Shadow

Tag: Cinema Preferment

TN 2026 விமர்சனம் | தங்க நட்சத்திரம் 2026 review

TN 2026 விமர்சனம் | தங்க நட்சத்திரம் 2026 review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சினிமாவில் இருந்து ஒரு நடிகர் அரசியலுக்கு வந்தால் என்னென்னவெல்லாம் நிகழும் என்பதைக் கொஞ்சம் உண்மைச் சம்பவங்களை நிறையக் கற்பனையுடன் புனைவாகக் கலந்து கட்டி அற்புதமானதொரு அரசியல் பகடிப்படத்தைத் தந்துள்ளனர் தந்தை மகனுமான தம்பி இராமையாவும், உமாபதி S.இராமையாவும். ‘தலைவர் தம்பி தலைமையில்’ போலவே ஒரு கொண்டாட்டமான படத்தைக் கண்ணன் ரவி குழுமம் (KRG) சார்பில் மறுபடியும் அளித்துள்ளனர் தயாரிப்பாளர்கள் கண்ணன் ரவியும், தீபக் ரவியும். அடுத்த எம்.ஜி.ஆராகக் குல்கந்த் குமார் எனும் நடிகர் பரிணமிப்பார் என்பதை அனுமானித்து, அவரைப் போஷித்து, ஊக்குவித்து வளர்த்தெடுக்கிறார் நிலச்சுவன்தாரான மன்றாடியார் எனும் பொள்ளாச்சி கோடீஸ்வரர். அவரது எண்ணம் போலவே குல்கந்த் குமார் வளர்ந்து தமிழகத்தின் தங்க நட்சத்திரமாக ஜொலிக்கிறார். குல்கந்த் குமாரின் 50 ஆவது வயதில் அவரை அரசியலுக்குள் கொண்டு வருகிறார் மன்றாடியார். அதன் பின் என்னாகி...
காளிதாஸ் 2 விமர்சனம் | Kaalidas 2 review

காளிதாஸ் 2 விமர்சனம் | Kaalidas 2 review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இயக்குநர் ஸ்ரீ செந்தில், காளிதாஸ் (2019) படத்தை சைக்காலஜிக்கல் த்ரில்லராகக் கொடுத்து சர்ப்ரைஸ் ஹிட் கொடுத்திருந்தார். இப்படத்தை இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லராக ரசிக்கும்படி கொடுத்துள்ளார். அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், மித்ரா எனும் மூன்று வயது சிறுமி காணாமல் போக, அதை விசாரிக்க வருகிறார் காளிதாஸ். காணாமல் போன சிறுமிக்கு என்னாகிறது என்பதையும், அந்தக் குடியிருப்பு தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் ரகசியங்கள் என்னென்ன என்பதையும் பரபரப்பாகக் கடைசி நொடி வரை தக்கவைத்துள்ளது திரைக்கதை. மனதில் மிகப் பெரிய வலியுடனும் சினத்துடன் உள்ள ஸ்டீஃபனாக நடித்துள்ளார் அஜய் கார்த்தி. வெறியோடு ஆட்களைக் கொல்லும்பொழுதும், மற்றவர்களை ஊடுருவி அவர் பார்க்கும் பார்வையும், போலீஸ் விசாரணையின் பொழுது அவர் காட்டும் அலட்சியமும் மெளனமும் எரிச்சலை ஏற்படுத்துகின்றன. அவை எல்லாவற்றிற்கும் அவரிடம் சரியானதொரு காரணம் உள்ளன என்ற கிளைக...
வித் லவ் விமர்சனம் | With Love review

வித் லவ் விமர்சனம் | With Love review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மனதை வருடும் ஒரு ஃபீல் குட் படைப்பாகக் கவர்கிறது 'வித் லவ்' திரைப்படம். ஒரு கவித்துவமான தமிழ்த் தலைப்பையே படத்திற்குச் சூட்டியிருக்கலாம். பள்ளிப் பருவத்தில் பூக்கும் பதின்மத்துக் காதலைச் சொல்லாமலே விட்டுவிடும் சத்யசீலனும் மோனிஷாவும், தங்கள் முதல் காதலரைத் தேடித் தங்கள் காதலித்ததைத் தெரியப்படுத்த நினைக்கின்றனர். அந்த அழகான பயணத்தை நேர்த்தியாகவும் நகைச்சுவையாகவும் சொல்லியுள்ளார் அறிமுக இயக்குநர் மதன். நாயகனின் நண்பன் தினேஷாக ஹரிஷ் குமார் நடித்துள்ளார். ஹரிஷ்க்கு, முதலும் நீ முடிவும் நீ, டாடா, லவ்வர் என பலமுறை அசத்திய கதாபாத்திரத்தையே வழங்கியுள்ளனர். அவரது முழுத் திறமைக்குத் தீனி இல்லாத சிறு பாத்திரம் என்றாலும், க்ளைமேக்ஸில் மீண்டும் தோன்றி கலகலக்க வைக்கிறார். "அவளோட முடிவு எதுவா இருந்தாலும் ரெஸ்பெக்ட் பண்ணு" - நாயகியின் அக்காவாக நடித்துள்ள RJ ஆனந்தி பேசும் வசனம். "நீ அவர்ட்ட ஏன்ன்னு எப்ப...
சிறை விமர்சனம் | Sirai review

சிறை விமர்சனம் | Sirai review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இந்த வருடத்தின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது சிறை திரைப்படம். வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரியின் முதற்படத்திலேயே அழுத்தமான முத்திரையைப் பதித்துள்ளார். வேலூர் சிறையில் இருக்கும் அப்துல் ரெளஃப் எனும் கைதியை சிவகங்கை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்கிறார் கதிரவன் எனும் போலீஸ் ஏட்டு. அந்தப் பயணத்தின் வாயிலாக, நீதித்துறையின் போதாமைகள், அழுத்தமான காதல் கதை, போலீஸார்க்கு நேரும் சங்கடம், கொம்பு முளைத்தது போல் பொதுமக்களிடம் நடந்து கொள்ளும் போலீஸாரின் ஆணவப்போக்கு என அழுத்தமான கதை சொல்லியுள்ளார் இயக்குநர். அப்துல் ரெளஃபாக L.K.அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ லலித் குமாரின் மகனாவார். இவரை சினிமாவில் அறிமுகப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட படமிது. அதற்காக லலித் குமார், டாணாக்காரன் தமிழிடம், விசாரணை போலொரு கதை கேட்டுள்ளார். தமிழ் சொன்ன உண்மைக...
இந்திரா விமர்சனம் | Indra review

இந்திரா விமர்சனம் | Indra review

சினிமா, திரை விமர்சனம்
குடித்து விட்டு போலீஸ் ஜீப்பினை ஓட்டி விபத்தினை ஏற்படுத்தியதால், இடைக்கால பணி நீக்கத்தில் உள்ளார் காவல்துறை அதிகாரியான இந்திரா. குடிப்பழக்கம் அதிகமானதால் கண் பார்வையையும் இழந்து விடுகிறார் இந்திரா. அவரைக் கண்ணுக்குக் கண்ணாய்ப் பார்த்துக் கொள்ளும் அவரது காதல் மனைவி கயல் பூட்டிய வீட்டிற்குள் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார். வேலை, கண் பார்வை, காதல் மனைவி என அனைத்தையும் இழந்து வேதனையில் வாடும் கோபக்கார இந்திரா கொலையாளியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். அவரது முயற்சி கைக்கூடியதா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. நாயகியாகக் கயலெனும் பாத்திரத்தில் மெஹ்ரீன் பிர்சாடா நடித்துள்ளார். குடிகார கணவனிடம் பாராமுகமாக இருப்பதும், கண்பார்வை இழந்த கணவனை அக்கறையாகப் பார்த்துக் கொள்வதும் எனச் சிறப்பாக நடித்துள்ளார். இரண்டாம் பாதியில் வரும் ஃப்ளாஷ-பேக்கில், வேலைக்காரப் பெண் மதியாக அனிகா நடித்துள்ளா...
ஓஹோ எந்தன் பேபி | Oho Enthan Baby review

ஓஹோ எந்தன் பேபி | Oho Enthan Baby review

சினிமா, திரை விமர்சனம்
'தேன் நிலவு (1961)' எனும் படத்தில், மிக பெப்பியான வார்த்தைகள 64 வருடங்களிற்கு முன்பே பயன்படுத்தி அசத்தியுள்ளார் கவிப்பேரரசு கண்ணதாசன். தற்போதும் வைப் செய்யும்படியான அவரது வார்த்தைகளைத் தலைப்பாகப் படத்திற்குச் சூட்டியுள்ளனர். இயக்குநராகும் முயற்சியில் உள்ள அஷ்வின், நடிகரான விஷ்ணு விஷாலைச் சந்தித்து கதை சொல்கிறார். காதல் கதையை எதிர்பார்க்கும் விஷ்ணு விஷாலுக்குத் தனது காதல் கதையையே சொல்கிறார் அஷ்வின். ஆனால், ஈகோவால் மீராவுடன் பிரேக்-அப் ஆகி நிற்கும் காதல் கதையை முழுமைப்படுத்த, மீராவைச் சந்தித்து உண்மைத்தன்மையுடன் கதையை முடிக்கச் சொல்கிறார் விஷ்ணு விஷால். மீராவைச் சந்திக்கச் செல்லும் அஷ்வினின் காதல் கைக்கூடியதா இல்லையா என்பதே படத்தின் முடிவு. அஷ்வினின் முதல் காதல் பள்ளியில் நிகழ்கிறது. அஷ்வினால் காதலிக்கப்படும் சீனியர் பாத்திரத்தில் வைபவி நடித்துள்ளார். அஷ்வின்க்குக் கிடைக்கும் மொட்டை மாடியி...
பீனிக்ஸ் – வீழான் விமர்சனம் | Phoenix review

பீனிக்ஸ் – வீழான் விமர்சனம் | Phoenix review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பீனிக்ஸ் எனும் புராண பறவை, தன்னைத்தானே எரித்துத் தனது சாம்பலிலிருந்து மீண்டும் பிறக்கும் வல்லமை கொண்டது. அதே போல், சூர்யா எனும் பதினேழு வயது சிறுவன், தன்னைத் தானே மரணம் துரத்தும் ஓர் இக்கட்டான சூழலுக்குள் உட்படுத்தி, ஒவ்வொரு முறையும் அதிலிருந்து வீழ்ந்து விடாமல் எழுந்து நிற்கிறான். மரண வீட்டிற்குத் துக்கம் விசாரிக்க வரும் ச.ம.உ.-வான கரிகாலனை 36 முறை வெட்டிக் கொல்கிறான் சிறுவன் சூர்யா. அவனைச் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்க நீதிமன்றம் ஆணையிடுகிறது. சூர்யாவைக் கூர்நோக்கு இல்லத்திலேயே வைத்துக் கொல்வதற்குக் கரிகாலனின் மனைவி மாயா முயற்சிகள் எடுத்தவண்ணம் உள்ளார். அவற்றிலிருந்து சூர்யா தப்பினானா, சூர்யா ஏன் ச.ம.உ.-வைக் கொன்றான் என்பதே படத்தின் முடிவு. முன்னாள் ச.ம.உ.வாக முத்துகுமார் நடித்துள்ளார். படத்தில் நகைச்சுவை இல்லாத குறையை அவரது ரியாக்‌ஷன்கள் போக்குகிறது. சூர்யாவின் அம்மாவாக தேவத...
ரெட்ரோ விமர்சனம் | Retro review

ரெட்ரோ விமர்சனம் | Retro review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ரெட்ரோ எனும் சொல் பின்னோக்கிய காலத்தைக் குறிக்கிறது. கதையின் காலகட்டம் செல்ஃபோன்கள் பரவலாகாத தொண்ணூறுகளின் இறுதியாகும். தூத்துக்குடியில், ஒரு டானால் வேண்டாவெறுப்பாக வளர்க்கப்படுகிறார் பாரிவேல் கண்ணன். அடிதடியே வாழ்க்கையென வாழும் பாரிக்கு சுமார் 35 வயதானதும், அவரது காதலி ருக்மிணியின் விருப்பத்திற்கிணங்க வன்முறையைக் கைவிட முடிவெடுக்கிறார். ஆனால் எதிர்பாராதவிதமாகத் அவரது திருமண நாளன்றே, ருக்மிணியை வெட்ட வரும் வளர்ப்புத் தந்தையின் கையை வெட்டி விடுகிறார் பாரி. பாரி சிறைக்குச் செல்கிறார், மனம் நோகும் ருக்மிணி தலைமறைவாகிறார், மகனிடம் இருந்து எப்படியேனும் அவன் மறைக்கும் தங்கமீன் ரகசியத்தை அறியத் துடிக்கிறார் பாரியின் வளர்ப்புத் தந்தை. இது படத்தின் முதற்பாதி. பாரியைச் சிறையில் இருந்து மீட்டு, சட்டத்துக்குப் புறம்பாக நடக்கும் சண்டைப் போட்டியில் பங்கு பெற வைக்க முயல்கிறது ஒரு குழு. ஆனால் பாரியோ அக்...
வீர தீர சூரன் – பாகம் 2 | Veera Dheera Sooran review

வீர தீர சூரன் – பாகம் 2 | Veera Dheera Sooran review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
காவல்துறை உயரதிகாரியான எஸ்.பி. அருணகிரி, கண்ணனையும் அவரது தந்தையான பெரியவர் ரவியையும் என்கவுன்ட்டரில் கொல்ல நினைக்கிறார். இதையறியும் பெரியவர் ரவி, தன் மகனை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென நினைக்கிறார். அதற்காக எஸ்.பி.யைக் கொல்ல, மளிகைக் கடை வைத்திருக்கும் காளியை அணுகுகிறார். யார் யாரைக் கொன்றார்கள் என்பதே படத்தின் கதை. படத்தின் முதல் ஃப்ரேமிலேயே கதைக்குள் சென்றுவிடுகிறார் இயக்குநர் S.U.அருண் குமார். தன் கணவன் ஃபோன் எடுக்காததால் பதற்றமடையும் ஒரு மனைவியின் கோபம், ஒரு நாள் இரவுக்குள் என்னென்ன களேபரங்களுக்குக் காரணமாகிறது எனும் கதையின் மையக்கருவே திடுக்கிட வைக்கிறது. மனித மனங்களின் சிடுக்குகளையும், அகங்காரத்தையும், பழிவாங்கும் எண்ணத்தையும் நேர்த்தியாகத் திரைக்கதையில் கையாண்டுள்ளார் S.U.அருண் குமார். தனது வேலைக்கு உலை வைத்தவர்களைக் கொன்றே ஆகவேண்டுமென எஸ்.பி. அருணகிரியின் அதீத செயற்பாடுகள், அதி...
SIR விமர்சனம்

SIR விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
வாத்தியார் மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானத்தின் தாத்தாவும் அப்பாவும் ஆசிரியராக இருந்தவர்கள். கல்வி அனைவருக்கும் கிடைக்கவேண்டும், கல்வியே எல்லாத் தளைகளில் இருந்தும் விடுதலை அளிக்கும் என உயர்ந்த லட்சியத்துடன் 1950 களில், ஒரு பள்ளியைத் தொடங்குகிறார் சிவஞானத்தின் தாத்தா. அவர் விட்ட வேலையைச் சிரமேற்கொண்டு ஆத்மார்த்தமாக ஆசிரியப் பணியைச் செய்கிறார் சிவஞானத்தின் அப்பா. உயர்நிலைப்பள்ளியாக உயர்த்த அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் எல்லாம் வியர்த்தமாகிறது. தந்தை மற்றும் தாத்தாவின் கனவை அறியாத சிவஞானம், ஊரை விட்டு மாற்றலாகிச் சென்றுவிட நினைக்கிறார். தன் குடும்பம் எதற்காகப் போராடுகிறது என உணரும் சிவஞானம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்தான் படத்தின் அடிநாதம். ஒருவரை ஒடுக்கித் தங்கள் ஆளுகைக்குள்ளேயே வைத்திருக்க வேண்டுமென்றால், அவர்கள் மனதில் மூடநம்பிக்கைகளை விதைத்து, அவர்களுக்குக் கல்வியறிவு கிடைக்காமல் பார்த்துக் கொ...
வாழை விமர்சனம்

வாழை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
வாழைத்தோட்டத்தில் வாழைத்தார்களை சுமை தூக்கப் போகும் சிறுவனின் பார்வையினின்று படம் பயணிக்கிறது. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை இயக்கியுள்ள மாரி செல்வராஜ், இப்படத்தில் தன் பால்யத்தைத் திரைச்சித்திரமாக்கியுள்ளார். மாரி செல்வராஜின் இந்த தன்வரலாற்றுப் படத்தை, நவ்வி ஸ்டூடியோஸ் சார்பாக திவ்யா மாரி செல்வராஜ் தயாரித்துள்ளார். ஐந்து நாட்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் செல்லும் சிவனணைந்தான்க்கும், அவனது தோழன் சேகருக்கும், வாரயிறுதி என்றாலே எட்டிக்காயைக் கசக்கிறது. காய் சுமத்தல் எனும் வேலைக்கு நிர்ப்பந்தப்படுத்தி அனுப்பி வைக்கின்றனர் அம்மாக்கள். ஒரு பகல் முழுவதும், வாழைத்தோட்டத்தில் இருந்து வாழைத்தார்களைச் சுமந்து, கால்வாய்கள் அடங்கிய வழுக்கும் வரப்பின் வழியாக லாரியில் கொண்டு போய் ஏற்றவேண்டும். பாரத்தால் கழுத்து ஒரு பக்கம் சாய்ந்தவண்ணமே இருக்கும் அச்சிறுவர்களுக்கு. அந்த சிறுவர்களின்...
DeAr விமர்சனம்

DeAr விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
குட் நைட் திரைப்படத்தில் குறட்டை விடும் பிரச்சனையால் நாயகன் பாதிக்கப்படுவான். DeAr இல் அதே குறட்டை விடும் பிரச்சனையால் நாயகி பாதிக்கப்படுகிறாள். பெற்றோரின் அறிவுறத்தலின்படி அந்தப் பிரச்சனை இருப்பதை மறைத்துத் திருமணம் செய்கிறாள். முதலிரவு அன்றே அவளின் முதன்மையான பிரச்சனை தெரியவர, அதைத் தொடர்ந்து எழும் பிரச்சனைகளும் அதன் தீர்வுகளும் தான் இந்த DeAr திரைப்படம். கதையின் பிரச்சனை என்ன என்பது தெரியும் போதே, அதன் முடிவும் இதுவாகத் தான் இருக்கும் என்று யூகிக்க முடிகிறது. ஆனாலும் அந்த முதலுக்கும் முடிவுக்கும் இடைப்பட்ட தூரத்தை சுவாரசியமான காட்சிகளாலும், கை தேர்ந்த நடிகர்களின் நடிப்பினாலும் இட்டு நிரப்பி இருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன். திரைப்படத்தின் ஆகச் சிறந்த பலமே அதில் நடித்திருக்கும் கை தேர்ந்த நடிகர் நடிகைகள் பட்டாளம் தான். நாயகி ஐஸ்வர்யா ராஜேஷில் துவங்கி, காளி வெங்கட், இளவ...
லவ்வர் விமர்சனம்

லவ்வர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
80 மற்றும் 90களின் காலகட்ட காதல்களில் தொண்ணூறு சதவீதத்திற்கும் மேலான காதல்கள் சொல்லாமலே முடிந்து போயிருக்கும்.  ஆனால் இன்றைய 21ம் நூற்றாண்டுத் தலைமுறையின் காதல்கள், பார்த்த மறுகணத்தில் காதலைச் சொல்லியும், காதலியுடன் கை கோர்த்து சுற்றியும், ஒன்றாக பழகியும், படுக்கையை பகிர்ந்தும் கூட தொண்ணூறு சதவீதத்திற்கும் அதிகமான காதல்கள் கல்யாணத்தில் கைகூடாமல் கலைந்துவிடுகிறது.  படுக்கையை பகிர்வதையே உச்சகட்ட லட்சியமாகக் கொண்டு இயங்கியிருக்கும் காதல்கள் அதில் சில பல இருக்கலாம். ஆனால் அவைகளையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் உண்மையாகவே காதலை வாழ்க்கைத் துணைக்கான தேடலாகப் பார்த்தோ, இல்லை காதலியையோ காதலனையோ உருகி உருகி உண்மையாக காதலிப்போர் கூட இறுதியில் சேராமல் பிரிந்துவிடுகிறார்கள்.  அதன் பின்னணியில் உள்ள சமூகவியலையும் உளவியலையும் ஒரு சேர பேசும் படம் தான் “லவ்வர்”. கல்லூரி காலத்தில் இருந்...
கான்ஜுரிங் கண்ணப்பன் விமர்சனம்

கான்ஜுரிங் கண்ணப்பன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மந்திரத்தாலோ, தந்திரத்தாலோ ஒன்றைத் தருவிப்பதையோ, வரவைப்பதையோ கான்ஜுரிங் எனச் சொல்வார்கள். அப்படி மந்திரத்தால் உருவாக்கப்பட்ட ஒரு கனவு மாளிகைக்குள் சிக்கிக் கொள்கின்றான் கண்ணப்பன். அவனுடன் டெவில் ஆர்ம்ஸ்ட்ராங்கும், சைக்காட்ரிஸ்ட் ஜானியும், கண்ணப்பனின் குடும்பத்தினரும் சிக்கிக் கொள்கிறார்கள். தப்பித் தவறித் தூங்கினால், அந்த அமானுஷ்ய கனவு மாளிகைக்குள் சிக்கிக் கொள்ள வேண்டியதுதான். அதில் இருந்து எப்படித் தப்பிக்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை. கதாபாத்திரங்களின் அறிமுகத்திற்கான நேரத்தை கொஞ்சமாக எடுத்துக் கொண்டு, நேராகக் கதைக்குள் சென்று விடுகின்றனர். சதீஷ் தனியாகச் சிக்கிக் கொண்ட காட்சிகளில், தொழில்நுட்பத்தின் உதவியால் அச்சுறுத்த முயற்சி செய்துள்ளனர். ஹாலிவுட்டின் கான்ஜுரிங் சீரிஸ் படங்களே பார்வையாளர்களை அச்சுறுத்தத் திணறி வரும் சூழலில், கோலிவுட் படங்கள் தஞ்சம் அடைவது நகைச்சுவையில். இப்படம் அ...