Shadow

Tag: கெளதம் வாசுதேவ் மேனன்

VTV – விண்ணைத்தாண்டி வருவாயா | 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்

VTV – விண்ணைத்தாண்டி வருவாயா | 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்

சினிமா, திரைத் துளி
சில காதல் கதைகள், அனைவரின் மனதிலும் நீங்காத நினைவுகளைthஹ் தந்து, உணர்வுகளோடு பிணைந்து என்றென்றும் நிலைத்து நிற்கும். கௌதம் வாசுதேவ் மேனனின் கிளாசிக் காதல் கதையான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இத்தனை வருடங்களுக்குப் பிறகும், காதலர்களின் மனதில் பல இனிமையான தருணங்களை உருவாக்கி, என்றென்றைக்குமான காதல் கதையாக நிலைத்து நிற்கிறது. 15 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள இந்தப் படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தச் சிறப்புக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, படக்குழுவினர் அனைவரும் அவர்களுடைய ஞாபகங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், இந்தப் படத்தை சிறப்பானதாக்கிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றிகள் தெரிவித்தனர். இந்த சிறப்புக் கொண்டாட்ட நிகழ்வில், நடிகர் சிலம்பரசன் டி.ஆர்., வி.டி.வி கணேஷ் ஆகியோர் ஒரு காணொளியில் தோன்றி, இந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு நன்றி தெரிவி...
DRAGON விமர்சனம்

DRAGON விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
திரையரங்கில் பார்க்க வேண்டிய ஜாலியானதொரு படம். கெட்டவனாகப் பொறுக்கியாக இருந்தால்தான் கெத்து என கல்லூரியில் அரியர் வைப்பதைப் பெருமையாக நினைக்கிறான் D.ராகவன். அதன் பலனாக வாழ்க்கை அவனை எப்படிலாம் புரட்டுகிறது என்பதுதான் படத்தின் கதை. லவ் டுடே படத்திற்குப் பிறகு, மற்றுமொரு வெற்றிப்படத்தில் தன்னை அழகாகப் பொருத்திக் கொண்டுள்ளார் பிரதீப் ரங்கநாதன். படத்தின் முதற்பாதியில் ஏகத்திற்கும் சிகரெட் பிடிக்கிறார் பிரதீப் ரங்கநாதன். ஐடியில் இணைந்த பின், பசங்களிடம் ஒரு பளபளப்பும் மினுமினுப்பும் ஏற்படும். ஒரு கோடி ரூபாய்க்கு வீடு, ஒளடி கார் வாங்கினாலும், உருப்படாமல் இருந்த பொழுது எப்படி இருந்தாரோ அப்படியே அவரைக் காட்டுகின்றனர். நல்லவேளையாகப் புறத்தில் மட்டுமே அப்படி, அகத்தில் அவரிடம் ஏற்படும் மாற்றமே படத்தை மிகவும் அழகாக்கியுள்ளது. கீர்த்தியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். வழக்கமான படமாக மாறிவிடாமல் பட...
விடுதலை பாகம் – 2 விமர்சனம்

விடுதலை பாகம் – 2 விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
முழு உண்மைக்கும், அதிலிருந்து எடுத்துப் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் செய்திக்குமான வித்தியாசம் எவ்வளவு என்பதைப் படம் பேசுகிறது. அதிகாரம் என்பது நினைத்ததைச் செயல்படுத்துவதாக இருந்தாலும், அது நிகழாத பட்சத்தில், நடப்பதை எல்லாம் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் புனைவுத் திறமை உடையது என்பதைப் படம் மிக அழுத்தமாகப் பதிந்துள்ளது. அதிகாரச் சக்கரத்தின் ஏதோ ஒரு பல்லில், ஒட்டிக் கொள்ள இடம் கிடைத்தாலும், சக்கரத்தின் சுழற்சிக்குத் தக்கவாறு தனது தனிப்பட்ட நலனையும் வளர்ச்சியையும் முதன்மைப்படுத்திக் கொண்டு, யார் மீதாவது, எதன் மீதாவது சக்கரத்தோடு இணைந்து பயணித்துவிடுவார்கள். அதிகாரம் எனும் போதை, சமூகத்தின் இன்ன அடுக்கில் உள்ளவர்களுக்கு மட்டுமே உரிமையானதோ, உடைமையானதோ இல்லை; அது எவரையும் வீழ்த்தும் தன்மையுடையது என்று படத்தின் முடிவில் அற்புதமாகவும், மிகத் துணிச்சலாகவும் இயம்பியுள்ளார் வெற்றிமாறன். இந்தப் பாகத்...
ஹிட்லர் விமர்சனம்

ஹிட்லர் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
படைவீரன் (2018), வானம் கொட்டட்டும் (2020) ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் SA தனாவின் மூன்றாவது படம். 'வானம் கொட்டட்டும்' எனக் கதைக்குப் பொருந்தும் கவித்துவமான தலைப்பை வைத்தவர், இப்படத்திற்கு 'ஹிட்லர்' எனும் பொருந்தாத தலைப்பை வைத்திருக்கும் வாய்ப்புக் குறைவாகவுள்ளது. 'பிச்சைக்காரன்' எனும் எதிர் தலைப்பு ஈட்டிக் கொடுத்த வெற்றியினால் உந்தி, 'சைத்தான் (2016)', 'எமன் (2016)', 'திமிரு பிடிச்சவன் (2018)', 'கொலைகாரன் (2019)' என எதிர் தலைப்புகள் வைப்பதில் ஆர்வம் காட்டினார் விஜய் ஆண்டனி. அதன் தொடர்ச்சியாக 'ஹிட்லர்' எனும் தலைப்பையும் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளார் எனப் படுகிறது. மற்ற தலைப்புகளில் இல்லாத அரசியல் பிழைத்தனம் 'ஹிட்லர்' எனும் தலைப்பில் உள்ளது. நாயகனை ஹிட்லர் என அழைத்து, அம்மனிதகுல விரோதியை மகிமைப்படுத்துவது பெருங்குற்றத்தில் வரும். இயக்குநர், வில்லனின் சர்வாதிகாரத்தன போக்கைக் குறிக்கும் வி...
ரத்னம் விமர்சனம்

ரத்னம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சில பல காரணங்களினால் ப்ரியா பவானி சங்கரை கொல்லத் துரத்தும் ஒரு கூட்டம். ஒரே ஒரு காரணத்திற்காக ப்ரியா பவானி சங்கரைக் காக்க உயிரையும் கொடுப்பேன் என்று எதிர்த்து நிற்கும் விஷால், இந்த இரண்டிற்கும் பின்னால் இருக்கும் பின்கதை, இவை தவிர்த்து கிட்டத்தட்ட எல்லாக் காட்சிகளிலும் தெறிக்கும் இரத்தம், இவையெல்லாம் சேர்ந்தது தான் ரத்னம்.வேலூர் பகுதி ஆளும்கட்சி எம்.எல்.ஏ “பன்னீர்” ஆக வரும் சமுத்திரக்கனிக்கு அநீதிக்கு எதிரான அண்டர் கிரவுண்ட் வேலைகள் அனைத்தும் செய்பவராக விஷால் இருக்கிறார். சமுத்திரக்கனியும் ரத்னமாகிய விஷாலை ரத்னம் போல் பொத்திப் பாதுகாக்கிறார். அவர்களுக்குள் அப்படி என்ன பாசப் பிணைப்பு என்பதற்கு ஒரு பின்கதை. திருத்தணியில் இருந்து வேலூருக்கு நீட் தேர்வு எழுத வரும் ப்ரியா பவானி சங்கரைப் பார்த்ததும் வழக்கமான ஹீரோக்கள் உருகுவது போல் விஷாலும் உருகுகிறார். அவர் ஏன் அப்படி உருகுகிறார் என்பதற்குப...
”சவாலான ஸ்டண்ட்களை விரும்பியே ஏற்றுக் கொண்டேன்” – நடிகர் கிருஷ்ணா

”சவாலான ஸ்டண்ட்களை விரும்பியே ஏற்றுக் கொண்டேன்” – நடிகர் கிருஷ்ணா

சினிமா, திரைச் செய்தி
மிகச் சில நடிகர்களே கதையம்சம் சார்ந்த படங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்துவதற்காகப் பாராட்டப்படுவார்கள். அவர்களை ரசிகர்களும் கொண்டாடுவார்கள். இதில் நடிகர் கிருஷ்ணாவும் ஒருவர். தனித்துவமான திரைக்கதைகள் மற்றும் பாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார் கிருஷ்ணா. அவர் முதல்முறையாக இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் வில்லனாக நடிக்கிறார்.இயக்குநர் கெளதம் தனது படங்களில் வலுவான வில்லன் கதாபாத்திரங்களை உருவாக்குவதற்கு பெயர் பெற்றவர். கிருஷ்ணா சந்தேகத்திற்கு இடமின்றி 'ஜோஷ்வா இமை போல் காக்க' படத்தில் அவரது கதாபாத்திரத்தின் தன்மையை சரியாகத் திரையில் பிரதிபலித்துள்ளார். படம் தொடர்பாக வெளியாகியுள்ள புரோமோ காட்சிகளிலேயே இது தெளிவாகத் தெரிகிறது. படம் மார்ச் 1, 2024 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தில் நடித்துள்ள தனது அனு...
‘ஜோஷ்வா இமை போல காக்க’ “நான் எந்தப் படத்திலும் செய்யாத ஒரு விஷயம்.” -கெளதம் மேனன்

‘ஜோஷ்வா இமை போல காக்க’ “நான் எந்தப் படத்திலும் செய்யாத ஒரு விஷயம்.” -கெளதம் மேனன்

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரிப்பில், கெளதம் மேனன் இயக்கத்தில் வருண் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜோஷ்வா இமை போல காக்க’ திரைப்படம் மார்ச் 1 அன்று வெளியாகிறது!தமிழ் சினிமாவில் தன்னுடைய காதல் கதைகள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் இயக்குநர் கெளதம் மேனன். அப்படி எப்போது வெளியாகும் என ரசிகர்கள் நீண்ட நாள் காத்திருந்த ‘ஜோஷ்வா இமை போல காக்க’ திரைப்படம் மார்ச்1 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரிப்பில், கெளதம் மேனன் இயக்கத்தில், பிக் பாஸ் புகழ் வருண் கதாநாயகனாக நடித்துள்ளார். ராக்கே கதாநாயகியாக நடித்துள்ளார். யோகிபாபு, டிடி, கிருஷ்ணா, மன்சூர் அலிகான், விசித்ரா, திவ்யதர்ஷினி என்று பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.படம் குறித்து இயக்குநர் கெளதம் மேனன் பகிர்ந்து கொண்டதாவது, “என்னுடைய மற்றப் படங்களைப் போல இல்லாமல் அதிக...
பால் டப்பா பாடிய ‘மை நேம் இஸ் ஜான்’

பால் டப்பா பாடிய ‘மை நேம் இஸ் ஜான்’

இது புதிது, சினிமா, திரைத் துளி
'துருவ நட்சத்திரம்' படத்தில் இருந்து வெளியாகியுள்ள இரண்டாவது சிங்கிள் 'மை நேம் இஸ் ஜான்' பெப்பி பாடலை பால் டப்பா எழுதி பாடியுள்ளார்! கௌதம் வாசுதேவ் மேனனும், ஹாரிஸ் ஜெயராஜும் படத்திற்காக இணையும் போதெல்லாம், பாடல்களில் நிச்சயம் ஒரு மேஜிக் நிகழும் என்பதை ரசிகர்கள் அறிவார்கள். மிகவும் எதிர்பார்க்கப்படும் 'சியான்' விக்ரம் நடித்த 'துருவ நட்சத்திரம்' படத்தின் முதல் பாடலான 'ஒரு மனம்' இசை ஆர்வலர்கள் மத்தியில் அமோக வெற்றியைப் பெற்ற பிறகு, படக்குழு அவர்களின் இரண்டாவது சிங்கிளான 'ஹிஸ் நேம் இஸ் ஜான்' உடன் மீண்டும் வந்துள்ளது. இந்தப் பாடல் ஜூலை 19, 2023 அன்று வெளியிடப்பட்டது. இந்தp பெப்பியான பாடலுக்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தியுள்ளனர். திறமை மற்றும் துடிப்பான இண்டி ராப்பரும் பாடலாசிரியருமான பால் டப்பா இந்த வசீகரிக்கும் பாடல் வரிகளை எழுதியுள்ளார். இதற்கு முன்பு வெளியாகி ஹிட் ஆன பாடலான 'ஐ...
வெந்து தணிந்தது காடு விமர்சனம்

வெந்து தணிந்தது காடு விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தன்னைச் சுற்றி ஓர் அதிகார மையத்தை உருவாக்கிய எந்த ஒரு டானின் கதையை எடுத்துக் கொண்டாலும், அதன் பின்னால் ஒளிந்திருப்பது ஒரேயொரு விஷயம் தான். சர்வைவல் ஆப் தி பிட்டெஸ்ட். அதாவது, தக்கண தப்பிப் பிழைக்கும். அதிலேயும் நாம் கேட்டறிந்த பெரும்பாலான டானின் கதைகள் அடிமட்டத்தில் இருந்து கிளர்ந்து மேலே வந்தவனின் கதைகளாகத்தான் இருக்கும். வாழ்க்கையால் விரட்டப்பட்டு, சுற்றத்தால் கைவிடப்பட்டு, இனி ஆவதற்கு ஏதும் இல்லை என்ற கணத்தில் கத்தியைத் தூக்கியவன் எடுத்த முதல் பலியில் இருந்தே ஆரம்பமாகி இருக்கும். அப்படித்தான் ஆரம்பமாகிறது இந்தக் கதையும். எவன் ஒருவனும் விரும்பி கத்தியைத் தொடுவதில்லை. அதைத் தொடுவதற்கான சந்தர்ப்பங்களை அவனைச் சுற்றி நிகழும் தருணங்களே ஏற்படுத்திக் கொடுக்கின்றன. அவனும் தொடுகிறான். அதற்காக அப்படித் தொட்டவன் அத்தனை பேரும் டான் ஆகிவிடுவதில்லை. டான் ஆனவன் எவனும் ரத்ததைப் பார்க்காமல் அந்த இடத்தி...
செல்ஃபி விமர்சனம்

செல்ஃபி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கற்றோர்க்குச் செல்லுமிடம் எல்லாம் சிறப்பு என்பர். ஆனால் இன்று ஒரு எளிய பின்னணி உடையவர்கள் கல்வியில் கரை சேர்வதற்குள் திக்கித் திணற வேண்டியுள்ளது. கல்விச் சேவை, கடமை என்ற நிலையில் இருந்து விலகி வியாபாரம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டதால் தான் எளியவர்கள் திண்டாடுகிறார்கள். மேலும் தனியார் கல்லூரிகளில் மருத்துவச் சீட்டுப் பெறுவதற்கு எத்தனை லட்சங்களைக் கொட்ட வேண்டியுள்ளது. அந்த லட்சங்களைப் பெறுவதற்கு கல்லூரி நிறுவனம் என்னென்ன கூத்துகளை எல்லாம் அரங்கேற்றுகிறது என்பதை ஃப்ளாஷ் அடித்துக் காட்டியுள்ளது செல்ஃபி படம். படத்தின் நாயகன் ஜீ.வி.பிரகாஷ், அவரின் நண்பராக வரும் நசீர் பாத்திரம் இருவரும் கல்லூரியில் சீட் வாங்கிக் கொடுத்து கமிஷன் அடிக்கிறார்கள். இதையே பெரும் தொழிலாகச் செய்து வருகிறார் கெளதம் வாசுதேவ் மேனன். கெளதம் வேலையை ஜீ.வி. செய்ய, அதனால் ஜீ.வி.க்கு சில இழப்புகள் வர, மேலும் சில ஆடுபுலி ஆட்டம் அர...
மைக்கேல்: வில்லன் கெளதம் வாசுதேவ் மேனன்

மைக்கேல்: வில்லன் கெளதம் வாசுதேவ் மேனன்

சினிமா, திரைத் துளி
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல் எல் பி இணைந்து 'மைக்கேல்' என்ற புதிய ஆக்சன் எண்டர்டெய்னர் படத்தைத் தயாரிக்கிறது. இதில் இளம் நட்சத்திர நடிகர் சந்தீப் கிஷன் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி அதிரடியான சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தை இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும், நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடிக்கிறார். பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் சில படங்களிலும், வலைத்தளத் தொடர்களிலும் நடித்து தன்னுடைய நடிப்புத்திறமையையும் வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். நல்ல திரைக்கதைகளைத் தேர்வு செய்து நடிப்பதில் தனி முத்திரை படைத்து வர...
ட்ரான்ஸ் விமர்சனம்

ட்ரான்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
Trance என்றால் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது எனத் தெரியாமல் இருக்கும் நினைவிழந்த நிலை. போதையூட்டப்பட்ட மயக்கநிலை என்றும் சொல்லலாம். மனிதன் கண்டுபிடித்த லாகிரி வஸ்துக்களிலேயே, “மதம் (religion)” தான் பயங்கர வசீகரமானதும், மிகக் கொடியதானதும் ஆகும். மதம் பிடித்த மனிதனின் பைத்தியக்காரத்தனம் எந்த எல்லைக்கும் செல்லும். அவர்களது உலகமே தனி. நவீன அறிவியலை மண்டியிடச் செய்யும் விஞ்ஞானச் செறிவு நிறைந்தது எங்கள் மதநூல் என உன்மத்தம் கொள்ளவைக்கும். அத்தகைய மதத்தின் மீதான ஒருவனது நம்பிக்கை, தன்னைக் காக்க இறைவன் பிரசன்னம் ஆவான் என எதிரிலுள்ள ஆபத்தை உணராமல், எளிய தீர்வுகளை நோக்கி நகராமல் கட்டிப் போடும் விஷப்போதையைத் தரவல்லது. போதைக்கு அடிமையானவர்கள், கடவுளின் பெயரால் தங்களை ஆட்டுவிக்கும் எஜமானர்களுக்குப் பிரதியுபகாரமாகத் தருவது கற்பனைக்கெட்டாத அளவற்ற பணமும், அரசியலில் அசைக்க முடியாத அதிகாரமுமே! இதில், ட்ரான...
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் விமர்சனம்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இடைவேளையின் பொழுது ஓர் எதிர்பாராத ட்விஸ்ட், படத்தின் முடிவில் புன்னகையை வரவைக்கும் ஒரு ட்விஸ்ட் என படம் ஸ்வீட் சர்ப்ரைஸாய் வந்துள்ளது. படத்தின் தலைப்பைக் கொண்டே இது ஓர் அழகான காதல் படமென யூகிக்கலாம். அப்படிக் காதல் படமாக மட்டும் தேங்கிவிடாமல், ஆன்லைன் குற்றத்தையும், டெக்னிக்கல் குற்றத்தையும், அவற்றை நூல் பிடித்துத் தொடரும் காவல்துறையின் சாமர்த்தியத்தையும் அழகாகக் கலந்து கொடுத்துள்ளார் இயக்குநர் தேசிங் பெரியசாமி. துல்கர் சல்மானும், ரிது வர்மாவும் ஒரு காதல் ஜோடி என்றால் விஜய் டிவி புகழ் ரக்‌ஷனும், நிரஞ்சனி அகத்தியனும் ஒரு காதல் ஜோடியாக வருகின்றனர். படத்தை மைய இணைக்கு நிகரான ஒரு ஜோடியாகக் கலக்கியுள்ளனர். சொப்பு பொம்மை போலிருக்கும் சன்னி (Sunny) வகை ஸ்கூட்டரைக் காட்டி நாயகியை அறிமுகப்படுத்த, நிரஞ்சனி அகத்தியனை தண்டர்பேர்ட் புல்லட்டில் அறிமுகப்படுத்துகின்றனர். அவரது அலட்சியம் கலந்த பார்வையும்...