Shadow

Tag: A.ஜான்

காரி – ஈரமும் வீரமும் மாறாத சசிகுமார்

காரி – ஈரமும் வீரமும் மாறாத சசிகுமார்

சினிமா, திரைச் செய்தி
என்ன தான் உலகம் நவீனமயமாகி விட்டாலும் கூட கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை மண்மணம் மாறாமல் சுமந்து வரும் படங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு குறையவே இல்லை. அப்படி ஈரமும் வீரமும் மாறாத கிராமத்து மனிதர்களின் பிரதிபலிப்பாகத் திரையில் தோன்றி ரசிகர்களை வசியப்படுத்தும் வெகு சில கதாநாயகர்களில் நடிகர் சசிகுமார் ரொம்பவே முக்கியமானவர். அவ்விதமாக மீண்டும் கிராமப் பின்னணியில் பிரம்மாண்டமாக, ஆக்சன் மற்றும் ஜனரஞ்சக அம்சங்களுடன் உருவாகும் ‘காரி’ என்கிற புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் சசிகுமார். கதாநாயகியாக பார்வதி அருண் என்பவர் நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் செம்பருத்திப்பூ, மோகன்லாலின் மகன் பிரணவ் நடித்த 21ஆம் நூற்றாண்டு உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். மேலும் கன்னடம் மற்றும் தெலுங்கிலும் நடித்துள்ளார். வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜேடி சக்ரவர்த்தி நடிக்கிறார். இவர்கள் தவிர முக்கிய வேடங்களில்...
“மாநாடு: இரண்டாவது தேசிய விருது நிச்சயம்” – இயக்குநர் வெங்கட் பிரபு

“மாநாடு: இரண்டாவது தேசிய விருது நிச்சயம்” – இயக்குநர் வெங்கட் பிரபு

சினிமா, திரைச் செய்தி
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான மாநாடு திரைப்படம் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி அன்று வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. 25 ஆவது நாளில் கூட பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக இந்தப் படத்தின் நன்றி நவில்தல் விழா, டிசம்பர் 21 ஆம் தேதி அன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் வெங்கட்பிரபு, “இந்தப் படத்தின் கதையைச் சொன்னபோது உடனே ஒப்புக் கொண்ட சிம்பு, இந்தப் படத்தை ஃப்ரெஷ்ஷா புது டீமோட வொர்க் பண்ணலாம்ன்னு சொன்னார். இந்தப் படத்தோட கதைய முதல்ல டைம் லூப் இல்லாமல்தான் தயார் பண்ணி இருந்தேன். ஆனால் அந்தச் சமயத்தில் என்.ஜி.கே, சர்க்கார் போன்ற படங்கள் இதே அரசியல் பின்னணியில் வெளியானதால், அதன் பிறகுதான் டைம் லூப்புக்குக் ...
“மாநாடு: வெற்றி கிடைத்ததும் மாறக்கூடாது” – STRஇன் போக்கைக் கண்டித்த SAC

“மாநாடு: வெற்றி கிடைத்ததும் மாறக்கூடாது” – STRஇன் போக்கைக் கண்டித்த SAC

சினிமா, திரைச் செய்தி
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான மாநாடு திரைப்படம் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி அன்று வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. 25 ஆவது நாளில் கூட பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக இந்தப் படத்தின் நன்றி நவில்தல் விழா, டிசம்பர் 21 ஆம் தேதி அன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், “சிம்புவுக்கு நீண்ட நாள் கழித்து அவரை மேலே தூக்கிக் கொண்டு வந்துள்ள படமாக இந்த மாநாடு அமைந்துள்ளது. அதேபோல எஸ்.ஜே.சூர்யாவிற்கும் இது முக்கியமான படமாக அமைந்துவிட்டது.. இந்த படத்தை இரண்டு முறை தியேட்டரில் பார்த்தேன்.. கரணம் தப்பினால் மரணம் என்கிற மாதிரியான ஒரு கதையை சின்ன குழந்தைகளுக்கு கூட புரிகிற வகையில் இயக்கியுள்ள வெங்க...
“மாநாடு: என்னைப் போல பேசும் குழந்தைகள்” – மகிழ்ச்சியில் எஸ்.ஜே.சூர்யா

“மாநாடு: என்னைப் போல பேசும் குழந்தைகள்” – மகிழ்ச்சியில் எஸ்.ஜே.சூர்யா

சினிமா, திரைச் செய்தி
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான மாநாடு திரைப்படம் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி அன்று வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. 25 ஆவது நாளில் கூட பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக இந்தப் படத்தின் நன்றி நவில்தல் விழா, டிசம்பர் 21 ஆம் தேதி அன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, “சமீபகாலமாக ஓடிடி வந்துவிட்டது, கொரோனா வந்துவிட்டது, மழை வந்தால் கூட்டம் வராது என்றெல்லாம் பலவிதமான எதிர்மறை வார்த்தைகளாகவே பேசப்பட்டு வருகின்றது. ஆனால் இவை அனைத்தையும் மாநாடு திரைப்படத்தின் வெற்றி தகர்த்துவிட்டது. நல்ல படம் வந்தால் மக்கள் குடையைப் பிடித்துக் கொண்டு கூட கூட்டம் கூட்டமாக வருவார்கள் என்பதை இந்தப் படம் நிரூபித்துவிட்டது....
ஆன்டி இண்டியன் விமர்சனம்

ஆன்டி இண்டியன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இந்துத்துவர்களைத் தவிர்த்து ஏனையோர் தேசவிரோதிகள் எனப் பொருள்பட ஹெச்.ராஜா மொழிந்த 'ஆன்டி இண்டியன்' என்ற கோபச் சொல்லையே தலைப்பாக்கி அசத்தியுள்ளார் ப்ளூசட்டை மாறன். அது கவன ஈர்ப்பிற்காக மட்டுமல்லாமல் கதையோடு ஒன்றி வருவது மேலும் சிறப்பு. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் ஆகப்பெரும் பலம் என்று மார் தட்டிச் சொல்லும் அரசியல் வாதிகள், வேற்றுமைகளை வளர்த்தெடுப்பதில் எவ்வளவு கவனமாக இருக்கிறார்கள் என்பதையும், மதம் மனிதனைப் பண்படுத்தும் வேலையைத் தான் செய்யச் சொல்கின்றன, ஆனால் மதத்தை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள் தான் அதை வைத்து மனிதர்களைப் புண்படுத்துகிறார்கள் என்பதையும் ஆன்டி இண்டியன் சமரசமின்றி எடுத்துரைக்கிறது. இடைத்தேர்தல் நடைபெற உள்ள மயிலாப்பூர் தொதியில் சுவர் ஆர்டிஸ்ட் பாட்ஷா என்பவர் கொலையுண்டு இறந்துவிடுகிறார். அவர் பிறப்பால் ஒரு முஸ்லிம் என்றாலும் அவரது அம்மா இந்து. அதே சமயம் சுனாமி ந...
“மாநாடு: அரசியல் பேசும் கலைப்படைப்பு” – சீமான்

“மாநாடு: அரசியல் பேசும் கலைப்படைப்பு” – சீமான்

சினிமா, திரைத் துளி
“அன்புத்தம்பி சிலம்பரசன் நடிப்பில் வெளியான ‘மாநாடு’ திரைப்படத்தைக் கண்டுகளித்தேன். மாறுபட்ட திரைக்கதையோட்டமும், விறுவிறுப்பு குறையாத காட்சியமைப்புகளும் படத்தோடு நம்மை ஒன்றச்செய்து, மிகவும் ரசிக்கும்படியாகத் திரைப்படத்தை நகர்த்திச் செல்கிறது. மதத்தால் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி சமகாலத்தில் ஆளும் வர்க்கத்தால் நாளும் அரங்கேற்றப்படும்போது, அதனை வெகுமக்களுக்கு உணர்த்தி விழிப்பூட்டும் சுவைமிக்கக் கலைப்படைப்பாக இத்திரைப்படத்தைத் தந்திருக்கிறார் தம்பி வெங்கட்பிரபு. இசுலாமிய மக்கள் குறித்துப் பரப்பப்படும் கற்பிதங்களைக் கேள்விக்குள்ளாக்கி, கோவை கலவரத்தில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் போகிறபோக்கில் பேசி, அவர்கள் குறித்துப் பொதுப்புத்தியில் கட்டமைக்கப்பட்டிருக்கும் தவறானப் பிம்பத்தை தகர்த்தெரியும் விதத்திலான வசனங்களையும், காட்சிகளையும் படத்தின் கருப்பொருளாக அமையச் செய்திருப்பது இத்திரைப்படத்...
தனுஷ்கோடியில் அஞ்சலியும், நிவின் பாலியும்

தனுஷ்கோடியில் அஞ்சலியும், நிவின் பாலியும்

சினிமா, திரைத் துளி
அமைதிப்படை-2, கங்காரு, மிக மிக அவசரம் உள்ளிட்ட படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தற்போது சிலம்பரசன் TR, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்கிற படத்தை மிகப் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. தனது திரையுலகப் பயணத்திலேயே மிகப் பெரிய படமாக இதை எதிர்பார்க்கிறார் சிலம்பரசன் TR. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இதுவரை சுமார் 8 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் இயக்குநர் ராம் டைரக்சனில் தனது ஐந்தாவது படத்தைத் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம் அருகில் உள்ள தனுஷ்கோடியில் நேற்று முதல் து...
காக்டெய்ல் கவின் – யோகிபாபுவின் ஏஜென்ட் நண்பன்

காக்டெய்ல் கவின் – யோகிபாபுவின் ஏஜென்ட் நண்பன்

சினிமா, திரைத் துளி
சமீபத்தில் யோகிபாபு நடித்த காக்டெய்ல் என்கிற படம் Zee5 தளத்தில் வெளியானது. இதில் யோகிபாபுவின் நண்பனாக ஏஜென்ட் என்கிற பாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் கவின். ஏற்கெனவே சில படங்களில் நடித்திருந்தாலும், காக்டெய்ல் இவருக்கு நிரந்தர முகவரியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. சினிமாவில் தான் நுழைவதற்கு நடத்திய போராட்டம்  முதல் காக்டெய்ல், அடுத்ததாக வெளியாக இருக்கும் டேனி வரையிலான படங்களில் நடித்த அனுபவம் குறித்து பற்றிப் பகிர்ந்துகொண்டார் கவின். “மதுரையில் வசதியான குடும்பத்தை சேர்ந்தவன் நான். ஆனால் படிப்பு ஏறாததால் பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டேன். சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தை வீட்டில் சொன்னபோது பயங்கர எதிர்ப்பு எழுந்தது. அவர்களைச் சமாதானப்படுத்துவதற்காக வாரத்தில் ஐந்து நாட்கள் வியாபாரத்தைப் பார்த்துக்கொண்டு மீதி இரண்டு நாட்கள் கார் எடுத்துக் கொண்டு மதுரை பகுதிகளில் நடக்...
இந்தியப் பெருங்கடலில் உருவாகும் ஜூவாலை

இந்தியப் பெருங்கடலில் உருவாகும் ஜூவாலை

புத்தகம்
தமிழ் சினிமாவில் வெகு சில படங்களே கடலில் படமாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மொத்த படத்தில் 75 சதவீதம் இந்தியப் பெருங்கடலில் படமாக்கப்பட்டுள்ள படம் 'ஜூவாலை'. இந்தியப் பெருங்கடல் கொண்டுள்ள சிறு சிறு தீவுகளிலும் மீதமுள்ள படம் வளர்ந்து வருகிறது. 'ஜூவாலை' படத்தை மனுஷா தயாரிக்க ரஹ்மான் ஜிப்ரீல் நடித்து இயக்குகிறார். ரஹமான் ஜிப்ரீல், இயக்குநர் பாலுமகேந்திரா மற்றும் ஜோதி கிருஷ்ணா ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றி உள்ளார். தன் முதல் படம் கடலைச் சார்ந்தும், சூழ்நிலைகளைச் சார்ந்தும் படமாக்க வேண்டி இருப்பதால், பெரிய ஹீரோக்களை வைத்து இயக்குவதில் உள்ள சிரமங்களை உணர்ந்தவர் அதற்காக, தானே நீண்ட முடி, தாடி சகிதம் தயாராகி உள்ளார். கடல் என்ற கதைக்களத்தை கையில் எடுத்து இருந்தாலும், ’ஜூவாலை’ என பெயர் வைத்துள்ளார். "காதல், காமம், கோபம், வெறுப்பு போன்றவை ஒரு ஜூவாலை மாதிரிதான். நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரிந்து கொ...
சென்னை பழனி மார்ஸ் விமர்சனம்

சென்னை பழனி மார்ஸ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆரஞ்சு மிட்டாய் படத்திற்குப் பிறகு, விஜய் சேதுபதி வசனமெழுத, பிஜு விஸ்வந்தாத் இயக்கியுள்ள படம் 'சென்னை பழனி மார்ஸ்'. நாயகனின் தந்தை ஒரு விஞ்ஞானி. மார்ஸ்க்குப் போகவேண்டும் என்பது அவரது ஆசை. அவரால் முடியாததைச் சாதிக்க நினைக்கிறார் போதைப் பொருளுக்கு அடிமையாகும் அவரது மகனான. நாயகன் மார்ஸ் போனாரா இல்லையா என்பதுதான் படத்தின் க்ளைமேக்ஸ். இருபது ஆண்டுகளுக்கு ஒருமுறை, மார்ஸ் (செவ்வாய் கோள்) பூமிக்கு அருகில் வருமாம். அப்பொழுது ஏதோ ஒரு மலையில் போய் நின்றால், செவ்வாய்க் கிரகத்துக்கு உறிஞ்சப்படுவார்கள் என ஆஸ்ட்ரோ-பிசிக்ஸ் விஞ்ஞானியான நாயகனின் தந்தை நம்புகிறார். புதிரான ஒரு கணக்கிற்கு விடை கண்டுபிடித்து, அது "பழனி மலை" எனக் கண்டுபிடிக்கிறான் நாயகன். ஒரு பிரமிட் போல் சின்ன கருவி + ஸ்பேஸ் சூட் (space suit) தான் தேவை. மலையின் மீது நின்றால் நேராக செவ்வாய் கிரகம் தான். படத்தோடு கொஞ்சம் கூட ஒட்டவே முடி...
மலேசியாவில் துவங்கும் சிம்புவின் ‘மாநாடு’

மலேசியாவில் துவங்கும் சிம்புவின் ‘மாநாடு’

சினிமா, திரைத் துளி
அமைதிப்படை-2, கங்காரு ஆகிய படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ், தற்போது மிக மிக அவசரம் என்கிற படத்தைத் தயாரித்துள்ளது. விரைவில் இந்தப் படம் வெளியாகவுள்ள நிலையில், இதையெடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க, ‘மாநாடு’ என்கிற படத்தை மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் இந்த நிறுவனம் தயாரிக்கிறது.ஜா கதாநாயகியாக பிரபல இயக்குநரான பிரியதர்ஷனின் மகள் கல்யாணி நடிக்க இருக்கிறார். இவர்கள் தவிர இன்னும் சில முன்னணி நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் இடம்பெறுகின்றனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தில் அதிரடி அரசியல் படமாக இந்தப் படம் உருவாகிறது. சிம்பு இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக இருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் அறிவிக்கப்பட்டு பல நாட்கள் ஆனதால், படம் அவ்வ...
“அமீரா: இஸ்லாமியப் பெண்ணின் கதை” – சீமான்

“அமீரா: இஸ்லாமியப் பெண்ணின் கதை” – சீமான்

சினிமா, திரைச் செய்தி
தம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமீரா’. செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் இந்தப் படத்தில், பிரபல மலையாள முன்னணி நடிகை அனு சித்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். சீமானிடம் உதவியாளராகப் பணியாற்றிய ரா.சுப்ரமணியன் என்பவர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் பல சர்வதேச விருதுகளை குவித்த டுலெட் படத்தின் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான செழியன் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் பூஜை 22-02-2019 அன்று ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் னாம் தமிழர் கட்சியின் தலைவரும் இயக்குனரும் நடிகருமான செந்தமிழன் சீமான், ஆர்.கே.சுரேஷ், அனு சித்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். படம் பற்றி நடிகர் ஆர்.கே.சு...
“சினிமா: ஒரு துப்பாக்கி, ஒரு கோடாரி, ஒரு அரிவாள்” – சீமான்

“சினிமா: ஒரு துப்பாக்கி, ஒரு கோடாரி, ஒரு அரிவாள்” – சீமான்

சினிமா, திரைச் செய்தி
"அரசியலைக் கவனிக்காமல் அதுவும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் படத்தில் நாட்களைச் செலவிடுகிறீர்களே என்கிறார்கள். எனக்கு இருபது நாள்தான் படப்பிடிப்பு இருக்கிறது. மற்றவர்கள் கூட்டணி அமைக்க நாட்கள் எடுத்துக் கொள்கிறார்கள். அந்த நேரம் எனக்கு மிச்சம் என்பதால் அதை நான் படப்பிடிப்பிற்குச் செலவிடுகிறேன். அவ்வளவுதான்! நடிகர்கள் நாடாளக்கூடாது என்று சொல்லும் சீமான், திரைத்துறையில் இருந்துதானே வந்திருக்கிறார் என பலரும் கேட்கிறார்கள். நான் எனது ரசிகர்களைச் சந்தித்து, அவர்களை தொண்டர்களாக மாற்றிக் கட்சியைத் துவங்கவில்லை. என்னுடைய பிறப்பு, வளர்ப்பு, பாதை, பயணம் எல்லாமே வேறு. கமல், ரஜினி இவர்களெல்லாம் திரைப்படத்துறையில் இருந்து வருகிறார்கள். திமுக, அதிமுக ஊழல் கட்சி என்பது இப்போதுதான் இவர்களுக்குத் தெரிந்ததா? இவ்வளவு நாள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? ரஜினிகாந்த்திடம் கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களை ஏன் செ...
டுலெட் விமர்சனம்

டுலெட் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தாங்கள் வாடகைக்குக் குடியிருக்கும் வீட்டு உரிமையாளரிடம் உரசல், புது வீடு தேடி அலுக்கும் படலம், சொந்த வீட்டுக்கான விழைவு ஆகிய மூன்றையும் கடக்காதவர்கள், நூற்றுக்கு ஒரு சதவிகிதம் பேரே இருப்பார்கள். மீதி, தொண்ணூத்தொன்பது பேர்க்கு இந்த அனுபவம் வாய்த்திருக்கும். சொந்த ஊரில் பத்து வீட்டை வாடகைக்கு விட்டுச் சொகுசாய்க் காலாட்டிச் சம்பாதிக்கும் பாக்கியசாலிகள் கூட, என்றேனும் எப்போதாவது இன்னொரு ஊரில் இந்த அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள். ஆக, டுலெட் 99 சதவிகிதத்தினருக்கு நிகழ்ந்த, நிகழும் 100 சதவிகிதம் உண்மையான கதை. 100 திரைப்பட விழாக்களில், 84 பரிந்துரைகளில் இந்திய அரசின் தேசிய விருது உட்பட 32 விருதுகளைப் பெற்றுள்ளது. அதிக விருதுகளை வாங்கிய தமிழ் சினிமா என்ற பெருமையைப் பெற்றுள்ளது டுலெட் திரைப்படம். கோலிவுட்டை நம்பியிருக்கும் எண்ணற்றவர்களில் ஒருவனான இளங்கோவின் காதல் மனைவி அமுதாவிடம், ஒரு மாதத்திற்குள்...
பெண் காவலர்கள் பாராட்டிய ‘மிக மிக அவசரம்’

பெண் காவலர்கள் பாராட்டிய ‘மிக மிக அவசரம்’

சினிமா, திரைச் செய்தி
  மிக மிக அவசரம் - பெண் காவலர்கள் சந்திக்கும் அவலங்களைச் சொல்லும் படமாக உருவாகி இருக்கிறது. ஆனால் இந்தப்படம் போலீஸாருக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள படமாக இருக்குமோ என்கிற எண்ணம் பலர் மத்தியில் ஓடிக்கொண்டு இருந்தது. ஆனால் அதை தனது வித்தியாசமான அணுகுமுறையால் உடைத்தெறிந்து விட்டார் இயக்குநர் சுரேஷ் காமாட்சி. காவலர் தினமான நேற்று, சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் சுமார் 200 பெண் காவலர்களுக்கு இந்தப்படத்தை திரையிட்டுக் காட்டினார் தயாரிப்பாளரும் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி. இந்நிகழ்வு குறித்த விரிவாகப் பகிர்ந்துகொண்ட சுரேஷ் காமாட்சி, “இது ஏதோ பெண் போலீசார் மட்டுமே சந்திக்கும் பிரச்சனைகளைச் சொல்லும் படம் என்பது போன்ற தோற்றம் உருவாகியுள்ளது. ஆனால் உண்மை அதுவல்ல. அனைத்து துறையிலும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளைச் சொல்லும் கதைதான். அந்தவகையில் இந்தப்படத்தின் கதைக்களமாக போலீஸ் துறையைப் பின்...