Shadow

Tag: யுவராஜ்

“ஜெய் பாலையா” – பாலகிருஷ்ணா கீதம்

“ஜெய் பாலையா” – பாலகிருஷ்ணா கீதம்

Songs, இது புதிது, காணொளிகள்
நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா, இயக்குநர் கோபிசந்த் மலினேனி, மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாராகி வரும் 'வீர சிம்ஹா ரெட்டி' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'ஜெய் பாலையா..' எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில், நந்தமூரி பாலகிருஷ்ணா திரையில் தோன்றிராத, மக்கள் விரும்பும் வேடத்தில் நடிக்கிறார்.இசையமைப்பாளர் எஸ். எஸ். தமன் இசையில் உருவாகி இருக்கும் 'ஜெய் பாலையா..' எனத் தொடங்கும் பாடல், அவரது ரசிகர்களுக்கான கீதமாக அமைந்திருக்கிறது. பாடலின் மெட்டு, பாடல் வரிகள், இசை, பின்னணிக் குரல் ஆகியவை பாலகிருஷ்ணாவின் புகழை மேலும் ஓங்கி ஒலிக்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. இந்தப் பாடலில் அவரது தோற்றம், நடை, நடனம் என அனைத்தும் ரசிகர்களைக் கவரும் விதம் உருவாக்கப்பட்டுள்ளது.'சரஸ்வதி புத்திர' ராம ஜோகையா சாஸ்திரியின் பாடல் வரிகளும், பாடகர் கரீமுல்லாவின் காந்த குரலும், 'ஜ...
மாயோன் – டொரன்டோ சர்வதேச விழாவில் விருது

மாயோன் – டொரன்டோ சர்வதேச விழாவில் விருது

சினிமா, திரைத் துளி
தமிழ் சினிமாவில் டபுள் மீனிங் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பாக அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதித்  தயாரித்து, சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் இணைந்து நடித்து வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்த திரைப்படம் மாயோன். கடந்த ஜூன் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. இப்படியான நிலையில் அமேசான் பப்ரைம், டிஸ்னி ஹாட் ஸ்டார், சோனி லைவ் போன்ற நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் (Twitter Stats) மாயோன் திரைப்படத்துக்கு 82% அளவில் எதிர்ப்பார்ப்பு இருப்பதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. ஆன்மிகத்தையும் அறிவியலையும் ஒரு சேர இணைத்துப் பேசிய இந்தப் படம் கனடாவில் இந்த ஆண்டு  நடைபெற்ற  47ஆவது டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த புராணங்களுக்கான திரைப்பட விருதை வென்...
விஷ்வக்சென்னின் ‘தாஸ் கா தம்கி’

விஷ்வக்சென்னின் ‘தாஸ் கா தம்கி’

சினிமா, திரைத் துளி
தெலுங்குத் திரையுலகின் நம்பிக்கைக்குரிய இளம் நட்சத்திரமான விஷ்வக் சென் நடிப்பில் தயாராகி இருக்கும் முதல் பான் இந்திய திரைப்படமான 'தாஸ் கா தம்கி' படத்தின் வெளியிட்டு தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 'ஃபலக்னுமா தாஸ்' படத்தின் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் நாயகனும் இயக்குநருமான விஷ்வக் சென் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'தாஸ் கா தம்கி'. இந்தப் படத்தில் கதையின் நாயகனாக விஷ்வக் சென் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கிறார். இவர்களுடன் ராவ் ரமேஷ், ஹைப்பர் ஆதி, ரோகிணி, பிரித்விராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தினேஷ் கே. பாபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை அன்வர் அலி கவனிக்க பிரசன்ன குமார் பெசவாடா வசனம் எழுதியிருக்கிறார். அழகான காதலுடன் கூடிய த்ரில்லர...
சிரஞ்சீவியின் ‘பாஸ் பார்ட்டி’ பாடல்

சிரஞ்சீவியின் ‘பாஸ் பார்ட்டி’ பாடல்

Songs, அயல் சினிமா, இது புதிது, காணொளிகள், சினிமா
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் 'வால்டேர் வீரய்யா' படத்தில் இடம்பெற்ற 'பாஸ் பார்ட்டி..' எனத் தொடங்கும் இரவு விருந்துக்குரிய பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி மற்றும் இயக்குநர் பாபி கொல்லி (கே.எஸ்.ரவீந்திரன்) இணைந்து உருவாக்கி வரும் 'வால்டேர் வீரய்யா' திரைப்படம் 2023 ஆம் ஆண்டில் வெளியாகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படங்களில் ஒன்றான 'வால்டேர் வீரய்யா' படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.‌ வெகுஜன மக்களுக்கான திரைப்படம் என்பதால் இயக்குநர் பாபி கொல்லி, கூடுதல் கவனத்துடன் படைப்பை உருவாக்கி வருகிறார். இதுவரை யாரும் திரையில் கண்டிராத வகையில் தனது தேவதையைக...
வதந்தி – உண்மை நடக்கும் பொய் பறக்கும்

வதந்தி – உண்மை நடக்கும் பொய் பறக்கும்

OTT, Web Series, இது புதிது
அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தமிழ்த் தொடரான 'சுழல் - தி வோர்டெக்ஸ்' எனும் வலைதளத் தொடரைத் தொடர்ந்து, புஷ்கர் - காயத்ரியின் சொந்த பட நிறுவனமான வால்வாட்ச்சர் ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'வதந்தி- ஃபேபிள் ஆஃப் வெலோனி' எனும் வலைதளத் தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய அசல் தமிழ் வலைதளத் தொடர் 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி'. இதில் வெலோனி எனும் கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி அறிமுகமாகிறார். இவருடன் எஸ்.ஜே.சூர்யா, விவேக் பிரசன்னா, நாசர், லைலா, குமரன் தங்கராஜன், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த வலைதளத் தொடருக்கு சைமன் கே கிங் இசையமைத்திருக்கிறார். சென்னையில் நடைபெற்ற 'வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' முன்னோட்ட வெளியீட்டு ...
வதந்தி – உண்மையைத் தேடும் எஸ்.ஜே.சூர்யா

வதந்தி – உண்மையைத் தேடும் எஸ்.ஜே.சூர்யா

OTT, Web Series, இது புதிது
அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தமிழ்த் தொடரான 'சுழல் - தி வோர்டெக்ஸ்' எனும் வலைதளத் தொடரைத் தொடர்ந்து, புஷ்கர் - காயத்ரியின் சொந்த பட நிறுவனமான வால்வாட்சர் ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'வதந்தி- ஃபேபிள் ஆஃப் வெலோனி' எனும் வலைதளத் தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய அசல் தமிழ் வலைதளத் தொடர் 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி'. இதில் வெலோனி எனும் கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி அறிமுகமாகிறார். இவருடன் எஸ்.ஜே.சூர்யா, விவேக் பிரசன்னா, நாசர், லைலா, குமரன் தங்கராஜன், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த வலைதளத் தொடருக்கு சைமன் கே கிங் இசையமைத்திருக்கிறார். சென்னையில் நடைபெற்ற 'வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' முன்னோட்ட வெளியீட்டு வி...
“உச்சிமலை காத்தவராயன்” – சுயாதீன பாடல்

“உச்சிமலை காத்தவராயன்” – சுயாதீன பாடல்

Songs, காணொளிகள்
இசையுலகில் தன்னிகரற்றுத் திகழும் சரிகம, அதன் அசல் சுயாதீன பாடலான 'உச்சிமலை காத்தவராயன்..' எனும் பாடலின் காணொளியை வெளியிட்டிருக்கிறது. இசையமைப்பாளர் ஆனிவி இசையில் தயாராகி இருக்கும் சுயாதீன பாடல் 'உச்சிமலை காத்தவராயன்'. இந்தப் பாடலை இசையமைப்பாளரான ஆனிவி எழுத, இசையமைப்பாளரும், பாடகருமான ஜெஸ்ஸி கிப்ட்டுடன் இணைந்து ஆனிவி பாடியிருக்கிறார். ''பின்னால வந்த எவனும் வெளங்குனதில்ல..” எனத் தொடங்கும் இந்தப் பாடலில் நடிகர்கள் மா.கா.பா. ஆனந்த், ஆர்ஜே விஜய், நடிகை ஆஷ்னா ஜாவேரி ஆகியோர் நடனமாடி இருக்கிறார்கள். இந்தப் பாடலை டோங்கிலி ஜம்போ இயக்கியிருக்கிறார், இந்தப் பாடலுக்கான நடனத்தை நடன இயக்குநர் சாண்டி அமைக்க, மல்லிகா அர்ஜுன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 'உச்சிமலை காத்தவராயன்' எனும் சுயாதீன பாடலை ரசிகர்களிடத்தில் அறிமுகப்படுத்திப் பிரபலப்படுத்த, இந்தக் குழு, வெகுஜன மக்களிடத்தில் ஏகோபித்த ஆதரவுடன் இன்றும் ...
ஹனுமான் – பனி லிங்கத்திற்குள் தவம்

ஹனுமான் – பனி லிங்கத்திற்குள் தவம்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
இளம் நட்சத்திர நடிகர் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஹனு-மான்' படத்தில் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. 'ஜோம்பி ரெட்டி' எனும் திரைப்படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், திறமையான இளம் நட்சத்திர நாயகன் தேஜா சஜ்ஜா நடிப்பில் 'ஹனு-மான்' எனும் பான் இந்திய அளவிலான சூப்பர் ஹீரோ திரைப்படம் தயாராகியிருக்கிறது. இயக்குநர் பிரசாந்த் வர்மா அண்மையில் வெளியிட்ட 'ஹனுமான்' படத்தின் காட்சித் துணுக்குகளில் நாயகன் தேஜா சஜ்ஜாவின் கதாபாத்திரத்தைப் பிரத்தியேக பார்வை மூலம் அறிமுகப்படுத்தியிருந்தார். தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த டீசர், பார்வையாளர்கள் தங்களின் கற்பனையில் கூட நினைத்துப் பார்த்திராத வகையில் அமைந்திருக்கிறது. நீர்வீழ்ச்சியின் மாறுபட்ட கோணத்தில் தொடங்கும் டீசரின் பின்னணியில், ஹனுமான் என்ற புராண கதாபாத்திரத்...
“சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டு..” – பார்வதி நாயர்

“சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டு..” – பார்வதி நாயர்

சமூகம்
அன்பான ரசிகர்களே, நண்பர்களே, அன்புமிக்க பொதுமக்களே! கடந்த வாரத்தில் என்னைப் பற்றிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி கட்டுரைகளும் காணொளிகளும் வெளியாகின. இது தொடர்பாக என்னுடைய நிலைப்பாடு குறித்தும், இப்பிரச்சனையைப் பற்றி தெளிவுபடுத்துவதற்கும், பொய்யுரையைப் புரிய வைப்பதற்கும் இந்தச் செய்திக்குறிப்பை வெளியிடுகிறேன். எனது உடைமைகள் திருடப்பட்டதால், சுபாஷ் சந்திர போஸ் மற்றும் சிலர் மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் 20.10.2022 அன்று புகார் அளித்து, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தேன். நான் சட்டத்தின் சரியான செயல்முறையைப் பின்பற்றி வருகிறேன். மேலும் சட்ட வரம்புகளுக்கு உட்பட்டு எனக்கான தீர்வுகளைப் பெறுவதற்காக சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறேன். சுபாஷ் சந்திர போஸை நான் தாக்கியதாகவும், துஷ்பிரயோகம் செய்ததாகவும் கூறுவது நியாயமற்றது. அவர் ஒரு பகுதி நேர உதவியாளராகவும், வார இறுதி நாட்களில்...
விஜயானந்த் – சாதனையாளரின் சரித்திரம்

விஜயானந்த் – சாதனையாளரின் சரித்திரம்

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
வெற்றி பெற சூட்சமங்கள் பல உள்ளன. ஆனால், வெற்றிபெற்றவனின் கதை அதிலிருந்து மாறுபட்டு வேறு மாதிரி இருக்கும். கர்நாடகா மாநிலத்தின் ஒரு கிராமத்தில் ஒரு சிறு டிரக்கை வைத்துக் கொண்டு பிசினஸ் ஆரம்பித்து 4300 வாகனங்களுக்குச் சொந்தக்காரராக மாறிய ஒரு மிகப்பெரும் பிஸினஸ்மேனின் அசாதாரணமான வாழ்க்கை தான் “விஜயானந்த்” திரைப்படம். பிரம்மாண்ட பட்ஜெட்டில் பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதியன்று தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி முதலிய இந்திய மொழிகளில் வெளியாகிறது. வணிக ரீதியிலான சாலை போக்குவரத்து வாகனத்தை இயக்கும் தொழிலில், இந்திய அளவில் முன்னணி நிறுவனமான விஆர்எல் (VRL) எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்தத் திரைப்பட...
உச்சிமலை காத்தவராயன் – பட்டிமன்றத்தின் மூலம் பாடம் அறிமுகம்

உச்சிமலை காத்தவராயன் – பட்டிமன்றத்தின் மூலம் பாடம் அறிமுகம்

Others, காணொளிகள், சினிமா, திரைத் துளி
தமிழ்த் திரையுலகில் படைப்புகளை உருவாக்குவது எளிது. அதனை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தி, பிரபலப்படுத்துவது கடினம். இந்நிலையில் நடிகர் ஆர்ஜே விஜய், மா.கா.பா ஆனந்த் மற்றும் ஆஷ்னா ஜாவேரி நடிப்பில் 'உச்சிமலை காத்தவராயன்' பாடலை அறிமுகப்படுத்துவதற்காக, திரையுலகப் பிரபலங்களுக்கு இடையே நடைபெற்ற பட்டிமன்றத்தின் முன்னோட்ட காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. இசையமைப்பாளர் ஆனிவீ இசையில், இயக்குநர் டோங்லீ இயக்கத்தில், நடிகை ஆஷ்னா ஜாவேரி, மா.கா.பா. ஆனந்த் மற்றும் ஆர்ஜே விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் 'உச்சிமலை காத்தவராயன்' எனும் பாடலை சரிகம நிறுவனம் வெளியிடுகிறது. இதற்காக ரசிகர்களை ஆர்வமூட்டும் வகையில், திரைப் பிரபலங்களான நடிகர் மா.கா.பா. ஆனந்தும், நடிகர் ஆர்ஜே விஜயும் தனித்தனி அணியாகப் பிரிந்து பட்டிமன்றம் நடத்தினர். இதற்கு முன்னதாக ட்வீட்டரில் இருவரும் சுவராசியமான கருத்து மோதல்களில் ஈடுபட்டனர். நடிகை ஆஷ்...
தமிழர்கள் விடுதலையுடன் 25 லட்ச ரூபாய் பணம் – லைக்காவின் முன்னெடுப்பு

தமிழர்கள் விடுதலையுடன் 25 லட்ச ரூபாய் பணம் – லைக்காவின் முன்னெடுப்பு

அரசியல்
செப்டம்பர் 19 ஆம் தேதியன்று இலண்டன் மாநகரில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவைச் சந்தித்தார் லைகா நிறுவனர் சுபாஷ்கரன். அந்தச் சந்திப்பு பல்லாண்டுகளாச் சிறையில் வாடிக் கொண்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் வாழ்வில் வெளிச்சத்தைக் கொடுத்துள்ளது. எப்படியெனில், அந்தச் சந்திப்பில் லைகா நிறுவனர் வைத்த கோரிக்கையை ஏற்று தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் உத்தரவைப் பிறப்பித்தார் ரணில். அதனால் தொடக்கத்தில் 8 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையாகினார்கள். அதன் பின்னர் சில தினங்களுக்கு முன்னர் மேலும் 9 அரசியல் கைதிகள் விடுதலையாக்கியுள்ளார்கள். இவர்களில், முதலில் விடுதலையான 8 தமிழ் அரசியல் கைதிகள், நன்றாக வாழவேண்டும் என்று எண்ணிய சுபாஷ்கரன், அவர்களுக்குத் தலா ரூபாய் 25 இலட்சத்தை வழங்கினார். நவம்பர் 3 ஆம் தேதி வியாழன் அன்று கொழும்பில் உள்ள தாஜ் சமுத்திரா நட்சத்திர விடுதியில் வைத்து, 8 அரசியல் கைதிகளுக்கும...