Shadow

Tag: யுவராஜ்

‘தேன்க் யூ டார்லிங் பிரபாஸ்” – இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி

‘தேன்க் யூ டார்லிங் பிரபாஸ்” – இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி

இது புதிது
எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்திருந்த பாகுபலி திரைப்படம் இந்தியத் திரையுலகில் புதிய சரித்திரம் படைத்தது. பிரபாஸின் நட்சத்திர அந்தஸ்து வானாளவு உயர்ந்தது. பாகுபலியின் மூலம் திரையில் ஒரு பிரம்மாண்டத்தைக் காட்டிய இந்த நடிகர்-இயக்குநர் கூட்டணியின் நட்புறவு, படத்தைத் தாண்டியும் அவ்வப்போது ரசிகர்களைத் தொடர்ந்து ஆச்சர்யப்படுத்தி வருகின்றது. அப்படி சமீபத்தில், நடிகர் பிரபாஸ், இயக்குநர் ராஜமௌலியை வாழ்த்திய இந்த சம்பவமும் இணைந்துள்ளது. எஸ்.எஸ்.ராஜமௌலி, நியூயார்க் பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதையும், LA பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் விருதுகளையும் வென்றார். இதற்காக மெகா ஸ்டார் பிரபாஸ் அவரை வாழ்த்தி இணையத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். "@ssrajamouli அவர்கள் இந்த உலகையே வெல்லப் போகிறார். சிறந்த இயக்குநருக்கான நியூயார்க் ஃபிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதை வென்றதற்கும், சிறந்த இயக்குநருக்க...
விஜயானந்த் விமர்சனம்

விஜயானந்த் விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கன்னடத் திரையுலகின் முதல் சுயசரிதை படம் (பயோபிக்). ஒரு லாரியை 5036 லாரிகளாக மாற்றிய ஒரு பெரும் தொழிலதிபரின் வெற்றிப் பயணமே இப்படம். வெற்றியும் மகிழ்ச்சியும், கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து உழைப்போருக்கு எப்படியும் சாத்தியப்பட்டுவிடும் என நம்பிக்கையை விதைக்கிறது தொழிலதிபர் விஜய் சங்கேஷ்வரின் வாழ்க்கை. ஓர் அடி எடுத்து வைக்க நினைத்தால் ஐந்து அடி பின்னால் தள்ளக் காத்திருக்கும் வியாபார உலகில், குடும்பத் தொழில் விட்டுவிட்டு புதிய தொழிலில் காலில் வைக்கும் விஜய் சங்கேஷ்வரின் அதீத்த்தை வியக்காமல் இருக்க முடியவில்லை. அது அத்தனை சுலபமல்ல எனத் தெரிந்தும், எது அவரை விடாப்பிடியாக அத்தொழிலில் கட்டிப் போட்டது என்பதற்கான அழுத்தமான பதில் இல்லாதது குறை. மிகப் பிரயத்தனப்பட்டுக் கிடைக்கும் முதல் சவாரியில், லாரியின் ஒரு பின்சக்கரம் பாளம் பாளமாக வெடித்துப் பழுதாகிவிடுகிறது. அந்த முதல் சவாலை அவர் எப்படிச் சமா...
நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் விமர்சனம்

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
வடிவேலின் கம்-பேக் படமாக இருக்கும் என எதிர்பார்ப்பினை உருவாக்கிய படம். த்ரிஷா இல்லன்னா நயன்தாரா என கதை சொல்லி பில்டப்பை ஏத்தும், தலைநகரம் படத்து நாய்சேகருக்கும், இந்தப் படத்தின் பிரதான கதாபாத்திரத்துக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. இது முற்றிலும் மாறுபட்ட கதையிலும் வேடத்திலும் வடிவேலு தோன்றியூள்ளார். பணக்காரர்களின் நாய்களைத் திருடி, அவர்களிடம் பணம் பெற்றுக் கோண்டு நாயை ஒப்படைக்கும் திருடன் சேகர். தாஸ் எனும் தாதாவின் நாயைத் தெரியாமல் திருடி விட, சேகர் சிக்கலில் மாட்டிக் கொள்கிறான். அதே சமயம், சேகரின் குடும்பத்திலிருந்து திருடப்பட்ட நாய் பற்றித் தெரிய வர, அதை மீட்கும் முயற்சியில் ஈடுபடுகிறான் சேகர். நாயை மீட்டானா, தாஸிடமிருந்து தப்பினானா என்பதே படத்தின்கதை. ஆன்ந்த்ராஜ், முனீஷ்காந்த், ராவ் ரமேஷ், லொள்ளு சபா மாறன், ரெடின் கிங்க்ஸ்லி, சிவாங்கி, ஷிவானி, மனோபாலா, சஞ்சனா சிங், லொள்ளு சபா சேஷு, வ...
ஸ்ருதிஹாசனின் டபுள் தமாகா பொங்கல்

ஸ்ருதிஹாசனின் டபுள் தமாகா பொங்கல்

சினிமா, திரைத் துளி
உலகநாயகன் கமல்ஹாசனின் வாரிசாக இருந்தாலும், தன்னுடைய தனித்துவமான திறமையினால் திரை உலகில், தனக்கென ஓர் அடையாளத்தைப் பதித்தவர் ஸ்ருதிஹாசன். மில்லியன் கணக்கிலான மக்களை பின்தொடர்பாளர்களாகக் கொண்டுள்ள ஸ்ருதிஹாசன், சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வருகிறார். தன்னைப் பற்றிய செய்திகளையும், தன் உணர்வுகளையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நேர்மையானவர். இதற்கு, சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்ட காணொளிகளே சான்று. நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் தயாராகி வரும் இரண்டு தெலுங்குத் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது. மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'வால்டேர் வீரய்யா' என்ற திரைப்படத்திலும், மாஸ் ஹீரோ பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகி இருக்கும் 'வீரசிம்ஹா ரெட்டி' எனும் திரைப்படத்திலும் நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த இரண்டு திரைப்படங்களும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ...
ஹனுமான் டீசர் – 50 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகள்

ஹனுமான் டீசர் – 50 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகள்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
படைப்புத்திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடிப்பில் தயாராகி வரும் பான் இந்தியத் திரைப்படமான ' ஹனு-மான்' படத்தின் டீசர் வெளியாகி பெரும் சாதனையைப் படைத்திருக்கிறது. இத்திரைப்படத்தின் டீசர் அண்மையில் தமிழ் உள்ளிட்ட ஏனைய இந்திய மொழிகளில் வெளியிடப்பட்டது.‌ படத்தின் டீசர், தேசம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. டீசரில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சியும் வசீகரத்துடன் இருந்தது. டீசரில் ஹனுமானின் அறிமுகம் அனைவரையும் கவர்ந்தது. இதற்காக இயக்குநர் பிரசாத் வர்மாவிற்கு பிரத்தியேகமான பாராட்டுகள் குவிந்து வருகிறது. இளம் நட்சத்திரமான தேஜா சஜ்ஜா சூப்பர் ஹீரோவாக அவருடைய தோற்றத்தை நேர்த்தியாக வெளிப்படுத்தி இருக்கிறார். இதனிடையே ஹனுமான் படத்தின் டீசர் வெளியான குறுகிய காலக்கட்டத்தில் 50 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறத...
வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி விமர்சனம்

வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி விமர்சனம்

OTT, OTT Movie Review, இது புதிது, திரை விமர்சனம்
சுழல் தொடரின் வெற்றிக்குப் பிறகு, தங்கள் நிறுவனமான வால்வாட்ச்சர் ஃப்லிம்ஸ் சார்பாக புஷ்கர் - காயத்ரி தயாரித்திருக்கும் தொடர் 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி'. வெலோனி எனும் இளம்பெண் கொல்லப்பட, கொலையாளியைத் தேடுகிறது காவல்துறை. வெலோனி பற்றி எந்தத் தெளிவான உண்மையும் கிடைக்காமல், அவளைப் பற்றி மர்மங்களும் வதந்திகளும் மட்டுமே நிலவுவதால், காவல்துறை அவ்வழக்கை மூடி விடுகிறது. ஆனாலும் உண்மைக் குற்றவாளியை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டுமென அல்லாடுகிறார் துணை ஆய்வாளர் விவேக். வெலோனியைக் கொன்றது யாரென விவேக் எப்படிக் கண்டுபிடித்தார் என்பதுதான் தொடரின் கதை. த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் கொஞ்சம் மெதுவாக நகருகிறது. இது த்ரில்லர் படம் என்பதை விட, வெலோனியின் அகத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யும் துணை ஆய்வாளர் விவேக்கின் அகப்பயணம் என்றே சொல்லவேண்டும். எழுத்தாளர் நாசர், ஒரு நாவலே எழுதி விடுகிறார். விவேக்கோ, ...
‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ வெப் சீரிஸ் சிறப்புத் திரையிடல்

‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ வெப் சீரிஸ் சிறப்புத் திரையிடல்

Event Photos, OTT, கேலரி
ப்ரைம் வீடியோவும், வால்வாட்சர் ஃப்லிம்ஸும் இணைந்து, 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' சீரிஸின் சிறப்புத் திரையிடலைத் திரைப்பிரபலங்களுக்காக ஒருங்கிணைத்தது. தொடர் ப்ரைம் வீடியோவில் வெளியாக இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் இந்த சிறப்புத் திரையிடல் சென்னையில் அரங்கேறியது. தொடரில் நடித்த நடிகர்களும் படைப்பாளிகளும், திரையிடலுக்கு வந்தவர்களை வாஞ்சையுடன் வரவேற்றனர். 'வதந்தி' வெப் சீரிஸின் தயாரிப்பாளர்கள் புஷ்கர், காயத்ரி, இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, சஞ்சனா, விவேக் பிரசன்னா, குமரன் தங்கராஜன் மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் இணைந்து அனைவரையும் வரவேற்றனர். 'சுழல்' வெப் சீரிஸ் இயக்குநர்கள் பிரம்மா ஜி, அனுசரண் முருகையன் மற்றும் நடிகர் கதிர் சிறப்புத் திரையிடலுக்கு வந்திருந்தனர். நடிகை ஆல்யா மானஸாவும், தமிழ் காமெடி நடிகர் புகழும் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்தனர். இவர்களுடன் 'மான்ஸ்டர்' இய...
வதந்தியில் சிக்கிய குமரன் தங்கராஜன்

வதந்தியில் சிக்கிய குமரன் தங்கராஜன்

OTT, Web Series
அமேசான் ப்ரைமில், டிசம்பர் 2 அன்று வெளியாகவிருக்கும் தமிழ் க்ரைம் த்ரில்லர் சீரிஸ் 'வதந்தி– தி ஃபேபிள் ஆஃப் வெலோனி'. இதன் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ட்ரெய்லரைப் பார்த்தே ரசிகர்கள் மர்மம் நிறைந்த, திருப்பங்களுக்குக் குறைவில்லாத, சில்லிடவைக்கும் கதைக்களத்தை 'வதந்தி' தரும் என்று எதிர்பார்த்துள்ளனர்.ஓடிடியில் முதன்முறையாக அறிமுகமாகும் எஸ்.ஜே.சூர்யா, இத்தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மொத்தம் 8 அத்தியாயங்கள் கொண்டுள்ள இந்த்த் தொடரை உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ளார் ஆண்ட்ரூ லூயிஸ். இதில் எஸ்.ஜே.சூர்யாவுடன் லைலா, எம்.நாசர், விவேக் பிரசன்னா, குமரன், ஸ்ம்ருதி வெங்கட் என திறமையான நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் குமரன் தங்கராஜனும் நடிக்கிறார். விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் வரும் கதிர் என்ற கதாபாத்திரன் மூலம் தமிழகத்தில் க...
அயோத்தியில் ஸ்ரீராமரின் ஆசி பெற்ற ஹனுமான் படக்குழு

அயோத்தியில் ஸ்ரீராமரின் ஆசி பெற்ற ஹனுமான் படக்குழு

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
விரைவில் வெளியாகவிருக்கும் 'ஹனுமான்’ படத்தின் டீசர் வெளியாகி பெரும் வெற்றி பெற்று வருவதால் உற்சாகமடைந்த இயக்குநர், நாயகன் உள்ளிட்ட படக் குழுவினர், அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு செய்தனர்.படைப்புத்திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் அசல் இந்திய சூப்பர் ஹீரோ படைப்பு ஹனுமான். இதில் நடிகர் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் தயாராகி வெளியாகவிருக்கும் முதல் பான் இந்திய திரைப்படம் இது. இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது.ஹனுமான் படத்தின் டீசருக்குக் கிடைத்த ஆதரவால் மனம் மகிழ்ந்த படக்குழுவினர், ஸ்ரீ ராமரின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் ஆலயத்திற்குச் சென்றனர். அங்கு சிறப்பு வழிபாடு மற்றும் பிரார்த்தனையில் படக்குழுவினர் ஈடுபட்டனர். இவர்களின் இந்த ஆன்மிகப் ப...
“மணிரத்னம் தான் காரணம்” – விஜயானந்த் படத்தின் நாயகன் நிஹால்

“மணிரத்னம் தான் காரணம்” – விஜயானந்த் படத்தின் நாயகன் நிஹால்

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
சாலை மார்க்கமாக வணிக ரீதியிலான சரக்குகள் மற்றும் தளவாடங்களைக் கையாளும் முன்னணி தனியார் வாகன போக்குவரத்து நிறுவனமான விஆர்எல் (VRL) எனும் நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான பத்மஸ்ரீ விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கைத் தயாராகியிருக்கும் 'விஜயானந்த்' எனும் திரைப்படம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில், டிசம்பர் 9 ஆம் தேதி அன்று வெளியாகிறது. ‘ட்ரங்க்’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘விஜயானந்த்’ திரைப்படத்தில் நடிகர் நிஹால் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் ஸ்ரீலதா பிரகலாத், பரத் போப்பண்ணா, அனந்த் நாக், வினயா பிரசாத், பிரகாஷ் பெலவாடி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு, கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். சுயசரிதையைத் தழுவித் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்...
விஜயானந்த் – நான்கு தலைமுறைகளின் வாழ்க்கை

“விஜயானந்த் – வெற்றியும் மகிழ்ச்சியும்” – ரிஷிகா ஷர்மா

இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘வதந்தி’

இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘வதந்தி’

OTT, Web Series
கோவாவில் நடைபெற்று வரும் 53 ஆவது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் ப்ரைம் வீடியோவின் அசல் க்ரைம் த்ரில்லர் வலைதள தொடரான 'வதந்தி- தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' பிரத்யேகமாகத் திரையிடப்பட்டது. இத்தொடரின் எட்டு அத்தியாயங்களும், இந்தியாவிலும், 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் டிசம்பர் 2ஆம் தேதி முதல் வெளியாகிறது. இதனை வால் வாட்ச்சர் ஃபிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் முன்னணி இயக்குநர்களும், தயாரிப்பாளர்களுமான புஷ்கர் - காயத்ரி ஆகியோரின் தயாரிப்பில், ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. இந்தத் தொடரில் எஸ்.ஜே. சூர்யா கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். தொடரின் முதன்மையான கதாபாத்திரமான வெலோனி எனும் வேடத்தில் புதுமுக நடிகை சஞ்சனா நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் நாசர், விவேக் பிரசன்னா, குமரன் தங்கராஜன் மற்றும் நடிகைகள் லைலா, ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் முக்கிய வேடங...
ஹனுமான் – சர்வதேச சூப்பர் ஹீரோ

ஹனுமான் – சர்வதேச சூப்பர் ஹீரோ

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரைச் செய்தி
பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற ஜோம்பி ரெட்டி எனும் படத்திற்கு பிறகு, அப்படத்தின் நாயகன் தேஜா சஜ்ஜாவுடன், பிரசாந்த் வர்மா இணைந்திருக்கும் இரண்டாவது படம் 'ஹனுமான்'. அமிர்தா ஐயர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. நிரஞ்சன் ரெட்டி தயாரித்திருக்கிறார்.ஹனுமான் படத்தின் டீசர் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட நாயகன் தேஜா சஜ்ஜா, ''அனுமனின் சிறிய மந்திரத்தைப் பாடிவிட்டுப் பேசத் தொடங்குகிறேன். ''மனோஜவம் மருததுல்யவேகம், ஜிதேந்திரியம் புத்தி மதம் வரிஷ்டம், வதத்மஜம் வானராயுத முக்யம், ஸ்ரீ ராமதூதம் சிரஸ நாமானி'.அனுமனை விட பெரிய சூப்பர் ஹீரோ நம்மிடம் இருக்கிறாரா? இந்த ஸ்லோகத்தின் பொருள் என்னவெனில், 'மனம் மற்றும் காற்றைப் போல வேகமானவர். புலன்களின் தலைவன். சிறந்த ஞானம், கற்றல் மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவற்றால் குறிப்பிட...
“வதந்தியின் சுற்றுலா” – இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி

“வதந்தியின் சுற்றுலா” – இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி

OTT, Web Series, இது புதிது
வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி தொடர் அமேசான் ப்ரைம் வீடியோவில் 240 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒளிப்பரப்பாகவுள்ளது. நெருப்பு மற்றும் வதந்திகளைப் போலவே, ப்ரைம் வீடியோவின் தமிழ் ஒரிஜினல் தொடரான ​​'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வேலோனி'யின் ட்ரெய்லர் வெளியாகி, நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் வெகு வேகமாகச் சென்றடைந்துள்ளது. புஷ்கர் - காயத்ரி அவர்களின் வால்வாட்சர் ஃப்லிம்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு, ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கிய 8 அத்தியாயங்கள் கொண்ட இந்தத் தொடர் டிசம்பர் 2 ஆம் தேதி, 240 நாடுகளில் ஒளிப்பரப்பாகவுள்ளது. வதந்தி தொடர், வேலோனியின் உலகத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறது, இந்தத் தொடரில் சஞ்சனா, வேலோனி பாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் இந்தத் தொடரின் மூலமாக நடிகராக அறிமுகமாகிறார். வெலோனி பாத்திரத்தின் கதை வதந்திகளால் நிறைந்துள்ளது. அதைக் கண்டுபிடிக்கும் உறுதி மிகுந்த போலீஸ்...