Shadow

Tag: யுவராஜ்

லாபம் படத்தின் கதையென்ன? – எஸ்.பி.ஜனநாதன் | விஜய் சேதுபதி

லாபம் படத்தின் கதையென்ன? – எஸ்.பி.ஜனநாதன் | விஜய் சேதுபதி

சினிமா, திரைச் செய்தி
விஜய்சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் 7c ஸ் என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘லாபம்’. ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, கலையரசன், நடிகை சம்பிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் ஒன்பதாம் தேதியன்று வெளியாக உள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வாக சென்னையிலுள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் ஆறுமுக குமார், பெப்சியின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட திரைப்பட இயக்குநர் சங்கர் நிர்வாகிகள், பெப்சி நிர்வாகிகள் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் அவர்களுக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத...
ஆலம்பனா – குழந்தைகளை மகிழ்விக்க வரும் பூதம்

ஆலம்பனா – குழந்தைகளை மகிழ்விக்க வரும் பூதம்

சினிமா, திரைத் துளி
குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வித்தியாசமான படங்களுக்குத் தமிழ்த் திரையுலகு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உண்டு. குழந்தைகளைப் பெற்றோர்கள் தான் திரையரங்கிற்கு அழைத்து வரவேண்டும் என்பதால், அவர்களைக் கவர்வது மிகவும் கடினம். இந்தக் கவரும் யுக்தியை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலமாகவே செய்திருக்கிறது 'ஆலம்பனா' படக்குழு. இந்தப் படத்தை  கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் சந்துரு இணைந்து பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர். இது ஒரு ஃபேண்டஸி படம் என்பதை மட்டுமே தகவலாகப் படக்குழு தெரிவித்தது. தற்போது ஃபர்ஸ்ட் லுக் மூலமாகக் குழந்தைகள் முதல் முதியோர் வரை குஷிப்படுத்தும் பூதத்தை மையப்படுத்தி 'ஆலம்பனா' உருவாகியுள்ளது. இப்படத்தில் பூதமாக நடித்து அனைவரது மனதைக் கொள்ளைக் கொள்ளவுள்ளார் முனீஸ்காந்த். நாயகன் வைபவ் மற்றும் முனீஸ்காந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் காமெ...
டெடி விமர்சனம்

டெடி விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
இயக்குநர் சக்தி செளந்தர் ராஜனின் ஐந்தாவது படம் டெடி. நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக்: டிக்: டிக் என அவரது அனைத்துப் படங்களுமே ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத வித்தியாசமான கரு கொண்ட படங்கள். டெடியும் அப்படியே! OBE – Out of Body Experience. உடலுக்கு வெளியே நிகழும் அனுபவத்தை அழகான புனைவுக்கு உபயோகித்துக் கொண்டுள்ளார் சக்தி செளந்தர் ராஜன். அவ்வனுபவத்தில் உடலை விட்டு உயிர் வெளியேறி விடும். அவ்வுயிருக்கு ஏற்படும் அனுபவங்களையே OBE என அழைப்பார்கள். புனைவின் சுவாரசியத்திற்காக, கோமாவில் உள்ள ஸ்ரீயின் உயிர், டெடி எனும் கரடி பொம்மைக்குள் புகுந்துவிடுகிறது. அதாவது ஸ்ரீயின் உயிர் ஒரே சமயம் அவரது உடலிலும் இழையோடுகிறது, கரடியின் உடலிலும் இருக்கிறது. மாயாஜாலம் போல! அது புனைவிற்கு சுவாரசியத்தைக் கூட்டியுள்ளது. அழகான சயிஷா, படத்தில் டெடியாக மட்டும் வலம் வருவது சற்றே வருத்தமான விஷயம். எனினும் டெடியின்...
தீதும் நன்றும் விமர்சனம்

தீதும் நன்றும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா கணியன் பூங்குன்றனாரின் மிகச் சிறப்புமிக்க இவ்விலக்கியச் செவ்வியல் வரிகளைத் தலைப்பாக்கியுள்ளார் இயக்குநர் ராசு ரஞ்சித். அதற்காக அவருக்கு ஓர் எக்ஸ்ட்ரா பாராட்டுகள். ஒருவருக்கு ஏற்படும் நன்மைக்கும் தீமைக்கும், அவரவரே காரணம் அன்றி, பிறரால் அது நிகழாது என்பதே கணியன் பூங்குன்றனாரின் வரிகளுக்குப் பொருள். படத்தின் மையக் கதாபாத்திரங்களான ஈசனும், சிவாவும் தனக்கான தீமையை அவர்களே தேடிக் கொள்கின்றனர். மீன் மார்க்கெட்டில் வேலை செய்யும் ஈசனும், சிவாவும் நண்பர்கள். மாறன் எனும் நண்பன் ஊருக்கு வரும் நாட்களில், முகமூடி அணிந்து கொள்ளையடிக்கவும் செய்கின்றனர். அதனால் ஈசனும் சிவாவும் சிறைக்குச் செல்ல நேருகிறது. வெளியில் வந்த பின்னும், சூழ்நிலை காரணமாகக் கடைசியாக ஒருமுறை திருடலாம் என முடிவெடுக்கின்றனர். மாறனோ, கொள்ளையடிக்க என நண்பர்களை அழைத்து, ஒரு கொலை ச...
சென்னை ரைபிள் கிளப்பில் மாணவர்களுக்குத் துப்பாக்கி சுடும் பயிற்சி

சென்னை ரைபிள் கிளப்பில் மாணவர்களுக்குத் துப்பாக்கி சுடும் பயிற்சி

சமூகம்
எழும்பூரில் உள்ள பழைய கமிஷ்ணர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சென்னை ரைபிள் கிளப்பில் மாணவர் பயிற்சி நடத்தப்படுகிறது. கிளப்பில் முன்பதிவு அடிப்படையில் மாணவ உறுப்பினர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கிளப் அதன் தலைவர் காவல் ஆணையர் திரு. மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ் அவர்கள் தலைமையிலும், துணைத் தலைவர் திரு. அமல்ராஜ் ஐபிஎஸ் அவர்களின் மேற்பார்வையிலும் இயங்குகிறது. கௌரவ செயலர் ராஜசேகர் பாண்டியன் கூறும்போது, "துப்பாக்கிச் சுடுதலை கற்றுக் கொண்டு அதில் சிறந்து விளங்க ஆர்வம் இருந்தும் வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாக அமைந்து இருக்கிறது. இந்த மாணவர் பயிற்சி தொடங்கப்பட்டதன் நோக்கமே, துப்பாக்கிச் சுடுதல் என்பது ஒரு எட்டாக்கனி என்ற கருத்தை மாற்றத்தான். இந்த விளையாட்டை அனைத்து மாணவர்களுக்கும் சாத்தியமான ஒன்றாக ஆக்குவதே இந்தப் ...
மோகன்தாஸ் – ஓர் எமோஷனல் த்ரில்லர்

மோகன்தாஸ் – ஓர் எமோஷனல் த்ரில்லர்

சினிமா, திரைத் துளி
வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து நடித்து, தமிழ்த் திரையுலகில் தன்னை நிலைநிறுத்தியவர் விஷ்ணு விஷால். தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எஃப்.ஐ.ஆர்' படத்தில் நாயகனாக நடித்துத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் டீஸர் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 'எஃப்.ஐ.ஆர்' படத்தைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார் விஷ்ணு விஷால். இதையும் தனது விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மூலம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளார். 'மோகன்தாஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் அறிமுக டீஸர் கொரோனா ஊரடங்கு சமயத்திலேயே வெளியிடப்பட்டது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், நடிகர்களின் அறிவிப்புகள் என அனைத்திலுமே எதிர்பார்ப்பை அதிகரித்து வந்தது. 'மோகன்தாஸ்' படத்தைக் 'களவு' படத்தின் மூலம் ஆச்சரியப்படுத்திய முரளி கார்த்திக் இயக்கவுள்ளா...
அன்பிற்கினியாள் விமர்சனம்

அன்பிற்கினியாள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எத்தனை வசீகரமான தலைப்பு? படமும் அப்படியே! மலையாளத்தில் அன்னா பென் நடித்த ‘ஹெலன்’ எனும் வெற்றிப்படத்தைத் தன் மகள் கீர்த்தி பாண்டியனுக்காகத் தமிழில் ரீமேக் செய்துள்ளார் அருண்பாண்டியன். மகள் மீது பாசம் கொண்ட அன்பிற்கினியானான அருண் பாண்டியன், படத்திலும் கீர்த்திக்குத் தந்தையாக நடித்துள்ளார். சிக்கன் ஹப் எனும் கடையில் பணி புரியும் அன்பிற்கினியாள், ஓர் இரவு அக்கடையின் ஃப்ரீஸர் அறையில் சிக்கிக் கொள்கிறார். -15 டிகிரிக்குக் கீழ் செல்லும் அந்த ஃப்ரீஸர் அறையில் இருந்து எவ்வாறு மீண்டார் என்பதுதான் படத்தின் கதை. ஆனால், படத்தின் கிளைக் கதைகளான தந்தை – மகள் உறவு; கடனிலுள்ள அன்பிற்கினியாளுக்கும், வாழ்க்கையைச் சீரியசாகப் பாவிக்காத சார்லஸ் செபஸ்டியனுக்கும் உள்ள காதல்; அனைவர் மீதும் எரிந்து விழும் சிக்கன் ஹப்பின் மேனஜர்; அலட்சியமே உருவான போலீஸ் அதிகாரி; சிறையிலிருக்கும் மனிதாபிமானமுள்ள கைதி; சிரித்த முகமா...
சூரரைப் போற்று விமர்சனம்

சூரரைப் போற்று விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
சூரன் என்றால் அநாயாசமான திறமை படைத்தவன் எனப் பொருள். விமானத்தில் செல்வதென்பதே எட்டாக்கனியாக இருக்கும் ஒருவன், ஏர்லைன்ஸ் ஆரம்பித்துக் காட்டுகிறேன் என்ற கனவு கண்டு, அதை நனவாக்கிய அசாத்திய சாகசம்தான் 'சூரரைப் போற்று' படத்தின் கதை. Simply fly! (தமிழில்: வானமே எல்லை) என்ற சுயசரிதைப் புத்தகத்தைத் தழுவி, ஒரு சுவாரசியமான புனைவாக்கத்தைக் கொடுத்துள்ளார் சுதா கொங்கரா. திரையரங்கில் பார்க்க வேண்டிய படமென்ற ஆவலை ஏற்படுத்தியுள்ளது படம். திரையரங்கில் வெளியிட்டாலும், ரசிகர்கள் செல்லத் தயாராகவே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. காரணம், நேர்த்தியான விஷூவலும், ஜி.வி.பிரகாஷின் அற்புதமான இசையுமே! திரையரங்கில் பார்க்க வேண்டிய கொண்டாட்டத்தைப் படம் கொண்டுள்ளது. நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவும், சதீஷ் சூர்யாவின் படத்தொகுப்பும், கொண்டாட்டத்திற்கான மேஜிக்கைச் செய்கிறது 'மண்ணுருண்ட', 'வெய்யோன் சில்லி', 'கா...
காமிக்ஸ்தான் போட்டியாளர்கள்

காமிக்ஸ்தான் போட்டியாளர்கள்

சமூகம்
பகலில் ஐடி ஊழியராகவும், மாலையில் ஸ்டான்ட்-அப் காமெடியனாகவும் இருக்கும் மாயாண்டி கருணாநிதி, நகைச்சுவைத் துறையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்று கனவு கண்டவர். பெங்களூருவைச் சேர்ந்த மாயாண்டி, மெதுவாக, உறுதியாக தனது லட்சியத்தை நோக்கி முன்னேறி வருகிறார். சென்னை, கோவை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களில் 300க்கும் அதிகமான நிகழ்ச்சிகளை மாயாண்டி நடத்தியிருக்கிறார். பல்வேறு கார்ப்ரேட் நிகழ்ச்சிகள், கல்லூரி விழாக்கள், பொது நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் பார்ட்டிகளிலும் மக்களைச் சிரிக்க வைத்துள்ளார். அடிப்படையில் மாயாண்டி ஒரு சோம்பேறி நபர். தற்போது, 'தள்ளிப் போடுவதை நிறுத்தி இன்றே கடின உழைப்பு செய்யுங்கள்' என்ற புத்தகத்தை எழுதி வருகிறார். 2055 ஆம் ஆண்டு இதைப் பிரசுரிக்கும் திட்டம் வைத்துள்ளார். இப்போதைக்கு இவரது திட்டம், அமேசான் ப்ரைம் வீடியோவின் காமிக்ஸ்தான் ‘செம காமெடிப்பா’ நிகழ...
ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ் @ ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்

ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ் @ ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்

சினிமா
'அசுரன்', 'சூரரைப் போற்று' என்று தொடரும் ஜீ.வி.பிரகாஷின் இசைப் பாய்ச்சல் அடுத்தது ஹாலிவுட் பக்கம் திரும்பியிருக்கிறது. ஆம், ஆங்கிலத்தில் ஆல்பம் ஒன்றைத் தயாரித்துள்ளார். உலக இசைக் கலைஞர்கள் மத்தியில் தனது தடத்தை வலுவாகப் பதிப்பார். 'கோல்ட் நைட்ஸ்' என்ற பெயரில் உருவாகியுள்ள ஆல்பத்தில், 'ஹை அண்ட் ட்ரை' என்ற பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. இந்தப் பாடல் செப்டம்பர் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஜீ.வி.பிரகாஷின் இந்த ஹாலிவுட் பாய்ச்சலுக்கு உறுதுணையாக ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தனுஷ் இணைந்து 17 ஆம் தேதி இந்தப் பாடலை இருவரும் வெளியிடவுள்ளனர். இவர்கள் மட்டுமல்ல, பல்வேறு முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் என பலரும் ஜீ.வி.பிரகாஷுக்காக ஒன்றிணைகிறார்கள். ஒவ்வொருவருடைய பெயராக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளார்கள். இந்தப் பாடல் ஜிவி பிரகாஷ் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜூலியா கர்தா இருவரின் கூட்டு முயற்சியி...
வி | நானியின் 25வது படம்

வி | நானியின் 25வது படம்

சினிமா, திரைத் துளி
இயக்குநர் மோகன கிருஷ்ணா இந்திராகாந்தியுடன் நானியின் மூன்றாவது திரைப்படம் இது. நானியின் அறிமுகத் திரைப்படமான 'ஆஷ்தா சம்மா'வின் இயக்குநரும் மோகன கிருஷ்ணாவே! தனது 12 வருட பயணம் குறித்துப் பேசியிருக்கும் நானி, "நான் எப்போதுமே நல்ல நடிகனாக, ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்குத் தருபவனாக இருக்க வேண்டும் என்றே நினைத்தேன். 'ஆஷ்தா சம்மா' வெளியாகி 12 வருடங்கள் கடந்து விட்டன. 'வி' திரைப்படம் மூலம் அற்புதமான மனிதர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. தெலுங்கு ரசிகர்கள் என்னை அவர்களில் ஒருவனாகப் பார்ப்பதை எனக்குக் கிடைத்த ஆசிர்வாதமாக உணர்கிறேன். ஒவ்வொரு படம் நடிக்கும் போதும் எனது பொறுப்பு அதிகமாகிறது. ரசிகர்களின் பொழுதுபோக்குக்குத் தொடர்ந்து நல்ல திரைப்படங்களைத் தருவேன். 'வி' திரைப்படத்தைச் சாத்தியமாக்கிய ஒவ்வொருவருக்கும் நன்றி. என் மீது என்றும் அன்பைப் பொழியும் ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக...
காமிக்ஸ்தான்: தமிழ் ரசிகர்களுக்காகத் தமிழில் செப்டம்பர் 11 முதல்

காமிக்ஸ்தான்: தமிழ் ரசிகர்களுக்காகத் தமிழில் செப்டம்பர் 11 முதல்

சமூகம்
அமேசான் ப்ரைம் வீடியோவின் பிரபலமான ஸ்டாண்ட் அப் காமெடியான காமிக்ஸ்டான் இந்தியில் 2 சீசன்களாக வெற்றிகரமாக ஓடிய பிறகு அதன் தமிழ் வெர்ஷனை இப்போது பெறுகிறது. பிரபல நகைச்சுவை நடிகர்களான பிரவீன் குமார், கார்த்திக் குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் 8 எபிசோடுகளுக்கு போட்டியாளர்களுக்கு ஆலோசகர்களாகவும் நடுவர்களாகவும் இருந்து அடுத்த சிறந்த ஸ்டேண்ட் - அப் நகைச்சுவைக் கலைஞரைத் தேர்ந்தெடுப்பார்கள். மும்பை, இந்தியா, 3 செப்டம்பர் 2020 - அமேசான் ப்ரைம் வீடியோ இன்று காமிக்ஸ்தான் செம காமெடி பா-வின் டிரெய்லரை வெளியிட்டது, இது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்த அமேசான் ஒரிஜினல் தொடரான காமிக்ஸ்தானின் தமிழ் வெர்ஷன். இந்த தொடரின் வெளியீடு தமிழில் ஒரிஜினல் கண்டெண்ட் வருவதில் ப்ரைம் வீடியோவின் ஆர்வத்தை குறிக்கிறது. இந்தப் புதிய தொடரில், தமிழ் காமெடித் துறையின் வல்லுநர்களாக இருக்கும், மூன்று பெரிய நகைச்சுவைக் கலைஞர்களா...
நானி வில்லனாக நடிக்கும் “வி” திரைப்படம்

நானி வில்லனாக நடிக்கும் “வி” திரைப்படம்

சினிமா, திரைத் துளி
நானியும், சுதீர் பாபுவும் நடித்துள்ள ‘வி’ படத்தின் ட்ரெய்லர் வெளியான நாளிலிருந்தே ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. தாய்லாந்தில் நடந்த அயல் நாட்டுப் படப்பிடிப்போடு சேர்த்து இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் படம்பிடிக்கப்பட்டிருக்கும் திரைப்படம் என்கிற சிறப்பம்சம் பெற்றுள்ள திரைப்படம் இது. 'வி' திரைப்படத்தை ரசிகர்களுக்கு சுவாரசியமான பொழுதுபோக்கு படமாக மாற்ற பல விஷயங்கள் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன. ரசிகர்களுக்கு ஒரு இனிமையான அனுபவமாக இந்தப் படத்தை மாற்ற காட்சி ரீதியாக ஒரு நிலையான அனுபவத்தைத் தர முயற்சி செய்திருப்பதாக இயக்குநர் மோகன கிருஷ்ணா கூறியுள்ளார். "பல்வேறு மாநிலங்களில் எடுக்கப்படும் திரைப்படங்களில் வழக்கமாக காட்சி ரீதியாக, வண்ணங்களில் வேறுபாடு இருக்கும். ஆனால் எங்கள் நோக்கமே வண்ணங்களில் அப்படி வேறுபாடு இல்லாமல் நிலையான ஒரு காட்சி அனுபவத்தைத் தருவது தான். இரவோ, பக...
காமிக்ஸ்தான்: அமேசான் Vs ட்விட்டர் காமெடியன்ஸ்

காமிக்ஸ்தான்: அமேசான் Vs ட்விட்டர் காமெடியன்ஸ்

சமூகம்
ரசிகர்களுக்குப் புதிய படைப்புகளைத் தருவதில் அமேசான் ப்ரைம் வீடியோ முன்னோடியாக இருக்கிறது. சமூக வலைதளங்களில் அவர்கள் விளையாட்டுகளும் சுவாரசியமானவையே. முன்னதாக இன்று, ப்ரைம் வீடியோ இந்தியாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து ஒரு ட்வீட் பகிரப்பட்டது. அதில் "ஹே மச்சான், ஒரு ஜோக் சொல்லட்டா. ஓப்பன் மைக்குக்கும், 2020 கிரிக்கெட் மைதானத்துக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா? ரெண்டுத்தையுமே நேர்ல பார்க்க ரசிகர்கள் வர மாட்டாங்க #OruJokeSollata 🤪 @evamkarthik @Comedy_Praveen #ComicstaanSemmaComedyPa" https://twitter.com/primevideoin/status/1300672989466304512?s=21 பல நகைச்சுவையாளர்களுக்கும், ப்ரைம் வீடியோவுக்கும் இடையே நகைச்சுவையான ஒரு உரையாடல் தொடங்கியது. நகைச்சுவையாளர் கார்த்திக் குமார் இந்த ட்வீட்டுக்கு பதில் பதிவிடுகையில், "ஐயோ, நெஞ்சுலியே அடி. ஃபீலிங்ஸ் பாதிப்பு. ஆனா இந்த ஜோக்குக்கு 4/10 தா...
தி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்

தி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்

Movie Posters, கேலரி, சினிமா
கார்த்தி ராஜு இயக்கத்தில் ரைசா வில்சன், ஹரிஷ் உத்தமன், பால சரவணன், காளி வெங்கட், குழந்தை மோனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குறைந்த நடிகர்களை வைத்துக் கொண்டு பலம் வாய்ந்த தொழில்நுட்பக் குழுவினருடன் 'தி சேஸ்' உருவாகியுள்ளது. இதற்கு ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், சண்டைப் பயிற்சியாளராக திலீப் சுப்பராயன், இசையமைப்பாளராக சாம் சி.எஸ், எடிட்டராக சாபு ஜோசப் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். ராஜ்சேகர் வர்மா தயாரித்துள்ளார். இந்நிறுவனத்துக்காக கார்த்திக் ராஜு இயக்கி வரும் 'சூர்ப்பனகை' திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 'தி சேஸ்' பணிகளை முடித்துவிட்டு, 'சூர்ப்பனகை' படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 'தி சேஸ்' கதைக்களத்துக்கு திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பொருத்தமான இடமாக இருந்ததால், அங்கேயே ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு திரும்பியுள்ளது படக்குழு. படப்பிடிப்புக்கும் முன்பும், பின்பு...