த வேற்றுமையும் பாவிக்காது. தன்னை நிலைநிறுத்திக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்லும்; யாரை வேண்டுமானாலும் பலி கொடுக்கும். தன் வேலையைத் தக்க வைக்க பாடுபட்டு சித்ரவதை செய்யும் இன்ஸ்பெக்டர், பதவிக்காக தனது ஆடிட்டரை காவு வாங்கும் அரசியல்வாதி, குட்டு வெளிபட்டு விடுமென சாமான்யரைக் கொல்லத் துடிக்கும் உதவி ஆணையரென அதிகாரம் அதனதன் அளவில் சக மனிதனை மனிதன...
வியத்தகு விசாரணை – வியந்த இயக்குநர் விஜய்

வியத்தகு விசாரணை – வியந்த இயக்குநர் விஜய்

சினிமா, திரைத் துளி
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய விசாரணை, இந்தியாவில் உருவாக்கப்பட்ட மிகச் சிறந்த படம். அவர் தனது மாஸ்டர் பீஸை உருவாக்கியுள்ளார். படம் பார்த்துவிட்டு, நான் வாயடைத்துப் போனேன். அவர் திரைக்கதையைக் கையாண்ட விதத்திலும், கதாபாத்திரத் தேர்விலும் மாயம் செய்துள்ளார். அனைவரும் உண்மையிலேயே படத்தில் வாழ்ந்துள்ளனர். தினேஷ், சமுத்திரக்கனி, ஒளிப்பதிவாளர் ராமலிங்கத்துக்கும், மொத்த குழுவிற்கும் பெரிய வாழ்த்துகள். இந்தப் படம் அனைத்து வகையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. இந்திய சினிமாவின் அடையாளமாகவே ஒட்டுமொத்த உலகிற்கும் விளங்கப் போகிறது. தமிழ்த் திரையுலகத்திற்கு பெருமையான தருணமாக இது அமையப் போகிறது. படத்தை ரிலீஸுக்கு முன்பாகவே பார்க்க முடிந்ததை அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டிய படம். திரையரங்குகளில் வெளியானதும், தவறவிடாமல் அனைவரும் பாருங்கள். மனதைக் கனக்க வைக்கும் அ...
ஆடுகளம் விமர்சனம்

ஆடுகளம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆடுகளம் - விளையாடுபவர்கள், பயிற்சியாளர்கள், ஆதரவாளர்கள், நடுவர்கள், ரசிகர்கள், ஆடுகளத்தினைப் பராமரிப்பவர்கள் என ஆடுகளம் வகை வகையான மனிதர்களை எப்பொழுதுமே  தன்னுடன் வைத்திருக்கும். அதனாலேயே ஆடுகளத்தின் ஆரவாரத்தினை, ஆளரவமற்ற இரவிலும் உணர முடியும். காரணம் மனிதர்கள் அனைவரும் சதா விளையாடிக் கொண்டே தான் இருக்கிறார்கள். ஆடுகளங்கள் தான் ஒருவரிலிருந்து மற்றவருக்கு மாறுபடுகிறது. வெற்றிமாறன் சேவல் சண்டை நடக்கும் திடல், அத்திடலில் உள்ள மனிதர்களின் மனம் என இரண்டு ஆடுகளத்தினைத் தனது படத்தில் காட்டியுள்ளார்.பேட்டைக்காரர் தயார்ப்படுத்தும் சேவல்களும், அவைப் பெறும் வெற்றிகளும் அப்பிராந்தியத்தில் அவருக்கென ஒரு தனி செல்வாக்கை ஏற்படுத்துகின்றன. காவல்த் துறை அதிகாரியான ரத்தினசாமி தனது தாயாரின் பழம்பெருமை புலம்பல்களைப் பொறுக்க முடியாமல், தாயாரின் கடைசி ஆசையாக எண்ணி பேட்டைக்காரருடன் சேவல் சண...