Shadow

Tag: நிகில்

பரமசிவன் பாத்திமா விமர்சனம் | Paramasivan Fathima review

பரமசிவன் பாத்திமா விமர்சனம் | Paramasivan Fathima review

சினிமா, திரை விமர்சனம்
அந்நியர்கள் நுழையத் தடை விதைத்திருக்கும் சுப்ரமணியபுரத்து பரமசிவனும், சாத்தான்கள் நுழையத் தடை விதித்திருக்கும் யோக்கோபுரத்து பாத்திமாவும் காதலிக்கிறார்கள். ஆனால் மதத்தைக் காரணம் காட்டி இருவும் கொல்லப்படுகிறார்கள். பரமசிவனும் பாத்திமாவும் தங்கள் மரணத்திற்குப் பழிவாங்குவதுதான் படத்தின் கதை. ஒன்றாக இருந்த ஊரைப் பணத்தாசை காட்டி மதம் மாற்றி இரண்டாக உடைக்கிறார்கள் எனக் காத்திரமான குற்றச்சாட்டை முன்வைக்கிறார் இயக்குநர் இசக்கி கார்வண்ணன். இதுதான் படத்தின் பிரதான நோக்கம். வசனங்கள், காட்சிகள் என அனைத்தும் அதை நோக்கியே நகர்கின்றன. பரமசிவன், பாத்திமா காதலே கூடத் தொட்டுக்கோ, துடைச்சுக்கோ எனக் கிளைக்கதையாகத்தான் வருகிறது. பாத்திமாவின் அண்ணன் ஃபெலிக்ஸாக நடித்திருக்கும் ஒளிப்பதிவாளர் M.சுகுமார்தான் படத்தின் வில்லன். அவருக்கு மத அபிமானம் எல்லாம் கிடையாது. அவரது குறிக்கோள் பணம் மட்டுமே! இயக்குநரின் நோக்கம...
குயிலி | இளைய தலைமுறையின் சமூகப் பொறுப்பைப் புகழ்ந்த தொல். திருமாவளவன்

குயிலி | இளைய தலைமுறையின் சமூகப் பொறுப்பைப் புகழ்ந்த தொல். திருமாவளவன்

சினிமா, திரைத் துளி
BM ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் வெ.வ.அருண்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ப.முருகசாமி இயக்கத்தில் நடிகை லிசி ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘குயிலி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் ‘எழுச்சித் தமிழர்’ தொல். திருமாவளவன் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘குயிலி’ திரைப்படத்தில் லிசி ஆண்டனி, ரவி சா, தாஷ்மிகா, தீப்தி, புதுப்பேட்டை சரவணன், ராட்சசன் சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரவீண் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜூ ஸ்மித் இசையமைத்திருக்கிறார். ஒரு தாயின் வைராக்கியம் மிக்க ...
அக்யூஸ்ட் – சினிமாவில் உதயாவின் 25 ஆவது ஆண்டு

அக்யூஸ்ட் – சினிமாவில் உதயாவின் 25 ஆவது ஆண்டு

சினிமா, திரைச் செய்தி
ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் படமாக்கப்பட்டுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் முதல் முறையாக உதயா, அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தைக் கன்னடத் திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்கியுள்ளார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைக்க, மருதநாயகம்.ஐ ஒளிப்பதிவு செய்ய, கே.எல்.பிரவீன் படத்தொகுப்பைக் கையாள, கலை இயக்கத்திற்கு ஆனந்த் மணி பொறுப்பேற்க, ஸ்டன்ட் சில்வா சண்டைக் காட்சிகளை இயக்கியுள்ளார். சென்னையில் நடைபெற்ற 'அக்யூஸ்ட்' இசை வெளியீட்டு விழ...
படையாண்ட மாவீரா – காடுவெட்டி குருவின் வாழ்க்கைப்படம்

படையாண்ட மாவீரா – காடுவெட்டி குருவின் வாழ்க்கைப்படம்

சினிமா, திரைச் செய்தி
நிர்மல் சரவணராஜ் மற்றும் எஸ். கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் வி.கே. புரொடக்ஷன்ஸ் வழங்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தை வ. கெளதமன் இயக்கி முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். பாடல்களுக்கு ஜி.வி. பிரகாஷ்குமாரும் பின்னணி இசைக்கு சாம் சி. எஸ்.-சும் பொறுப்பேற்றுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரையுலகினர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொள்ள சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. வ. கெளதமன், E. குறளமுதன், U.M. உமாதேவன், கே. பாஸ்கர், கே. பரமேஸ்வரி ஆகியோர் வி.கே. புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். சமுத்திரக்கனி, பூஜிதா, பாகுபலி பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், சாய் தீனா, ஆடுகளம் நரேன், மன்சூர் அலிகான், ஏ.எல். அழகப்பன், மதுசூதன ராவ், நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், தமிழ் கெளதமன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். வைரமுத்து பாடல்களை எழுத, கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, ராஜா முகமது படத்தொ...
“DD Next Level காமெடி ட்ரீட்டாக இருக்கும்” – சந்தானம

“DD Next Level காமெடி ட்ரீட்டாக இருக்கும்” – சந்தானம

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில், சந்தானம் நடித்துள்ள 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' படம் வரும் 16ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' குறித்த தகவல்களைப் பகிரும் வகையில் கலகலப்பான முறையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் கதாநாயகன் சந்தானம், திரைப்படத்தை வெளியிடும் நடிகர் ஆர்யா, இயக்குநர் பிரேம் ஆனந்த் கலந்து கொண்டனர். இயக்குநர் பிரேம் ஆனந்த், "முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு என்ற திருக்குறளுக்கு உதாரணமாக திகழ்பவர்கள் சந்தானம் மற்றும் ஆர்யா. அந்த நட்புதான் எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பைக் கொடுத்து இருக்கிறது. இவ்வளவு பிரம்மாண்டமான இப்படத்தைத் தொடங்கும் போது நான் சந்தானத்திடம், 'முதலாளி கண்டிப்பா நான் பயங்கர ஹார்டு வொர்க் பண்ணி இந்தப் படத்தை சக்சஸ் பண்ணி உங்களுக்கும் ஆர்யா சாருக்கும் ச...
“அலப்பறை செய்யும் கவர்ச்சி மாம் நான்” – கஸ்தூரி | DD Next Level

“அலப்பறை செய்யும் கவர்ச்சி மாம் நான்” – கஸ்தூரி | DD Next Level

சினிமா, திரைச் செய்தி
நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் பேனரில் நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் 16 Aம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' திரைப்படத்தின் வெளியீட்டு முன் நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 'டி டி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.இந்நிகழ்வில் பேசிய நடிகர் நிழல்கள் ரவி, “சினிமாவில் ஹீரோவாக நடித்து விட்டேன், வில்லனாக நடித்து விட்டேன், கேரக்டராகவும் நடித்துவிட்டேன், காமெடியாக நடிக்கவில்லையே என்று எண்ணியிருந்தேன். இயக்குநர் கார்த்திக் யோகியும், நடிகர் சந்தானமும் இணைந்து ' டிக்கிலோனா' திரைப்படத்தில் எனக்கு ஒரு நகைச்சுவை வேடத்தை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து 'வடக்குப்பட்டி ராமசாமி 'படத்தில் நல்லதொரு கேரக்டரைக் கொடுத்து நிழல்கள் ரவியை காமெடி நடிகராகவு...
Eleven | D.இமான் இசையமைக்கும் முதல் த்ரில்லர் படம்

Eleven | D.இமான் இசையமைக்கும் முதல் த்ரில்லர் படம்

சினிமா, திரைச் செய்தி
ஏ.ஆர். என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி நடிப்பில் உருவாகியுள்ள 'லெவன்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். க்ரைம் த்ரில்லராகத் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஏ.ஆர். என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 'லெவன்' பத்தின் ட்டிரெய்லரை உலக நாயகன் கமல்ஹாசன் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். மே 16 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. இந்நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, ''நண்பர் அக்பரின் வாரிசான அஜ்மல் கான் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். ரசிகர்களை இருக்கை நுனிக்கு வரவழைக்கும் அளவிற்குக் க...
வல்லமை விமர்சனம் | Vallamai review

வல்லமை விமர்சனம் | Vallamai review

சினிமா, திரை விமர்சனம்
திறன், பலம், வலிமை, ஆற்றல், சக்தி என தலைப்பைப் பொருள் கொள்ளலாம். விவசாயப் பின்னணியையுடைய சரவணனும், அவரது மகள் பூமிகாவும் கல்விக்காகச் சென்னைக்கு வருகிறார்கள். எவரோ சிறுமி பூமிகாவை மயக்கமடையச் செய்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுவிடுகின்றனர். அது யாரெனக் கண்டுபிடித்து, தான் அனுபவிக்கும் வலிக்குப் பழி வாங்கவேண்டுமென விரும்புகிறாள் பூமிகா. அக்கொடியவனைச் சரவணனும் பூமிகாவும் எப்படி கண்டுபிடித்து தண்டிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. சரவணனாக பிரேம்ஜி நடித்துள்ளார். மிகவும் பாவப்பட்டவராக, நடக்கவும் நடிக்கவும் மிகவும் சிரமப்படுபவராக, ஆள் ஒரு மாதிரி ஒடுங்கிப் பரிதவிப்புடனே உள்ளார். சாமர்த்தியமாக அவரைக் காது கேளாதவராகச் சித்தரித்துச் சமாளித்துள்ளார் இயக்குநர் கருப்பையா முருகன். கொஞ்சம் பிசகினாலும் சிக்கலாகிவிடும் ஒரு கனமான கதைக்கருவிற்கு, ஆற்றின் மெல்லிய நீரோட்டம் போல் திரைக்கதை அமைத்துள்ளார்...
டென் ஹவர்ஸ் விமர்சனம் | Ten Hours review

டென் ஹவர்ஸ் விமர்சனம் | Ten Hours review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஒரு இளம்பெண் கடத்தப்படுகிறாள், மூன்று காவலர்களைக் காரில் செல்லும் ஒரு குழு சுட்டுக் கொல்கிறது, சென்னையில் இருந்து கோவை நோக்கிச் செல்லும் பேருந்தில் ஒரு இளைஞன் கொல்லப்படுகிறார், கள்ளக்குறிச்சி பை-பாஸ் பாலத்தினருகே சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணின் பிணம் கிடைக்கிறது. இன்ஸ்பெக்டர் காஸ்ட்ரோ, ஓரிரவில், பத்து மணி நேரத்திற்குள் இந்நான்கு வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளியைக் கண்டுபிடிப்பதுதான் படத்தின் கதை. நேரடியாக முதல் ஃப்ரேமிலேயே கதைக்குள் சென்று, கதையை விட்டு அகலாமல் திரைக்கதை பயணிப்பது படத்தின் மிகப் பெரிய பலம். அடுத்து என்ன என்ற பதைபதைக்க வைக்கும் ஓர் இயல்பான ஓட்டம் திரைக்கதையில் இல்லாவிடினும், சுவாரசியத்தைத் தக்கவைக்கும் அளவுக்குக் காட்சிகளைக் கச்சிதமாக அடுக்கியுள்ளனர். எல்லாக் குற்றத்தையும் இணைக்கும் கனெக்டிங் டாட்ஸை மிக நேர்த்தியாகக் கோர்த்துள்ளனர். ஆம்னி பேருந்து நடத்துநராக வரும் ம...
நாங்கள் விமர்சனம் | Naangal review

நாங்கள் விமர்சனம் | Naangal review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நாங்கள் என்பது ஒரு கண்டிப்பான தந்தை, அவரது மூன்று மகன்கள் மற்றும் அவர்களது நாய் ஆகிய ஐவரைக் குறிக்கிறது. பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்ற ஒரு கலைப்படமிது. மின்சாரமும, தண்ணீர் வசதியும் இல்லாத வீட்டில், கார்த்திக், துருவ், கெளதம் ஆகிய மூன்று சிறுவர்கள் எல்லா வேலையையும் செய்கின்றனர். அச்சிறுவர்களின் தந்தை ராஜ்குமார் வந்ததும், அச்சிறுவர்களின் இறுக்கமும் பொறுப்பும் மேலும் அதிகமாகிறது. அச்சிறுவர்கள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரும், தாளாளரும் அவர்களது தந்தையே! அந்தச் சிறுவர்கள் அவர்களது தந்தையிடம் அகப்பட்டுச் சிக்கித் தவித்து, மகிழ்ந்து, தந்தையைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்ள மெனக்கெட்டு, பால்யத்தை இழந்த ஒரு வினோதமான வாழ்க்கை வாழ்கின்றனர். அதிலிருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்தும், நடைமுறைக்கு ஒத்துவராத அம்முயற்சியைக் கைவிட்டு மீண்டும் கூடடைகின்றனர். அச்சிறுவர்களது வாழ்க்கை த...
டெஸ்ட் | TEST review – NetFlix

டெஸ்ட் | TEST review – NetFlix

OTT, OTT Movie Review, இது புதிது, சினிமா
விஞ்ஞானி சரவணனுக்கும், அவரது மனைவி குமுதாவிற்கும், நட்சத்திர கிரிக்கெட் வீரர் அர்ஜுன் வெங்கட்ராமனுக்கும் ஒரு சோதனை ஏற்படுகிறது. தனது வாழ்க்கையையே அர்ப்பணித்து உருவாக்கிய அறிவியல் கண்டுபிடிப்பு நடைமுறைப் பயன்பாட்டிற்கு வர லஞ்சம் தருவதற்குப் பணம் தேவைப்படுகிறது; ஒரு குழந்தைக்காக ஏங்கும் குமுதாவிற்கு அதற்கான மருத்துவச் செலவுகளுக்குப் பணம் தேவைப்படுகிறது; கடந்த போட்டிகளில் சரியாக விளையாடாத அர்ஜுன் வெங்கட்ராமன் பாகிஸ்தான்க்கு எதிரான போட்டியில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயமாகிறது. குமுதாவாக நயந்தாரா தோன்றியுள்ளார். முகத்தில் எந்த உணர்ச்சிகளையும் காட்டாமல், இறுக்கமான முகத்துடன் நடித்துள்ளார். நல்ல கதாபாத்திரம் வாய்த்திருந்தும் அவர் சரியாக அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. சின்ன கதாபாத்திரம் என்றாலும், காணாமல் போகும் தன் மகனுக்காக வெடிக்கும் பொழுது மீரா ஜாஸ்மின் தன் இருப்பினைப் பதிகிறார். எந்தப்...
Trauma விமர்சனம் | Trauma review

Trauma விமர்சனம் | Trauma review

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
ட்ராமா என்றால் அதிர்ச்சி, வேதனை எனப் பொருள் கொள்ளலாம், அவ்வேதனை மன அதிர்ச்சி, புற அதிர்ச்சி என இரண்டையும் குறிக்கும். திருமணமாகி நான்கு வருடங்களாகியும் குழந்தை பிறக்கவில்லை என மன வேதனையில் உள்ளார் சுந்தரின் மனைவி கீதா. ஆட்டோ ஓட்டும் தந்தைக்கு ஒரு கால்-டேக்ஸி வாங்கித் தந்துவிட்டுத்தான் திருமணத்தைப் பற்றி யோசிக்கவேண்டும் என நினைக்கும் செல்வி கர்ப்பம் ஆகிவிடுகிறாள். இரண்டு தத்துக்குட்டி கார் திருடர்கள் காரில் பிணத்தோடு காரைத் திருடி போலீஸில் சிக்கிக் கொள்கிறார்கள். இம்மூன்று கதையும் ஒரு மெடிக்கல் ஸ்காமில் (Scam) வந்து இணைவதுதான் படத்தின் முடிவு. கார் திருடர்களாக மதன் கோபாலும், ஸ்மைல் செல்வாவும் நடித்துள்ளனர். படத்தில் அவர்களது பங்கு முக்கியம் என்ற போதும், நகைச்சுவைக்காக வலிந்து திணிக்கப்பட்ட அசுவாரசியமான காட்சிகளும் வசனங்களும் கொஞ்சம் பொறுமையைச் சோதிக்கிறது. ஆட்டோ ஓட்டுநராக மறைந்த மாரிமுத்த...
வருணன் விமர்சனம் | Varunan: God of Water review

வருணன் விமர்சனம் | Varunan: God of Water review

சினிமா, திரை விமர்சனம்
அய்யாவு, ஜான் ஆகிய இருவரும் தங்களுக்குள்ளான புரிதலில், ஒரே ஏரியாவில் பிரச்சனையின்றி தண்ணீர் கேன் வியாபாரம் செய்கின்றனர். ஜானின் மச்சான் தண்ணீர் கேனில் சுண்டக்கஞ்சி விற்க, போலீஸ் ஜானின் வியாபாரத்தை முடக்குகிறது. பின், அந்தப் போலீஸே தண்ணீர் கேன் வியாபாரத்தில் ஜானின் பங்குதாரராக, பிரச்சனையின்றி நடந்த வந்த தண்ணீர் கேன் வியாபாரத்தில் போட்டியும் சண்டையும் நுழைகிறது. அய்யாவுவிடம் வேலை செய்யும் தில்லையும் மருதுவும், ஜானின் மச்சான் டப்பாவின் கோபத்திற்கு ஆளாகின்றனர். தில்லையை சிட்டு எனும் பெண் காதலிக்க, மருதுவை அக்னி எனும் பெண் காதலித்துத் திருமணம் புரிகிறார். தில்லையாக துஷ்யந்த் ஜெயப்பிரகாஷும், மருதுவாக பிரியதர்ஷனும், சிட்டுவாக கேப்ரியலாவும், அக்னியாக ஹரிப்ரியாவும் நடித்துள்ளனர். அனைவரும் மிக இளமையாக உள்ளனர். ஒரு தசாப்தத்திற்கு முன் உருவாகியுள்ள படம். அய்யாவுவாக ராதாரவியும், ஜானாகச் சரண்ராஜும், க...
Trauma – மெடிக்கல் க்ரைம் த்ரில்லர்

Trauma – மெடிக்கல் க்ரைம் த்ரில்லர்

சினிமா, திரைச் செய்தி
டர்ம் புரொடக்ஷன்ஸ் பேனரில் எஸ். உமா மகேஸ்வரி தயாரிப்பில் உருவாகியுள்ள 'ட்ராமா' திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசையை வெளியிட, படக்குழுவினருடன் நடிகர் 'டத்தோ' ராதா ரவி மற்றும் தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர். அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இப்படத்தை இயக்கியுள்ளர். மெடிக்கல் க்ரைம் திரில்லராக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆல்பா 3 என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வழங்குகிறது. வரும் 21ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.இசையப்பாளர் ராஜ் பிரதாப், “'ட்ராமா' திரைப்படம் ஒரு ஆன்தாலஜி மூவி. மூன்று கதை, மூன்று களங்கள். இவை அனைத்தும் இன்டர்-லிங்க் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். ரசிகர்களுக்கு இந்தப் படம் வித்தியாசமான அனுபவத்தை வழங்கும்'' என்றார்.இயக்குநர் ராகவ் ...

வருணன் – தண்ணீரின் அவசியமும் சாபமும்

சினிமா, திரைச் செய்தி
யாக்கை பிலிம்ஸ் பேனரில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பில், வான் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பில், நடிகர்கள் ராதாரவி, சரண்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள 'வருணன் - காட் ஆப் வாட்டர்’ ஆகும். 'நீரின்றி அமையாது உலகு' எனும் டேக் லைனுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் வரும் 14 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரை அரங்குகளில் வெளியாகிறது. திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. நடிகை கேப்ரியல்லா, ''வருணனைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் நிஜ வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை வைத்து எந்தவித டிராமாவும் இல்லாமல் அழகான சினிமாவை உருவாக்கி இருக்கிறோம். நாம் அனைவருக்கும் தண்ணீர் எவ்வளவு அவசியம் என்று தெரியும், ஆனாலும் தெரியாதது போல் இருக்கிறோம். இந்த வருணன் படத்தின் மூலம் தண்ணீருடைய அவசியம் பற்றி அனைவருக்கும் தெரியவரும். இந்தப் படத்தைப் பொழுதுபோக்குடன் இயக்குநர் சொல்லி...