
“திறமையை ஊக்குவித்தால் எல்லோராலும் வெற்றி பெறமுடியும்” – காஸிமா | தி கேரம் குயின்
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகானத்தில் நடைபெற்ற 6 ஆவது சர்வதேச கேரம் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவின் பெயரை உலக அளவில் உயர்த்தி பிடித்த வடசென்னை விளையாட்டு மங்கை காஸிமாவின் வாழ்க்கை சரிதம் என்பது மிகுந்த வலி மிகுந்தது.
மிகச் சாதாரணமான குடும்பத்தில் பிறந்து, ஆட்டோ ஓட்டுநரின் மகளாக வளர்ந்து அப்பாவின் ஆசையான கேரம் விளையாட்டைச் சகோதரர் துணையுடன் கற்றுக் கொண்டு சர்வதேச விளையாட்டுப் போட்டியில் வென்று தன் ஏழ்மை நிலையை வென்றவர் காஸிமா.
இவரது வலிமிகுந்த வெற்றி வாழ்க்கையை உலகம் முழுவதும் கொண்டு செல்ல கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு தயாரிப்பு நிறுவனம் திரைப்படமாகத் தயாரிக்க முன்வந்தது. காஸிமாவின் வாழ்க்கை வரலாற்று பயோபிக் ஆக உருவாகும் இந்தப் படத்துக்கு 'தி கேரம் குயின்' எனப் பெயரிட்டு, பிரம்மாண்டமாகப் பூஜையுடன் படத் தொடக்க விழா நடை பெற்றது. இப்படத்தில் காஸிமாவின் கதாபாத்திரத்தில் நடி...
















