Shadow

Tag: Neelam Productions

Blue Star விமர்சனம்

Blue Star விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மற்றுமொரு ஆடுகளத்தின் கதை.  ஊரில் இரண்டு கிரிக்கெட் அணிகள். அவர்களிடையே ஜாதி ரீதியிலான பிளவு. இரண்டு அணிகளும் முட்டிக் கொண்டும் முறைத்துக் கொண்டும் திரிய, வர்க்கம் அவர்கள் இருவரையுமே இன்னும் கீழாகத்தான் பார்க்கிறது என்கின்ற உண்மை ஒரு கட்டத்தில் முகத்தில் அறைய, இரு அணிகளும் கைகோர்த்து வர்க்கத்தை ஜெயிப்பதே இந்த “ப்ளூ ஸ்டார்” படத்தின் கதை. படத்தின் துவக்கம் மிக மெதுவாகச் செல்கிறது. கதையற்ற காட்சிகளின் கோர்வையாக மட்டுமே கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் வரை நீடிக்கும் படம், காலணி அணியினருக்கும், ஊர்க்கார அணியினருக்குமான 3 பால் மேட்சில் தான் சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது.  அதற்குப் பின்னர் விளையாட்டை மையமாகக் கொண்ட திரைப்படங்களின் விதிகளுக்கு உட்பட்டு நகரும் திரைக்கதை, விளையாட்டுக்கே உண்டான சுவாரசியத்தைத் தக்க வைத்துக் கொள்வதால் திரைப்படம் பரபரப்பாகச் செல்கிறது.  க்ளைமாக்ஸ் காட்சியில் பி...
”திரைப்படங்களில் அரசியல் பேசினால் என்ன தவறு” –  “ப்ளூ ஸ்டார்” பட விழாவில் நடிகை கீர்த்தி பாண்டியன்

”திரைப்படங்களில் அரசியல் பேசினால் என்ன தவறு” –  “ப்ளூ ஸ்டார்” பட விழாவில் நடிகை கீர்த்தி பாண்டியன்

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
நீலம் புரொடெக்ஷன்ஸ்  சார்பாக இயக்குநர் பா.ரஞ்சித்  மற்றும்  லெமன் லீப் கிரியேஷன்ஸ்  சார்பாக  ஆர்.கணேஷ் மூர்த்தி  மற்றும்  ஜி.சவுந்தர்யா ஆகியோர்  இணைந்து  தயாரித்திருக்கும்  திரைப்படம்  ப்ளூ ஸ்டார்.  அசோக் செல்வன்,  சாந்தனு,  கீர்த்தி பாண்டியன்,  ப்ருத்வி,  பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல்,  லிசி ஆண்டனி,  திவ்யா துரைசாமி,  அருண் பாலாஜி மற்றும்  பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.  இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் வைத்து நடைபெற்றது. படத்தில் நடித்த நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் பல முக்கிய சினிமா கலைஞர்கள், பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். படத்தின் நாயகியான கீர்த்திப் பாண்டியன்  பேசும் போது, இப்படத்தின் பயணம் 2022ல் தொடங்கியது.  அமர்...
“சேத்துமான் – ஒரு பரீட்சார்த்த முயற்சி” – இயக்குநர் பா.ரஞ்சித்

“சேத்துமான் – ஒரு பரீட்சார்த்த முயற்சி” – இயக்குநர் பா.ரஞ்சித்

சினிமா, திரைச் செய்தி
நீலம் புரொடெக்ஷன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் சேத்துமான். இப்படம் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படம் Sony Liv இணையதளத்தில் வெளியாகி தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது. இயக்குநர் பா.ரஞ்சித், “சேத்துமான் திரைப்படம் ஒரு திரைப்படமா என்பதே எனக்கு முதலில் தெரியவில்லை. அந்தக் கதையை படித்த போது இது ஒரு ஃபீச்சர் ஃப்லிம்மாக இருக்குமா என்கின்ற சந்தேகமும் எனக்கு இருந்தது. என்னோட சந்தேகத்தை நான் இப்படத்தின் இயக்குநர் தமிழிடமும் கேட்டேன். ஆனாலும் இந்தக் கதை என்னை வெகுவாகப் பாதித்தது என்பது மறுக்க முடியாத உண்மை. எனக்கு எப்பொழுதுமே மெயின் ஸ்ட்ரீம் சினிமாக்களைப் போல பேரலல் (Parallel) சினிமாக்கள் என்று சொல்லப்படும் சுயாதீனத் திரைப்படங்கள் மீதும் எனக்கு மிகப்பெரிய ஆர்வம் உண்டு. சுயாதீனத் திரைப்படங்களில் இருக்கின்ற ...
சேத்துமான் விமர்சனம்

சேத்துமான் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
பெருமாள் முருகனின் 'வறுகறி' எனும் சிறுகதையை மிக நேர்த்தியாக சேத்துமான் எனும் படமாக உருமாற்றியுள்ளார் இயக்குநர் தமிழ். பன்னியைக் கொங்கு வட்டாரத்தில் சேத்துமான் என்றழைப்பார்கள். கதை நடக்கும் களமாக மேற்கு கொடைக்கானலைத் தெரிவு செய்துள்ளனர். பெயர் போடும் போது ஒரு கதையை ஓவியத்தில் சொல்லி முடித்ததும், டைட்டில் க்ரெடிட் முடிந்த பின் படத்தின் கதைக்குள் செல்கின்றனர். மகனையும் மருமகளையும் இழந்த பூச்சியப்பன் தனது பேரனுடன் ஊரை விட்டு வெளியேறி, பண்ணாடி வெள்ளையனிடம் வேலைக்குச் சேருகிறார். உடல் சூட்டினைத் தணிக்க, பன்னியின் வறுத்த கறியைத் திண்பதில் ஆர்வம் காட்டுபவர் வெள்ளையன். ஆனால், ஊர் உலகமோ, பன்னிக்கறியை உண்பதை மிக ஏளனமாகப் பார்க்கிறது. குறிப்பாக வெள்ளையனின் மனைவியே, 'பீ திண்ணும் பன்னியைச் சாப்பிடுறது பீ திண்பதற்கு சமம்' என வெள்ளையனை அநியாயத்திற்கு அசிங்கப்படுத்துகிறார். கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்...
ரைட்டர் விமர்சனம்

ரைட்டர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காவல்துறையின் அசல் முகங்களை அப்படியே அப்பட்டமாகப் பதிவு செய்துள்ளது ரைட்டர். தன் சர்வீஸில் யாரையும் அடித்திராத நேர்மையான காவல்துறை எழுத்தர் சமுத்திரக்கனி. அவருக்கு இரு மனைவிகள். அவருடைய ஒரே லட்சியம் போலீஸ் யூனியன் அமைக்க வேண்டுமென்பதே. அதற்காகவே அவர் வெவ்வேறு ஸ்டேஷனுக்குத் தூக்கி அடிக்கப்படுகிறார். அப்படி அவர் மாற்றலாகிச் செல்லும் ஒரு காவல்நிலையத்தில் அப்பாவி இளைஞன் ஹரிக்கு ஓர் அநீதி இழைக்கப்படுகிறது. அதற்கு சமுத்திரக்கனியும் ஒரு காரணமாகி விட, அதை அவர் எப்படி சரி செய்தார் என்பதே ரைட்டரின் பயணம். தேவைக்கேற்ற தொந்தி, குற்றவுணர்வில் தடுமாறும் வார்த்தைகள் என சமுத்திரக்கனி சிறப்பாக நடித்துள்ளார். அதிகம் பேசாமல் இவர் நடித்திருக்கும் படம் என்பது கூடுதல் சிறப்பு. போலீஸிடம் மாட்டிக்கொள்ளும் அடிமட்ட இளைஞனாக அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார் ஹரி. ஓரிரு காட்சி என்றாலும் சுப்பிரமணிய சிவா அசத்தலாக ...
“ரைட்டர்: தமிழ் சினிமா வளமானதாக மாறுகிறது” – பாரதிராஜா

“ரைட்டர்: தமிழ் சினிமா வளமானதாக மாறுகிறது” – பாரதிராஜா

சினிமா, திரைச் செய்தி
இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ரைட்டர். நேற்று இயக்குநர்கள் பாரதிராஜாவும் பாக்கியராஜும், ரைட்டர் படம் பார்த்த பிறகு இயக்குநர் பிராங்ளினை வெகுவாகப் பாராட்டினார். “தமிழ் சினிமாவில், ஒரு போலீஸ் கதை புதுமையாக இருக்கிறது. எனக்குப் ரொம்பப் பெருமையாக இருக்கிறது. இளைய தலைமுறையினரிடமிருந்து இப்படிப்பட்ட படங்கள் வருவதைப் பார்க்கும் பொழுது தமிழ் சினிமா இன்னும் வளமானதாக மாறுகிறது. எப்போதும் அதிகமாக பேசி நடிக்கும் சமுத்திரக்கனி இந்தப் படத்தில் அதிகம் பேசாமல் மிக அழகாக நடித்திருக்கிறார். நான் ரசித்தேன். இயக்குநர் பா.இரஞ்சித் தரமான படங்கள் தயாரிப்பதன் மூலம் நல்ல இயக்குநர்களை இந்தத் தமிழ் சினிமாவுக்கு தந்து கொண்டிருக்கிறார். அவருக்கும் எனது வாழ்த்துக்கள். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும் அன்புகளும்” என்றார்...
“ரைட்டர்: மாறுபட்ட கோணத்தில் போலீஸின் வாழ்க்கை” – இயக்குநர் வெற்றிமாறன்

“ரைட்டர்: மாறுபட்ட கோணத்தில் போலீஸின் வாழ்க்கை” – இயக்குநர் வெற்றிமாறன்

சினிமா, திரைச் செய்தி
இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகவிருக்கும் ரைட்டர் திரைப்படத்தின் சிறப்புகாட்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். படம் பார்த்த பிறகு இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தையும், இயக்குநர் பிராங்க்ளினையும் கட்டிப்பிடித்து பாராட்டுக்களைத் தெரிவித்தார். “மிக முக்கியமான படத்தைத் தமிழ் சினிமாவிற்குத் தந்திருக்கிறார்கள். சமுத்திரக்கனியின் நடிப்பு தனித்துவமாக இருக்கிறது. இந்த வருடத்தின் மாபெரும் வெற்றிப்பட வரிசையில் ரைட்டரும் இருக்கும். தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் என அனைவரும் சிறப்பாகத் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட படங்களைத் தயாரித்து வரும் இரஞ்சித்துக்கு எனது வாழ்த்துக்களும் அன்புகளும். ரொம்ப நாளுக்கு முன்பாகவே விவாதிக்கப்பட வேண்டிய ஒரு ...
“ரைட்டர்: தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதை” – பா.ரஞ்சித்

“ரைட்டர்: தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதை” – பா.ரஞ்சித்

சினிமா, திரைச் செய்தி
சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிந்திருக்கும் ரைட்டர் படத்தை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கியுள்ளார். இந்தப் படம் வருகின்ற டிசம்பர் 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது. அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநரும் தயாரிப்பாளருமான பா. ரஞ்சித், “தயாரிப்பாளர் அதிதி என் ரசிகையாக என்னைச் சந்தித்தார். காலா படத்தை முதல் நாளில் இரண்டுமுறை பார்த்துள்ளார். பிறகு ரைட்டர் படத்தைப் பற்றிப் பேசி இப்படத்தைத் தயாரிக்க முன் வந்தோம். முதலில் அவர் நான் இயக்கும் படத்தைத் தயாரிக்க வேண்டும் என நினைத்தார். ஆனால் எனக்கு வேறு பட வேலைகள் இருந்ததால் அது முடியவில்லை. அதிதிக்கு சமூக அக்கறை உள்ள படங்களைத் தயாரிக்க மிகவும் ஆசை. பிறகு எங்களுடன் இணைந்தவர்கள் தான் கோல்டன் ரேஷியோ மற்றும் ஜெட்டி புரோடக்சன்ஸ். என்னுடைய அரசியலைப் புரிந்து கொண்டு அவர்கள் குறைந்தபட்சம் ஒரு ஐந்து ப...
ரைட்டர் – 35 வருஷ சர்வீஸ்

ரைட்டர் – 35 வருஷ சர்வீஸ்

சினிமா, திரைத் துளி
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தனது நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கிய பா.இரஞ்சித் தொடர்ந்து பல தரமான படங்களை மக்களுக்கு படைத்து வருகிறார். தற்போது, அறிமுக இயக்குநர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி, திலீபன், இனியா மற்றும் ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியிருக்கும் “ரைட்டர்” படத்தினைத் தயாரித்திருக்கிறது நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம். இப்படத்திற்கு “96” பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று முன் தினம் வெளியானது. சினிமா ரசிகர்களை மட்டுமல்லாது பலரையும் இந்த ட்ரெய்லர் வெகுவாக கவர்ந்துள்ளது. காவல்துறையில் எழுத்தர் (ரைட்டர்) பணிபுரியும் கதாபாத்திரமாகத் தோன்றுகிறார் சமுத்திரக்கனி. காவல்நிலையத்தில் ரைட்டர்களின் வலியை அழுத்தமாக இயக்குநர் பதிவு செய்திருக்கிறார். ‘போலீஸ் பத்தி அவதூறு பரப்பவே ஒரு கூட்டம் இருக்கு’, ‘காக்கிகளின் ச...
இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு விமர்சனம்

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இது ஒரு கற்பனைக் கதை. ஆனால், இந்தக் கதையில் காட்டப்படும் டாக்குமென்ட்ரியில் நிகழ்வது போல் நடப்பதற்கான அத்தனை சாத்தியங்களும் உள்ள மெத்தனமான நாடு இந்தியா என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. கடல்நீரில் கலந்த எண்ணெயை வாளியில் அள்ளும் தொழில்நுட்பத்தில் கை தேர்ந்த அரசாங்கம், கரை ஒதுங்கும் ஆபத்தை விளைவிக்கும் குண்டை, வெடிக்கும் குண்டு என ஒத்துக் கொள்வதற்கே அதன் வெட்டி கெளரவம் இடம் கொடுக்காது. ஏன் உலகிற்கு இத்தனை குண்டுகள், இத்தனை உயிரிழுப்புகள் என்ற கேள்வியை மிக அழுத்தமாக வெளிப்படுத்தியுள்ளது சடோகா சசாகியின் கதை. ஆனால், தினேஷ் வசமிருக்கும் குண்டு வெடித்து விடக் கூடாது என்ற பதைபதைப்பை ஏற்படுத்தத் தவறிவிடுகிறது படம். அரசாங்கத்தின் முகத்திரையைக் கிழிக்கும் ஆவல், தோழர் ரித்விகாவிற்கு அதிகமாக உள்ளதே தவிர, அதை வெடிக்கவிடாமல் செய்ய என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்றெல்லாம் அவர் யோசிப்பதில்லை. கு...
இரும்புக் கடையின் நீல இசை

இரும்புக் கடையின் நீல இசை

சினிமா, திரை விமர்சனம்
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பு “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் மாரிசெல்வராஜ் பேசியதாவது, "நீலம் புரொடக்சன் இந்த மாதிரி நிகழ்வுகளை நடத்திக் கொண்டே இருக்க வேண்டும். எப்படி ஒரு மாடு மேய்க்கிறவனைக் கொண்டுவந்து 'பரியேறும் பெருமாள்' படத்தை இயக்க வைத்தாரோ, அதே போல் இரும்புக் கடையில் வேலை பார்க்கும் ஒருவரை இப்போது "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு" படத்தை இயக்க வைத்துள்ளார் அண்ணன் பா.ரஞ்சித். தோழர் அதியன் அவர்களின் அரசியல் எனக்கு மிகவும் பிடிக்கும். 'இப்படியான ஒருவர் படமெடுத்தால் எப்படி இருக்கும்?' என்ற ஆசை எனக்குள் இருந்தது. இப்படத்தை எதைக்கொண்டு தடுத்தாலும் இப்படம் அடைய இலக்கை அடைந்தே தீரும்" என்றார் நடிகை ஆனந்தி, "ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீலம் புரொடக்சன் என் சொந்...
பரியேறும் பெருமாள் விமர்சனம்

பரியேறும் பெருமாள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'சாதியும் மதமும் மனித குலத்திற்கு விரோதமானது' என்ற வாசகத்துடன் படம் தொடங்குகிறது. இப்படத்தில், சாதி எப்படி மனித குலத்திற்கு விரோதமாகச் செயல்படுகிறதெனப் பரியேறும் பெருமாளின் வாழ்க்கையில் இருந்து சித்தரிக்கப்படுகிறது. கருப்புத் திரையில் வெள்ளையெழுத்துகளாக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர் போடும்பொழுதே சந்தோஷ் நாராயணன் ஒலிக்கத் தொடங்கிவிடுகிறார். படம் தொடங்கியவுடனே, "கருப்பி, அடி கருப்பி!" என்ற பாடலின் மூலமாக ஒரு வாழ்வியலுக்குத் தயார் செய்துவிடுகிறார். படத்தின் நாயகன் அவர்தான்! படத்தின் இசையும், ட்ரோன் மூலம் பறவைக் கோணத்தில் காட்டப்படும் நிலப்பரப்பும், படத்தோடு பார்வையாளர்களை ஒன்றச் செய்துவிடுகிறது. சட்டக்கல்லூரி மாணவனாக வரும் யோகி பாவுவின் ஒன்லைன் கவுன்ட்டர்கள் அட்டகாசம். நகைச்சுவைக்காக என்றில்லாமல் ஒரு கதாபாத்திரமாக படம் முழுவதும் வந்து அசத்துகிறார். பரியேறும் பெருமாளாகக் ...
பரியேறும் பெருமாள்: முன்னோக்கி இழுக்கப்படும் தேர் – பா.ரஞ்சித்

பரியேறும் பெருமாள்: முன்னோக்கி இழுக்கப்படும் தேர் – பா.ரஞ்சித்

சினிமா, திரைச் செய்தி
நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதற்படம் “பரியேறும் பெருமாள்”. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் ராம், "பரியேறும் பெருமாள்" இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் கதிர், நடிகை கயல் ஆனந்தி, நகைச்சுவை நடிகர் யோகிபாபு, லிஜீஷ், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், எடிட்டர் செல்வா ஆர்.கே., கலை இயக்குநர் ராமு, சண்டைப் பயிற்சியாளர் ஸ்டன்னர் சாம், உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்வில் இயக்குநர் பா.இரஞ்சித் பேசுகையில், “ஒரு தத்துவம் என்பது நமக்கு முன்னால் உறுதியாக வாழ்ந்தவர்களில் இருந்தே பிறக்கிறது. அப்படி எனக்கு முன்னோடியாகப் புரட்சியாளர் அம்பேத்கர் மட்டுமே இருக்கிறார். அவருடைய கனவு என்பது மனித சமூகத்தினையுடைய மாண்பை மீட்டெடுப்பதாக மட்டுமே இருந்தது. எனக்கு அம்பேத்கரின் துயரமான நாட்கள் தான் எப்போதும் நினை...
பரியேறும் பெருமாள்: தந்தைக்கான மகனின் காணிக்கை

பரியேறும் பெருமாள்: தந்தைக்கான மகனின் காணிக்கை

சினிமா, திரைச் செய்தி
நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் “பரியேறும் பெருமாள்”. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் ராம், "பரியேறும் பெருமாள்" இயக்குநர் மாரி செல்வராஜ், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் கதிர், நடிகை கயல் ஆனந்தி, நகைச்சுவை நடிகர் யோகிபாபு, லிஜீஸ், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், எடிட்டர் செல்வா ஆர்.கே., கலை இயக்குநர் ராமு, சண்டைப் பயிற்சியாளர் ஸ்டன்னர் சாம், உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இயக்குநர் ராம் பேசுகையில், "எனக்கு ஒரு கவிதையில் நான் வாசித்த காட்சி ஞாபகம் வருது. ஒரு தனித்த பனிச்சாலை. ஒரு ஆளற்ற சாலையில் நீள அங்கி போட்ட ஒரு மனிதர் வருகிறார். அவரின் கையில் ஒரு காயப்பட்ட பறவை இருக்கிறது. இரவும் பகலும் அது அழுதுகொண்டே இருக்கிறது. அந்தக் காயப்பட்ட பறவை ஒரு குழந்தையைப் போல இருக்கிறது. அந்த நீள அங்கிப்போட்ட மனிதர் த...
பரியேறும் பெருமாள்: மிகச் சிறந்த திரைப்படம் -சந்தோஷ் நாராயணன்

பரியேறும் பெருமாள்: மிகச் சிறந்த திரைப்படம் -சந்தோஷ் நாராயணன்

சினிமா, திரைத் துளி
நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் “பரியேறும் பெருமாள்”. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் ராம், "பரியேறும் பெருமாள்" இயக்குநர் மாரி செல்வராஜ், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் கதிர், நடிகை கயல் ஆனந்தி, நகைச்சுவை நடிகர் யோகிபாபு, லிஜீஸ், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், எடிட்டர் செல்வா ஆர்.கே., கலை இயக்குநர் ராமு, சண்டைப் பயிற்சியாளர் ஸ்டன்னர் சாம், உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசும்போது, “இந்தப் படத்தில் என்னைத் தாக்கின விஷயம் மட்டும் சொல்கிறேன். பல வருஷங்களில் ஒரு சில இயக்குநர்கள் பெரிய அளவில் வருவார்கள். இது, மாரி செல்வராஜிடம் ஆரம்பத்திலேயே தெரிந்தது. இந்தப் படம் எனக்கு வாழ்க்கையில் மிகச் சிறந்த திரைப்படம். பொதுவாக ஊர்ப்பக்கம் சென்று படம் எடுப்பதற்கு ஒரு அளவீடு இருக்கிறத...