Shadow

Tag: Neurokrish

ஆட்டிசம் 2019

ஆட்டிசம் 2019

Others, காணொளிகள், மருத்துவம்
ஆட்டிச விழிப்புணர்வு வாரத்தின் பொருட்டு, ட்ரைமெடும் நியூரோக்ரிஷும் இணைந்து, AVTISM: Think Different என்ற கருத்தரங்கை நிடத்தினார்கள். ராதிகா செளந்தரராஜன், நித்யா மோகன், உஷா ராமாகிருஷ்ணன், விவேக் மிஸ்ரா, ரேமா ரகு ஆகிய மருத்துவர்களுக்கு இடையேயான கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடந்தது. அதில் குறிப்பாக, ‘Neuromodulation for challenging behaviours” என்ற தலைப்பில், TMS சிகிச்சை முறை பற்றி மருத்துவர் விவேக் மிஸ்ரா விளக்கியது ஆட்டிசக் குழந்தைகளின் பெற்றோருக்கு நம்பிக்கை ஏற்படுத்தவல்லது. TMS – Transcranial Magnetic Stimulation ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தலையில் கருவி பொறுத்தி, மூளையின் புரணியில் (Cortex) மின்காந்தப் புலத்தால் தூண்டுவதுதான் இச்சிகிச்சை முறையாகும். இதனால் குழந்தைகளின் anxiety அளவு குறைவதோடு, அவர்களின் intrapersonal skills-ஸும் அதிகரிக்கிறது. அமெரிக்காவில், மன அழுத்தத்த...
புத்தி – குழந்தைகளும், குழந்தைகள் நலனும்

புத்தி – குழந்தைகளும், குழந்தைகள் நலனும்

மருத்துவம்
புத்தி இம்மர்ஷன் (Buddhi Immersion) ஒருங்கிணைத்த “ப்ராப்ளம் சைல்ட் (Problem Child)” என்ற கருத்தரங்கை ஆளுநர் திரு. பன்வரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார். ஆளுநர், “இந்திய மக்கள் தொகையில் சுமார் 39% இருக்கும் 50 கோடி குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்துவது மிக முக்கியமான செயலாகும். பல திட்டங்களை வகுத்து முனைந்து முன்னெடுத்தாலும், பேறுகால மற்றும் குழந்தைகளின் ஊட்டக்குறைவு, தொற்று நோய்கள் போன்ற பிரச்சனைகள் இந்தியாவின் மனசாட்சியை இன்னும் உலுக்கிக் கொண்டே தான் உள்ளன. சமூகத்தைப் பாதிப்புக்குள்ளாக்கும் குழந்தைகளின் கற்றல், மற்றவருடன் தொடர்பு கொள்ளல் போன்ற குறைபாடுகளைக் குறித்து இந்தக் கருத்தரங்கில் விவாதிக்க உள்ளனர். அரசாங்கம் குழந்தை நலனில் அக்கறை காட்டி வந்தாலும், சமூக நலனில் அக்கறை கொண்டு இத்துறை வல்லுநர்களும் மற்ற தனியார் நிறுவனங்களும் குழந்தைகள் பிரச்சனையைக் கலைவதைக் கையிலெடுத்திருப்பது வரவேற்...
மன நலத்தில் யோகாவின் பங்கு

மன நலத்தில் யோகாவின் பங்கு

மருத்துவம்
நியூரோக்ரிஷ் ஏற்பாடு செய்திருந்த, ‘தி புத்தி இம்மெர்ஷன் (The Buddhi Immersion)’ எனும் இண்டோ-ஜப்பான் வொர்க்-ஷாப்பில், ‘மூளை, மனம் மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவம்’ என்ற கருத்தரங்கம் நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகள் நிகழ்ந்தன. இந்தியா முழுவதிலிருந்தும், ஜப்பானிலிருந்தும் பிரபலமான மருத்துவர்கள் கலந்து கொண்டு, பக்கவாதம், மூளைத்தேய்வு, பார்க்சின்சன், கைகால் இழுப்பு நோய், மன அழுத்தம், மனக்கலக்கம், மனப்பிறழ்வு, மற்றும் பல உளநோய்கள், அவற்றின் மருத்துவ முறைகள் குறித்து விவாதித்தனர். ‘பண்டைய ஞானத்துடன் கூடிய நவீன மருத்துவம்’ குறித்த அனுபவத்தை, தி புத்தி இம்மெர்ஷன் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கியது. பல்வேறு கலாச்சாரங்களின் குறுக்காக, மூளை மற்றும் மனதின் இடைப்பரப்பில் உள்ள சவால்கள் மற்றும் தீர்வுகளைப் பற்றியும் விவாதம் அரங்கேறியது. அறிவியல், மருத்துவ அனுபவம், உளவியல், தத்துவம், சமூகவியல், மெஞ்ஞானம் எ...
எட்டுக் கதவுகளுடைய புதையல் – குழந்தைகளைப் புரிந்து கொள்ளும் முறை

எட்டுக் கதவுகளுடைய புதையல் – குழந்தைகளைப் புரிந்து கொள்ளும் முறை

மருத்துவம்
ஜூன் 26 அன்று, ட்ரைமெடும் வித்யாசாகர் ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி ஆஃப் இந்தியாவும் இணைந்து, AUTISM – Through the lens of Multiple Intelligence என்ற கவர்ந்திழுக்கும் அற்புதமான தலைப்பில் கருத்தரங்கை நிகழ்த்தினார்கள் (ஆட்டிசம் - விழிப்புணர்வு கருத்தரங்கைத் தொடர்ந்து நடக்கும் நிகழ்வு இது). ஹாவெர்ட் கார்ட்னர் எனும் அமெரிக்க உளவியலாளர், 1983 இல் ‘பல்திற அறிவாற்றல் (Multiple Intelligence)’ எனும் தியரியை உருவாக்கினார். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல திறமைகள் ஒளிந்துள்ளது என்ற பொதுவான கருத்தாக்கம் தான் இந்தத் தியரி எனினும், குழந்தைகளின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அவர்களது திறனை வளர்க்க இத்தியரியைப் பயன்படுத்தலாம். பல்திற அறிவாற்றலை (MI) எட்டாகப் பிரிக்கிறார் ஹாவெர்ட் கார்ட்னர். அவற்றைக் கொண்டு, குழந்தைகளது தனித் திறமையை அடையாளம் கண்டு எப்படி அவர்களது செயல்திறனை ஊக்குவிப்பது எனவும், அப்படி அடையாளம் கண்ட...
ஆட்டிசம் – விழிப்புணர்வு கருத்தரங்கு

ஆட்டிசம் – விழிப்புணர்வு கருத்தரங்கு

மருத்துவம்
ஆட்டிச விழிப்புணர்வு வாரத்தின் பொருட்டு, ஏப்ரல் 8 அன்று, ட்ரைமெடும் நியூரோக்ரிஷும் இணைந்து, The Future of Autism Care என்ற கருத்தரங்கை நிகழ்த்தினார்கள். ட்ரைமெட்-இல், மனம் மற்றும் மூளைப் பராமரிப்பிற்கான பிரத்தியேக சிகிச்சை முறையை வடிவமைத்துள்ளனர். ‘புத்தி (Buddhi)’ என்ற அந்தத் திட்டத்தின் கீழ், வித்யாசாகரிலுள்ள 7 முதல் 21 வயது வரையுள்ள 20 ஆட்டிச சிறுவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளித்து ஓர் ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்தாற்போல் 7 நாட்கள், ஆயுர்வேதம் (Shriroabhyanga), Acupressure, Refloxology போன்ற 21 வகையான தெரபிகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ட்ரைமெடின் இந்தச் சிகிச்சை முறையால், குறிப்பிட்டுச் சொல்லும்படியான நல்ல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. அந்த ஆய்விற்கு ஒத்துழைத்த 18 பேரின் முடிவுகள் பின்வருமாறு:   Sleep Appetite Behavorial Problem Good result 15 10 ...
மாய வலி நீக்கிய தமிழன்

மாய வலி நீக்கிய தமிழன்

மருத்துவம்
மாய வலி என்றால்? அதற்கு முன் பார் போற்றும் தமிழரான S.ராமச்சந்திரனைப் பற்றித் தெரிந்து கொள்வோம். ரிச்சார்ட் டாகின்ஸால், ‘நியூரோசைன்ஸின் மார்கோபோலோ’ எனப் புகழப்பட்ட ராமச்சந்திரனுக்கு, 2007இல் இந்திய அரசு “பத்ம பூஷன்” விருது கொடுத்துக் கெளரவித்துள்ளது. நரம்பியல் மற்றும் உளவியல் துறையில் இவர் எழுதிய புத்தகங்களின் மூலம் பலருக்கு ஆதர்சமாக விளங்கி வருகிறார். சான் டியாகோவிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். நியூரோகிருஷ் ஒருங்கிணைத்த செமினாரில் கலந்து கொண்ட மருத்துவர் ராமச்சந்திரன், நாள்பட்ட வியாதிகளுக்கு ட்ரைமெட் மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த மருத்துவச் சிகிச்சையின் அவசியத்தை வலியுறுத்திப் புகழ்ந்தார். ஒருவரின் கை துண்டிக்கப்பட்டிருந்தாலும், மூளை அதை உணராது அந்தக் கையை அசைக்கும்படி சிக்னல் தந்து கொண்டேயிருக்கும். ஆனால், கண்கள் தரும் பிம்பமோ இல்லாத கையை எப்பட...
கண்ணியமாக உயிர் நீத்தல்

கண்ணியமாக உயிர் நீத்தல்

சமூகம், மருத்துவம்
‘யாருக்கும் தொந்தரவு தராமல், படுத்தப் படுக்கையாக இல்லாமல், எந்த நோய்நொடியும் அண்டாமல் பட்டுன்னு போய்ச் சேர்ந்துடணும்’ என்ற பிரார்த்தனையைச் செவியுறாதவர்களே இருக்கமாட்டோம். அந்தப் பிரார்த்தனையை அடியொட்டிய மருத்துவ விவாதமொன்றினை ட்ரைமெட்டும் நியூரோக்ரிஷும் இணைந்து நடத்தினார்கள். முதியோர் பராமரிப்பைப் பற்றிய TriMed-இன் ‘End of Life Care’ அனுபவத்தை, சம்பந்தப்பட்டவரின் பேத்தியின் ஆடியோவை ஒலிபரப்பி, தங்களது சிகிச்சை முறையை விளக்கினார் மருத்துவர் ஸ்ரீவட்சா. ‘டிக்னிட்டாஸ் (DIGNITAS)’ எனும் நிறுவனத்தைப் பற்றி லண்டன் மருத்துவமனையில் பணி புரியும் நீரஜ் அகர்வால் விளக்கினார். அவர், ‘Oxford Textbook of Neuropsychiatry’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. End of Life Care என்பது, வாழ்வின் இறுதிக்கட்டத்தில் உள்ளவர்களுக்கு அளிக்கப்படும் பராமரிப்பு எனப் பொருள் கொள்ளலாம். அந்த ஓய்வு பெற்ற ...
மருந்துகளுக்கு அப்பால்

மருந்துகளுக்கு அப்பால்

மருத்துவம்
இந்தியர்களுக்கு நவீன மருத்துவத்தின் மீது நம்பிக்கை இருந்தாலும், பாரம்பரிய மருத்துவ முறைகளின் மீது ஈடுபாடு குறையவில்லை. பெரும்பாலான அலோபதி டாக்டர்கள் மாற்று மருத்துவத்தை நிராகரிப்பதோடு, அதற்கு எதிரான அபிப்ராயத்தையே வைத்துள்ளார்கள். நியூரோ-சைக்காட்ரிஸ்ட்டான மருத்துவர் E.S.கிருஷ்ணமூர்த்திக்கும் மாற்று மருத்துவத்தின் மீது அத்தகைய மனப்பான்மையே இருந்து வந்தது. ஆனாலும், ஒரு கட்டத்தில் மாற்று மருத்துவத்தின் பின்னுள்ள அறிவியலை அறிய விரும்பி ஆய்வினை மேற்கொள்கிறார். முடிவாக, ட்ரைமெட் (TriMed) எனும் சிறிய க்ளினிக் ஒன்றைத் தொடங்குகிறார். அலோபதியுடன் ஆயுர்வேதம், யோகா, அக்குபிரஷர், இயற்கை மருத்துவம் (Naturopathy), பிலாட்டிஸ் (Pilates) ஆகியவற்றை இனைத்து ஒருங்கிணைக்கப்பட்ட மாற்று மருத்துவத்தை உருவாக்குகிறார். பல்வேறு மாற்று மருத்துவ நிபுணர்களை ஒருங்கிணைத்ததுதான் அவர் எடுத்து வைத்த முதல் படி. “இத்தகைய ஒ...